search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தருமபுரியில் அரசியல் கட்சிகளின்   பிரதிநிதிகளுடன் கருத்து கேட்பு கூட்டம்  கலெக்டர் சாந்தி தலைமையில் நடந்தது
    X

    மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான சாந்தி, தலைமையில் கூட்டம் நடந்த காட்சி.

    தருமபுரியில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் கருத்து கேட்பு கூட்டம் கலெக்டர் சாந்தி தலைமையில் நடந்தது

    • தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான சாந்தி, தலைமைவகித்து, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளின் கருத்துக்களை கேட்டறிந்தார்.
    • தாமாக முன்வந்து தங்களது ஆதார் மற்றும் வாக்காளர் பதிவு எண் விவரங்களை வழங்கியும் தங்களது ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைத்து பதிவு செய்து கொள்ளலாம்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான சாந்தி, தலைமைவகித்து, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளின் கருத்துக்களை கேட்டறிந்தார்.

    தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில் 1479 வாக்குச்சாவடிகள், 860 வாக்குச்சாவடி மையங்களில் ஏற்கனவே அமைந்துள்ளன.

    இவற்றில் ஏதேனும் புதிய பாகங்கள் அமைத்தல், வாக்குச் சாவடியை இடமாற்றம் செய்தல், வாக்குச் சாவடியை வேறு கட்டடத்திற்கு மாறுதல் செய்தல் மற்றும் வாக்குச் சாவடி பெயர் திருத்தம் செய்தல் போன்றவை மேற்கொள்வதற்காக 5 சட்டமன்ற தொகுதிகளின் விவரங்கள் ஏதேனும் இருந்தால் அதன் விவரங்களை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கோரிக்கை மனுக்களாக வழங்க வேண்டுமென ஏற்கனவே கேட்டுக்கொள்ளப்பட்டது.

    தருமபுரி மாவட்டத்தில் உள்ள வாக்காளர்கள் எவரேனும் இதுநாளது வரை வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்காமல் இருப்பின் https://www.nvsp.in என்ற இணையதளத்திலும் அல்லது Voter Helpline APP (VHA) மூலமாகவும், வாக்காளர்கள் தங்கள் பகுதிக்குட்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர்கள், வாக்காளர் உதவி மையம், "இ" சேவை மையம் மற்றும் மக்கள் சேவை மையம் ஆகியவைகளை அணுகியும் ஆதார் விவரங்களை சமர்பித்தும், அல்லது தங்களது இல்லம் தேடி 6B படிவத்துடன் வரும் வாக்குசாவடி நிலை அலுவலர்களிடம், தாமாக முன்வந்து தங்களது ஆதார் மற்றும் வாக்காளர் பதிவு எண் விவரங்களை வழங்கியும் தங்களது ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைத்து பதிவு செய்து கொள்ளலாம்.

    இக்கூட்டத்தில் தருமபுரி சார் ஆட்சியர் சித்ரா விஜயன், அரூர் வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பழனிதேவி, மாவட்ட ஆட்சியர் அலுவலக தேர்தல் தனி வட்டாட்சியர் சவுகத் அலி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×