search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வங்காளதேசத்தினர் 9 பேர் கைது"

    விவோ நிறுவனத்தின் வி9 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதே ஸ்மார்ட்போன் முன்னதாக இந்தோனேசியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. #VivoV9pro



    விவோ நிறுவனத்தின் வி9 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. முன்னதாக விவோ வி9 ஸ்மார்ட்போன் 6 ஜிபி ரேம் உடன் இந்தோனேசியாவில் ஜூன் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. 

    இந்தியாவில் அறிமுகமாகி இருக்கும் வி9 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6.3 இன்ச் HFD பிளஸ் 19:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே, நாட்ச், 1.75 எம்.எம். மெல்லிய பெசல்கள் மற்றும் ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் சார்ந்த ஃபன்டச் ஓ.எஸ். 4.0 இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது.

    ஸ்னாப்டிராகன் 660 AIE கொண்டிருக்கும் வி9 ப்ரோ ஸ்மார்ட்போனிலும் 6 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 13 எம்.பி. பிரைமரி கேமரா, 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, ஏ.ஐ. போர்டிரெயிட் அம்சம் மற்றும் 16 எம்.பி. செல்ஃபி கேமரா, ஏ.ஐ. செல்ஃபி லைட்டிங் மற்றும் பியூட்டிஃபை அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.



    விவோ வி9 ப்ரோ சிறப்பம்சங்கள்:

    - 6.3 இன்ச் 2280x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:9 ஐ.பி.எஸ். டிஸ்ப்ளே
    - ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 660 14nm பிராசஸர்
    - அட்ரினோ 512 GPU
    - 6 ஜிபி ரேம்
    - 64 ஜிபி மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - டூயல் சிம் ஸ்லாட்
    - ஃபன்டச் ஓ.எஸ். 4.0 சார்ந்த ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
    - 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/2.2
    - 2 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா
    - 16 எம்.பி. செல்ஃபி கேமரா
    - கைரேகை சென்சார்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3260 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    விவோ வி9 ப்ரோ ஸ்மார்ட்போன் கருப்பு நிறத்தில் மட்டும் கிடைக்கிறது. ரூ.17,990 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கும் விவோ வி9 ப்ரோ அமேசான் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருக்கிறது. #VivoV9pro #smartphone
    பெரியபாளையம் அருகே ரியல் எஸ்டேட் மானேஜரின் கார் கண்ணாடியை உடைத்து ரூ.9 லட்சத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
    பெரியபாளையம்:

    சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் மானேஜராக இருப்பவர் அபுபக்கர்.

    பெரியபாளையம் அருகே செங்குன்றம்-திருவள்ளூர் சாலையில் வீட்டுமனைக்கான நிலத்தை அமைந்தகரை நிறுவனம் வாங்கி உள்ளது. இதற்கான உரிமம் பெறுவதற்காக அபுபக்கர் காரில் பெரியபாளையம் சென்றார்.

    காரை பெரியபாளையம் பஜாரில் நிறுத்தி விட்டு அருகில் உள்ள ஒரு கடையில் சொத்து ஆவணங்களை ஜெராக்ஸ் எடுத்தார். திரும்பி வந்தபோது அவருடைய கார் கண்ணாடி உடைக்கப்பட்டிருந்தது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    காரில் இருந்த சூட்கேஸ், லேப்டாப் ஆகியவை கொள்ளைபோய் இருந்தன. நிலத்துக்கு கொடுப்பதற்காக 9 லட்சத்து 23 ஆயிரத்து 645 ரூபாய் சூட்கேசில் வைத்து இருந்தார்.

    கொள்ளை குறித்து பெரியபாளையம் போலீசில் அபுபக்கர் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் மதியரசன் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்.

    பெரியபாளையம் கடை வீதியில் பட்டப்பகலில் கார் கண்ணாடியை உடைத்து பணம், லேப்டாப் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காரை நோட்டமிட்டு இந்த கொள்ளையை நடத்தி இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் விசாரணை நடைபெறுகிறது.
    ஆப்கானிஸ்தானின் ஹெராத் மாகாணத்தில் சோதனை சாவடி மீது கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியதில் 9 பேர் பலியாகினர். #InsurgentsAttack
    காபுல்:

    ஆப்கானிஸ்தான் நாட்டின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள ஹெராத் மாகாணத்தில் கிளர்ச்சியாளர்கள் நேற்று நடத்திய கொடூர தாக்குதலில் பாதுகாப்பு படையை சேர்ந்த 9 வீரர்கள் கொல்லப்பட்டனர். மேலும் 6 வீரர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.

    தகவலறிந்து மீட்புப் படையினர் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாகாண ஆளுநரின் செய்தி தொடர்பாளர் கெலானி பர்ஹத் இந்த தாக்குதல் சம்பவத்தை உறுதி செய்து இது குறித்த தகவல்களை வழங்கியுள்ளார். 



    இந்த தாக்குதலில் 10க்கு மேற்பட்ட கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டதாகவும், மேலும் 5 பேர் படுகாயம் அடைந்ததாகவும், இந்த தாக்குதலை தலிபான் இயக்கத்தினர் அடங்கிய குழுவினர் நடத்தியிருருக்கலாம் எனவும் அவர் தெரிவித்தார். #InsurgentsAttack
    இந்தியாவில் ஒப்போ நிறுவனத்தின் எஃப்9 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. 25 எம்பி செல்ஃபி கேமரா கொண்டிருக்கும் ஸ்மார்ட்போனின் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #OPPOF9Pro


    இந்தியாவில் ஒப்போ எஃப்9 ஸ்மார்ட்போனினை தொடர்ந்து எஃப்9 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

    6.3 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் டிஸ்ப்ளே, வாட்டர் டிராப் ஸ்கிரீன் வழங்கப்பட்டுள்ளது. ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ P60 12nm பிராசஸர், 6 ஜிபி ரேம், கலர் ஓஎஸ் 5.2 சார்ந்த ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ, 16 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/1.85, 2 எம்பி இரண்டாவது கேமரா, 25 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0 அப்ரேச்சர், ஏ.ஐ. சோனி IMX576 சென்சார் வழங்கப்பட்டுள்ளது. 



    ஒப்போ எஃப்9 ப்ரோ சிறப்பம்சங்கள்:

    - 6.3 இன்ச் 2280x1080 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் 19.5:9 டிஸ்ப்ளே
    - ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ P60 12nm பிராசஸர் 
    - ARM மாலி-G72 MP3 GPU
    - 6 ஜிபி ரேம்
    - 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - டூயல் சிம் ஸ்லாட்
    - கலர் ஓஎஸ் 5.2 சார்ந்த ஆன்ட்ராய்டு 8.1
    - 16 எம்பி பிரைமரி கேமரா எல்இடி ஃபிளாஷ், f/1.85
    - 2 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா
    - 25 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0, ஏஐ, சோனி IMX576 சென்சார்
    - கைரேகை சென்சார்
    - 3.5 எம்எம் ஆடியோ ஜாக்
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3500 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி

    ஒப்போ எஃப்9 ப்ரோ ஸ்மார்ட்போன் சன்ரைஸ் ரெட், ட்விலைட் புளு, ஸ்டேரி பர்ப்பிள் போன்ற நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் ப்ளிப்கார்ட், அமேசான் மற்றும் ஆஃப்லைன் விற்பனை மையங்களில் ஆகஸ்டு 31-ம் தேதி முதல் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அறிமுக சலுகைகள்

    - ரூ.299 சலுகையை தேர்வு செய்வோருக்கு 3200 ஜிபி கூடுதல் டேட்டா மற்றும் ரூ.4900 மதிப்புள்ள சலுகைகள்
    - ஒரு முறை ஸ்கிரீன் மாற்றிக்கொள்ளும் வசதி
    - ஆஃப்லைனில் முன்பதிவு செய்வோருக்கு 3D மெட்டாலிக் பாட்டில்
    - தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்துவோருக்கு 10% கேஷ்பேக் மற்றும் வட்டியில்லா மாத தவணை முறை வசதி
    உத்தரப்பிரதேசம் மாநிலம் நொய்டா நகரில் இரு கட்டிடங்கள் இடிந்து விழுந்த விபத்தில் பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. #GreaterNoidaBuildingCollapse
    லக்னோ:

    உத்தரப்பிரதேசம் மாநிலம், நொய்டாவில் உள்ள ஷா பெரி கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் 6 மாடி கட்டிடம் நேற்றிரவு திடீரென இடிந்து விழுந்ததில் அதன் அருகாமையில் இருந்த 4 மாடி கட்டிடமும் சேர்ந்து இடிந்து விழுந்தது.

    இதில், 4 மாடி கட்டிடத்தில் வசித்து வந்த 18 குடும்பங்களை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்பட்டது. கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் ஈடுபடுத்தப்பட்டனர்.



    தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்றுவரும் நிலையில் இந்த விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.#GreaterNoidaBuildingCollapse
    கோவிலுக்கு சென்ற பக்தர்கள் ஆட்டோ மீது அரசு பஸ் மோதி 9 பேர் பலியாகினர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமலை:

    ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் கடூர் மண்டலம் கொடூமூர் கிராமத்தை சேர்ந்த 11 பேர் ஆட்டோவில் மகாநதி சிவன் கோவிலில் தரிசனம் செய்ய இன்று அதிகாலை சென்றனர்.

    சித்தூர் கர்னூல் தேசிய நெடுஞ்சாலை ஓர்வ கல்லு மண்டலம் கோமையாஜியா பள்ளி என்ற இடத்தில் ஆட்டோ சென்ற கொண்டிருந்த போது ஹைதராபாத்தில் இருந்து சித்தூர் நோக்கி வந்த ஆந்திர அரசு பஸ் ஆட்டோவின் பின் பக்கம் மோதியது.

    இதில் ஆட்டோ சாலையோர பள்ளத்தில் உருண்டு கவிழ்ந்தது. அதில் இருந்த பக்தர்கள் தூக்கி வீசப்பட்டனர் இந்த விபத்தில் 5 பெண்கள், 2 ஆண்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

    விபத்து குறித்து தகவல் அறிந்த ஓர்வ கல்லு போலீசார் விரைந்து வந்து படுகாயம் அடைந்த 4 பேரை மீட்டு கர்னூல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆஸ்பத்திரியில் சிகிச்சைபெற்று வந்த 2 பேர் பரிதாபமாக இறந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்தது. இறந்தவர்களின் பெயர் விவரத்தை போலீசார் சேகரித்து வருகின்றனர்.

    ஒரே ஊரை சேர்ந்த 9 பேர் விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. #Tamilnews

    விவோ நிறுவனத்தின் வி9 யூத் ஸ்மார்ட்போன் விலை இந்தியாவில் அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.




    விவோ நிறுவனத்தின் வி9 யூத் ஸ்மார்ட்போன் ஏப்ரல் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. விவோ வி9 ஸ்மார்ட்போனின் லைட் வெர்ஷனாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போனில் 6.3 இன்ச் ஃபுல்வியூ டிஸ்ப்ளே, ஏஐ இன்டகிரேகஷன் அம்சங்களை கொண்டுள்ளது. 

    மும்பையை சேர்ந்த வரத்தகரான மகேஷ் டெலிகாம் வெளியிட்டிருக்கும் தகவல்களின் படி விவோ வி9 யூத் ஸ்மார்ட்போன் விலை ரூ.1000 குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.17,990-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் போது இதன் விலை ரூ.18,990 என நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

    அதிகாரப்பூர்வமாக விலை குறைப்பு குறித்த அறிவிப்பு வெளியிடப்படவோ அல்லது விவோ சார்பில் எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை. அமேசான் இந்தியா மற்றும் ப்ளிப்கார்ட் தளத்தில் விவோ வி9 யூத் விலை ரூ.18,990 என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. 



    விவோ வி9 யூத் சிறப்பம்சங்கள்:

    - 6.3 இன்ச் ஃபுல்வியூ டிஸ்ப்ளே
    - 1.8 ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 450 ஆக்டாகோர் பிராசஸர்
    - அட்ரினோ 506 GPU
    - 4 ஜிபி ரேம்
    - 32 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 16 எம்பி + 2 எம்பி பிரைமரி கேமரா
    - 16 எம்பி செல்ஃபி கேமரா, சாஃப்ட் எல்இடி ஃபிளாஷ்
    - ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
    - கைரேகை சென்சார்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3260 எம்ஏஹெச் பேட்டரி

    விவோ வி9 யூத் ஸ்மார்ட்போன் பியல் பிளாக், ஷேம்பெயிடன் கோல்டு என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.
    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போன் புதிய நிறத்தில் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் விலை மற்ற இதர விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போன் சன்ரைஸ் கோல்டு எடிஷன் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. 

    இந்தியாவில் கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போனுடன் கேலக்ஸி எஸ்9 பிளஸ் மார்ச் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. முதற்கட்டமாக கோரல் புளு, லிலாக் பர்ப்பிள் மற்றும் மிட்நைட் பிளாக் என மூன்று நிறங்களில் வெளியிடப்பட்ட நிலையில் புதிய நிறம் இந்தியாவில் முதல் முறையாக வெளியாகியுள்ளது.

    சாம்சங் நிறுவனத்தின் மொபைலில் இருந்து டிவியை இயக்கும் வசதியை ஸ்மார்ட்திங்ஸ் செயலியில் (SmartThings app) சேர்த்துள்ளது. டிவி கன்ட்ரோல் என அழைக்கப்படும் இந்த விட்ஜெட் முன்னதாக செயலியில் செயல்படுத்தப்பட்டு இருந்தது. இந்த அம்சம் செயல்படுத்தப்பட்டால், பயனர்கள் டிவியின் அருகில் சென்றால் ஸ்மார்ட்போனில் விட்ஜெட் தானாக தோன்றும். இந்த விட்ஜெட் பயனர்களை இருவித-ஸ்கிரீன் மற்றும் சவுன்ட் மிரரிங் செய்யும். 

    டிவி கன்ட்ரோல் விட்ஜெட்-இல் வியூ ஸ்கிரீன் மோட் (View Screen mode) மூலம் பயனர்கள் தொலைகாட்சியை வீட்டில் எந்த அறையில் இருந்தும் பார்க்க முடியும். இதே போன்று கேம் மற்றும் ஸ்மார்ட்போன் தரவுகளை தொலைகாட்சிகளில் மிரர் செய்ய முடியும்.



    இந்த டிவி கன்ட்ரோல் விட்ஜெட் பிளே சவுன்ட் ஆப்ஷன் வழங்குவதால், பயனர்கள் தங்களது ஸ்மார்ட்போனில் இருக்கும் மியூசிக்-ஐ தொலைகாட்சியில் இயக்கலாம். அந்த வகையில் இது ப்ளூடூத் ஸ்பீக்கர் போன்று பயன்படுத்த முடியும். டிவி டு டிவைஸ் (TV to Device) ஆப்ஷன் தொலைகாட்சியில் உள்ள ஆடியோவை மொபைல் சாதனங்களில் கேட்க வழி செய்யும்.

    புதிய சன்ரைஸ் கோல்டு நிற கேலக்ஸி எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போன் 128 ஜிபி வேரியன்ட்-இல் கிடைக்கிறது. இதன் விலை ரூ.68,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

    ப்ளிப்கார்ட் தளத்தில் முன்பதிவு செய்யப்படும் புதிய ஸ்மார்ட்போன் ஆஃப்லைன் விற்பனை மையங்களில் ஜூன் 20-ம் தேதி முதல் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் ஒரு முறை ஸ்கிரீன் சரி செய்யும் வசதி, தேர்வு செய்யப்பட்ட வங்கி கிரெடிட் கார்டு அல்லது பேடிஎம் மால் மூலம் பணம் செலுத்துவோருக்கு ரூ.9000 கேஷ்பேக் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்9 மற்றும் கேலக்ஸி எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் இரண்டு புதிய நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்9 மற்றும் கேலக்ஸி எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் சன்ரைஸ் கோல்டு மற்றும் பர்கன்டி ரெட் என இரண்டு புதிய நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக கேல்க்ஸி எஸ்9 ஸ்மார்ட்போன்கள் மிட்நைட் பிளாக், டைட்டானியம் கிரே, கோரல் புளு, லிலாக் பர்ப்பிள் போன்ற நிறங்களில் விற்பனை செய்யப்படுகிறது. 

    சாம்சங் நிறுவன ஸ்மார்ட்போன்களில் சேட்டின் கிளாஸ் ஃபினிஷ் செய்யப்பட்ட முதல் ஸ்மார்ட்போனாக கேல்க்ஸி எஸ்9 சன்ரோஸ் கோல்டு நிறம் அமைந்திருக்கிறது. இதுபோன்ற ஃபினிஷ் ஸ்மார்ட்போனினை மிளிர செய்கிறது. 

    கேலக்ஸி எஸ்9 மற்றும் கேலக்ஸி எஸ்9 பிளஸ் பர்கன்டி நிற மாடல்கள் முதற்கட்டமாக கொரியா மற்றும் சீனாவில் மே மாதம் முதல் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சன்ரைஸ் கோல்டு நிற கேல்கி எஸ்9 சீரிஸ் ஜூன் மாத வாக்கில் ஆஸ்திரேலியா, சிலி, ஜெர்மனி, ஹாங் காங், கொரியா, மெக்சிகோ, ரஷ்யா, ஸ்பெயின், தாய்வான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் வியட்நாம் உள்ளிட்ட நாடுகளில் கிடைக்கும் என்றும் மற்ற நாடுகளில் வரும் மாதங்களில் விநியோகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



    புதிய நிறம் தவிர ஸ்மார்ட்போன்களின் சிறப்பம்சங்களில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. அந்த வகையில் புதிய நிறம் கொண்ட எஸ்9 ஸ்மார்ட்போனில் 5.8 இன்ச் இன்ஃபினிட்டி டிஸ்ப்ளேவும், கேல்கஸி எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போனில் 6.2 இன்ச் இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 845 / எக்சைனோஸ் 9810 சிபெசெட், 4 ஜிபி, 6 ஜிபி ரேம் கொண்டிருக்கிறது.

    புகைப்படங்களை எடுக்க கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போனில் 12 எம்பி பிரைமரி கேமரா, டூயல் பிக்சல் PDAF, கேல்கஸி எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போனில் 12 எம்பி டூயல் பிரைமரி கேமரா செட்டப் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் கைரேகை சென்சார், இன்ஃப்ராரெட் சென்சார், வாட்டர் மற்றும் டஸ்ட் ப்ரூஃப் வசதி வழங்கப்பட்டுள்ளது.
    ×