என் மலர்
நீங்கள் தேடியது "Thiruvattar Adikesava Perumal Temple"
- சயன நிலையில் உள்ள மூலவரை தரிசனம் செய்தும் மகிழ்ந்தனர்.
- இந்த கோவிலில் கடந்த ஜூலை 6-ந்தேதி கும்பாபிஷேகம் நடந்தது.
108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றான திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் கும்பாபிஷேகம் 418 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஜூலை மாதம் 6-ந்தேதி நடந்தது. கோவிலின் சிறப்பை கேள்விப்பட்ட பலரும் நாள் தோறும் வருகை தந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர்.
இந்தநிலையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான நேற்று காலை மற்றும் மாலையில் பக்தர்கள் அதிகளவில் வருகை தந்திருந்தனர். சபரிமலைக்கு சென்று விட்டு குமரி மாவட்டம் வருகை தந்த பக்தர்களும் கோவிலுக்கு வந்திருந்தனர். அவ்வாறு வருகை தந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
மேலும், ஒற்றைக்கல் மண்டபத்தில் ஏறி மூன்று வாசல்கள் வழியாக சயன நிலையில் உள்ள மூலவரை தரிசனம் செய்தும் மகிழ்ந்தனர். தற்போது மதியம் 100 பேருக்கு மட்டுமே கோவில் சார்பில் அன்னதானம் வழங்கப்படுகிறது. குறைந்தது 300 பேருக்காவது அன்னதானம் வழங்க அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கடைசியாக 2016-ம் ஆண்டு திருவிளக்கு பூஜை நடந்தது.
- விளக்கு பூஜையொட்டி விளக்கணி மாடத்தில் விளக்குகள் ஏற்றப்பட்டன.
திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் திருப்பணிகள் தொடங்குவதற்கு முன்பு வரை கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரா கிராம முன்னேற்ற திட்டத்தின் சார்பில் ஆண்டு தோறும் 2008 திருவிளக்கு பூஜை நடைபெற்று வந்தது. கடைசியாக 2016-ம் ஆண்டு திருவிளக்கு பூஜை நடந்தது. அதன்பின்னர் கோவிலில் திருப்பணி நடைபெற்று வந்ததால் 6 ஆண்டுகள் திருவிளக்கு பூஜை நடைபெறவில்லை.
கடந்த ஜூலை மாதம் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றதை அடுத்து இந்த ஆண்டு முதல் மீண்டும் திருவிளக்கு பூஜை நடத்த விவேகானந்தா கேந்திராவின் கிராம முன்னேற்ற திட்ட அமைப்பு முன் வந்தது. அதன்படி நேற்று மாலையில் பஜனை, ஆன்மிக சொற்பொழிவு போன்றவை நடந்தது. வெள்ளிமலை சாமி சைதன்யா மகராஜ் தலைமை தாங்கி ஆன்மிக சொற்பொழிவு ஆற்றினார். தொடர்ந்து அலங்கார தீபாராதனைக்கு பின்னர் திருவிளக்கு பூஜை தொடங்கியது.
இந்த பூஜையில் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து பெண்கள் கலந்து கொண்டனர். விளக்கு பூஜையொட்டி விளக்கணி மாடத்தில் விளக்குகள் ஏற்றப்பட்டன.
- ஆதிகேசவ பெருமாளுக்கு தளியல் ஆற்றில் ஆராட்டு நடைபெற்றது.
- திருவம்பாடி கிருஷ்ணசுவாமி கருட வாகனத்தில் ஆராட்டுக்கு எழுந்தருளினர்.
திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் ஐப்பசித் திருவிழா கடந்த 23-ந் தேதி தொடங்கியது. விழா நாட்களில் சாமிபவனி, கதகளி உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. நேற்று முன்தினம் சிறப்பு நாதஸ்வரக்கச்சேரி, சாமி கருட வாகனத்தில் பள்ளிவேட்டைக்கு எழுந்தருளல் ஆகியன நடந்தது.
விழாவின் 10-வது நாளான நேற்று ராமாயண பாராயணம், சிறப்பு நாதஸ்வர கச்சேரி போன்றவை நடந்தது. இரவு கருட வாகனத்தில் ஆதிகேசவ பெருமாளும் திருவம்பாடி கிருஷ்ணசுவாமியும் கருட வாகனத்தில் ஆராட்டுக்கு எழுந்தருளினர்.
அப்போது திருவிதாங்கூர் மன்னரின் பிரதிநிதி உடைவாளுடன் முன் சென்றார். திருவட்டார் போலீசார் துப்பாக்கி ஏந்தி மரியாதை செய்தனர். பின்னர் ஆதிகேசவ பெருமாளுக்கு தளியல் ஆற்றில் ஆராட்டு நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினரும், பக்தர்களும் செய்து இருந்தனர்.
- இன்று இரவு 7 மணிக்கு தளியல் ஆற்றில் எழுந்தருளல் நடக்கிறது.
- இன்று நள்ளிரவு 1 மணிக்கு குசேல விருத்தம் கதகளி நடைபெறுகிறது.
திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் ஐப்பசித்திருவிழா கடந்த 23-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது.
விழா நாட்களில் சாமிபவனி, கதகளி உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வந்தது. நேற்று முன்தினம் இரவு சாமி பல்லக்கில் பவனி வருதல், துரியோதனன் வதம், கதகளி ஆகியவை நடந்தது.
நேற்று பக்தி இன்னிசை, சாமி நாற்காலி வாகனத்தில் பவனி வருதல், பாலிவதம் கதகளி ஆகியவை நடைபெற்றது.
நேற்று (திங்கட்கிழமை) நாதஸ்வர கச்சேரி, சாமி கருடவாகனத்தில் பள்ளிவேட்டைக்கு எழுந்தருளல் ஆகியவை நடந்தது.
இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 7 மணிக்கு சிறப்பு நாதஸ்வர கச்சேரி, கருட வாகனத்தில் சாமி ஆராட்டுக்கு தளியல் ஆற்றில் எழுந்தருளலும், நள்ளிரவு 1 மணிக்கு குசேல விருத்தம் கதகளி ஆகியவை நடைபெறுகிறது.
- ஐப்பசி திருவிழா இன்று தொடங்கி நவம்பர் 1-ந்தேதி 10 நாட்கள் நடக்கிறது.
- 31-ந் தேதி சாமி கருடவாகனத்தில் பள்ளிவேட்டைக்கு எழுந்தருளல் நடைபெறும்.
திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் கடந்த ஜூலை மாதம் 6-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி, ஐப்பசி மாதங்களில் 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
அதன்படி ஐப்பசி திருவிழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் (நவம்பர்) 1-ந் தேதி வரை நடக்கிறது.
முதல் நாளான இன்று காலை 8.30 மணிக்கு கொடியேற்றம் நடக்கிறது. பின்னர் சாமி நாற்காலி வாகனத்தில் பவனி வருதல், சிறப்பு பூஜைகள் நடைபெறும். தொடர்ந்து விழா நாட்களில் பல்வேறு பூஜைகள், சாமி வாகனத்தில் பவனி வருதல் போன்றவை நடக்கிறது.
24-ந் தேதி இரவு 9 மணிக்கு சாமி அனந்த வாகனத்தில் பவனி வருதல், 10 மணிக்கு ருக்மணி சுயம்வரம் கதகளியும், 25-ந் தேதி காலை 8 மணிக்கு பாகவத பாராயணம், இரவு 9 மணிக்கு கமல வாகனத்தில் சாமி எழுந்தருளல், 10 மணிக்கு தட்ச யாகம் கதகளியும் நடைபெறும்.
26-ந் தேதி இரவு 7 மணிக்கு ராமாயண பாராயணம், 9.30 மணிக்கு சாமி பல்லக்கில் பவனி வருதல், 10 மணிக்கு சந்தான கோபாலம் கதகளியும், 27-ந் தேதி இரவு 8 மணிக்கு கிருஷ்ணன் சன்னதியில் கொடியேற்றம், தொடர்ந்து கருட வாகனத்தில் சாமி பவனி வருதல், நள சரிதம் கதகளியும், 28-ந் தேதி இரவு 7 மணிக்கு திருவாதிரைக்களி, 9 மணிக்கு சாமி நாற்காலி வாகனத்தில் பவனி வருதலும், 29-ந் தேதி இரவு 9 மணிக்கு சாமி பல்லக்கில் பவனி வருதல், தொடர்ந்து துரியோதன வதம் கதகளியும் நடக்கிறது.
30-ந் தேதி இரவு 9 மணிக்கு பாலிவதம் கதகளி, 31-ந் தேதி இரவு 8.30 மணிக்கு சிறப்பு நாதஸ்வரக்கச்சேரி, 9.30 மணிக்கு சாமி கருடவாகனத்தில் பள்ளிவேட்டைக்கு எழுந்தருளல் போன்றவை நடைபெறும்.
விழாவின் இறுதி நாளான வருகிற 1-ந் தேதி காலை 6 மணிக்கு ராமாயண பாராயணம், 11 மணிக்கு திருவிலக்கு எழுந்தருளல், இரவு 7 மணிக்கு சிறப்பு நாதஸ்வர இன்னிசைக் கச்சேரி, கருட வாகனத்தில் சாமி ஆராட்டுக்கு தளியல் ஆற்றுக்கு எழுந்தருளல், இரவு 1 மணிக்கு குசேல விருத்தம் கதகளி ஆகியவை நடக்கிறது.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினரும், பக்தர்களும் இணைந்து செய்துள்ளனர்.
- இந்த கோவிலில் கடந்த ஜூலை மாதம் 6-ந்தேதி கும்பாபிஷேகம் நடந்தது.
- செப்டம்பர் 19-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை சூரியக்கதிர்கள் ஆதிகேசவப் பெருமாளின் திருமேனியில் விழும்.
திருவட்டார் ஆதிகேசவப் பெருமாள் கோவிலில் கடந்த ஜூலை மாதம் 6-ந்தேதி கும்பாபிஷேகம் நடந்தது. அதன் பின் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. இந்த கோவிலில் செப்டம்பர் மாதம் 19-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை மாலையில் சூரியக்கதிர்கள் கருவறை வரை பாய்ந்து ஆதிகேசவப் பெருமாளின் திருமேனியில் விழும் அதிசயம் நடைபெறும். பெருமாளுக்கு உகந்த தமிழ் மாதமான புரட்டாசி மாத தொடக்கத்தில் மாலைச்சூரியனின் பொன்னிற கதிர்கள் பெருமாளின் திருமேனியில் விழும் வகையில் கோவிலை வடிவமைத்துள்ளனர்.
இந்தநிலையில், நேற்று மாலையில் சூரியனின் மஞ்சள் நிறக்கதிர்கள் கண்களை கூசச்செய்யும் விதத்தில் பாய்ந்து கருவறையில் பெருமாள் மீது விழுந்தது. இதைப் பார்த்து பக்தர்கள் பரவசமடைந்தனர். இந்த அபூர்வ காட்சியை இன்றும் (சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணியளவில் காணலாம்.
- கிருஷ்ணசாமி கோவில்களில் கிருஷ்ணஜெயந்தி விழா நடந்தது.
- கிருஷ்ணசாமி கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி பவனி நடந்தது.
திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் நேற்று கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெற்றது. மாலையில் தீபாராதனையை தொடர்ந்து கோவிலில் உள்ள உதய மார்த்தாண்ட மண்டபத்தில் அலங்கரிக்கப்பட்ட தொட்டிலில் குழந்தை கண்ணன், பலராமன் ஐம்பொன் விக்கிரகங்கள் வைக்கப்பட்டன. பின்னர் பக்தர்கள் தொட்டிலை அசைத்து மகிழ்ந்தனர்.
இரவில் கிருஷ்ணன் கோவிலில் கலச அபிஷேகம், அலங்கார தீபாராதனை, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
இதேபோல் அருமனை அருகே உள்ள முழுக்கோடு, கடலிகோடு ஆகிய பகுதிகளில் உள்ள கிருஷ்ணசாமி கோவில்களில் கிருஷ்ணஜெயந்தி விழா நடந்தது. இதையொட்டி கடலிகோடு கிருஷ்ணசாமி கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி பவனி நடந்தது. பவனி புண்ணியம் கண்டன் சாஸ்தா கோவிலில் இருந்து தொடங்கி முழுக்கோடு வழியாக கடலிகோடு கிருஷ்ணசாமி கோவிலில் நிறைவடைந்தது. இதில் குழந்தைகள் கிருஷ்ணர் வேடம் அணிந்தும், முத்துக்குடையுடன் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
- இந்த கோவிலில் கடந்த மாதம் 6-ந்தேதி கும்பாபிஷேகம் நடந்தது.
- இன்று (செவ்வாய்க்கிழமை) பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.
திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோவிலில் கடந்த மாதம் 6-ந் தேதி கும்பாபிஷேகம் நடந்தது.
இதன் 41-வது நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமம், காலை 8.30 மணிக்கு கிருஷ்ணன் கோவில், குலசேகரப்பெருமாள் கோவில், சாஸ்தா கோவில் ஆகியவற்றில் சிறப்பு கலச அபிஷேகம் போன்றவை நடைபெறும்.
காலை 9.30 மணிக்கு மேல் வழக்கம்போல் பக்தர்கள் ஒற்றக்கல் மண்டபத்தில் ஏறி சாமிதரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள், மாலை 6.30 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடக்கிறது.
- இந்த கோவிலில் கும்பாபிஷேகம் கடந்த 6-ந்தேதி நடந்தது.
- பூஜைகள், பஞ்சவாத்தியம், நாதஸ்வரம், தவில் இல்லாமல் நடக்கிறது.
108 வைணவத்திருப்பதிகளில் ஒன்றான திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் கடந்த 6-ந்தேதி நடந்தது. அதன்பின்னர் கோவிலில் சாமியை தரிசனம் செய்ய பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. குறிப்பாக சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. அதன்படி நேற்று கோவிலுக்கு பக்தர்கள் அதிக அளவில் வந்து இருந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை முதல் ஒற்றைக்கல் மண்டபத்தில் ஏறி சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு உள்ளதால், பக்தர்கள் மிகுந்த உற்சாகத்துடன் சாமிகும்பிட வருகின்றனர்.
பூஜைகள், பஞ்சவாத்தியம், நாதஸ்வரம், தவில் இல்லாமல் நடக்கிறது. எனவே இசைக்கலைஞர்களை உடனே நியமிக்க அறநிலையத்துறை முன்வரவேண்டும் என்பது பக்தர்களின் கோரிக்கையாக உள்ளது.
- இந்த கோவிலில் கடந்த 6-ந்தேதி கும்பாபிஷேகம் நடந்தது.
- 7 ஆண்டுக்கு பின்னர் ஒற்றைக்கல் மண்டபத்தில் ஏறி பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் புனரமைப்பு பணிகளுக்காக 7 ஆண்டுக்கு முன்பு கருவறையில் இருந்த அர்ச்சனா மூர்த்தி விக்கிரகங்கள் பாலாலயத்திற்கு மாற்றப்பட்டது. அதன்பின்னர் கருவறையில் பாம்பணை மீது பள்ளி கொண்டு அருள்பாலிக்கும் ஆதிகேசவ பெருமாளை ஒற்றைக்கல் மண்டபத்தில் ஏறி தரிசிக்கும் வாய்ப்பு பக்தர்களுக்கு இல்லாமல் போனது.
கடந்த 6-ந்தேதி கும்பாபிஷேகம் நடந்தது. அதன் பின்னர் ஒற்றைக்கல் மண்டபத்தில் இருந்து சாமியை தரிசிக்க பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அனுமதிக்கப்படவில்லை. இதுபற்றிய செய்தி, 'தினத்தந்தி'-யில் வெளியிடப்பட்டது. அதைத்தொடர்ந்து ஒற்றைக்கல் மண்டபத்தில் நின்று சாமியை பக்தர்கள் தரிசனம் செய்ய பாதுகாப்பு கம்பிகள் இணைக்கும் பணி நேற்று முன் தினம் முடிந்தது.
அதைத்தொடர்ந்து நேற்று காலை முதல் ஒற்றைக்கல் மண்டபத்தில் ஏறி பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். காலை 9.30 மணியில் இருந்து 11.30 மணி வரையும், மாலை 6.30 மணிக்கு சிறப்பு தீபாராதனைக்குப் பின்னர் 8.30 மணி வரையும் பக்தர்கள் சாமியை தரிசிக்க அனுமதிக்கப்பட்டனர்.
7 ஆண்டுக்கு பின்னர் ஒற்றைக்கல் மண்டபத்தில் ஏறி சாமி தரிசனம் செய்த பக்தர்கள் பரவசத்துடன் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என தெரிவித்தனர்.