search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விலை குறைப்பு"

    • டாப் எண்ட் வேரியண்டில் மட்டுமே கிடைக்கும்.
    • காரில் வேறு எந்த மாற்றமும் இல்லை.

    ஸ்கோடா நிறுவனம் தனது கோடியக் எஸ்.யு.வி.-இன் வேரியன்ட்களை மாற்றியுள்ளது. முன்னதாக மூன்று வேரியண்ட்களில் விற்பனை செய்யப்பட்டு வந்த கோடியக் தற்போது டாப் எண்ட் வேரியண்டில் மட்டுமே கிடைக்கும். மேலும், இதன் அம்சங்களும் மாற்றப்பட்டுள்ளன.

    ஸ்கோடா கோடியக் L&K வேரியண்ட் ரூ. 41 லட்சத்து 99 ஆயிரம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இதன் விலை தற்போது ரூ. 2 லட்சம் குறைக்கப்பட்டு ரூ. 39 லட்சத்து 99 ஆயிரம் என மாற்றப்பட்டு இருக்கிறது. விலை, வேரியண்ட் மாற்றப்பட்டது தவிர காரில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

     


    கோடியக் மாடலில் 190 ஹெச்.பி. பவர், 320 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் 2.0 லிட்டர், நான்கு சிலிண்டர்கள் கொண்ட டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜினுடன் 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் மற்றும் 4-வீல் டிரைவ் போன்ற வசதிகள் வழங்கப்படுகின்றன.

    இந்திய சந்தையில் ஸ்கோடா நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் எஸ்.யு.வி. மாடலாக கோடியக் விற்பனை செய்யப்படுகிறது. இந்த மாடல் டொயோட்டா பார்ச்சூனர், ஜீப் மெரிடியன், ஹூண்டாய் டக்சன் மற்றும் எம்.ஜி. குளோஸ்டர் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

    • நிதிச்சுமையில் உள்ள லட்சக்கணக்கான பெண்கள் பெரும் பயனடைவார்கள்.
    • மத்திய அரசு மகளிர் முன்னேற்றத்தில் அக்கறை கொண்ட அரசாக செயல்படுவதை வெளிப்படுத்துகிறது.

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    பிரதமர் நரேந்திர மோடி மகளிர் தினத்தை ஒட்டி வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையைக் குறைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது, பாராட்டுக்குரியது. குறிப்பாக மத்திய அரசு மகளிர் தினத்தில் வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் ரூ. 100 குறைத்திருப்பதால் நிதிச்சுமையில் உள்ள லட்சக்கணக்கான பெண்கள் பெரும் பயனடைவார்கள். மேலும் பிரதமரின் உஜ்வாலா இலவச சமையல் எரிவாயு சிலிண்டர் திட்ட பயனாளிகளுக்கு 2024-25-ம் நிதியாண்டில் சிலிண்டர்களுக்கான மானியத் தொகை ரூ.300 - ஐ தொடர்ந்து வழங்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

    இதன் மூலம் 2024 –ம் ஆண்டில் 10.27 கோடிக்கும் அதிகமானோர் பிரதமரின் இலவச சமையல் எரிவாயு சிலிண்டர் திட்டத்தினால் பெரும் பயனடைவார்கள். பிரதமர் மகளிர் தினத்தை ஒட்டி மகளிர் நலன் பெற வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் சம்பந்தமான அறிவிப்பை வெளியிட்டிருப்பது மத்திய அரசு மகளிர் முன்னேற்றத்தில் அக்கறை கொண்ட அரசாக செயல்படுவதை வெளிப்படுத்துகிறது. எனவே பிரதமருக்கும், மத்திய அரசுக்கும் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • கேலக்ஸி S23 அல்ட்ரா ஸ்மார்ட்போன் மூன்றுவித நிறங்களில் கிடைக்கிறது.
    • கேலக்ஸி S23 அல்ட்ரா மாடலுக்கு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி S23 அல்ட்ரா ஸ்மார்ட்போனிற்கு அமேசான் வலைதளத்தில் அசத்தல் விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு தான் கேலக்ஸி S24 அல்ட்ரா ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட கேலக்ஸி S23 அல்ட்ரா மாடலுக்கு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

    குவால்காம் ஸ்னப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர் கொண்டிருக்கும் கேலக்ஸி S23 அல்ட்ரா மாடலின் 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 1 லட்சத்து 24 ஆயிரத்து 990-க்கும் 12 ஜி.பி. ரேம், 512 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 1 லட்சத்து 34 ஆயிரத்து 999-க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது அமேசான் வலைதளத்தில் இந்த ஸ்மார்ட்போனின் விலை முறையே ரூ. 1 லட்சத்து 09 ஆயிரத்து 999 மற்றும் ரூ. 1 லட்சத்து 19 ஆயிரத்து 999 என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

     


    இத்துடன் ஹெச்.டி.எஃப்.சி. வங்கி கார்டு பயன்படுத்தும் போது ரூ. 10 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதை சேர்க்கும் போது ஸ்மார்ட்போனின் விலை ரூ. 99 ஆயிரத்து 999 மற்றும் ரூ. 1 லட்சத்து 09 ஆயிரத்து 999 என்று மாறிவிடும். இந்திய சந்தையில் கேலக்ஸி S23 அல்ட்ரா ஸ்மார்ட்போன் கிரீன், ஃபேண்டம் பிளாக் மற்றும் கிரீம் என மூன்றுவித நிறங்களில் கிடைக்கிறது.

    அம்சங்களை பொருத்தவரை கேலக்ஸி S23 அல்ட்ரா ஸ்மார்ட்போன் 6.8 இன்ச் QHD+ டைனமிக் AMOLED 2X டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 பாதுகாப்பு, குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராஸர், அட்ரினோ GPU, ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ஒன் யு.ஐ. 5.1 வழங்கப்பட்டுள்ளது.

    புகைப்படங்களை எடுக்க 200MP பிரைமரி கேமரா, 12MP அல்ட்ரா வைடு கேமரா, 10MP டெலிபோட்டோ லென்ஸ், 12MP செல்ஃபி கேமரா உள்ளது. இத்துடன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 45 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, வயர்லெஸ் பவர்ஷேர், ஃபாஸ்ட் வயர்லெஸ் சார்ஜிங் 2.0 வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

    • கேலக்ஸி A சீரிஸ் மாடலுக்கு திடீர் விலை குறைப்பு அறிவிக்கப்பட்டது.
    • இந்த ஸ்மார்ட்போன் மூன்று நிறங்களில் கிடைக்கிறது.

    சாம்சங் நிறுவனத்தின் பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன் மாடல் விலை இந்திய சந்தயில் குறைக்கப்பட்டு இருக்கிறது. இந்தியாவில் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட கேலக்ஸி A05s ஸ்மார்ட்போனிற்கு விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கேலக்ஸி A சீரிஸ் மாடலின் விலை ரூ. 2 ஆயிரம் குறைக்கப்பட்டு இருக்கிறது.

    கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட போது கேலக்ஸி A05s மாடலின் விலை ரூ. 14 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. தற்போது விலை குறைப்பின் படி கேலக்ஸி A05s விலை ரூ. 12 ஆயிரத்து 999 என மாறி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் பிளாக், லைட் கிரீன் மற்றும் லைட் வைலட் என மூன்றுவித நிறங்களில் கிடைக்கிறது.

     


    கேலக்ஸி A05s அம்சங்கள்:

    சாம்சங் கேலக்ஸி A05s மாடலில் 6.7 இன்ச் FHD+ டிஸ்ப்ளே, 1080x2400 பிக்சல் ரெசல்யூஷன், ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி, ஆண்ட்ராய்டு 13 ஒ.எஸ். வழங்கப்படுகிறது.

    புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 2MP டெப்த் சென்சார், 2MP மேக்ரோ கேமரா, 13MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது. இதன் பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.

    • விவோ Y சீரிஸ், T சீரிஸ் மாடல்களின் விலை குறைப்பு.
    • விலை குறைப்பு ஏற்கனவே அமலுக்கு வந்துவிட்டது.

    விவோ நிறுவனம் தனது ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு விலை குறைப்பு அறிவித்து இருக்கிறது. இத்துடன் விவோ Y200 5ஜி ஸ்மார்ட்போனின் புதிய வேரியன்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மற்றும் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி என இரண்டு வேரியண்ட்களில் மட்டும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

    இதுதவிர விவோ Y27 மற்றும் விவோ T2 5ஜி ஸ்மார்ட்போன்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது. விவோ Y200 5ஜி மாடலின் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் தற்போது ரூ. 23 ஆயிரத்து 999 என்றும் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 21 ஆயிரத்து 999 என்றும் மாறி இருக்கிறது. விலை குறைப்பு அமேசான், ப்ளிப்கார்ட், விவோ இந்தியா இ ஸ்டோர் மற்றும் ரீடெயில் ஸ்டோர்களில் அமலுக்கு வந்துள்ளது.

     


    விவோ Y27 ஸ்மார்ட்போனின் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 11 ஆயிரத்து 999 என மாறி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் முன்னதாக ரூ. 14 ஆயிரத்து 999 விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இத்துடன் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 1000 வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

    வாடிக்கையாளர்கள் விவோ Y200 5ஜி மாடலை எளிய மாத தவணை முறை வசதியுடன் வாங்கிட முடியும். இத்துடன் எஸ்.பி.ஐ., ஐ.டி.எஃப்.சி. ஃபர்ஸ்ட், பேங்க் ஆஃப் பரோடா, டி.பி.எஸ். வங்கி, ஃபெடரல் வங்கி மற்றும் இண்டஸ்இண்ட் வங்கி வாடிக்கையாளர்கள் ரூ. 2 ஆயிரம் வரை கேஷ்பேக் பெற முடியும். விவோ ஸ்மார்ட்போன்களின் புதிய விலை ஏற்கனவே அமலுக்கு வந்துவிட்டது.

    • கியூ.ஜெ. பைக்குகளுக்கு அசத்தல் விலை குறைப்பு அறிவிப்பு.
    • அதிகபட்ச சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    கியூ.ஜெ. மோட்டார் நிறுவனம் தனது மோட்டார்சைக்கிள் மாடல்கள் விலையை இந்தியாவில் குறைத்து இருக்கிறது. அதன்படி கியூ.ஜெ. மாடல்கள் விலை ரூ. 40 ஆயிரம் வரை குறைந்திருக்கிறது.

    விலை குறைப்பை தொடர்ந்து கியூ.ஜெ. SRC 500 மற்றும் SRV 300 மாடல்களின் விலை முறையே ரூ. 2 லட்சத்து 39 ஆயிரம் மற்றும் ரூ. 3 லட்சத்து 19 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது முந்தைய விலையை விட ரூ. 40 ஆயிரம் குறைவு ஆகும்.

    கியூ.ஜெ. SRC 250 விலை ரூ. 1 லட்சத்து 39 ஆயிரம் என மாறி இருக்கிறது. இது முந்தைய விலையை விட ரூ. 31 ஆயிரம் குறைவு ஆகும். இந்த விலை குறைப்பு ஜனவரி 8-ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. விலை குறைப்பின் மூலம் கியூ.ஜெ. மாடல்களின் விற்பனை அதிகரிக்கும் என அந்நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

     


    கியூ.ஜெ. SRC 250 மாடலில் ரெட்ரோ டிசைன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட வட்ட வடிவ லைட்கள் மற்றும் கண்ணாடிகள் உள்ளன. இத்துடன் டியர் டிராப் ஃபியூவல் டேன்க், வயர் ஸ்போக் வீல் வழங்கப்படுகிறது. இந்த மாடலில் 249சிசி, இன் லைன் டுவின் சிலிண்டர் லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்த என்ஜின் 17.1 ஹெச்.பி. பவர், 17 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. பிரேக்கிங்கிற்கு டிஸ்க் பிரேக் வழங்கப்படுகிறது. கியூ.ஜெ. SRC 500 மாடலில் டூயல் சேனல் ஏ.பி.எஸ். வழங்கப்படுகிறது. 

    • மாடலுக்கு அதிரடி விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
    • இந்த ஸ்மார்ட்போன் கடந்த பிப்ரவரி மாதம் அறிமுகம் செய்யப்பட்டது.

    ஐகூ நிறுவனம் தனது ஐகூ நியோ 9 ப்ரோ ஸ்மார்ட்போனினை அடுத்த மாதம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய ஸ்மார்ட்போன் வெளியீட்டையொட்டி ஐகூ நிறுவனம் தனது ஐகூ நியோ 7 5ஜி ஸ்மார்ட்போனின் 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடலுக்கு அதிரடி விலை குறைப்பை அறிவித்து இருக்கிறது.

    கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், ஐகூ நியோ 7 5ஜி ஏராளமான அசத்தல் அம்சங்களை கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 31 ஆயிரத்து 999-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போதைய விலை குறைப்பை அடுத்து இந்த ஸ்மார்ட்போன் ரூ. 27 ஆயிரத்து 999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

     

    அம்சங்களை பொருத்தவரை ஐகூ நியோ 7 5ஜி மாடலில் 6.78 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, FHD+ ரெசல்யூஷன், 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், 1300 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வழங்கப்படுகிறது. இத்துடன் மீடியாடெக் டிமென்சிட்டி 8200 பிராசஸர், 64MP பிரைமரி கேமரா, 2MP மேக்ரோ லென்ஸ், 2MP டெப்த் சென்சார், 16MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.

    ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ஃபன்டச் ஒ.எஸ். 13 கொண்டிருக்கும் ஐகூ நியோ 7 5ஜி விரைவில் ஆண்ட்ராய்டு 14 அப்டேட் பெற இருக்கிறது. இதைத் தொடர்ந்து ஆண்ட்ராய்டு 15 அப்டேட்-ம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 120 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது.

    • விவோ நிறுவன Y சீரிஸ் மாடல்களுக்கு சிறப்பு சலுகைகள்.
    • விவோ ஸ்மார்ட்போன்களின் விலை குறைப்பு.

    விவோ நிறுவனம் தனது ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு அசத்தல் விலை குறைப்பு அறிவித்து இருக்கிறது. அந்த வகையில், விவோ Y16, விவோ Y17s, விவோ Y02t, விவோ Y02, விவோ Y27 மற்றும் விவோ YY17s போன்ற மாடல்களின் விலை குறைக்கப்பட்டு இருக்கிறது.

    தற்போதைய விலை குறைப்பு காரணமாக இந்த ஸ்மார்ட்போன்களின் விலை ரூ. 1000 குறைந்திருக்கிறது. விலை குறைப்பு ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் அமலுக்கு வந்துள்ளது.


    புதிய விலை விவரங்கள்:

    விவோ Y16 (4ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி) ரூ. 9 ஆயிரத்து 999

    விவோ Y17s (4ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி) ரூ. 11 ஆயிரத்து 499

    விவோ Y17s (4ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி) ரூ. 10 ஆயிரத்து 499

    விவோ Y27 (6ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி) ரூ. 12 ஆயிரத்து 999

    விவோ Y02 (3ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி) ரூ. 7 ஆயிரத்து 999

    விவோ Y02t ரூ. 8 ஆயிரத்து 499

    விலை குறைப்பு மட்டுமின்றி இந்த ஸ்மார்ட்போன்களை வாங்குவோருக்கு வட்டியில்லா மாத தவணை முறை வசதி வழங்கப்படுகிறது. இத்துடன் எஸ்.பி.ஐ., டி.பி.எஸ்., ஐ.டி.எஃப்.சி., ஒன் கார்டு, இண்டஸ்இண்ட் மற்றும் எஸ் வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 1000 வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

    • கியா செல்டோஸ் மாடல் 11 நிறங்களில் கிடைக்கிறது.
    • செல்டோஸ் மாடல் மூன்றுவித என்ஜின் ஆப்ஷன்களை கொண்டுள்ளது.

    கியா இந்தியா நிறுவனம் தனது செல்டோஸ் காரின் தேர்வு செய்யப்பட்ட வேரியண்ட்களுக்கு விலை குறைப்பை அறிவித்து இருக்கிறது. அதன்படி செல்டோஸ் காருக்கு முதல்முறையாக விலை மாற்றம் செய்யப்படுகிறது. செல்டோஸ் மிட்-சைஸ் எஸ்.யு.வி.-யின் விலை குறைப்பு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.

    கியா செல்டோஸ் 1.5 பெட்ரோல் MT HTX, 1.5 டர்போ பெட்ரோல் iMT HTX+, 1.5 டர்போ பெட்ரோல் DCT GTX+ (S), 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் DCT GTX+, 1.5 லிட்டர் டீசல் iMT HTX+, மற்றும் 1.5 லிட்டர் டீசல் AT GTX+ (S) போன்ற வேரியண்ட்களின் விலையில் ரூ. 2 ஆயிரம் குறைக்கப்பட்டு இருக்கிறது. மற்ற வேரியண்ட்களின் விலையில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

    இந்திய சந்தையில் கியா செல்டோஸ் மாடல் 1.5 லிட்டர் NA பெட்ரோல் மோட்டார், 1.5 லிட்டர் டீசல் மற்றும் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என மூன்றுவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இத்துடன் 11 நிறங்கள் மற்றும் ஏழு வேரியண்ட்களில் கியா செல்டோஸ் மாடல் விற்பனை செய்யப்படுகிறது.

    இதன் விலை ரூ. 10 லட்சத்து 90 ஆயிரம் என்று துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடலின் விலை ரூ. 20 லட்சத்து 30 ஆயிரம் ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    • வங்கி சேவையை பயன்படுத்தும் போது ரூ. 10 ஆயிரம் வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது.
    • அதிகபட்சம் 24 மாதங்கள் வரை வட்டியில்லா மாத தவணை முறை சலுகை வழங்கப்படுகிறது.

    சீனாவை சேர்ந்த ஸ்மார்ட்போன் உற்பத்தியாளரான விவோ இந்திய சந்தையில் தனது விவோ X90 ப்ரோ ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனினை கடந்த ஏப்ரல் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது இதன் விலை ரூ. 85 ஆயிரம் என்று நிர்ணம் செய்யப்பட்டு இருந்தது. தற்போது இந்த ஸ்மார்ட்போனின் விலை குறைக்கப்பட்டு இருக்கிறது.

    விலை குறைப்பின் படி விவோ X90 ப்ரோ ஸ்மார்ட்போனின் 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 74 ஆயிரத்து 999 என்று மாறி இருக்கிறது. விலை குறைப்பு தவிர தேர்வு செய்யப்பட்ட வங்கி சேவையை பயன்படுத்தும் போது ரூ. 10 ஆயிரம் வரை கேஷ்பேக் அல்லது அதிகபட்சம் 24 மாதங்கள் வரை வட்டியில்லா மாத தவணை முறை சலுகை வழங்கப்படுகிறது.

     

    கேஷிஃபை சேவையை பயன்படுத்தும் போது ரூ. 8 ஆயிரம் வரையிலான எக்சேன்ஜ் போனஸ் வழங்கப்படுகிறது. விவோ வி ஷீல்டு பாதுகாப்பு திட்டங்களை பயன்படுத்தும் போது 40 சதவீதம் வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது. பயனர்கள் விவோ X90 ப்ரோ மாடலை ப்ளிப்கார்ட், விவோ அதிகாரப்பூர்வ ஸ்டோர் மற்றும் ரிடெயில் ஸ்டோர்களில் புதிய விலையில் வாங்கிட முடியும்.

     

    விவோ X90 ப்ரோ அம்சங்கள்:

    6.78 இன்ச் 2800x1260 பிக்சல் FHD+ BOE Q9 OLED HDR10+ 120Hz ரிப்ரெஷ் ரேட் டிஸ்ப்ளே

    ஆக்டா கோர் டிமென்சிட்டி 9200 பிராசஸர்

    இம்மோர்டலிஸ் G715 GPU

    12 ஜி.பி. ரேம்

    256 ஜி.பி. மெமரி

    ஆண்ட்ராய்டு 13 மற்றும் ஃபன்டச் ஒஎஸ் 13

    டூயல் சிம் ஸ்லாட்

    50MP பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், OIS

    12MP அல்ட்ரா வைடு கேமரா

    50MP 50mm போர்டிரெயிட் கேமரா

    32MP செல்ஃபி கேமரா

    இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்

    யு.எஸ்.பி. டைப் சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்

    5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.3

    யு.எஸ்.பி. டைப் சி

    4870 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    120 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

    • ஐபோன் 14 வெளியீட்டை தொடர்ந்து ஐபோன் 13 சீரிஸ் விலை குறைக்கப்பட்டது.
    • ஐபோன் 14 சீரிஸ் மாடல்களின் விலை ரூ. 10 ஆயிரம் வரை குறைப்பு.

    ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 15 சீரிஸ் மாடல்களை சில தினங்களுக்கு முன்பு தான் அறிமுகம் செய்தது. புதிய ஐபோன்கள் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது ஐபோன் 14, ஐபோன் 14 பிளஸ் மற்றும் ஐபோன் 13 போன்ற மாடல்களின் விலை குறைக்கப்பட்டு இருக்கிறது. முன்னதாக ஐபோன் 14 வெளியீட்டை தொடர்ந்து ஐபோன் 13 சீரிஸ் விலை குறைக்கப்பட்டது.

    கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், ஐபோன் 14 மற்றும் ஐபோன் 14 பிளஸ் மாடல்களின் விலையை ஆப்பிள் நிறுவனம் முதல் முறையாக குறைத்து இருக்கிறது. ஐபோன் 13 மற்றும் ஐபோன் 14 சீரிஸ் மாடல்களின் விலை ரூ. 10 ஆயிரம் வரை குறைக்கப்பட்டு உள்ளது. விலை குறைப்பு ஐபோன்களின் 128 ஜி.பி., 256 ஜி.பி. மற்றும் 512 ஜி.பி. மாடல்களுக்கு பொருந்தும்.

     

    புதிய விலை விவரங்கள்:

    ஐபோன் 13 (128 ஜி.பி.) விலை ரூ. 59 ஆயிரத்து 900

    ஐபோன் 13 (256 ஜி.பி.) விலை ரூ. 69 ஆயிரத்து 900

    ஐபோன் 13 (512 ஜி.பி.) விலை ரூ. 89 ஆயிரத்து 900

    ஐபோன் 14 (128 ஜி.பி.) விலை ரூ. 69 ஆயிரத்து 900

    ஐபோன் 14 (256 ஜி.பி.) விலை ரூ. 79 ஆயிரத்து 900

    ஐபோன் 14 (512 ஜி.பி.) விலை ரூ. 99 ஆயிரத்து 900

    ஐபோன் 14 பிளஸ் (128 ஜி.பி.) விலை ரூ. 79 ஆயிரத்து 900

    ஐபோன் 14 பிளஸ் (256 ஜி.பி.) விலை ரூ. 89 ஆயிரத்து 900

    ஐபோன் 14 பிளஸ் (512 ஜி.பி.) விலை ரூ. 1 லட்சத்து 09 ஆயிரத்து 900

    மேலே குறிப்பிடப்பட்டு இருக்கும் ஐபோன்களின் விலை அதன் முந்தைய விலையை விட ரூ. 10 ஆயிரம் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விலை ஆப்பிள் அதிகாரப்பூர்வ ஸ்டோர் மற்றும் ஆன்லைன் வலைதளத்துக்கானது ஆகும். எனினும், மூன்றாம் தரப்பு விற்பனையாளர்கள் ஐபோன் மாடல்களை இதைவிட குறைந்த விலையில் விற்பனை செய்து வருகின்றனர். இதுதவிர ஆன்லைன் வலைத்தளங்களில் சிறப்பு விற்பனையின் போது கூடுதல் தள்ளுபடி மற்றும் விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு வருகின்றன.

    • தமிழ்நாடு அரசு தேர்தல் வாக்குறுதியில் கூறியிருந்தபடி சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.100 மானியத்தை உடனே வழங்கவேண்டும்.
    • தேர்தல் சமயத்தில் சிலிண்டர் விலை குறைப்போம் என்று வாக்குறுதி கொடுக்காத மத்திய அரசு சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.200 விலையை குறைத்து அறிவித்திருப்பது பெரும் மகிழ்ச்சியளிக்கிறது.

    சென்னை:

    பெருந்தலைவர் மக்கள் கட்சித்தலைவர் என்.ஆர்.தனபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசு தேர்தல் வாக்குறுதியில் கூறியிருந்தபடி சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.100 மானியத்தை உடனே வழங்கவேண்டும். அப்படி வழங்கும்பட்சத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து சமையல் எரிவாயு பயன்படுத்தும் லட்சக்கணக்கான குடும்பங்களும் கூடுதல் மகிழ்ச்சியடைவார்கள். ஆனால் தேர்தல் சமயத்தில் சிலிண்டர் விலை குறைப்போம் என்று வாக்குறுதி கொடுக்காத மத்திய அரசு சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.200 விலையை குறைத்து அறிவித்திருப்பது பெரும் மகிழ்ச்சியளிக்கிறது.

    சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை குறைத்த மத்திய அரசுக்கு பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கி றேன்.

    இவ்வாறு என்.ஆர்.தனபாலன் கூறியுள்ளார்.

    ×