search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எரிவாயு சிலிண்டர்"

    • நிதிச்சுமையில் உள்ள லட்சக்கணக்கான பெண்கள் பெரும் பயனடைவார்கள்.
    • மத்திய அரசு மகளிர் முன்னேற்றத்தில் அக்கறை கொண்ட அரசாக செயல்படுவதை வெளிப்படுத்துகிறது.

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    பிரதமர் நரேந்திர மோடி மகளிர் தினத்தை ஒட்டி வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையைக் குறைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது, பாராட்டுக்குரியது. குறிப்பாக மத்திய அரசு மகளிர் தினத்தில் வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் ரூ. 100 குறைத்திருப்பதால் நிதிச்சுமையில் உள்ள லட்சக்கணக்கான பெண்கள் பெரும் பயனடைவார்கள். மேலும் பிரதமரின் உஜ்வாலா இலவச சமையல் எரிவாயு சிலிண்டர் திட்ட பயனாளிகளுக்கு 2024-25-ம் நிதியாண்டில் சிலிண்டர்களுக்கான மானியத் தொகை ரூ.300 - ஐ தொடர்ந்து வழங்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

    இதன் மூலம் 2024 –ம் ஆண்டில் 10.27 கோடிக்கும் அதிகமானோர் பிரதமரின் இலவச சமையல் எரிவாயு சிலிண்டர் திட்டத்தினால் பெரும் பயனடைவார்கள். பிரதமர் மகளிர் தினத்தை ஒட்டி மகளிர் நலன் பெற வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் சம்பந்தமான அறிவிப்பை வெளியிட்டிருப்பது மத்திய அரசு மகளிர் முன்னேற்றத்தில் அக்கறை கொண்ட அரசாக செயல்படுவதை வெளிப்படுத்துகிறது. எனவே பிரதமருக்கும், மத்திய அரசுக்கும் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மாவட்ட வழங்கல் அலுவலர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார்.
    • சிலிண்டர் டெலிவரி கட்டணம் செலுத்த வேண்டியதில்லை என்பது கூட பலருக்கு தெரிவதில்லை.

    திருப்பூர்

    கியாஸ் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம் திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. மாவட்ட வழங்கல் அலுவலர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். எண்ணெய் நிறுவன பிரதிநிதிகள் பங்கேற்றனர். கியாஸ் நுகர்வோர், நுகர்வோர் அமைப்பினர் மனுக்கள் வழங்கினர்.

    அனைத்து பொது தொழிலாளர் நல அமைப்பின் பொதுச் செயலாளர் சரவணன் அளித்த மனுவில், திருப்பூர் மாவட்டத்தில், கியாஸ் சிலிண்டருக்கு 50 ரூபாய் கூடுதல் தொகையை நுகர்வோரிடமிருந்து டெலிவரி மேன்கள் கட்டாய வசூல் செய்கின்றனர்.

    ஏற்கனவே சிலிண்டர் விலை உயர்ந்துள்ள நிலையில், பில் தொகையை விட கூடுதல் தொகை வசூலிப்பது பொதுமக்களுக்கு சுமையை ஏற்படுத்துகிறது.சிலிண்டர் டெலிவரி கட்டணம் செலுத்த வேண்டியதில்லை என்பது கூட பலருக்கு தெரிவதில்லை. சிலிண்டர் கட்டணம் குறித்து நுகர்வோர் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    கியாஸ் கட்டணம் தொடர்பான புகார்களை தெரிவிக்க மாவட்ட அளவில் தனி உதவிமையம் அமைத்து தொடர்பு எண் வழங்க வேண்டும் என கூறியுள்ளார்.

    • வட்ட அளவிலான எரிவாயு சிலிண்டர் விநியோகம் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது.
    • குறைகளும் நிவர்த்தி செய்து நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை வட்ட அளவிலான எரிவாயு சிலிண்டர் விநியோகம் குறித்த ஆய்வு கூட்டம் திருத்துறைப்பூண்டி வட்ட வழங்கல் அலுவலகத்தில் நடைப்பெற்றது.

    மாவட்ட வழங்கல் அலுவலர் கீதா தலைமை வகித்தார்.

    வட்ட வழங்கல் அலுவலர்கள் திருத்துறைப்பூண்டி அலெக்ஸாண்டர், முத்துப்பேட்டை வசுமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் எரிவாயு விநியோக குறைபாடுகள் குறித்தும், புதிய சிலிண்டர்கள் பெறும் வழிமுறைகளை எளிதாக்குவது, மண்ணெண்ணை, சமையல் ஆயில், ரேஷன் பொருட்கள் விநியோகம், அங்காடி செயல்பாடு, குறித்தும் ஆலோசித்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டது,

    அனைத்து குறைகளும் நிவர்த்தி செய்து நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது.

    இதில் பாலம் சேவை நிறுவன செயலாளர் செந்தில்குமார், நாச்சிகுளம் நுகர்வோர் குழு தலைவர் பொன்வேம்பையன், செயலாளர் பாசில் அகமது மற்றும் எரிவாயு முகவர்கள் கலந்துக் கொண்டனர்.

    வருவாய் ஆய்வாளர் சேக்தாவூது நன்றி கூறினார்.

    • வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் கியாஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் இல்லை.
    • வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் கடந்த சில மாதங்களாக குறைத்து வந்தன.

    சென்னை:

    சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெயின் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் ஆகியவற்றின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன.

    இதில், பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை தினந்தோறும் என்ற அடிப்படையிலும், சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை மாதத்தில் முதல் தேதி அல்லது மாதத்துக்கு 2 முறை என்ற அடிப்படையிலும் நிர்ணயிக்கப்படுகிறது. இதன்படி, கடந்த 3 மாதங்களாக வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. இந்த சூழலில் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் கடந்த சில மாதங்களாக குறைத்து வந்தன.

    இந்நிலையில் ஏப்ரல் 1-ஆம் தேதி 2192.50 ஆக இருந்த வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டர் 2021.50 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இதன்படி சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டர் விலை ரூ,171 குறைக்கப்பட்டுள்ளது.

    வீடுகளில் பயன்படுத்தப்படும் 14.2 கிலோ எடைகொண்ட சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்த்தப்படவில்லை. இதன்படி வீடுகளில் பயன்படுத்தப்படும் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.1,118.50 ஆக தொடர்கிறது.

    • கடந்த இரண்டு வருடங்களாக சமையல் எரிவாயுவின் விலை உயர்ந்து, மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
    • சர்வதேச சந்தையில் விலை குறைந்துள்ள நிலையில் ஏன் விலை குறைக்கப்படவில்லை? என எதிர்க்கட்சிகள் கேள்வி.

    புதுடெல்லி:

    ஆங்கில புத்தாண்டின் முதல் நாளான இன்று, வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை 25 ரூபாய்  உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் சிலிண்டர் விலை ரூ.25.50 அதிகரித்து 1,917 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. டெல்லியில் ரூ.1768, மும்பையில் ரூ.1721, கொல்கத்தாவில் ரூ.1870 என விற்பனை ஆகிறது. இந்த விலை உயர்வால், உணவகங்கள் பாதிக்கப்படும். உணவுகளின் விலையும் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த விலை உயர்வுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

    'புத்தாண்டின் முதல் பரிசாக, வணிக பயன்பாட்டு சமையல் எரிவாயு சிலிண்டர் விலை இப்போது 25 ரூபாய் உயர்ந்துள்ளது. இது வெறும் ஆரம்பம் தான்' என காங்கிரஸ் கட்சி டுவிட்டரில் பதிவிட்டுள்ளது.

    கடந்த இரண்டு வருடங்களாக சமையல் எரிவாயுவின் விலை உயர்ந்து, மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

    பாஜக ஆட்சிக்கு வந்த 2014-ம் ஆண்டு முதல் வீட்டு உபயோக சிலிண்டர் 410 ரூபாயில் இருந்து 1000 ரூபாய்க்கு மேல் உயர்ந்துள்ளது. எரிபொருள் விலையில் ஏற்பட்ட இந்த தொடர் உயர்வால், அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்தது.

    எரிபொருள் விலை உயர்வு குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்புகின்றன. ஆனால் கச்சா எண்ணெய்யின் சர்வதேச விலைகளை அரசாங்கம் சுட்டிக்காட்டியது. ஆனால், சர்வதேச சந்தையில் விலை குறைந்துள்ள நிலையில் தற்போது ஏன் விலை குறைக்கப்படவில்லை? என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.

    ×