search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சார் பதிவாளர் அலுவலகங்கள் மறு சீரமைப்பு கருத்து கேட்பு கூட்டம்
    X

    சார் பதிவாளர் அலுவலகங்கள் மறு சீரமைப்பு கருத்து கேட்பு கூட்டம்

    • பொதுமக்கள் மனு வழங்க வேண்டும்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் சார்பதிவாளர் அலுவலகங்கள் மறுசீரமைப்பு குறித்த கருத்து கேட்புகூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது. அரக்கோணம் அலுவலகத்தை பிரிக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    கருத்து கேட்பு கூட்டம் ராணிப்பேட்டை மாவட்டத்தில் ராணிப்பேட்டை, அரக்கோணம், நெமிலி, சோளிங்கர், வாலாஜா, ஆற்காடு, கலவை, காவேரிப்பாக்கம், ஆகிய 8 சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு கீழ் 325 கிராமங்கள் பதிவுகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த 8 சார் பதிவாளர் அலுவலகங்களை 6 சார்பதிவாளர் அலுவலகங்களாக குறைத்து மறு சீரமைப்பு செய்வது குறித்த பொதுமக்களின் கருத்து கேட்பு கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில் 6 வட்டங்களில் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் வட்டங்கள் வாரியாக சார் பதிவுகளை மேற்கொள்ள இணைக்கப்பட்ட உள்ள கிராமங்கள் குறித்து தெரிவிக்கப்பட்டது. பொதுமக்கள் எதிர்ப்பு தற்போது அரக்கோணம் பெரியவட்டம் என்பதால், அரக்கோணம் சார் பதிவாளர் அலுவலகத்தில் இருந்து புதியதாக தக்கோலம் சார் பதிவாளர் அலுவலகம் உருவாக்கப்பட உள்ளது என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

    அதற்கு அரக்கோணம் சுற்றுவட்ட பகுதிகளில் உள்ள சில கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதற்கு கோரிக்கைகள் பதிவு செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று கலெக்டர்தெரிவித்தார்.

    இதேபோன்று மற்ற அனைத்து வட்டங்களிலும் உள்ள பகுதிகள் இணைப்பது குறித்து தெரிவிக்கப்பட்டது, இதற்கு ஆட்சேபனை தெரிவிக்கும் மக்கள் மனுக்களாக வழங்க வேண்டும் என தெரிவித்தார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் குமரேஷ்வரன், துணை பதிவுத்துறை தலைவர் சுதா மல்லையா, மாவட்ட பதிவாளர் வாணி மற்றும் சம்பந்தப்பட்ட வட்டங்களில் உள்ள பொதுமக்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×