search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கந்தசஷ்டி விழா"

    • கிரி வீதியில் தாரகாசூரன், பானுகோபன், சிங்கமுகசூரன், சூரபத்மன் ஆகியோரை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடைபெற்றது.
    • கந்தசஷ்டி விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சியாக இன்று காலையில் பழனி மலைக்கோவிலில் வள்ளிதெய்வானை சமேத சண்முகருக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.

    பழனி:

    அருபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனியில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 25ந் தேதி காப்புகட்டுதலுடன் தொடங்கியது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று நடைபெற்றது. இதற்காக பெரியநாயகி அம்மன் கோவிலில் இருந்து வள்ளி தெய்வானையுடன் முத்துக்குமாரசாமி மலைக்கோவிலில் இருந்து சின்னகுமாரசாமி மலை அடிவாரத்தில் எழுந்தரு ளினார். பராசக்திவேல் மலையில் இருந்து இறங்கி திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோவிலில் வந்து அடிவாரம் சென்றடைந்தது.

    அதன்பின் இரவு 7.15 மணி அளவில் கிரி வீதியில் தாரகாசூரன், பானுகோபன், சிங்கமுகசூரன், சூரபத்மன் ஆகியோரை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷம் முழங்க முருகனை வழிபட்டனர். மேலும் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு விரதம் மேற்கொண்டிருந்த பக்த ர்களும் சூரசம்ஹாரத்தை கண்டு தங்கள் விரதத்தை நிறைவு செய்தனர்.

    கந்தசஷ்டி விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சியாக இன்று காலையில் பழனி மலைக்கோவிலில் வள்ளிதெய்வானை சமேத சண்முகருக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.

    இதற்காக சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சாமிக்கு பூஜைகள் நடத்தப்பட்டு சோடஷதீபாராதனை காட்டப்பட்டு திரு மாங்கல்யம் அணிவிக்கப்ப ட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். இன்று இரவு 7 மணிக்கு பெரியநாயகி அம்மன் கோவிலில் வள்ளிதெய்வானை, முத்துக்குமாரசாமிக்கு திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

    • வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள கந்தசஷ்டி விழாவையொட்டி விரதம் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
    • சுற்றுலா பயணிகள் மற்றும் வியாபாரிகள் மூலம் திருச்செந்தூர் ரெயில் நிலையத்திற்கு நாளொன்றுக்கு சராசரியாக லட்சத்திற்கு மேல் வருமானம் கிடைக்கிறது.

    தென்காசி:

    அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.

    ஆன்மீக சுற்றுலா தலமான இக்கோவிலுக்கு தினமும் உள்ளூர், வெளியூர் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும், சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர்.

    இங்கு வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள கந்தசஷ்டி விழாவையொட்டி விரதம் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் ரெயில் சேவையையே அதிகம் பயன்படுத்துகின்றனர். இதனால் ரெயில்களில் எப்போதும் கூட்டம் அலைமோதுகிறது.

    சுற்றுலா பயணிகள் மற்றும் வியாபாரிகள் மூலம் திருச்செந்தூர் ரெயில் நிலையத்திற்கு நாளொன்றுக்கு சராசரியாக லட்சத்திற்கு மேல் வருமானம் கிடைக்கிறது. கந்தசஷ்டி விழா மற்றும் விடுமுறை நாட்களில் நாளொன்றுக்கு ரூ.3 லட்சம் வரை வருமானம் கிடைக்கிறது.

    திருச்செந்தூர் ரெயில் நிலையத்தில் 18 பெட்டிகள் நிறுத்தும் அளவுக்கு ஒரு நடைமேடையும், 12 பெட்டிகள் நிறுத்தும் இரு நடைமேடைகளும் உள்ளது. இந்த 3 நடைமேடைகளையும் 24 பெட்டிகள் நிறுத்தும் அளவுக்கு நீட்டிப்பதோடு, மேலும் 2 நடைமேடைகள் அமைக்க வேண்டும் என்பது பக்தர்கள் எதிர்பார்ப்பு.

    நெல்லை - திருச்செந்தூர் ரெயில் வழித்தடத்தில் இரவு நேரப் பணியாளர்கள் இல்லாததும் கூடுதல் ரெயில் வழி இயக்க தடங்கலை ஏற்படுத்துகிறது.

    இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில், தற்போது திருநெல்வேலி, திருச்செந்தூர் ரெயில் வழித்தடத்தில் செந்தூர் எக்ஸ்பிரஸ், பாலக்காடு எக்ஸ்பிரஸ், மணியாச்சி எக்ஸ்பிரஸ், திருநெல்வேலி- திருச்செந்தூர் ரெயில்கள் 4 ஜோடி என மொத்தம் 7 ரெயில்கள் தற்போது இயங்கி வருகின்றன. இரவு நேர பணியாளர்களை உடனடியாக நியமனம் செய்து 24 மணி நேரம் ரெயில்கள் இயங்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு 1 மணி நேரத்துக்கு ஒரு ரெயில் என்ற வீதத்தில் தொடர்ந்து ரெயில்களை இயக்க வேண்டும்.

    இந்த சிறப்பு ரெயில்கள் லட்சக்கணக்கான முருக பக்தர்களுக்கு பயனுள்ளதாக இருப்பதோடு தெற்கு ரெயில்வேக்கும் நல்ல வருமானத்தை கொடுக்கும். எனவே தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் தெற்கு ரெயில்வேக்கு அழுத்தம் கொடுத்து கூடுதல் ரெயில்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • 30-ந் தேதி சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைப்பெறுகிறது
    • 16 வகை திரவியங்களான அபிஷேகம் செய்து தீபாராதனை நடைப்பெற்றது.

    வடவள்ளி,

    கோவையில் மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு பல்வேறு மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவது உண்டு.

    இந்த நிலையில் கோவிலில் கந்த சஷ்டி விழா முன்னிட்டு பக்தர்களுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி இன்று நடைப்பெற்றது. முன்னதாக விழா நாளான இன்று காலை 5. 30 மணிக்கு கோ பூஜை செய்து நடை திறக்கப்பட்டு உற்சவருக்கு 16 வகை திரவியங்களான பால், நெய், மஞ்சள், உள்ளிட்டவை கொண்டு அபிஷேகம் செய்து தீபாராதனை நடைப்பெற்றது.

    பச்சை பட்டு உடுத்தி ராஜா அலங்காரத்தில் உச்சவர் காட்சியாளித்தார். மேலும் விழா நிகழ்வாக 6.30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை நடைபெற்றது. 8.30 மணிக்கு புனித மண் எடுத்தல் நிகழ்ச்சியும், அதை தொடர்ந்து சுவாமிக்கு காப்புகட்டும் நிகழ்ச்சியும் நடைப்பெற்றது.

    முன் மண்டபத்தில் மோசிக வாகனத்தில் விநாயகரும் , தங்கயானை வாகனத்தில் வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியசுவாமியும், வெள்ளை குதிரை வாகனத்தில் வீரபாகுவும், தங்க மயில் வாகனத்தில் சுப்பிரமணியரும் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

    தொடர்ந்து 9 மணிக்கு விரதம் இருக்கும் பக்தர்களுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று முதல காலை மாலை யாகம் வரும் 30-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை நடைப்பெகிறது.

    இதனை தொடர்ந்து வரும் 30-ந் தேதி மதியம் 3 மணிக்கு சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைப்பெறுகிறது. மறுநாள் காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை திருக்கால்யாணம் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகின்றனர். 

    • பல்லடம் முருகன் கோவில்களில் சூரசம்ஹார விழாதுவங்கியது.
    • முருகன் கோவில்களில் சூரசம்ஹார விழா காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது.

    பல்லடம் :

    பல்லடம் முருகன் கோவில்களில் சூரசம்ஹார விழாதுவங்கியது.பல்லடத்தில் உள்ள தண்டாயுத பாணி கோவில், மாதப்பூர் முத்துக்குமாரசாமி மலைக்கோவில், உள்ளிட்ட முருகன் கோவில்களில் சூரசம்ஹார விழா காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது.வருடம்தோறும் ஐப்பசி மாதம் அமாவாசைக்கு அடுத்த நாளான வளர்பிறை முதல் சஷ்டி வரை 6 நாட்கள் கந்த சஷ்டி விரதம் மேற்கொள்வர்கள். 6-வது நாளான சஷ்டி அன்று முருகன் கோவில்களில் சூரசம்ஹாரவிழா நடைபெறும். நேற்று சஷ்டி விரதம் ஆரம்பநாள்.

    இதன்படி பல்லடத்தில் உள்ள தண்டாயுத பாணி கோவில், மாதப்பூர் முத்துக்குமாரசாமி மலைக்கோவில், உள்ளிட்ட முருகன் கோவில்களில் சுவாமிக்கு 16 வகையான திரவியங்களை கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மலர், மாலைகளால் அலங்காரம் செய்யப்பட்டு,தீபாராதனை நடைபெற்றது இதன் பின்னர் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விரதம் இருக்கும் பக்தர்கள் கலந்து கொண்டு காப்பு கட்டி கொண்டனர்.

    • கந்த சஷ்டி விழாவின் முதல் நாளான நேற்று கணபதி ஹோமத்துடன் பூஜைகள் நடைபெற்றது.
    • வள்ளி, தெய்வானை சமேத உற்சவருக்கும், வேலுக்கும் சிறப்பு அபிஷேகம் -அலங்கார பூஜைகள் நடைபெற்றது.

    வீரபாண்டி :

    திருப்பூர் மாவட்டம், அலகுமலையில் உள்ளமுத்துக்குமார பாலதண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் பிரசித்திபெற்றது. இங்கு ஆண்டுதோறும் கந்த சஷ்டி திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். கந்த சஷ்டி விழாவின் முதல் நாளான நேற்று கணபதி ஹோமத்துடன் பூஜைகள் நடைபெற்றது. பின்னர் கோவில் திருப்பணிக்குழுத் தலைவர் சின்னுக்கவுண்டர் முன்னிலையில் கோபூஜை நடைபெற்றது. வள்ளி, தெய்வானை சமேத உற்சவருக்கும், வேலுக்கும் சிறப்பு அபிஷேகம் -அலங்கார பூஜைகள் நடைபெற்றது. இன்றைய தினத்தின் முக்கிய நிகழ்வான முருகப்பெருமானுக்கு திருக்காப்பு அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து கந்த சஷ்டி விரதம் மேற்கொள்ளும் பக்தர்களுக்கு கங்கணம் அணிவித்து பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

    சுமார் 1500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் -குழந்தைகள் சஷ்டி விரதத்தை துவக்கினர். பின்னர் அலகுமலை, மூலவரான முத்துக்குமார பாலதண்டாயுதபாணி சுவாமிக்கு மரிக்கொழுந்து பச்சை மாலை அணிவிக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. அடிவார மண்டபத்தில் கந்தன் கருணை எனும் தலைப்பில் மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. சஷ்டி விழாவுக்கான ஏற்பாடுகளை கந்தசஷ்டி விழாக்குழு - திருக்கோவில் ஆன்மிகப் பேரவையினர் செய்து வருகின்றனர்.

    • ஐப்பசி மாதம் அமாவாசைக்கு அடுத்த நாளான வளர்பிறை பிரதமை முதல் சஷ்டி வரை விரதம் மேற்கொள்வர்கள்.
    • 16 வகையான திரவியங்களை கொண்டு அபிஷேகம் நடைபெற்றது.

    வீரபாண்டி :

    ஐப்பசி மாதம் அமாவாசைக்கு அடுத்த நாளான வளர்பிறை பிரதமை முதல் சஷ்டி வரை 6 நாள் கந்த சஷ்டி விரதம் மேற்கொள்வர்கள். 6-வது நாளான சஷ்டி அன்று முருகன் கோவில்களில் சூரசம்ஹாரம் நடைபெறும். இன்று முதல் சஷ்டி விரதம் ஆரம்பநாள். அதன்படி திருப்பூர் வீரபாண்டி பலவஞ்சிபாளையம் ஸ்ரீ காளிகுமாரசுவாமி கோவிலில் சுவாமிக்கு 16 வகையான திரவியங்களை கொண்டு அபிஷேகம் நடைபெற்று பின்பு மலர் மாலைகளால் அலங்காரம் செய்யப்பட்ட பின்பு தீபாராதனை நடைபெற்ற பின்பு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விரதம் இருக்கும் பக்தர்கள் கலந்து கொண்டு காப்பு கட்டி கொண்டார்கள்.

    உடுமலையில் பிரசித்தி பெற்ற பிரசன்ன விநாயகர் கோவில் வளாகத்தில் சுப்பிரமணியர் சன்னதி உள்ளது. இங்கு கந்த சஷ்டி சூரசம்ஹார திருவிழா இன்று தொடங்குகிறது. மாலை 6:30 மணிக்கு முதல் இரவு 10 மணி வரை அபிஷேகம், யாகசாலை வேள்வி பூஜை ,திருவிழா பிரசாதம் வழங்கும் விழா நிகழ்ச்சியும் நடக்கிறது.

    நாளை காலை 7 மணி முதல் 10 மணி வரை யாகசாலை வேள்வி பூஜை அபிஷேகம் அலங்காரம் மகா தீபாரதனை நிகழ்ச்சிகளும் மாலை 6:30 முதல் மணி முதல் 7-30 மணி வரை உற்சவர் சுப்பிரமணியசுவாமிக்கு அபிஷேகம் ,அலங்காரம், மகா தீபாராதனை நிகழ்ச்சிகளும் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் தீபா மற்றும் கோயில் அர்ச்சகர்கள், பணியாளர்கள் ஆகியோர் செய்துள்ளனர்.

    • கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு பழனி கோவிலுக்கு இன்று அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
    • பழனி கோவில் யானை கஸ்தூரி அடிவாரத்தில் இருந்து படிப்பாதை வழியாக மலைக்கோவிலுக்கு அழைத்து வரப்பட்டது.

    பழனி:

    முருகபெருமானின் 3ம் படை வீடான பழனியில் கந்தசஷ்டி விழா இன்று மலைக்கோவிலில் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.

    காலை 11.30 மணிக்கு உச்சிகால பூஜை செய்யப்பட்டு அதன் பிறகு மூலவர், உற்சவர், வள்ளி தெய்வானை, துவார பாலகர்கள், வாகனங்கள் ஆகியவற்றுக்கு காப்பு கட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து பழனி கோவிலின் உபகோவிலான திருஆவினன்குடி, பெரியநாயகி அம்மன் கோவிலிலும் காப்பு கட்டுதல் நடைபெற்றது.

    இதற்காக பழனி கோவில் யானை கஸ்தூரி அடிவாரத்தில் இருந்து படிப்பாதை வழியாக மலைக்கோவிலுக்கு அழைத்து வரப்பட்டது. கந்தசஷ்டி விழா நடைபெறும் 7 நாட்களும் கோவில் யானை மலைக்கோவிலிலேயே தங்கி இருக்கும்.

    கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு பழனி கோவிலுக்கு இன்று அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    ரோப்கார் நிலையம், மின் இழுவை ரெயில் நிலையம் ஆகிய இடங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. சூரியகிரகணத்தை முன்னிட்டு பிற்பகல் 2.30 மணிக்கு கோவில் நடை அடைக்கப்பட்டது. அதன் பின் இரவு 7 மணிக்கு சம்ப்ரோக்‌ஷன பூஜைகள் செய்யப்பட்டு கோவில் நடை திறக்கப்படும்.

    அதனைத் தொடர்ந்து சாயரட்சை பூஜை மற்றும் தங்க ரத புறப்பாடு நடைபெறுகிறது. கந்தசஷ்டி விழாவின் 7 நாட்களும் வள்ளி தெய்வானை சமேத முத்துக்குமார சாமி தங்க சப்பரம், வெள்ளி காமதேனு, தங்க மயில் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வருகிற 30ந் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் மாலை 6 மணிக்கு மேல் தாரகாசூரன், பானுகோபன், சிங்கமுக சூரன் மற்றும் சூரபத்மன் ஆகியோரை முருகபெருமான் வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறும்.

    மறுநாள் காலை 9.30 மணிக்கு மேல் மலைக்கோவிலில் சண்முகர், வள்ளி தெய்வானை திருக்கல்யாணமும், இரவு 7 மணிக்கு மேல் 8 மணிக்குள் பெரியநாயகி அம்மன் கோவிலில் முத்துக்குமாரசாமி, வள்ளி, தெய்வானை திருக்கல்யாணமும் நடைபெறுகிறது.

    • இந்த ஆண்டுக்கான கந்த சஷ்டி விழா 25-ந் தேதி தொடங்குகிறது
    • விழா ஏற்பாடுகளை கன்னியாகுமரி முருகன் குன்றம் வேல்முருகன் கோவில் நற்பணி மன்ற நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி பழத்தோட்டம் அருகே உள்ள முருகன் குன்றத்தில் வேல் முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் ஐப்பசி மாதம் கந்த சஷ்டி விழா 7 நாட்கள் விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான கந்த சஷ்டி விழா வருகிற 25-ந்தேதி தொடங்குகிறது. விழா 31-ந் தேதி வரை 7 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது.

    1-ம் திருவிழாவான வருகிற 5-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமமும், காப்பு கட்டும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    3-வது நாளான 27-ந் தேதி மாலை 5.30மணிக்கு விசாகத்தை முன்னிட்டு முருகன் குன்றத்தை சுற்றி 6 முறை வலம் வரும் கந்தகிரி வலம் வருதல் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 7.45 மணிக்கு கஞ்சி தர்மம் வழங்குதல் நடக்கிறது.

    6-வது நாளான 30-ந்தேதி மாலை 6 மணிக்கு மலை அடிவாரத்தில் தேரிவிளை குண்டலில் இருந்து முருகனும் சூரனும் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடக்கிறது. 7-வது நாளான 31-ந் தேதி காலை 8.45 மணிக்கு சீர்வரிசை ஊர்வலமாக எடுத்து வரும் நிகழ்ச்சியும், 10 மணிக்கு திருக்கல்யாண வைபவமும், 11 மணிக்கு திருக்கல்யாண கோலத்துடன் இந்திர வாகனத்தில் பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சியும் நடக்கிறது. பகல் 12 மணிக்கு மங்கள தீபாராதனையும் 12.30 மணிக்கு திருக்கல்யாண விருந்தும் மாலை 6.30 மணிக்கு சிறப்பு வழிபாடும் நடக்கிறது.

    விழா ஏற்பாடுகளை கன்னியாகுமரி முருகன் குன்றம் வேல்முருகன் கோவில் நற்பணி மன்ற நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.

    • கந்தசஷ்டி திருவிழா 7 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டிற்கான திருவிழா வருகிற 25-ந்தேதி தொடங்குகிறது.
    • திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.

    பழனி:

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி திருவிழா 7 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டிற்கான திருவிழா வருகிற 25-ந்தேதி தொடங்குகிறது.

    அன்றைய தினம் நண்பகல் 11.30 மணிக்கு உச்சிக்கால பூஜையில் மூலவருக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், கல்பபூஜை நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து விநாயகர், மூலவர், சண்முகர், வள்ளி-தெய்வானை, துவார பாலகர்கள், மயில், வேல் மற்றும் நவவீரர்களுக்கு காப்புக்கட்டு நடைபெறுகிறது. அதன்பின்னர் சஷ்டி விரதம் தொடங்கும் பக்தர்களுக்கு காப்பு கட்டப்படுகிறது.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 30-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. இதையொட்டி அன்றைய தினம் அதிகாலை 4 மணிக்கு நடைதிறப்பு, 4.30 மணிக்கு விளாபூஜை, படையல் நைவேத்தியம், 12 மணிக்கு உச்சிக்கால பூஜை, மதியம் 1.30 மணிக்கு சாயரட்சை பூஜை நடைபெறுகிறது.

    பின்னர் சூரர்களை வதம் செய்வதற்காக மலைக்கோவிலில் சின்னக்குமாரர், மலைக்கொழுந்து அம்மனிடம் வேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து மலைக்கோவில் நடை சாத்தப்படுகிறது.

    சூரசம்ஹார நிகழ்ச்சிக்காக சின்னக்குமாரர் வில், அம்பு, கேடயம், குத்தீட்டி உள்ளிட்ட ஆயுதங்கள் மற்றும் நவவீரர்களுடன் மலைக்கோவிலில் இருந்து புறப்பட்டு அடிவாரம் பாதவிநாயகர் கோவிலுக்கு வருகிறார்.

    பின்னர் திருஆவினன்குடி கோவிலுக்கு சென்று குழந்தை வேலாயுதசுவாமியிடம் பராசக்தி வேல் வைத்து சிறப்பு பூஜை நடைபெறுகிறது. தொடர்ந்து 6 மணிக்கு மேல் கிரிவீதிகளில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    இரவு 9 மணிக்கு மேல் மலைக்கோவிலுக்கு செல்லும் படிப்பாதையில் உள்ள ஆரியர் மண்டபத்தில் வெற்றி விழா நடக்கிறது. தொடர்ந்து பராசக்தி வேல் மலைக்கோவிலுக்கு சென்று சம்ரோட்சன பூஜை, ராக்கால பூஜை நடைபெறுகிறது.

    திருவிழாவின் 7-ம் நாளான 31-ந்தேதி மலைக்கோவிலில் சண்முகர் வள்ளி-தெய்வானை திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது. முன்னதாக திருக்கல்யாண மண்டபத்தில் சண்முகர், வள்ளி-தெய்வானைக்கு 16 வகை அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்து காலை 9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

    மேலும் அன்று இரவு 7 மணிக்கு மேல் பெரியநாயகி அம்மன் கோவிலில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடைபெறுகிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.

    கந்த சஷ்டி விழா துவக்கமான நேற்று காப்புக்கட்டி விரதம் துவக்கலாம் என முருக பக்தர்கள் ஆர்வமுடன் விஸ்வேஸ்வர சுவாமி கோவிலிலுக்கு வந்தனர்.
    திருப்பூர்:

    திருப்பூர் விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஊரடங்கு காரணமாக திருவிழாக்கள் நடக்கவி ல்லை. தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டு முருகன் கோவில்களில் கந்தசஷ்டி விழா கோலாகலமாக துவங்கியது.

    சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோவில், திருப்பூர் கல்யாணசுப்பிரமணியர் கோவில்களில் பக்தர்கள் காப்புக்கட்டி விரதம் துவங்கினர். கந்த சஷ்டி விழா துவக்கமான நேற்று காப்புக்கட்டி விரதம் துவக்கலாம் என முருக பக்தர்கள் ஆர்வமுடன் விஸ்வேஸ்வர சுவாமி கோவிலிலுக்கு வந்தனர்.

    கந்தசஷ்டி விழாவு க்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக கூறி பக்தர்கள் காப்பு அணிய அனுமதிக்கப்படவில்லை. உற்சவமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கவில்லை. இதுதொடர்பாக செயல் அலுவலர் சீனிவாசனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    கந்தசஷ்டி விழா நடத்த எந்த கோவிலுக்கும் அனுமதியில்லை. மூலவ ருக்கு மட்டும் அபிஷேகம் நடைபெறும். சூரசம்ஹார நிகழ்ச்சி உள் பிரகாரத்தில் நடக்கும். அதற்கு பிறகு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர். கூட்டம் அதிகம் வரும் என்பதால் காப்புக்கட்ட அனுமதியில்லை என்றார்.
    ×