search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கருத்து கேட்பு கூட்டம்"

    • குவாரி அமைப்பது தொடா்பாக கருத்துகேட்பு கூட்டம் சில மாதங்களுக்கு முன்பாக நடைபெறவிருந்த நிலையில், நிா்வாகக் காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டது.
    • ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் டிசம்பா் 16ந் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    மடத்துக்குளம் அருகே உள்ள மைவாடி கிராமத்தில் கல்குவாரி அமைப்பது தொடா்பாக கருத்துகேட்பு கூட்டம் டிசம்பா் 16 -ந் தேதி நடைபெறுகிறது.

    இதுகுறித்து திருப்பூா் மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

    திருப்பூா் மாவட்டம் மடத்துக்குளம் வட்டம் மைவாடி கிராமத்தில் சாதாரண கற்கள் மற்றும் குவாரி அமைப்பது தொடா்பாக பொதுமக்கள் கருத்துகேட்பு கூட்டம் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக நடைபெறவிருந்த நிலையில், நிா்வாகக் காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், குவாரி அமைப்பது தொடா்பாக பொதுமக்கள் கருத்துகேட்பு கூட்டம் மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் டிசம்பா் 16ந் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது
    • மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மாநில கல்வி கொள்கை உயர்மட்ட குழு மண்டல அளவிலான கருத்து கேட்பு கூட்டம் இன்று நடந்தது.

    கூட்டத்திற்கு டெல்லி முன்னாள் தலைமை நீதிபதி முருகேசன் தலைமை தாங்கினார். கலெக்டர் குமாரவேல் பாண்டியன், மாநில திட்டக்குழு உறுப்பினர் பேராசிரியர் சீனிவாசன், சென்னை யூனிசெப் நிறுவனத்தின் முன்னாள் கல்வி ஆலோசகர் அருணா ரத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் பேசியதாவது:-மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பாடத்திட்டம் அமைப்பது தொடர்பாக கருத்து கேட்கப்பட்டு வருகிறது.

    இந்தியாவில் முன் மாதிரியாக தமிழகத்தில் கல்விக்கான தனி குழு அமைத்துள்ளனர். வேறு எங்கும் அமைக்கப்பட வில்லை.

    மாநிலம் முழுவதும் பெற்றோர்கள் ஆசிரியர்கள் மாணவர்களிடம் கருத்து கேட்கப்பட்டு அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

    8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு இதுவரை 6 மண்டலங்களில் கருத்து கேட்கப்பட்டுள்ளது. 7-வது வேலூரில் இந்த கூட்டம் நடைபெற்றுள்ளது. நாளை சென்னையில் இந்த கூட்டம் நடைபெற உள்ளது. மற்ற இடங்களில் கூட்டத்தின் போதே மாணவர்கள் முன் வரிசையில் அமர வைக்கப்பட்டிருந்தனர். ஆனால் இந்த கூட்டத்தில் பின்னால் அமர வைக்கப்பட்டுள்ளனர். இந்த கூட்டத்தின் நோக்கமே மாணவர்களின் கருத்துக்களை பெறுவது தான். எனவே மாணவர்கள் முன்னால் வரிசையில் அமர்ந்து தங்கள் கருத்துக்களை தெரிவிக்க வேண்டும்.

    கருத்துக்களை தெரிவிக்கும் போது மாணவர்கள் அச்சம், தயக்கமின்றி பேசலாம்.தங்க.ள் கருத்துக்களை தாராளமாக தெரிவிக்கலாம் அதுதான் கூட்டத்தின் முக்கிய எதிர்பார்ப்பாகும்.

    இவர் அவர் பேசினார். கூட்டத்தில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த தன்னார்வலர்கள் கல்வியா ளர்கள் மாணவர்கள் அவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

    • சங்கரன்கோவில் -தென்காசி சாலை இணைப்பு குறித்து விவசாயிகளிடம் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது.
    • விவசாயிகளிடம் இருந்து பெறப்படும் விவசாய நிலத்திற்கு 3 மடங்கு விலை நிர்ணயம் செய்து தர வேண்டும்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சங்கரன் கோவில் சாலையில் உள்ள புதிய பஸ் நிலையத்தில் இருந்து புதியாதிகுளம் வழியாக தென்காசி சாலையுடன் இணைப்பு சாலை அமைப்பது குறித்து 2 கி.மீ தூரத்திற்கு நிலத்தை கையகப்படுத்துதல் சம்பந்தமாக விவசாயி களிடம் கருத்து கேட்பு கூட்டம் ராஜபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்தது.

    வட்டாட்சியர் சீனிவாசன் தலைமையில் நடந்த கூட்டத்தில் திருச்சி மாவட்ட சிறப்பு வருவாய் அலுவலர் ஜானகி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு விவசாயிகளிடம் கருத்துகளை கேட்டறிந்தார்.

    தமிழக விவசாயிகள் சங்க விருதுநகர் மாவட்ட தலைவர் ராமச்சந்திர ராஜா, முன்னோடி விவசாயி தர்மலிங்க ராஜா உள்பட 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கருத்துக்களை தெரிவித்தனர். விவசாயிகளிடம் இருந்து பெறப்படும் விவசாய நிலத்திற்கு 3 மடங்கு விலை நிர்ணயம் செய்து தர வேண்டும்.

    ஏற்கனவே ஆய்வு செய்த தீர்ப்பை நிறுத்தி வைத்து மறு ஆய்வு செய்ய வேண்டும். கையகப்படுத்திய நிலம் தவிர இதர பாசன விவசாயிகளுக்கு பாசனம் மற்றும் இதர வழிமுறைகள் குறித்து விவசாயிகள் விளக்கி கூறினர்.

    இதில் திருநெல்வேலி நிலம் கையகப்படுத்துதல் குறித்த உதவி பொறியாளர் பொன் முரளி, விருதுநகர் சிறப்பு தாசில்தார் நிலம் கையகப்படுத்துதல் மாரீஸ்வரன் உள்பட அதிகாரிகள், விவசாயிகள் பங்கேற்றனர்.

    • நீதிபதி முருகேசன் தலைமையில் உயர்மட்ட குழு தமிழக அரசால் அமைக்கப்பட் டுள்ளது.
    • பரிசீலனைகள் செய்து, தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்தார்.

    கிருஷ்ணகிரி,

    தமிழ்நாட்டில் மாநிலத்திற்கு என தனித்துவமான மாநில கல்விக் கொள்கையை வகுப்பதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் உயர்மட்ட குழு தமிழக அரசால் அமைக்கப்பட் டுள்ளது.

    அந்த குழுவிற்கு கருத்துக்களை அனுப்பும் பொருட்டு, கருத்து கேட்பு கூட்டம் நேற்று நடத்தப்பட்டது. அதன்படி, கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட அளவிலான கருத்து கேட்பு கூட்டம் நடந்தது.

    கூட்டத்திற்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி தலைமை தாங்கினார். இதில், மாவட்ட கல்வி அலுவலர் மணிமேகலை, மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவன துணை முதல்வர் மோகன், ஓய்வுபெற்ற கல்வி அலுவலர்கள், தனியார் பள்ளிகளின் உரிமையாளர்கள், தாளாளர்கள், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவன பிரதிநிதிகள், முன்னாள், இன்னாள் மாணவர்கள், பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள் என ஊத்தங்கரை, மத்தூர், பர்கூர், காவேரிப்பட்டணம், கிருஷ்ணகிரி, வேப்பன பள்ளி, சூளகிரி, ஓசூர், கெலமங்கலம், தளி ஆகிய 10 ஒன்றியங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

    அவர்களிடம் 9 கேள்விகள் கொண்ட மனுக்கள் வழங்கப்பட்டு, அதில் எழுத்துப்பூர்வமாக எழுதி கொடுக்க அறிவு றுத்தப்பட்டது. அதன்படி, அவர்கள் அந்த பகுதியில் புதிய கல்வி கொள்கையை செயல்படுத்த, தமிழ், தெலுங்கு, கன்னடம், உருது போன்ற மொழிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் மனுக்களை பூர்த்தி செய்து அளித்தனர். அவர்களிடம் பெறப்பட்ட மனுக்கள் சேலத்தில் நடைபெறவுள்ள ஆணை கூட்டத்தில் கொண்டு சேர்த்து, அதன் மீது விவாதங்கள் மற்றும் பரிசீலனைகள் செய்து, தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்தார்.

    • கருத்து கேட்பு கூட்டம் கிருஷ்ணகிரியில் வருகிற 26-ந் தேதி நடக்கிறது.
    • கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.

    கிருஷ்ணகிரி,

    மாநில கல்வி கொள்கையை வகுப்ப தற்காக அமைக்கப்பட்டுள்ள உயர் மட்ட குழுவிற்கு கருத்துக்களை அனுப்பு வதற்கு கருத்து கேட்பு கூட்டம் கிருஷ்ணகிரியில் வருகிற 26-ந் தேதி நடக்கிறது.

    இது தொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திர பானுரெட்டி வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் மாநிலத்திற்கு என தனித்துவமான மாநில கல்விக் கொள்கையை வகுப்பதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி த.முருகேசன் தலைமையில் உயர் மட்ட குழு தமிழக அரசால் அமைக்கப்பட்டுள்ளது.அந்த குழுவிற்கு கருத்துக்களை அனுப்பும் பொருட்டு கருத்து கேட்பு கூட்டம் வருகிற 26-ந் தேதி (புதன்கிழமை) கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.

    அந்த கூட்டத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கல்வியாளர்கள், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், ஆசிரியர்கள், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் ஆகியோர் கலந்து கொண்டு தங்களின் கருத்துக்களை எழுத்து பூர்வமாக தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • திருச்சியில் மாநில கல்விக்கொள்கை வகுப்பது தொடர்பாக நடந்த கருத்து கேட்பு கூட்டத்தில் நீதிபதி முருகேசன் கலந்துகொண்டார்
    • ஒன்றாம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தினால் அவர்களின் மனநலன் பாதிக்கும் என்பதால் இதனை முழுமையாக நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை

    திருச்சி:

    தமிழ்நாடு மாநிலத்திற்கான தனித்துவமான கல்விக் கொள்கையை வகுப்பதற்காக நீதியரசர் த.முருகேசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் மண்டல அளவிலான கருத்து கேட்பு கூட்டம் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

    கலெக்டர் பிரதீப் குமார் முன்னிலையில் நடந்த இந்த கருத்து கேட்பு கூட்டத்தில் திருச்சி, கரூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த கல்வியாளர்கள், தன்னார்வலர்கள், ஓய்வு பெற்ற பேராசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கருத்து க்களை தெரிவித்தனர்.

    இதில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொருளாளர் நீலகண்டன் பேசும் போது, ஒன்றாம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தினால் அவர்களின் மனநலன் பாதிக்கும்.

    ஆகவே இதனை முழுமையாக நிறுத்த வேண்டும். தொடக்கக் கல்வித்துறையில் மாணவர்களுக்கு பரிசோ தனை அடிப்படையில் புதிய திட்டங்கள் செயல்முறை தேவையில்லை.

    கொரோனா காலத்திற்குப் பின்னர் மாணவர்களின் கற்றல் மற்றும் நடத்தை முறையில் பெரிய அளவுக்கு மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஆகவே அனைத்து வகுப்புகளுக்கும் நன்னெறி கல்வி பாட போதனை வகுப்பு நடத்த வேண்டும்.

    ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டத்தை இயற்ற வேண்டும் என்றார். அவரின் கருத்தை பெரும்பாலானவர்கள் ஆதரித்து ஆரவாரம் செய்தனர்.

    மேலும் சமூக நீதிக்கு முரணான ஆசிரியர் தகுதித்தேர்வு கூடாது என்பன உள்ளிட்ட 20 அம்ச கருத்துகள் அடங்கிய மனுவினை நீதிபதியிடம் அவர்கள் சமர்ப்பித்தனர். பெற்றோர்கள் தரப்பில் பேசும்போது, மாணவர்களை அடிக்க ஆசிரியர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் பயமில்லாமல் போய்விட்டது.

    ஆசிரியர்களின் பிரம்புக்கு மட்டுமே குழந்தைகள் அச்சப்படுவார்கள். ஆகவே மாணவர்களை நல்வழிப்படுத்த வேறு வழிகளை கையாள வேண்டும் என்றனர்.

    பல்வேறு தரப்பினரின் கருத்துகளை கேட்டறிந்த நீதிபதி முருகேசன், அதனை முழுமையாக ஆராய்ந்து அரசுக்கு முன்னதாகவே அறிக்கை அளிக்கப்படும் என்றார்.

    தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் நீதிபதியிடம் மனு அளித்த போது, மாநகரச் செயலாளர் அமல் சேசுராஜ், மருங்காபுரி வட்டாரச செயலாளர் சுரேஷ், முன்னாள் நகரத்தலைவர் வேளாங்கன்னி, மாநகரத் தலைவர் ரெக்ஸ், மாவட்ட துணைச் செயலாளர் பெர்ஜித் ராஜன், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் ஹக்கிம் அலி, பவுல் ராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

    • திருப்பூா் மாவட்டத்தில் கருத்துக் கேட்புக்கூட்டம் நாளை 14-ந்தேதி பிற்பகல் 2 மணி அளவில் நடைபெறுகிறது.
    • மாவட்டக் கல்வி அலுவலா்கள் தலைமையில் நடைபெறுகிறது.

    திருப்பூர் :

    மாநிலக் கல்விக் கொள்கை வகுப்பதற்காக திருப்பூா் மாவட்டத்தில் நாளை 14-ந்தேதி (வெள்ளிக்கிழமை) கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெறுகிறது.

    இது குறித்து திருப்பூா் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- தமிழகத்துக்கு தனித்துவமான மாநிலக் கல்விக் கொள்கை வகுப்பதற்காக திருப்பூா் மாவட்டத்தில் கருத்துக் கேட்புக்கூட்டம் நாளை 14-ந்தேதி பிற்பகல் 2 மணி அளவில் நடைபெறுகிறது.

    இந்தக் கருத்துக் கேட்புக் கூட்டமானது மாவட்டக் கல்வி அலுவலா்கள் தலைமையில் நடைபெறுகிறது. கருத்துக் கேட்புக் கூட்டத்தில் கல்வியாளா்கள், தலைமை ஆசிரியா்கள், தன்னாா்வலா்கள், தொண்டு நிறுவனங்கள், ஆசிரியா்கள், ஓய்வுபெற்ற ஆசிரியா்கள், பெற்றோா் கலந்துகொள்ளலாம்.

    கருத்துக்களைத் தெரிவிக்க விரும்பும் நபா்கள் தங்களது கருத்துக்களை தமிழில் தட்டச்சு செய்து கூட்டத்தில் ஒப்படைக்கலாம்.இந்த கருத்துக் கேட்புக் கூட்டமானது திருப்பூா் கே.எஸ்.சி.அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, பல்லடம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, தாராபுரம் என்சிபி நகரவை மேல்நிலைப் பள்ளி, மடத்துக்குளம் அரசு மேல்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளில் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பொதுமக்கள் மனு வழங்க வேண்டும்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் சார்பதிவாளர் அலுவலகங்கள் மறுசீரமைப்பு குறித்த கருத்து கேட்புகூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது. அரக்கோணம் அலுவலகத்தை பிரிக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    கருத்து கேட்பு கூட்டம் ராணிப்பேட்டை மாவட்டத்தில் ராணிப்பேட்டை, அரக்கோணம், நெமிலி, சோளிங்கர், வாலாஜா, ஆற்காடு, கலவை, காவேரிப்பாக்கம், ஆகிய 8 சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு கீழ் 325 கிராமங்கள் பதிவுகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த 8 சார் பதிவாளர் அலுவலகங்களை 6 சார்பதிவாளர் அலுவலகங்களாக குறைத்து மறு சீரமைப்பு செய்வது குறித்த பொதுமக்களின் கருத்து கேட்பு கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில் 6 வட்டங்களில் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் வட்டங்கள் வாரியாக சார் பதிவுகளை மேற்கொள்ள இணைக்கப்பட்ட உள்ள கிராமங்கள் குறித்து தெரிவிக்கப்பட்டது. பொதுமக்கள் எதிர்ப்பு தற்போது அரக்கோணம் பெரியவட்டம் என்பதால், அரக்கோணம் சார் பதிவாளர் அலுவலகத்தில் இருந்து புதியதாக தக்கோலம் சார் பதிவாளர் அலுவலகம் உருவாக்கப்பட உள்ளது என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

    அதற்கு அரக்கோணம் சுற்றுவட்ட பகுதிகளில் உள்ள சில கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதற்கு கோரிக்கைகள் பதிவு செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று கலெக்டர்தெரிவித்தார்.

    இதேபோன்று மற்ற அனைத்து வட்டங்களிலும் உள்ள பகுதிகள் இணைப்பது குறித்து தெரிவிக்கப்பட்டது, இதற்கு ஆட்சேபனை தெரிவிக்கும் மக்கள் மனுக்களாக வழங்க வேண்டும் என தெரிவித்தார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் குமரேஷ்வரன், துணை பதிவுத்துறை தலைவர் சுதா மல்லையா, மாவட்ட பதிவாளர் வாணி மற்றும் சம்பந்தப்பட்ட வட்டங்களில் உள்ள பொதுமக்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    • தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான சாந்தி, தலைமைவகித்து, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளின் கருத்துக்களை கேட்டறிந்தார்.
    • தாமாக முன்வந்து தங்களது ஆதார் மற்றும் வாக்காளர் பதிவு எண் விவரங்களை வழங்கியும் தங்களது ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைத்து பதிவு செய்து கொள்ளலாம்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான சாந்தி, தலைமைவகித்து, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளின் கருத்துக்களை கேட்டறிந்தார்.

    தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில் 1479 வாக்குச்சாவடிகள், 860 வாக்குச்சாவடி மையங்களில் ஏற்கனவே அமைந்துள்ளன.

    இவற்றில் ஏதேனும் புதிய பாகங்கள் அமைத்தல், வாக்குச் சாவடியை இடமாற்றம் செய்தல், வாக்குச் சாவடியை வேறு கட்டடத்திற்கு மாறுதல் செய்தல் மற்றும் வாக்குச் சாவடி பெயர் திருத்தம் செய்தல் போன்றவை மேற்கொள்வதற்காக 5 சட்டமன்ற தொகுதிகளின் விவரங்கள் ஏதேனும் இருந்தால் அதன் விவரங்களை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கோரிக்கை மனுக்களாக வழங்க வேண்டுமென ஏற்கனவே கேட்டுக்கொள்ளப்பட்டது.

    தருமபுரி மாவட்டத்தில் உள்ள வாக்காளர்கள் எவரேனும் இதுநாளது வரை வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்காமல் இருப்பின் https://www.nvsp.in என்ற இணையதளத்திலும் அல்லது Voter Helpline APP (VHA) மூலமாகவும், வாக்காளர்கள் தங்கள் பகுதிக்குட்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர்கள், வாக்காளர் உதவி மையம், "இ" சேவை மையம் மற்றும் மக்கள் சேவை மையம் ஆகியவைகளை அணுகியும் ஆதார் விவரங்களை சமர்பித்தும், அல்லது தங்களது இல்லம் தேடி 6B படிவத்துடன் வரும் வாக்குசாவடி நிலை அலுவலர்களிடம், தாமாக முன்வந்து தங்களது ஆதார் மற்றும் வாக்காளர் பதிவு எண் விவரங்களை வழங்கியும் தங்களது ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைத்து பதிவு செய்து கொள்ளலாம்.

    இக்கூட்டத்தில் தருமபுரி சார் ஆட்சியர் சித்ரா விஜயன், அரூர் வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பழனிதேவி, மாவட்ட ஆட்சியர் அலுவலக தேர்தல் தனி வட்டாட்சியர் சவுகத் அலி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    • விருதுநகர் மாவட்டத்தில் மாநில கல்வி ெகாள்கை குறித்த கருத்து கேட்பு கூட்டம் நடக்கிறது.
    • மாவட்ட கல்வி அலுவலர் தலைமையில் கீழ்கண்ட பள்ளிகளில் இந்த கூட்டம் நடக்கிறது.

    விருதுநகர்

    தமிழ்நாட்டில் மாநிலத்திற்கென தனித்துவமான மாநில கல்வி கொள்கை வகுப்பதற்காக விருதுநகர் மாவட்டத்தில் கல்வி மாவட்ட அளவிலான கருத்து கேட்பு கூட்டம் நாளை (14-ந் தேதி) மதியம் 2 மணியளவில் நடக்கிறது.

    மாவட்ட கல்வி அலுவலர் தலைமையில் கீழ்கண்ட பள்ளிகளில் இந்த கூட்டம் நடக்கிறது. விருதுநகர் கல்வி மாவட்டத்தில் கே.வி.எஸ். ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், அருப்புக்கோட்டை கல்வி மாவட்டத்தில் தேவாங்கர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், ஸ்ரீவில்லிபுத்தூர் கல்வி மாவட்டத்தில் தியாகராஜா மேல்நிலைப்பள்ளியிலும், சிவகாசி கல்வி மாவட்டத்தில் எஸ்.எச்.என்.வி. மகளிர் மேல்நிலைப்பள்ளியிலும் கருத்துக்கேட்பு கூட்டங்கள் நாளை மதியம் 2 மணிக்கு நடக்கிறது.

    இந்த கூட்டத்தில் கல்வியாளர்கள், தலைமையாசிரியர்கள், பத்திரிக்கையாளர்கள், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், ஆசிரியர்கள், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொள்ளலாம். கருத்து தெரிவிக்க விரும்புவோர் தங்களது கருத்துகளை தமிழில் தட்டச்சு செய்து இந்த கூட்டத்தில் ஒப்படைக்குமாறு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.

    • போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் லாங்கு பஜாரில் கடை வைக்க வேண்டாம் என்று அறிவுறுத்தல்
    • மாற்று இடம் குறித்து ஆலோசனை

    வேலூர்:

    வேலூர் லாங்கு பஜாரில் சாலையை ஆக்கிரமித்து கடைகள் வைப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக அங்குள்ள வியாபாரிகளுக்கு பழைய மீன் மார்க்கெட் வளாகத்தில் கடைகள் கட்டப்பட்டுள்ளன.

    இருப்பினும் அங்கு போதிய அளவு கடை அமைக்க வில்லை, மின்சார வசதி இல்லை சமூக விரோதிகளின் தொல்லை உள்ளிட்டவைகளால் அங்கு கடைகளை நடத்த முடியாமல் மீண்டும் லாங்கு பஜாரில் கடை நடத்தி வருகின்றனர். இதனால் போலீசார் லாங்கு பஜாரில் உள்ள பழக்கடைகளை அப்புறப்படுத்தி உள்ளனர்.

    இந்த நிலையில் லாங்கு பஜாரில் உள்ள சண்முகனடியார் சங்கத்தில் பழ வியாபாரிகளிடம் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாவட்ட தலைவர் ஞானவேலு தலைமை தாங்கினார். போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜ் மற்றும் 100-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.

    இதையடுத்து லாங்கு பஜாரில் பழக்கடையை வேறு எங்கு மாற்றம் செய்யலாம் என்பது குறித்து ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

    • புதிதாக கல்குவாரி அமைப்பது குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் டி.என்.பாளையத்தில் ஆர்.டி.ஓ. திவ்ய பிரியதர்ஷினி தலைமையில் நடைபெற்றது.
    • கொங்கர்பாளையம் ஊராட்சியை சேர்ந்த கோவிலூர், வினோபாநகர் கிராமங்களை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

    டி.என்.பாளையம்:

    டி.என்.பாளையம் அருகே உள்ள கொங்கர்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட கவுண்டன்பாளையம் வனப்பகுதியையொட்டிய பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் ஒருவர் புதிதாக கல்குவாரி அமைக்க அரசிடம் அனுமதி கேட்டு இருந்தார்.

    இது குறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் டி.என்.பாளையத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் கோபிசெட்டிபாளையம் ஆர்.டி.ஓ. திவ்ய பிரியதர்ஷினி தலைமையில் நடைபெற்றது.

    கோபி தாசில்தார் ஆசியா, மாவட்ட சுற்றுச்சூழல் துறை பொறியாளர் உதயகுமார், சத்தியமங்கலம் போலீஸ் துணை சூப்பிரண்டு ஜெயபாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் புதிதாக அமைய உள்ள கல்குவாரி பற்றிய விபரங்களை அதிகாரிகள் எடுத்துரைத்தனர்.

    இந்த கருத்து கேட்பு கூட்டத்தில் பொதுமக்கள் பலர் கல்குவாரி அமைத்தால் நிலநடுக்கம் ஏற்படும், புலிகள் காப்பகம் என்பதால் வனவிலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படும் மற்றும் அணை பகுதிகள் பாதிக்கப்படும் என எதிர்ப்பு தெரிவித்தனர்.

    ஊராட்சி மன்றம் மற்றும் பொதுமக்கள் சிலர் கல்குவாரி அமைக்க ஆதரவும் தெரிவித்தனர். முடிவில் அதிகாரிகள் இதுகுறித்து பரிசீலனை செய்யப்படும் எனக் கூறினர்.

    குண்டேரிப்பள்ளம் பாசன விவசாயிகள் உள்பட கொங்கர்பாளையம் ஊராட்சியை சேர்ந்த கோவிலூர், வினோபாநகர் கிராமங்களை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

    ×