search icon
என் மலர்tooltip icon

    கார்

    செல்டோஸ் விலையில் திடீர் மாற்றம் செய்த கியா இந்தியா - ஏன் தெரியுமா?
    X

    செல்டோஸ் விலையில் திடீர் மாற்றம் செய்த கியா இந்தியா - ஏன் தெரியுமா?

    • கியா செல்டோஸ் மாடல் 11 நிறங்களில் கிடைக்கிறது.
    • செல்டோஸ் மாடல் மூன்றுவித என்ஜின் ஆப்ஷன்களை கொண்டுள்ளது.

    கியா இந்தியா நிறுவனம் தனது செல்டோஸ் காரின் தேர்வு செய்யப்பட்ட வேரியண்ட்களுக்கு விலை குறைப்பை அறிவித்து இருக்கிறது. அதன்படி செல்டோஸ் காருக்கு முதல்முறையாக விலை மாற்றம் செய்யப்படுகிறது. செல்டோஸ் மிட்-சைஸ் எஸ்.யு.வி.-யின் விலை குறைப்பு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.

    கியா செல்டோஸ் 1.5 பெட்ரோல் MT HTX, 1.5 டர்போ பெட்ரோல் iMT HTX+, 1.5 டர்போ பெட்ரோல் DCT GTX+ (S), 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் DCT GTX+, 1.5 லிட்டர் டீசல் iMT HTX+, மற்றும் 1.5 லிட்டர் டீசல் AT GTX+ (S) போன்ற வேரியண்ட்களின் விலையில் ரூ. 2 ஆயிரம் குறைக்கப்பட்டு இருக்கிறது. மற்ற வேரியண்ட்களின் விலையில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

    இந்திய சந்தையில் கியா செல்டோஸ் மாடல் 1.5 லிட்டர் NA பெட்ரோல் மோட்டார், 1.5 லிட்டர் டீசல் மற்றும் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என மூன்றுவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இத்துடன் 11 நிறங்கள் மற்றும் ஏழு வேரியண்ட்களில் கியா செல்டோஸ் மாடல் விற்பனை செய்யப்படுகிறது.

    இதன் விலை ரூ. 10 லட்சத்து 90 ஆயிரம் என்று துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடலின் விலை ரூ. 20 லட்சத்து 30 ஆயிரம் ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    Next Story
    ×