என் மலர்
மொபைல்ஸ்

6500mAh பேட்டரி, 50MP கேமரா... பட்ஜெட் விலையில் விற்பனைக்கு வந்த விவோ ஸ்மார்ட்போன்
- இத்துடன் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 சிப்செட் வழங்கப்பட்டு இருக்கிறது.
- கனெக்டிவிட்டிக்கு 5ஜி, 4ஜி, வைபை 6, ப்ளூடூத் 5.4, GPS மற்றும் USB டைப் டைப் சி போர்ட் ஆகியவை அடங்கும்.
விவோ நிறுவனம் தனது T4 ப்ரோ ஸ்மார்ட்போனினை கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் அறிமுகமான விவோ T4 ப்ரோ ஸ்மார்ட்போன் தற்போது விற்பனைக்கு கிடைக்கிறது.
இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 பிராசஸர், 90W அதிவேக சார்ஜிங் கொண்ட 6500mAh பேட்டரி மற்றும் 6.77-இன்ச் குவாட்-கர்வ்டு AMOLED டிஸ்ப்ளேவுடன் வருகிறது. புகைப்படங்கள் எடுக்க 50MP சோனி IMX882 பிரைமரி கேமரா மற்றும் 50-மெகாபிக்சல் சோனி IMX882 பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா உள்ளிட்ட மூன்று பின்புற கேமரா கொண்டுள்ளது.
மற்ற அம்சங்களை பொருத்தவரை இந்த ஸ்மார்ட்போன் ஜெமினி லைவ், AI கேப்ஷன்ஸ் மற்றும் AI இமேஜ் எக்ஸ்பாண்டர் போன்ற AI அம்சங்களுடன் வருகிறது.
அம்சங்கள்:
விவோ T4 ப்ரோ ஸ்மார்ட்போன் 6.77-இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் (1,080×2,392 பிக்சல்கள்) AMOLED ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட் கொண்டிருக்கிறது. இத்துடன் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 சிப்செட் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் அதிகபட்சம் 12GB வரை LPDDR4x ரேம் மற்றும் 256GB வரை UFS 2.2 ஸ்டோரேஜ் ஆப்ஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 15 சார்ந்த ஃபன்டச் ஓஎஸ் 15 இல் இயங்குகிறது, மேலும் நான்கு ஆண்டுகளுக்கு ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் ஆறு ஆண்டுகளுக்கு செக்யூரிட்டி அப்டேட்களை பெறும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது.
கேமராவைப் பொறுத்தவரை, விவோ T4 ப்ரோ ஸ்மார்ட்போனில் OIS உடன் 50MP சோனி IMX882 பிரைமரி கேமரா, 3x ஆப்டிகல் ஜூம் உடன் 50MP சோனி IMX882 பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ ஷூட்டர் மற்றும் 2MP பொக்கே லென்ஸ் ஆகியவை அடங்கும். இத்துடன் 32MP செல்ஃபி கேமரா கொண்டுள்ளது.
கனெக்டிவிட்டிக்கு 5ஜி, 4ஜி, வைபை 6, ப்ளூடூத் 5.4, GPS மற்றும் USB டைப் டைப் சி போர்ட் ஆகியவை அடங்கும். பாதுகாப்பிற்காக, இது இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதிக்காக IP68 மற்றும் IP69 சான்று பெற்றிருக்கிறது.
விலை விவரங்கள்:
இந்திய சந்தையில் விவோ T4 ப்ரோ ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம், 128ஜிபி மெமரி மாடலின் விலை ரூ. 27,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதேபோல் 8ஜிபி ரேம், 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம், 256ஜிபி மெமரி மாடல்கள் முறையே ரூ. 29,999 மற்றும் ரூ. 31,999 விலையில் கிடைக்கின்றன.
புதிய விவோ T4 ப்ரோ ஸ்மார்ட்போன் விவோ இந்தியா இ-ஸ்டோர், ப்ளிப்கார்ட் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆஃப்லைன் ஸ்டோர்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் பிளேஸ் கோல்ட் மற்றும் நைட்ரோ ப்ளூ வண்ணங்களில் விற்கப்படுகிறது.






