search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விவோ"

    • இதன் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
    • இதர சாதனங்களும் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது.

    விவோ நிறுவனத்தின் X ஃபோல்டு 3 சீரிஸ் ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் சீரிசில் விவோ X ஃபோல்டு 3 மற்றும் விவோ X ஃபோல்டு 3 ப்ரோ என இரு மாடல்கள் இடம்பெற்று இருக்கும் என்று தெரிகிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் அம்சங்கள் இணையத்தில் வெளியாகி வந்த நிலையில், தற்போது இதன் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    இது தொடர்பாக விவோ சீனா வலைதளம் மற்றும் வெய்போ பதிவுகளில் விவோ நிறுவனம் தனது விவோ X ஃபோல்டு 3 ஸ்மார்ட்போன்கள் மார்ச் 26-ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவித்து இருக்கிறது. புது ஃபோல்டபில் ஸ்மார்ட்போன்களுடன் விவோ வாட்ச் 3, விவோ ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் 4 மற்றும் விவோ பேட் 3 ப்ரோ உள்ளிட்ட சாதனங்களும் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது.

     


    டீசர்களின் படி புதிய விவோ X ஃபோல்டு 3 மாடல்கள் பிளாக் மற்றும் வைட் என இரண்டு நிறங்களில் கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது. மேலும் இந்த மாடல்கள் இதுவரை வெளியானதில் குறைந்த எடை மற்றும் மிக மெல்லிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களாக இருக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இவற்றில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராசஸர் வழங்கப்படலாம்.

    இரு மாடல்களிலும் ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ஒரிஜின் ஒ.எஸ். 4 வழங்கப்படும் என தெரிகிறது. இத்துடன் 50MP பிரைமரி கேமரா, 50MP அல்ட்ரா வைடு லென்ஸ், 64MP பெரிஸ்கோப் கேமரா, OIS, 5500 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 120 வாட் வயர்டு, 50 வாட் வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

    • விவோ ஸ்மார்ட்போன் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
    • இந்த ஸ்மார்ட்போன் 44 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கும் என தகவல்.

    விவோ நிறுவனம் தனது முற்றிலும் புதிய T3 5ஜி ஸ்மார்ட்போன் மார்ச் 21-ம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்று அறிவித்து இருக்கிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போனிற்கான டீசர்களை விவோ நிறுவனம் வெளியிட்டு வந்தது. அந்த வரிசையில் தற்போது வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    இதுவரை வெளியாகி இருக்கும் டீசர்களின் படி விவோ T3 5ஜி ஸ்மார்ட்போனில் ஃபிளாட் ஸ்கிரீன், சிறப்பான கேமரா சென்சார்கள், ஸ்டீரியோ ஸ்பீக்கர் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்படும் என்று தெரியவந்துள்ளது. முந்தைய தகவல்களில் இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்கள் ஐகூ Z7 5ஜி மாடலில் இருந்ததை போன்றே வழங்கப்படும் என்று கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

     

    புதிய விவோ T3 5ஜி மாடலில் 6.67 இன்ச் FHD+ 120Hz AMOLED ஸ்கிரீன், அதிகபட்சம் 1800 நிட்ஸ் பிரைட்னஸ், மீடியாடெக் டிமென்சிட்டி 7200 பிராசஸர், 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி, 50MP சோனி IMX882 சென்சார், 2MP பொக்கெ லென்ஸ், 16MP செல்ஃபி கேமரா வழங்கப்படும் என்று தெரிகிறது.

    இத்துடன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 44 வாட் ஃபிளாஷ் சார்ஜ் வசதி, டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், மைக்ரோ எஸ்.டி. கார்டு ஸ்லாட், மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி, 10 5ஜி பேன்ட்களுக்கான சப்போர்ட், IP54 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் போன்ற அம்சங்கள் வழங்கப்படலாம்.

    புதிய விவோ T3 5ஜி ஸ்மார்ட்போன் க்ரிஸ்டல் ஃபிளேக் மற்றும் காஸ்மிக் புளூ என இரண்டு நிறங்களில் கிடைக்கும் என்று தெரிகிறது. இத்துடன் பின்புறத்தில் பிரத்யேக டிசைன் பேட்டன்கள் வழங்கப்பட்டு இருக்கும் என்று கூறப்படுகிறது.

    • விவோ V30 சீரிஸ் மாடல்களில் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி உள்ளது.
    • இரு மாடல்களிலும் ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ஒ.எஸ். வழங்கப்பட்டுள்ளது.

    விவோ நிறுவனம் இந்திய சந்தையில் V30 மற்றும் V30 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்தது. புதிய V சீரிஸ் மாடல்களில் 6.78 இன்ச் FHD+ 120Hz கர்வ்டு AMOLED டிஸ்ப்ளே, 50MP ஆட்டோஃபோக்கஸ் செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.

    விவோ V30 மாடலில் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 பிராசஸர், 50MP பிரைமரி கேமரா, OIS, 50MP அல்ட்ரா வைடு கேமரா, 2MP போர்டிரெயிட் கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. விவோ V30 ப்ரோ மாடலில் மீடியாடெக் டிமென்சிட்டி 8200 பிராசஸர், 50MP பிரைமரி கேமரா, 50MP 2x டெலிபோட்டோ போர்டிரெயிட் கேமரா வழங்கப்பட்டுள்ளது.

     


    விவோ V30 அம்சங்கள்:

    6.78 இன்ச் 2800x1260 பிக்சல் FHD AMOLED ஸ்கிரீன்

    குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 பிராசஸர்

    அட்ரினோ 730 GPU

    8 ஜி.பி. / 12 ஜி.பி. ரேம்

    128 ஜி.பி. / 256 ஜி.பி. மெமரி

    ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ஃபன்டச் ஒ.எஸ். 14

    டூயல் சிம்

    50MP பிரைமரி கேமரா, OIS

    50MP அல்ட்ரா வைடு கேமரா

    2MP போர்டிரெயிட் கேமரா

    50MP ஆட்டோஃபோக்கஸ் செல்ஃபி கேமரா, டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ்

    இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்

    யு.எஸ்.பி. டைப் சி ஆடியோ, ஹை-ரெஸ் ஆடியோ

    டஸ்ட் மற்றும் ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் IP54

    5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 6, ப்ளூடூத் 5.4

    யு.எஸ்.பி. டைப் சி

    5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    80 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

     


    விவோ V30 ப்ரோ அம்சங்கள்:

    6.78 இன்ச் 2800x1260 1.5K கர்வ்டு AMOLED ஸ்கிரீன்

    மீடியாடெக் டிமென்சிட்டி 8200 பிராசஸர்

    மாலி-G610 MC6 GPU

    8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி

    12 ஜி.பி. ரேம், 512 ஜி.பி. மெமரி

    ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ஃபன்டச் ஒ.எஸ். 14

    டூயல் சிம்

    50MP பிரைமரி கேமரா, OIS, எல்.இ.டி. ஃபிளாஷ்

    50MP அல்ட்ரா வைடு கேமரா

    50MP 2x டெலிபோட்டோ போர்டிரெயிட் கேமரா

    50MP ஆட்டோஃபோக்கஸ் செல்ஃபி கேமரா

    இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்

    யு.எஸ்.பி. டைப் சி ஆடியோ, ஹை-ரெஸ் ஆடியோ

    டஸ்ட் மற்றும் ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் IP54

    5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 6, ப்ளூடூத் 5.3

    யு.எஸ்.பி. டைப் சி

    5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    80 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

    விவோ V30 ஸ்மார்ட்போனின் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 33 ஆயிரத்து 999 என்றும் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 35 ஆயிரத்து 999 என்றும் 12 ஜி.பி. ரேம், 512 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 37 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    விவோ V30 ப்ரோ ஸ்மார்ட்போனின் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 41 ஆயிரத்து 999 என்றும் 12 ஜி.பி. ரேம், 512 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 46 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இரு ஸ்மார்ட்போன்களுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கியது. விற்பனை மார்ச் 14-ம் தேதி துவங்குகிறது.

    • புதிய விவோ ஸ்மார்ட்போன் 50MP பிரைமரி கேமரா கொண்டிருக்கிறது.
    • இந்த ஸ்மார்ட்போனில் 44 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.

    விவோ நிறுவனத்தின் முற்றிலும் புதிய Y சீரிஸ் ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகமானது. விவோ Y200e என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போனில் 6.67 இன்ச் FHD+ E4 AMOLED ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட், 16MP செல்ஃபி கேமரா. ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ஃபன்டச் ஒ.எஸ். 14 வழங்கப்பட்டு உள்ளது.

    இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 4 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம், 8 ஜி.பி. வரை எக்ஸ்டென்டட் ரேம், 50MP பிரைமரி கேமரா, OIS, 2MP டெப்த் சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது. இகோ-ஃபைபர் லெதர் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ள விவோ Y200e ஸ்மார்ட்போன் எம்போஸ்டு லைன் டெக்ஸ்ச்சர் மற்றும் அழகிய கேமரா ரிங் கொண்டிருக்கிறது.

     


    விவோ Y200e அம்சங்கள்:

    6.67 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+ E4 AMOLED ஸ்கிரீன்

    ஆக்டா கோர் ஸ்னப்டிராகன் 4 ஜென் 4 பிராசஸர்

    அட்ரினோ 613 GPU

    6 ஜி.பி., 8 ஜி.பி. ரேம்

    128 ஜி.பி. மெமரி

    மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

    ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்

    ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ஃபன்டச் ஒ.எஸ். 14

    50MP பிரைமரி கேமரா

    2MP போர்டிரெயிட் கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்

    16MP செல்ஃபி கேமரா

    இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்

    டஸ்ட் மற்றும் ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட்

    யு.எஸ்.பி. டைப் சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்

    5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, பைவை, ப்ளூடூத் 5.1

    யு.எஸ்.பி. டைப் சி

    5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    44 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி

    புதிய விவோ Y200e மாடலின் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 19 ஆயிரத்து 999 என்றும் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 20 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை விவோ, ப்ளிப்கார்ட் வலைதளங்கள் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் நடைபெற இருக்கிறது.

    • 4 நானோமீட்டர் முறையில் உருவாக்கப்பட்ட பிராசஸர் உள்ளது.
    • இந்த ஸ்மார்ட்போன் இரண்டு வேரியன்ட்களில் கிடைக்கிறது.

    விவோ நிறுவனத்தின் X100 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்கள் சமீபத்தில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டன. இதில் விவோ X100 மற்றும் X100 ப்ரோ என இரண்டு மாடல்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றில் மீடியாடெக் டிமென்சிட்டி 9300 4 நானோமீட்டர் முறையில் உருவாக்கப்பட்ட பிராசஸர் வழங்கப்பட்டு உள்ளன.

    இந்திய சந்தையில் விவோ X100 ஸ்மார்ட்போனின் 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மற்றும் 16 ஜி.பி. ரேம், 512 ஜி.பி. மெமரி மாடல்கள் விலை முறையே ரூ. 63 ஆயிரத்து 999 மற்றும் ரூ. 69 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டன. தற்போது ப்ளிப்கார்ட் வலைதளத்தில் இந்த ஸ்மார்ட்போனிற்கு ரூ. 5 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

     


    எனினும், இந்த தள்ளுபடி தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது மட்டுமே கிடைக்கும். இதுதவிர வட்டியில்லா மாத தவணை முறை வசதியும் வழங்கப்படுகிறது. இந்த சலுகையின் மூலம் விவோ X100 மாடலின் இரண்டு வேரியன்ட்களின் விலை முறையே ரூ. 58 ஆயிரத்து 999 மற்றும் ரூ. 64 ஆயிரத்து 999 என மாறிவிடும்.

    இந்த சலுகை பிப்ரவரி 15-ம் தேதி வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்திய சந்தையில் விவோ X100 ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் புளூ என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. 

    • விவோ Y சீரிஸ், T சீரிஸ் மாடல்களின் விலை குறைப்பு.
    • விலை குறைப்பு ஏற்கனவே அமலுக்கு வந்துவிட்டது.

    விவோ நிறுவனம் தனது ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு விலை குறைப்பு அறிவித்து இருக்கிறது. இத்துடன் விவோ Y200 5ஜி ஸ்மார்ட்போனின் புதிய வேரியன்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மற்றும் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி என இரண்டு வேரியண்ட்களில் மட்டும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

    இதுதவிர விவோ Y27 மற்றும் விவோ T2 5ஜி ஸ்மார்ட்போன்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது. விவோ Y200 5ஜி மாடலின் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் தற்போது ரூ. 23 ஆயிரத்து 999 என்றும் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 21 ஆயிரத்து 999 என்றும் மாறி இருக்கிறது. விலை குறைப்பு அமேசான், ப்ளிப்கார்ட், விவோ இந்தியா இ ஸ்டோர் மற்றும் ரீடெயில் ஸ்டோர்களில் அமலுக்கு வந்துள்ளது.

     


    விவோ Y27 ஸ்மார்ட்போனின் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 11 ஆயிரத்து 999 என மாறி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் முன்னதாக ரூ. 14 ஆயிரத்து 999 விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இத்துடன் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 1000 வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

    வாடிக்கையாளர்கள் விவோ Y200 5ஜி மாடலை எளிய மாத தவணை முறை வசதியுடன் வாங்கிட முடியும். இத்துடன் எஸ்.பி.ஐ., ஐ.டி.எஃப்.சி. ஃபர்ஸ்ட், பேங்க் ஆஃப் பரோடா, டி.பி.எஸ். வங்கி, ஃபெடரல் வங்கி மற்றும் இண்டஸ்இண்ட் வங்கி வாடிக்கையாளர்கள் ரூ. 2 ஆயிரம் வரை கேஷ்பேக் பெற முடியும். விவோ ஸ்மார்ட்போன்களின் புதிய விலை ஏற்கனவே அமலுக்கு வந்துவிட்டது.

    • விவோ X100 சீரிசில் இரு மாடல்கள் இடம்பெற்று உள்ளன.
    • விவோ X100 ப்ரோ மாடலில் 100 வாட் சார்ஜிங் வசதி உள்ளது.

    விவோ நிறுவனத்தின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மாடல்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டன. விவோ X100 மற்றும் X100 ப்ரோ என்ற பெயரில் இவை விற்பனை செய்யப்பட உள்ளன. இவற்றில் 6.78 இன்ச் 1.5K, 120Hz Curved 8T LTPO AMOLED ஸ்கிரீன், 3000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், மீடியாடெக் டிமென்சிட்டி 9300 பிராசஸர், அதிகபட்சம் 16 ஜி.பி. ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இத்துடன் 50MP கஸ்டமைஸ் செய்யப்பட்ட IMX920 VCS பயோனிர் பிரைமரி கேமரா, 50MP அல்ட்ரா வைடு லென்ஸ், 64MP டெலிபோட்டோ பெரிஸ்கோப் கேமரா, மேக்ரோ ஆப்ஷன் வழங்கப்பட்டு இருக்கிறது. விவோ X100 ப்ரோ மாடலில் 50MP கஸ்டமைஸ் செய்யப்பட்ட IMX989 VCS பயோனிக் பிரைமரி கேமரா, OIS, 50MP செய்ஸ் சூப்பர் டெலிபோட்டோ பெரிஸ்கோப் கேமரா, மேக்ரோ ஆப்ஷன் வழங்கப்பட்டு உள்ளது.

     


    விவோ X100 மற்றும் X100 ப்ரோ அம்சங்கள்:

    6.78 இன்ச் 2800x1260 பிக்சல் 1.5K LPTO AMOLED ஸ்கிரீன்

    டிமென்சிட்டி 9300 பிராசஸர்

    இமார்டலிஸ் G720 GPU

    12 ஜி.பி., 16 ஜி.பி. LPDDR5X ரேம்

    256 ஜி.பி., 512 ஜி.பி. UFS 4.0 மெமரி

    ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ஃபன்டச் ஒ.எஸ். 14

    டூயல் சிம் ஸ்லாட்

    விவோ X100 - 50MP பிரைமரி கேமரா, OIS, எல்.இ.டி. ஃபிளாஷ்

    50MP அல்ட்ரா வைடு கேமரா

    64MP டெலிபோட்டோ கேமரா

    விவோ X100 ப்ரோ - 50MP பிரைமரி கேமரா, OIS, எல்.இ.டி. ஃபிளாஷ்

    50MP அல்ட்ரா வைடு லென்ஸ்

    50MP டெலிபோட்டோ கேமரா

    32MP செல்ஃபி கேமரா

    இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்

    யு.எஸ்.பி. டைப் சி ஆடியோ

    ஸ்டீரியோ ஸ்பீக்கர், ஹை-ஃபை ஆடியோ

    டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் (IP68)

    5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்

    யு.எஸ்.பி. டைப் சி

    விவோ X100 - 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    120 வாட் அல்ட்ரா ஃபாஸ்ட் ஃபிளாஷ் சார்ஜிங்

    விவோ X100 ப்ரோ - 5400 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    100 வாட் அல்ட்ரா ஃபாஸ்ட் ஃபிளாஷ் சார்ஜிங்

    50 வாட் வயர்லெஸ் சார்ஜிங், ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங்

    விவோ X100 மாடல் ஆஸ்டிராய்டு பிளாக் மற்றும் ஸ்டார்டிரெயில் புளூ நிறங்களில் கிடைக்கிறது. விவோ X100 ப்ரோ மாடல் ஆஸ்டிராய்டு பிளாக் நிறத்தில் கிடைக்கிறது.

    விவோ X100 மாடலின் 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 63 ஆயிரத்து 999 என்றும் 16 ஜி.பி. ரேம், 512 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 69 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விவோ X100 ப்ரோ விலை ரூ. 89 ஆயிரத்து 999 ஆகும். 

    • தேர்வு செய்யப்பட்ட நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டது.
    • இவற்றில் 50MP 1 இன்ச் பிரைமரி கேமரா வழங்கப்படுகிறது.

    விவோ X100 சீரிஸ் இந்திய வெளியீடு அடுத்த வாரம் நடைபெற இருக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை விவோ வெளியிட்டு உள்ளது. இத்துடன் புதிய ஸ்மார்ட்போனிற்கான மைக்ரோசைட் ஒன்றையும் விவோ இந்தியா உருவாக்கி இருக்கிறது.

    முன்னதாக விவோ X100 மற்றும் விவோ X100 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் கடந்த நவம்பர் மாத வாக்கில் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டன. இவற்றில் மீடியாடெக் டிமென்சிட்டி 9300 பிராசஸர் வழங்கப்பட்டு இருந்தன. சீன வெளியீட்டை தொடர்ந்து இந்த ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையின் தேர்வு செய்யப்பட்ட நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டது.

     


    இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி விவோ X100 சீரிஸ் இந்திய வேரியண்ட்களிலும் இதே பிராசஸர் மற்றும் 8T LTPO டிஸ்ப்ளே வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இவற்றில் 50MP 1 இன்ச் பிரைமரி கேமரா மற்றும் கூடுதலாக இரண்டு கேமரா சென்சார்கள் வழங்கப்படுகின்றன. இந்திய சந்தையில் விவோ X100 ஸ்மார்ட்போன்கள் ஜனவரி 4-ம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளன.

    இதற்காக வெளியிடப்பட்டு இருக்கும் டீசர்களில் விவோ X100 மற்றும் விவோ X100 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் ஆஸ்டிராய்டு பிளாக், ஸ்டார்டிரெயில் புளூ மற்றும் சன்செட் போன்ற நிறங்களில் கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன்கள் ஃபன்டச் ஒ.எஸ். 14, செய்ஸ் பிரான்டு கேமராக்கள், IP68 சான்று கொண்டிருக்கும் என்று உறுதியாகி இருக்கிறது.

    விவோ X100 சீரிஸ் அறிமுகமாகும் அதே நாளில் சியோமி நிறுவனம் தனது ரெட்மி நோட் 13 5ஜி சீரிஸ் ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது.

    • விவோ மீது 62 ஆயிரம் கோடி சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கு பதிவாகி உள்ளது
    • தூதரக வழி உதவிகள் கிடைக்க நாங்கள் துணை நிற்போம் என சீனா தெரிவித்தது

    இந்தியாவில் செயல்படும் சீன நிறுவனங்கள் நிதி முறைகேட்டில் ஈடுபடுவதாக எழுந்த புகாரில் அவற்றை சில ஆண்டுகளாக இந்தியா கண்காணித்து வருகிறது.

    இந்தியாவில் மொபைல் போன் விற்பனையில் முன்னணியில் உள்ள பிராண்டுகளில் ஒன்று, விவோ (Vivo). இந்நிறுவனம், சீனாவை மையமாக கொண்டு இயங்குகிறது.

    நேற்று முன் தினம், விவோ இந்தியாவின் அதிகாரிகளில் சீனாவை சேர்ந்த தற்காலிக தலைமை செயல் அதிகாரி ஹாங் சுகுவான் (Hong Xuquan), தலைமை நிதி அதிகாரி ஹரிந்தர் தஹியா மற்றும் ஆலோசகர் ஹேமந்த் முஞ்சால் ஆகிய மூவரை பண மோசடி தடுப்பு சட்டத்தில் (PMLA) அமலாக்க துறை கைது செய்தது.

    வரி ஏய்ப்பு செய்யும் நோக்கில் இந்தியாவிலிருந்து ரூ. 62,476 கோடி சட்டவிரோதமாக சீனாவிற்கு விவோ பரிமாற்றம் செய்ததாக கூறப்படும் இவ்வழக்கில் முன்னரே 4 பேர் கைது செய்யப்பட்டது குறிப்படத்தக்கது. இந்திய பொருளாதார இறையாண்மையை குலைக்கும் வகையில் சட்டவிரோதமாக லாபம் ஈட்டியதாக இவர்கள் மீது குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

    இந்நிலையில் தனது நாட்டு நிறுவனத்தின் அதிகாரிகளுக்கு இந்தியாவில் தூதரக வழி பாதுகாப்பை வழங்க போவதாக சீனா தெரிவித்துள்ளது.

    மேலும், இது குறித்து சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மாவோ நிங் (Mao Ning), "நாங்கள் நிலைமையை கூர்ந்து கவனித்து வருகிறோம். சீன நிறுவனங்களின் சட்டபூர்வமான உரிமைகளையும் நலனையும் உறுதிப்படுத்த சீனா ஆதரவளிக்கும். ஆனால், ஒருதலை பட்சமாக சீன நிறுவனங்களின் மீது மட்டும் நடவடிக்கைகள் எடுக்கும் போக்கை இந்தியா கைவிட வேண்டும் என வலியுறுத்துகிறோம்" என தெரிவித்தார்.

    • விவோ நிறுவன Y சீரிஸ் மாடல்களுக்கு சிறப்பு சலுகைகள்.
    • விவோ ஸ்மார்ட்போன்களின் விலை குறைப்பு.

    விவோ நிறுவனம் தனது ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு அசத்தல் விலை குறைப்பு அறிவித்து இருக்கிறது. அந்த வகையில், விவோ Y16, விவோ Y17s, விவோ Y02t, விவோ Y02, விவோ Y27 மற்றும் விவோ YY17s போன்ற மாடல்களின் விலை குறைக்கப்பட்டு இருக்கிறது.

    தற்போதைய விலை குறைப்பு காரணமாக இந்த ஸ்மார்ட்போன்களின் விலை ரூ. 1000 குறைந்திருக்கிறது. விலை குறைப்பு ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் அமலுக்கு வந்துள்ளது.


    புதிய விலை விவரங்கள்:

    விவோ Y16 (4ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி) ரூ. 9 ஆயிரத்து 999

    விவோ Y17s (4ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி) ரூ. 11 ஆயிரத்து 499

    விவோ Y17s (4ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி) ரூ. 10 ஆயிரத்து 499

    விவோ Y27 (6ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி) ரூ. 12 ஆயிரத்து 999

    விவோ Y02 (3ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி) ரூ. 7 ஆயிரத்து 999

    விவோ Y02t ரூ. 8 ஆயிரத்து 499

    விலை குறைப்பு மட்டுமின்றி இந்த ஸ்மார்ட்போன்களை வாங்குவோருக்கு வட்டியில்லா மாத தவணை முறை வசதி வழங்கப்படுகிறது. இத்துடன் எஸ்.பி.ஐ., டி.பி.எஸ்., ஐ.டி.எஃப்.சி., ஒன் கார்டு, இண்டஸ்இண்ட் மற்றும் எஸ் வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 1000 வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

    • விவோ V30 ஸ்மார்ட்போனுடன் விவோ V30 லைட் மாடலும் அறிமுகம்.
    • V29e ஸ்மார்ட்போனை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கும் என தகவல்.

    விவோ நிறுவனம் தனது அடுத்த தலைமுறை V சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. சமீபத்தில் தான் விவோ V30 ஸ்மார்ட்போனின் விவரங்கள் கீக்பென்ச் வலைதளத்தில் லீக் ஆகி இருந்தது. தற்போது வெளியாகி இருக்கும் புதிய தகவல்களில் விவோ V30 ஸ்மார்ட்போனுடன் விவோ V30 லைட் மாடலும் அறிமுகம் செய்யப்படலாம் என்று தெரியவந்துள்ளது.

    இதில் ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்களும் இடம்பெற்று இருக்கிறது. அதன்படி விவோ V30 லைட் மாடலில் ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ஒ.எஸ்., 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மற்றும் 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கும் என்று தெரிகிறது. இத்துடன் 4700 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 44 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.

    கனெக்டிவிட்டிக்கு டூயல் பேண்ட் வைபை, என்.எஃப்.சி., ப்ளூடூத் மற்றும் யு.எஸ்.பி. டைப் சி போர்ட் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. விவோ V30 லைட் மாடல் V29e ஸ்மார்ட்போனை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கும் என்று தெரிகிறது. எனினும், இதன் ஹார்டுவேரில் சிறு மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கலாம்.

    சர்வதேச சந்தையில் விவோ V29e மாடல் கடந்த அக்டோபர் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், புதிய விவோ V30 மற்றும் விவோ V30 லைட் மாடல்கள் எப்போது அறிமுகம் செய்யப்படும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. 

    • புகைப்படங்களை எடுக்க 64MP பிரைமரி கேமரா, OIS வழங்கப்பட்டுள்ளது.
    • இந்த ஸ்மார்ட்போன் 4800 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

    விவோ நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. இது அந்நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்த Y100 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். இந்த ஸ்மார்ட்போன் Y200 என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதில் 6.67 இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட், 16MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.

    ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ஃபன்டச் ஒ.எஸ். 13 கொண்டிருக்கும் விவோ Y200 ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 1 பிராசஸர், 8 ஜி.பி. ரேம், 8 ஜி.பி. வரை எக்ஸ்டென்ட் ரேம் வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 64MP பிரைமரி கேமரா, OIS, 2MP டெப்த் கேமரா வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 4800 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. மேலும் 44 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.

     

    விவோ Y200 அம்சங்கள்:

    6.67 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+ AMOLED ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட்

    ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 1 பிராசஸர்

    அட்ரினோ GPU

    8 ஜி.பி. ரேம்

    128 ஜி.பி. மெமரி

    மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

    டூயல் சிம் ஸ்லாட்

    ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ஃபன்டச் ஒ.எஸ். 13

    64MP பிரைமரி கேமரா, OIS

    2MP போர்டிரெயிட் கேமரா

    16MP செல்ஃபி கேமரா

    இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்

    4800 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    44 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

    விவோ Y200 ஸ்மார்ட்போன் ஜங்கில் கிரீன் மற்றும் டெசர்ட் கோல்டு என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ. 21 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 2 ஆயிரம் வரையிலான தள்ளுபடி, 24 மாதங்கள் வரை வட்டியில்லா மாத தவணை முறை வசதி வழங்கப்படுகிறது.

    ×