என் மலர்
செய்திகள்

ஆப்கானிஸ்தானில் சோதனை சாவடி மீது தாக்குதல் - படைவீரர்கள் 9 பேர் பலி
ஆப்கானிஸ்தானின் ஹெராத் மாகாணத்தில் சோதனை சாவடி மீது கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியதில் 9 பேர் பலியாகினர். #InsurgentsAttack
காபுல்:
ஆப்கானிஸ்தான் நாட்டின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள ஹெராத் மாகாணத்தில் கிளர்ச்சியாளர்கள் நேற்று நடத்திய கொடூர தாக்குதலில் பாதுகாப்பு படையை சேர்ந்த 9 வீரர்கள் கொல்லப்பட்டனர். மேலும் 6 வீரர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.
தகவலறிந்து மீட்புப் படையினர் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாகாண ஆளுநரின் செய்தி தொடர்பாளர் கெலானி பர்ஹத் இந்த தாக்குதல் சம்பவத்தை உறுதி செய்து இது குறித்த தகவல்களை வழங்கியுள்ளார்.

இந்த தாக்குதலில் 10க்கு மேற்பட்ட கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டதாகவும், மேலும் 5 பேர் படுகாயம் அடைந்ததாகவும், இந்த தாக்குதலை தலிபான் இயக்கத்தினர் அடங்கிய குழுவினர் நடத்தியிருருக்கலாம் எனவும் அவர் தெரிவித்தார். #InsurgentsAttack
Next Story






