search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ganda Shashti Festival"

    • சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நாளை நடக்கிறது.
    • ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை

    திருச்செந்தூர்:

    முருகப்பெருமானின் அறு படை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெறும் திரு விழாக்களில் மிகவும் முக்கிய திருவிழாவான கந்த சஷ்டி திருவிழா கடந்த 13-ந் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    விழாவில் ஒவ்வொரு நாளும் காலை 7 மணிக்கு யாகசாலை பூஜை தொடங்கி மதியம் 12 மணியளவில் யாகசாலையில் தீபாராதனையும் தொடர்ந்து சுவாமி ஜெயந்தி நாதர் தங்க சப்பரத்தில் எழுந்தருளி சண்முக விலாசம் மண்டபம் வந்து அங்கு சுவாமிக்கு தீபாராதனை நடைபெற்றது.

    மாலை 4 மணிக்கு திருவாவடுதுறை ஆதின சஷ்டி மண்டபத்தில் சுவாமி ஜெயந்திநாதருக்கு அபிஷேகமாயி அலங்கார தீபாராதனைக்கு பிறகு தங்க ரதத்தில் எழுந்தருளி கிரி வீதி உலா வந்து கோவில் சேர்தல் நடைபெற்று வருகிறது.

    கந்த சஷ்டி 5-வது நாளான இன்று அதிகாலை 3 மணிக்கு கோவில் திறக்கப்பட்டது. 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 4 மணிக்கு உதயமார்த்தான்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது.

    கந்த சஷ்டி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்காரம் நாளை (சனிக்கிழமை) மாலை கோவில் கடற்கரையில் நடக்கிறது. மாலை 4 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் சூரனை வதம் செய்ய கடற்கரையில் எழுந்தருளுவார். அங்கு முதலில் யானை முகம் கொண்ட சூரனையும், இரண்டாவதாக சிங்கமுகனையும், மூன்றாவதாக தன் முகம் கொண்ட சூரனை சுவாமி வதம் செய்வார்.

    சூரசம்ஹாரம் முடிந்த பின்பு சுவாமிக்கும், அம்பாளுக்கும் சந்தோஷ மண்டபத்தில் அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனைக்கு பிறகு கிரி பிரகாரத்தில் உலா வந்து கோவில் சேர்தல் நடக்கிறது.

    அன்று இரவு 108 மகாதேவர் சன்னதி முன்பு சுவாமிக்கு சாயா அபிஷேகம் நடைபெற்று அதன் பின் சஷ்டி பூஜை தகடு கட்டுதல் நடக்கிறது.

    கந்த சஷ்டி திருவிழா 7-ம் நாளான நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) காலையில் தெய்வானை அம்பாள் தவசு காட்சிக்கு புறப்படுதல், மாலை 6.30 மணிக்கு அம்பாளுக்கு சுவாமி காட்சி கொடுத்து தோல் மாலை மாற்றுதல், இரவு 11 மணிக்கு சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கும் மேல கோபுரம் அருகில் உள்ள மண்டபத்தில் திருக்கல்யாணம் நடக்கிறது.

    பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமையில் திருச்செந்தூர் டி.எஸ்.பி. சந்தராஜ் மேற்பார்வையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், கணேசன், ராம்தாஸ், செந்தில் முருகன், கோவில் இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.

    • சிங்காரவேலவர் ஆலயத்தில் கந்த சஷ்டி விழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.
    • 17-ம் தேதி அன்னை வேல் நெடுங்கன்னி இருந்து சக்திவேல் வாங்கி நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    நாகப்பட்டினம்:

    சிக்கலில் வேல் வாங்கி திருச்செந்தூரில் போர் முடித்ததாக கந்தபுராண வரலாற்றில் கூறும் சிங்கார வேலவர் கோவில் கந்த சஷ்டி விழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது .

    பார்வதி தேவியான அன்னை வேல் நெடுங்கண்ணி சக்தி வாங்கி திருச்செந்தூரில் சூரனை வதம் செய்ததாக கந்த புராண வரலாறு.

    நாகப்பட்டினம் அடுத்த சிக்கல் அமைந்துள்ள சிங்காரவேலவர் ஆலயத்தில் கந்த சஷ்டி விழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.

    இதனை முன்னிட்டு சிங்காரவேலவர் வள்ளி, தெய்வானையுடன் மலர் அலங்காரத்தில் திருமஞ்சனத்தில் எழுந்தருளி அதனை தொடர்ந்து வீதி உலா காட்சி நடைபெற்றது முன்னதாக பால் பன்னீர் சந்தனம் பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 14 வகையான திரவிய பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்

    கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான வேல் வாங்குதல் வருகிற 17-ம் தேதி இரவு 8 மணிக்கு பார்வதி தேவியான அன்னை வேல் நெடுங்கன்னி இருந்து சக்திவேல் வாங்கி நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    அப்போது சிங்காரவேலருக்கு வேர்வை சிந்தும் காட்சி உலகில் வேறு எங்கும் நடைபெறாத அபூர்வ காட்சி ஆகும் மறுநாள் சூரசம்கார விழா எதிர்வரும் 18-ம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • பரமத்திவேலூர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில் கந்தசஷ்டியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
    • 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

    பரமத்திவேலூர்:

    பரமத்திவேலூர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில் கந்தசஷ்டியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

    பரமத்திவேலூர் பேட்டை பகவதி அம்மன் கோவிலில் உள்ள பாலமுருகனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், தேன், விபூதி, கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் பாலமுருகன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பாலமுருகன் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    கபிலர்மலை பாலசுப்பிர மணியசுவாமி கோவில், பரமத்தி அருகே உள்ள பிராந்தகத்தில் 34.5 அடி உயரமுள்ள ஆறுமு கக்கடவுள், பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் கோவிலில் உள்ள சுப்ரமணியர், பொத்தனூர் அருகே உள்ள பச்சமலை முருகன், அனிச்சம்பாளை யத்தில் வேல்வடிவம் கொண்ட சுப்ரமணியர், பிலிக்கல்பாளையம் விஜயகிரி வடபழனி ஆண்ட வர், நன்செய்இடையார் திருவேலீஸ்வரர் கோவிலில் உள்ள சுப்ரமணியர், நன்செய் இடையாறு ராஜா சுவாமி திருக்கோவில் உள்ள ராஜாசுவாமி, கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் கோவிலில் உள்ள பாலமுருகன், பாலப்பட்டி கதிர்மலை கந்தசாமி கோவில் மோகனூர் பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் மற்றும் கந்தம்பாளையம் அருணகிரி நாதர் மலையில் உள்ள வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர் உள்ளிட்ட கோவில்களில் முருகப்பெருமானுக்கு கந்தசஷ்டியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகமும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    • கிரி வீதியில் தாரகாசூரன், பானுகோபன், சிங்கமுகசூரன், சூரபத்மன் ஆகியோரை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடைபெற்றது.
    • கந்தசஷ்டி விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சியாக இன்று காலையில் பழனி மலைக்கோவிலில் வள்ளிதெய்வானை சமேத சண்முகருக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.

    பழனி:

    அருபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனியில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 25ந் தேதி காப்புகட்டுதலுடன் தொடங்கியது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று நடைபெற்றது. இதற்காக பெரியநாயகி அம்மன் கோவிலில் இருந்து வள்ளி தெய்வானையுடன் முத்துக்குமாரசாமி மலைக்கோவிலில் இருந்து சின்னகுமாரசாமி மலை அடிவாரத்தில் எழுந்தரு ளினார். பராசக்திவேல் மலையில் இருந்து இறங்கி திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோவிலில் வந்து அடிவாரம் சென்றடைந்தது.

    அதன்பின் இரவு 7.15 மணி அளவில் கிரி வீதியில் தாரகாசூரன், பானுகோபன், சிங்கமுகசூரன், சூரபத்மன் ஆகியோரை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷம் முழங்க முருகனை வழிபட்டனர். மேலும் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு விரதம் மேற்கொண்டிருந்த பக்த ர்களும் சூரசம்ஹாரத்தை கண்டு தங்கள் விரதத்தை நிறைவு செய்தனர்.

    கந்தசஷ்டி விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சியாக இன்று காலையில் பழனி மலைக்கோவிலில் வள்ளிதெய்வானை சமேத சண்முகருக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.

    இதற்காக சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சாமிக்கு பூஜைகள் நடத்தப்பட்டு சோடஷதீபாராதனை காட்டப்பட்டு திரு மாங்கல்யம் அணிவிக்கப்ப ட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். இன்று இரவு 7 மணிக்கு பெரியநாயகி அம்மன் கோவிலில் வள்ளிதெய்வானை, முத்துக்குமாரசாமிக்கு திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

    • 17-ம் ஆண்டு நடந்தது
    • பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது

    போளூர்:

    திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் உள்ள குமரகிரி ஸ்ரீ பாலமுருகன் கோவிலில் இன்று 17-ம் ஆண்டு கந்த சஷ்டி விழா மிக விமரிசையாக நடைபெற்றது.

    6 நாட்கள் நடைபெற்ற விழாவில் முதல் நாள் சந்தன காப்பு அபிஷேகமும், 2-ம் நாள் பன்னீர் அபிஷேகம், 3-ம் நாள் பஞ்சாமிர்தாபிஷேகம், நான்காம் நாள் விபூதி அபிஷேகம், ஐந்தாம் நாள் தயிர் அபிஷேகம், நடைபெற்றன.

    ஆறாவது நாளான இன்று டாக்டர் சிவனேசன் தலைமையில் பால்குடம் ஊர்வலம் போளூர் டவுன் சோமநாத ஈஸ்வரர் கோவிலில் இருந்து புறப்பட்டு நற்குன்று பாலமுருகன் கோவிலை அடைந்து முருகருக்கு பால் அபிஷேகம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    இதில் 200-க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் ஏந்தி ஊர்வலமாக வந்தனர் . நாளை (திங்கட்கிழமை) வள்ளி தெய்வானைக்கு திருமணம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    இந்நிகழ்ச்சியை கோயில் நிர்வாகிகள் தலைவர் ராமச்சந்திரன், தர்மகத்தா செல்வம், துணை தலைவர் கருப்பன், செயலாளர் சுப்பிரமணியம், என்றும் இறைவன் தொண்டில் மன்னு சுவாமிகள் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

    அதேபோல் போளூர் அருகே உள்ள ஆர் குன்னத்தூர் முருகர் கோவிலில் இன்று பாலாபிஷேகம் நடைப்பெற்றது.

    காளியம்மன் கோவிலில் இருந்து முன்னாள் மாவட்ட கவுன்சிலர் தமிழ்ச்செல்வி கருணா சுவாமிகள் தலைமையில் பெண்கள் ஊர்வலமாக சென்று ஆர் குன்னத்தூர் கோவிலை அடைந்து முருகருக்கு பால் அபிஷேகம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெற்றது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகன் அருள் பெற்றனர். இந்த விழா ஏற்பாடுகளை கருணா சாமிகள் செய்திருந்தார்.

    ×