search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐப்பசி திருவிழா"

    • ஐப்பசி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • பிரகலாத சரிதம் கதகளி ஆகியவை நடக்கிறது.

    திருவட்டார்:

    திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் பங்குனி மற்றும் ஐப்பசி மாதங்களில் 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டு ஐப்பசி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் நேற்று காலை நிர்மால்யம், அபிஷேகம், தீபாராதனையை தொடர்ந்து, கருட இலச்சினை பொறிக்கப்பட்ட கொடி ஆதிகேசவ பெருமாளின் பாதத்தில் பூஜைக்கு வைக்கப்பட்டது. தொடர்ந்து மேளதாளம் முழங்க கொடி மர பீடம் அருகே கொடி கொண்டு வரப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. அதைத்தொடர்ந்து கோவில் தந்திரி கோகுல், தங்க கொடி மரத்தில் கொடியேற்றினார்.

    இந்நிகழ்ச்சியில் கன்னியாகுமரி மாவட்ட திருக்கோவில் நிர்வாக அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், உறுப்பினர் முரளிதரன் நாயர், குழித்துறை தேவஸ்வம் சூப்பிரண்டு சிவகுமார் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    மதியம் அன்னதானம், இரவு சாமி நாற்காலி வாகனத்தில் பவனி வருதல் நடந்தது.

    இதையடுத்து விழாவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு நவநீதம் நாராயணியம் சமிதி வழங்கும் நாராயணீய பாராயணம், இரவு 9 மணிக்கு சாமி அனந்த வாகனத்தில் பவனி, 10 மணிக்கு பிரகலாத சரிதம் கதகளி ஆகியவை நடக்கிறது. தொடர்ந்து விழா நாட்களில் தினமும் மதியம் ஸ்ரீபூதபலி எழுந்தருளல், இரவு சாமி பவனி வருதல், கதகளி ஆகியவை நடக்கிறது.

    விழாவில் 18-ந் தேதி இரவு 8 மணிக்கு கிருஷ்ணன் சன்னதியில் கொடியேற்றம் நடக்கிறது. 22-ந் தேதி இரவு 8.30 மணிக்கு சிறப்பு நாதஸ்வர கச்சேரி, 9.30 மணிக்கு சாமி கருட வாகனத்தில் பள்ளிவேட்டைக்கு எழுந்தருளல் ஆகியவை நடக்கிறது.

    விழாவின் 10-ம் நாளான 23-ந் தேதி காலை 11 மணிக்கு திருவிலக்கு எழுந்தருளல், மாலை 7 மணிக்கு சிறப்பு நாதஸ்வர கச்சேரி, இரவு 8 மணிக்கு கருட வாகனத்தில் ஆராட்டுக்கு தளியல் ஆற்றுக்கு சாமி எழுந்தருளல் ஆகியவை நடைபெறுகிறது.

    விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினரும், பக்தர்களும் இணைந்து செய்துள்ளனர்.

    • ஆதிகேசவ பெருமாளுக்கு தளியல் ஆற்றில் ஆராட்டு நடைபெற்றது.
    • திருவம்பாடி கிருஷ்ணசுவாமி கருட வாகனத்தில் ஆராட்டுக்கு எழுந்தருளினர்.

    திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் ஐப்பசித் திருவிழா கடந்த 23-ந் தேதி தொடங்கியது. விழா நாட்களில் சாமிபவனி, கதகளி உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. நேற்று முன்தினம் சிறப்பு நாதஸ்வரக்கச்சேரி, சாமி கருட வாகனத்தில் பள்ளிவேட்டைக்கு எழுந்தருளல் ஆகியன நடந்தது.

    விழாவின் 10-வது நாளான நேற்று ராமாயண பாராயணம், சிறப்பு நாதஸ்வர கச்சேரி போன்றவை நடந்தது. இரவு கருட வாகனத்தில் ஆதிகேசவ பெருமாளும் திருவம்பாடி கிருஷ்ணசுவாமியும் கருட வாகனத்தில் ஆராட்டுக்கு எழுந்தருளினர்.

    அப்போது திருவிதாங்கூர் மன்னரின் பிரதிநிதி உடைவாளுடன் முன் சென்றார். திருவட்டார் போலீசார் துப்பாக்கி ஏந்தி மரியாதை செய்தனர். பின்னர் ஆதிகேசவ பெருமாளுக்கு தளியல் ஆற்றில் ஆராட்டு நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினரும், பக்தர்களும் செய்து இருந்தனர்.

    • சங்குமுகம் கடற்கரையில் ஆராட்டு நடைபெற்றது.
    • இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    கேரளாவில் பிரசித்தி பெற்ற கோவில்களில் திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலும் ஒன்று. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மற்றும் ஐப்பசி மாதங்களில் ஆராட்டு திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    இந்த நிலையில் இவ்வாண்டின் ஐப்பசி ஆராட்டு திருவிழா கடந்த 23-ந் தேதி தொடங்கியது. விழாவின் 9-ம் நாளான நேற்று முன் தினம் இரவு 9 மணிக்கு பள்ளி வேட்டை நடைபெற்றது.

    விழாவின் நிறைவு நாளான நேற்று சங்குமுகம் கடற்கரையில் ஆராட்டு நடைபெற்றது. இதையொட்டி மாலை 5 மணிக்கு ஆராட்டு ஊர்வலம் கோவிலின் மேற்கு வாசலில் இருந்து புறப்பட்டது.

    ஊர்வலத்தின் முன்பு யானைகள், குதிரைகள் அணிவகுத்து சென்றன. அதைத்தொடர்ந்து பல்லக்குகளில் சாமி மேளதாளம் முழங்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. இந்த ஊர்வலம் இரவு 7 மணிக்கு சங்குமுகம் கடற்கரையில் நிறைவடைந்தது. அதைத்தொடர்ந்து பாரம்பரிய முறைப்படி ஆராட்டு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • திருவனந்தபுரம் விமான நிலையம் நேற்று 5 மணி நேரம் மூடப்பட்டது.
    • மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை விமானங்கள் புறப்படவும், இறங்கவும் தடை விதிக்கப்பட்டது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பிரசித்தி பெற்ற பத்மநாப சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் நடைபெறும் ஐப்பசி திருவிழாவின்போது பரிவேட்டை நிகழ்ச்சி மற்றும் ஆராட்டு விழா நடைபெறும்.

    இந்த ஆண்டுக்கான விழா தொடங்கி நடந்துவருகிறது. நேற்று பரிவேட்டை விழா நடந்தது. இன்று ஆராட்டு நிகழ்ச்சி நடக்கிறது. அப்போது பத்மநாப சுவாமி கோவிலில் இருந்து சுவாமி சிலைகள் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும். ஊர்வலத்தில் பத்மநாப சுவாமி, நரசிங்கமூர்த்தி, கிருஷ்ணன் விக்கிரங்கள் இடம்பெறும்.

    ஒவ்வொரு ஆண்டும் இந்த ஊர்வலம் திருவனந்தபுரம் விமான நிலைய ஓடுபாதை வழியாக செல்லும். இதற்கு காரணம் இந்த ஊர்வலம் செல்லும் பாதையில் தான் 1932-ம் ஆண்டு விமான நிலையம் அமைக்கப்பட்டது. அப்போது கோவில் ஊர்வலம் நடைபெறும்போது, விமான நிலையம் மூடப்பட்டு ஊர்வலத்திற்கு வழிவிடப்படும் என்றும், ஊர்வலம் சென்றபின்பே விமான நிலையத்தில் விமானங்கள் இறங்கவும், புறப்படவும் அனுமதி வழங்கப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டது.

    அப்போது முதல் ஒவ்வொரு ஆண்டும் பத்மநாபசுவாமி கோவிலில் ஐப்பசி மற்றும் பங்குனி மாத திருவிழாக்களின் போது விமான நிலையத்தின் ஓடுபாதை மூடப்படுவது வழக்கம்.

    இந்நிலையில், ஐப்பசி திருவிழா ஆராட்டு ஊர்வலத்தையொட்டி நேற்று திருவனந்தபுரம் விமான நிலைய ஓடுபாதை 5 மணி நேரம் மூடப்பட்டது. அதன்படி, மாலை 4 மணியில் இருந்து இரவு 9 மணிவரை விமான நிலையம் மூடப்பட்டு இருந்தது. அதற்கேற்ப சர்வதேச மற்றும் உள்நாட்டு விமானங்கள் என 10 விமானங்களின் வருகை மற்றும் புறப்பாடு நேரம் மாற்றி அமைக்கப்பட்டது.

    • திருவனந்தபுரம் விமான நிலையம் இன்று 5 மணி நேரம் மூடப்படுகிறது.
    • மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை விமானங்கள் புறப்படவும், இறங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பிரசித்தி பெற்ற பத்மநாபசுவாமி கோவில் உள்ளது.

    இக்கோவிலில் நடைபெறும் ஐப்பசி திருவிழாவின் போது பரிவேட்டை நிகழ்ச்சி மற்றும் ஆராட்டு விழா நடைபெறும். இந்த ஆண்டுக்கான விழா தொடங்கி நடந்து வருகிறது. நேற்று பரிவேட்டை விழா நடந்தது.

    இன்று ஆராட்டு நிகழ்ச்சி நடக்கிறது. அப்போது பத்மநாபசுவாமி கோவிலில் இருந்து சுவாமி சிலைகள் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் ஊர்வலமாக எடுத்து செல்லப்படும்.

    ஊர்வலத்தில் பத்மநாபசுவாமி, நரசிங்கமூர்த்தி, கிருஷ்ணன் விக்கிரங்கள் இடம் பெறும். ஒவ்வொரு ஆண்டும் இந்த ஊர்வலம் திருவனந்தபுரம் விமான நிலைய ஓடுபாதை வழியாக செல்லும்.

    இதற்கு காரணம் இந்த ஊர்வலம் செல்லும் பாதையில் தான் 1932-ம் ஆண்டு விமான நிலையம் அமைக்கப்பட்டது. அப்போது கோவில் ஊர்வலம் நடைபெறும்போது, விமான நிலையம் மூடப்பட்டு ஊர்வலத்திற்கு வழிவிடப்படும் என்றும் ஊர்வலம் சென்றபின்பே விமான நிலையத்தில் விமானங்கள் இறங்கவும், புறப்படவும் அனுமதி வழங்கப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டது.

    அப்போது முதல் ஒவ்ெவாரு ஆண்டும் பத்மநாபசுவாமி கோவிலில் ஐப்பசி மற்றும் பங்குனி மாத திருவிழாக்களின் போது விமான நிலையத்தின் ஓடு பாதை மூடப்படுவது வழக்கம்.

    அந்த வகையில் ஐப்பசி திருவிழா ஆராட்டு ஊர்வலத்தையொட்டி இன்று திருவனந்தபுரம் விமான நிலைய ஓடுபாதை 5 மணி நேரம் மூடப்படுகிறது.இன்று மாலை 4 மணிக்கு மூடப்படும் ஓடுபாதை இரவு 9 மணிக்கு மேல் தான் திறக்கப்படும்.

    இந்த ஊர்வலத்தில் திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தின் இப்போதைய தலைவர் ஆதித்ய வர்மா உடைவாளுடன் முன்செல்ல ஊர்வலம் நடைபெறும். இது பற்றி விமான நிலைய அதிகாரிகள் கூறும்போது, விமான நிலைய ஓடுபாதை மூடப்படும் தகவலை ஒருவாரத்திற்கு முன்பே அனைத்து நாடுகளின் விமான நிறுவனங்களுக்கும் தெரிவித்து விட்டோம்.

    இன்று விமான நிலைய ஓடுபாதை வழியாக சுவாமி ஊர்வலம் நடைபெறும்போது மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு அளிப்பார்கள். ஊர்வலம் சென்ற பின்பு விமான நிலைய ஓடுபாதை மீண்டும் திறக்கப்படும், என்றார்.

    • ஐப்பசி திருவிழா இன்று தொடங்கி நவம்பர் 1-ந்தேதி 10 நாட்கள் நடக்கிறது.
    • 31-ந் தேதி சாமி கருடவாகனத்தில் பள்ளிவேட்டைக்கு எழுந்தருளல் நடைபெறும்.

    திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் கடந்த ஜூலை மாதம் 6-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி, ஐப்பசி மாதங்களில் 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி ஐப்பசி திருவிழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் (நவம்பர்) 1-ந் தேதி வரை நடக்கிறது.

    முதல் நாளான இன்று காலை 8.30 மணிக்கு கொடியேற்றம் நடக்கிறது. பின்னர் சாமி நாற்காலி வாகனத்தில் பவனி வருதல், சிறப்பு பூஜைகள் நடைபெறும். தொடர்ந்து விழா நாட்களில் பல்வேறு பூஜைகள், சாமி வாகனத்தில் பவனி வருதல் போன்றவை நடக்கிறது.

    24-ந் தேதி இரவு 9 மணிக்கு சாமி அனந்த வாகனத்தில் பவனி வருதல், 10 மணிக்கு ருக்மணி சுயம்வரம் கதகளியும், 25-ந் தேதி காலை 8 மணிக்கு பாகவத பாராயணம், இரவு 9 மணிக்கு கமல வாகனத்தில் சாமி எழுந்தருளல், 10 மணிக்கு தட்ச யாகம் கதகளியும் நடைபெறும்.

    26-ந் தேதி இரவு 7 மணிக்கு ராமாயண பாராயணம், 9.30 மணிக்கு சாமி பல்லக்கில் பவனி வருதல், 10 மணிக்கு சந்தான கோபாலம் கதகளியும், 27-ந் தேதி இரவு 8 மணிக்கு கிருஷ்ணன் சன்னதியில் கொடியேற்றம், தொடர்ந்து கருட வாகனத்தில் சாமி பவனி வருதல், நள சரிதம் கதகளியும், 28-ந் தேதி இரவு 7 மணிக்கு திருவாதிரைக்களி, 9 மணிக்கு சாமி நாற்காலி வாகனத்தில் பவனி வருதலும், 29-ந் தேதி இரவு 9 மணிக்கு சாமி பல்லக்கில் பவனி வருதல், தொடர்ந்து துரியோதன வதம் கதகளியும் நடக்கிறது.

    30-ந் தேதி இரவு 9 மணிக்கு பாலிவதம் கதகளி, 31-ந் தேதி இரவு 8.30 மணிக்கு சிறப்பு நாதஸ்வரக்கச்சேரி, 9.30 மணிக்கு சாமி கருடவாகனத்தில் பள்ளிவேட்டைக்கு எழுந்தருளல் போன்றவை நடைபெறும்.

    விழாவின் இறுதி நாளான வருகிற 1-ந் தேதி காலை 6 மணிக்கு ராமாயண பாராயணம், 11 மணிக்கு திருவிலக்கு எழுந்தருளல், இரவு 7 மணிக்கு சிறப்பு நாதஸ்வர இன்னிசைக் கச்சேரி, கருட வாகனத்தில் சாமி ஆராட்டுக்கு தளியல் ஆற்றுக்கு எழுந்தருளல், இரவு 1 மணிக்கு குசேல விருத்தம் கதகளி ஆகியவை நடக்கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினரும், பக்தர்களும் இணைந்து செய்துள்ளனர்.

    • திருவிழா கொடியேற்றத்துடன் நாளை தொடங்குகிறது
    • தொடர்ந்து பத்து நாட்கள் திருவிழா நடைபெறுகிறது.

    கன்னியாகுமரி:

    திருவட்டார் ஆதிகேசவப் பெருமாள் கோவில் ஐப்பசி திருவிழா நாளை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது. தொடர்ந்து பத்து நாட்கள் திருவிழா நடைபெறுகிறது.

    கடந்த ஜூலை 6-ந்தேதி திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றதை தொடர்ந்து கோவிலுக்கு நாள் தோறும் வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தென்னிந்திய அளவில் வைணவ பக்தர்களிடையே மிகவும் முக்கியமான திருக்கோவிலாக இக்கோவில் கொண்டாடப்பட்டு வருகிறது.

    திருவட்டார் ஆதிகேச வப்பெருமாள் கோவிலில் ஆண்டுக்கு இரண்டு முறை அதாவது பங்குனி, ஐப்பசி மாதங்களில் பத்து நாட்கள் திருவிழா கொண்டாடப்ப டுவது வழக்கம்.

    ஐப்பசி திருவிழாவின் முதல் நாளான நாளை (23-ந்தேதி) காலை 8.30 முதல் 9.30 மணிக்குள் திருக்கொடியேற்று நடைபெறுகிறது. அதை தொடர்ந்து சுவாமி நாற்காலி வாகனத்தில் பவனி வருதல், 2-ம் நாள் இரவு 9 மணிக்கு சுவாமி அனந்த வாகனத்தில் பவனி வருதல், இரவு 10 மணிக்கு ருக்மணி சுயம்பவரம் கதகளி நடைபெறுகிறது.

    3-ம் நாள் காலை 8 மணிக்கு பாகவத பாராய ணம், இரவு 9 மணிக்கு கமல வாகனத்தில் சுவாமி எழுந்தருளல், இரவு 10 மணிக்கு தட்ச யாகம் கதகளி ஆகியன நடக்கிறது. 4-ம் நாள் இரவு 7 மணிக்கு ராமாயண பாராயணம், இரவு 9.30 மணிக்கு சுவாமி பல்லாக்கில் பவனி வருதல், இரவு 10 மணிக்கு சந்தான கோபாலம் கதகளி.

    5-ம் நாள் இரவு 8 மணிக்கு கிருஷ்ணன் சன்னதியில் கொடியேற்றுதல், தொடர்ந்து கருடவாக னத்தில் சுவாமி பவனி வருதல், நள சரிதம் கதகளி ஆகியனவும், 6-ம் நாள் இரவு 7 மணிக்கு திருவாதிரைக்களி, 9 மணிக்கு சுவாமி நாற்காலி வாகனத்தில் பவனி வருதல், தொடர்ந்து கதகளி ஆகியனவும், 7-ம் நாள் இரவு 9 மணிக்கு சுவாமி பல்லாக்கில் பவனி வருதல் தொடர்ந்து துரியோதன வதம் கதகளி ஆகியன நடக்கிறது.

    8-ம் நாள் இரவு 9 மணிக்கு பாலிவதம் கதகளி, 9-ம் நாள் இரவு 8.30 மணிக்கு சிறப்பு நாதஸ்வரக்கச்சேரி, இரவு 9.30 மணிக்கு சுவாமி கருடவாகனத்தில் பள்ளி வேட்டைக்கு எழுந்தருளல், 10-ம் நாள் (நவம்பர் முதல் தேதி) காலை 6 மணிக்கு ராமாயாண பாராயணம், காலை 11 மணிக்கு திருவி லக்கு எழுந்தருளல், இரவு 7 மணிக்கு சிறப்பு நாதஸ்வர இன்னிசைக் கச்சேரி, கருட வாகனத்தில் சுவாமி ஆறாட்டுக்கு தளியல் ஆற் றுக்கு எழுந்தருளல், இரவு 1 மணிக்கு குசேல விருத்தம் கதகளி ஆகியன நடக்கிறது.

    விழாவுக்குகான ஏற்பாடுகளை கோவில் நிர்வா கத்தினர் மிக சிறப்பாக செய்து இருக்கின்றனர்.

    • நாளை சுவாமி-அம்பாள் திருக்கல்யாணம் நடக்கிறது.
    • 26-ந்தேதி சுவாமி-அம்பாள் மறுவீடு பட்டினப்பிரவேச வீதி உலா நடக்கிறது.

    தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் திருக்கல்யாண திருவிழா கடந்த 12-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலையிலும், மாலையிலும் சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும், வீதி உலாவும் நடந்தது.

    முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான அம்பாள் சிவபூஜை செய்யும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இதையொட்டி ஊஞ்சல் மண்டபத்தில் காந்திமதி அம்பாளுக்கு காசுமாலை, பவளமாலை, காலில் கொலுசு, தலையில் சடை என சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.

    தொடா்ந்து சிவபூஜைக்கு தேவையான தேங்காய், பழம், பூ, வஸ்திரம் உள்ளிட்ட 11 தாம்பூல தட்டுகளுடன் பஞ்ச வாத்தியங்கள் மற்றும் நாதஸ்வரம், மேளம் இசைக்க அம்பாள் சன்னதியில் இருந்து காந்திமதி அம்பாள் கையில் தாமரைப்பூவும், மலர் கூடையையும் ஏந்திய சிறப்பு அலங்காரத்தில் சுவாமி சன்னதி மகாமண்டபத்திற்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடா்ந்து அா்ச்சகா், அம்பாள்- சிவனை பூஜை செய்வது போன்ற பாணியில் தூபம் இடுதல், பூக்களால் அா்ச்சனை செய்தல் என காந்திமதி அம்பாள், சுவாமி நெல்லையப்பருக்கு சிவபூஜை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    பின்னர் சுவாமிக்கும்- அம்பாளுக்கும் சோடஷ தீபாராதனை காண்பிக்கப்பட்டு, பஞ்ச புராணம் பாடப்பட்டது. நிறைவாக சுவாமிக்கு மூலஸ்தானத்தில் 5 பஞ்ச தட்டு கற்பூர ஆரத்தியும், அம்பாளுக்கு 1 பஞ்ச தட்டு ஆரத்தியும் காண்பிக்கப்பட்டது. பூஜைகள் முடிந்தபின் அம்பாள் ஊா்வலமாக அம்மன் சன்னதிக்கு எழுந்தருளினாா். இந்நிகழ்வு வருடத்துக்கு ஒருமுறை மட்டுமே நிகழும். நேற்று நள்ளிரவில் காந்திமதி அம்பாள் சப்பரத்தில் கீழரதவீதி வழியாக கம்பாநதி காமாட்சி அம்மன் கோவிலை சென்றடைந்தார்.

    இன்று (சனிக்கிழமை) பகல் 12 மணிக்கு கம்பாநதி அருகே உள்ள காட்சி மண்டபத்தில் காந்திமதி அம்பாளுக்கு, சுவாமி நெல்லையப்பர் காட்சி கொடுக்கும் வைபவமும், மாலை மாற்றும் நிகழ்ச்சியும் சிறப்பு தீபாராதனையும் நடக்கிறது. இதைத்தொடர்ந்து மாலை 4.30 மணிக்கு சுவாமி-அம்பாள் வீதி உலா நடைபெறுகிறது.

    நாளை (ஞாயிற்றுக்கிழமை) நெல்லைப்பர் கோவில் ஆயிரம் கால் மண்டபத்தில் வைத்து அதிகாலை 4 மணிக்கு சுவாமி-அம்பாள் திருக்கல்யாணமும், காலை 9-30 மணிக்கு சுவாமி-அம்பாள் பட்டினப்பிரவேச வீதிஉலாவும் நடக்கிறது. நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் 25-ந் தேதி வரை ஊஞ்சல் மண்டபத்தில் ஊஞ்சல் விழா நடக்கிறது. 26-ந் தேதி சுவாமி-அம்பாள் ரிஷப வாகனத்தில் மறுவீடு பட்டினப்பிரவேச வீதி உலா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் அய்யர்சிவமணி மற்றும் ஊழியர்கள் செய்துள்ளனர்.

    • அம்மன் வெள்ளி கலைமான் வாகனத்தில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது.
    • விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    அழகியபாண்டியபுரம் வீரவநங்கை அம்மன் கோவிலில் ஐப்பசி மாத பிறப்பை முன்னிட்டு அம்மன் வீதி உலா வரும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதையொட்டி காலை 9 மணிக்கு அபிஷேகம், அலங்கார தீபாராதனை ஆகியவை நடந்தது.

    பின்னர் அம்மன் தட்டு வாகனத்தில் வீதி உலா வந்தார். அம்மன் கோவில் தெப்பக்குளத்தை சுற்றிய பின்னர் கிணற்றில் நீராடி விட்டு கோவிலை வந்தடைந்தார்.

    இரவில் அம்மன் வெள்ளி கலைமான் வாகனத்தில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • 21-ந்தேதி ஐப்பசி மாத மகாபெரும் பூஜை திருவிழா நடைபெறுகிறது.
    • கோவில் குருநாதர் சக்தியம்மா அக்னி சட்டியுடன் 12 மணி நேரம் சிறப்பு அருள் வாக்கு நிகழ்ச்சி நடக்கிறது.

    புளியங்குடி அரசு மருத்துவமனை அருகில் முப்பெரும் தேவியர் பவானி அம்மன் கோவில், பெரியபாளையத்து பவானி அம்மன், நாக கன்னியம்மன், நாகம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வருகிற 21-ந் தேதி (வெள்ளிக்கிழமை) ஐப்பசி மாத மகாபெரும் பூஜை திருவிழா நடைபெறுகிறது.

    இதை முன்னிட்டு அதிகாலை 4 மணியளவில் நடை திறக்கப்பட்டு முப்பெரும் தேவியர்களுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பெரிய தீபாராதனை நடைபெறுகிறது. காலை 8 மணிக்கு கோவில் குருநாதர் சக்தியம்மா மகா பெரும் பூஜையில் ஒரு கையில் அக்னி சட்டியுடன் சுமார் 12 மணி நேரம் சிறப்பு அருள் வாக்கு சொல்லுதல் நிகழ்ச்சி நடக்கிறது.

    திருவிழா ஏற்பாடுகளை கோவில் குருநாதர் சக்தியம்மா மற்றும் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    • சுவாமி -அம்பாளுக்கு அபிஷேகம் நடந்தது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    விக்கிரமசிங்கபுரம் சிவந்தியப்பர் கோவிலில் ஐப்பசி விசு திருவிழா கடந்த 9-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் ஒவ்வொரு சமுதாயம் சார்பில் ஏக சிம்மாசனத்தில் அபிஷேகம், அலங்கார தீபாராதனை, சுவாமி- அம்பாள் வீதி உலா வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் நேற்று காலை சுவாமி -அம்பாளுக்கு அபிஷேகம் நடந்தது.

    தொடர்ந்து சுவாமி-அம்பாள் பூம்பல்லக்கில் ஊர்வலமாக பாபநாசம் கோவிலுக்கு சென்று அடைந்தனர். அங்கு கோவில் முன்பு உள்ள படித்துறையில் ஐப்பசி விசு தீர்த்தவாரி நிகழ்ச்சி, இரவில் பஞ்சமூர்த்தி அலங்கார தீபாராதனை, வீதி உலா வருதல் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • இந்த திருவிழா வருகிற 22-ந்தேதி நடைபெற உள்ளது.
    • 22-ந்தேதி மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடக்கிறது.

    ஆத்தூரில் உள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட சோமசுந்தரி சமேத சோமநாத சுவாமி கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா வருகிற 22-ந் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு நேற்று காலை கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது.

    முன்னதாக சுவாமி- அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனையும் நடந்தது. அதனை தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட கொடி மரத்துக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் மண்டகப்படிதாரர்கள் மாநில தேவேந்திர வேளாளர் கூட்டமைப்பின் தலைவர் ராஜேந்திரன், ஆத்தூர் ராமலிங்க பிள்ளை, நெல்லை கற்பக விநாயகம் மற்றும் திருச்செந்தூர் கோவில் முன்னாள் அறங்காவலர் அண்ணாமலை சுப்பிரமணியம், புதுகிராமம் ராஜா ராம், சுப்பிரமணியம் உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    பின்னர் மாலையில் அம்பாள் திருவீதி உலா நடைபெற்றது. விழா நாட்களில் காலையில் சுவாமி- அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனையும், இரவில் சுவாமி- அம்பாள் திருவீதி உலா நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 22-ந்தேதி அதிகாலை 5 மணிக்கு மேல் 6 மணிக்குள் தவசுக்கு புறப்படும் நிகழ்ச்சியும், மாலையில் மாலை மாற்றுதல் நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் சாந்தி தேவி, தக்கார் தமிழ்செல்வி மற்றும் ஆலய பணியாளர்கள், கோவில் அர்ச்சகர்கள் செய்து வருகின்றனர்.

    ×