search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    திருவட்டார் கோவில் கிழக்கு வாசலில் ஆபத்தான கல்மண்டபம்: பழமை மாறாமல் சீரமைக்க கோரிக்கை

    • இந்த கல்மண்டபம் பராமரிப்பின்றி புதர்மண்டி காணப்படுகிறது.
    • இப்போ விழுமோ, எப்ப விழுமோ என பரிதாபத்துடன் காட்சி அளிக்கிறது.

    108 வைணவ தலங்களில் ஒன்றான திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 6-ந் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. இதனை தொடர்ந்து நாள்தோறும் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    இத்தகைய சிறப்புமிக்க கோவிலின் கிழக்கு நடையில் இருந்து ஆற்றுக்கு செல்லும் பாதையில் கல்மண்டபம் உள்ளது. இந்த கல்மண்டபம் வழியாக அர்ச்சகர்கள், பக்தர்கள் ஆற்றுக்குள் இறங்கி நீராடி விட்டு கோவிலுக்கு வருவது வழக்கம்.

    ஆனால் இந்த கல்மண்டபம் பராமரிப்பின்றி புதர்மண்டி காணப்படுகிறது. மேலும் இடிந்த நிலையில் இப்போ விழுமோ, எப்ப விழுமோ என பரிதாபத்துடன் காட்சி அளிக்கிறது.

    எனவே இந்த ஆபத்தான கல்மண்டபம் வழியாக ஆற்றுக்கு குளிக்கச் செல்லும் அர்ச்சகர்கள் அச்சத்துடனேயே சென்று வருகின்றனர்.

    எனவே புராதன நகரான திருவட்டாரில் ஆபத்தான நிலையில் உள்ள இந்த கல்மண்டபத்தை பழமை மாறாமல் பராமரித்து சீரமைக்க வேண்டும் என திருவட்டார் அன்னபூர்ணா சேவா டிரஸ்ட் தலைவர் டாக்டர் சந்திரமோகன் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவுக்கு கோரிகை மனு அனுப்பியுள்ளார்.

    Next Story
    ×