திருத்துறைப்பூண்டியில் எரிவாயு சிலிண்டர் ஆய்வு கூட்டம்

வட்ட அளவிலான எரிவாயு சிலிண்டர் விநியோகம் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது.குறைகளும் நிவர்த்தி செய்து நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது.
எரிவாயு சிலிண்டர் விநியோகம் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
எரிவாயு சிலிண்டர் விநியோகம் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
Published on

திருத்துறைப்பூண்டி:

திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை வட்ட அளவிலான எரிவாயு சிலிண்டர் விநியோகம் குறித்த ஆய்வு கூட்டம் திருத்துறைப்பூண்டி வட்ட வழங்கல் அலுவலகத்தில் நடைப்பெற்றது.

மாவட்ட வழங்கல் அலுவலர் கீதா தலைமை வகித்தார்.

வட்ட வழங்கல் அலுவலர்கள் திருத்துறைப்பூண்டி அலெக்ஸாண்டர், முத்துப்பேட்டை வசுமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் எரிவாயு விநியோக குறைபாடுகள் குறித்தும், புதிய சிலிண்டர்கள் பெறும் வழிமுறைகளை எளிதாக்குவது, மண்ணெண்ணை, சமையல் ஆயில், ரேஷன் பொருட்கள் விநியோகம், அங்காடி செயல்பாடு, குறித்தும் ஆலோசித்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டது,

அனைத்து குறைகளும் நிவர்த்தி செய்து நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது.

இதில் பாலம் சேவை நிறுவன செயலாளர் செந்தில்குமார், நாச்சிகுளம் நுகர்வோர் குழு தலைவர் பொன்வேம்பையன், செயலாளர் பாசில் அகமது மற்றும் எரிவாயு முகவர்கள் கலந்துக் கொண்டனர்.

வருவாய் ஆய்வாளர் சேக்தாவூது நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com