search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்"

    • டிராவிஸ் ஹெட், ஸ்டீவன் ஸ்மித்துடன் இணைந்து நன்றாக விளையாடியது எங்களை காக்க வைத்தது.
    • ரசிகர்கள் ஒவ்வொருவருக்கும் நான் நன்றி சொல்ல விரும்புகிறேன் என்றார் ரோகித் சர்மா.

    லண்டன்:

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் தோல்வி அடைந்த பிறகு கேப்டன் ரோகித் சர்மா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    மைதான சூழ்நிலையில், டாஸ் வென்று ஆஸ்திரேலியாவை முதலில் பேட்டிங் செய்ய வைத்தது எங்கள் சிறப்பான தொடக்கம் என நான் நினைத்தேன்.

    முதல் அமர்வில் நாங்கள் நன்றாகப் பந்துவீசினோம். டிராவிஸ் ஹெட் வந்து ஸ்டீவன் ஸ்மித்துடன் நன்றாக விளையாடினார். அதுதான் எங்களைக் கொஞ்சம் காக்க வைத்தது.

    திரும்பி வருவது எப்போதுமே கடினம் என்று எங்களுக்குத் தெரியும், ஆனால் நாங்கள் ஒரு நல்ல நிகழ்ச்சியை வெளிப்படுத்தினோம். இறுதிவரை போராடினோம்.

    அந்த நான்கு வருடங்களும் கடுமையாக உழைத்தோம். இரண்டு இறுதிப் போட்டிகளில் விளையாடுவது எங்களுக்கு ஒரு நல்ல சாதனை. ஆனால் நாங்களும் ஒரு மைல் முன்னால் செல்ல விரும்புகிறோம்.

    இங்கு வந்து கடந்த இரண்டு வருடங்களில் நாங்கள் செய்ததை நீங்கள் பெறமுடியாது. துரதிர்ஷ்டவசமாக இறுதிப் போட்டியில் எங்களால் வெற்றிபெற முடியவில்லை.

    ரசிகர்கள் ஒவ்வொருவருக்கும் நான் நன்றி சொல்ல விரும்புகிறேன். ஒவ்வொரு ரன்னுக்கும், ஒவ்வொரு விக்கெட்டுக்கும் ஆரவாரம் செய்தார்கள் என தெரிவித்தார்.

    • ஆஸ்திரேலியா 209 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை கைப்பற்றியது.
    • ஐசிசி நடத்தும் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

    லண்டன்:

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா அணி 469 ரன்கள் குவித்தது. தொடர்ந்து ஆடிய இந்தியா முதல் இன்னிங்சில் 296 ரன்களில் ஆல் அவுட்டானது.

    2வது இன்னிங்சில் ஆஸ்திரேலியா 8 விக்கெட்டுக்கு 270 ரன்களை எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. இதனால் இந்தியா வெற்றி பெற 444 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. நான்காம் நாள் முடிவில் இந்தியா 3 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் எடுத்திருந்தது.

    இந்நிலையில், ஐந்தாவது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. முன்னணி வீரர்கள் நிலைத்து நின்று ஆடவில்லை. இதனால் சீரான இடைவெளியில் இந்தியா விக்கெட்டுகளை இழந்தது.

    இறுதியில் இந்தியா 2-வது இன்னிங்சில் 234 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் ஆஸ்திரேலியா 209 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.

    இந்நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை கைப்பற்றியதன் மூலம் ஐசிசி நடத்தும் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் சாம்பியன் பட்டம் வென்ற முதல் அணி என்ற வரலாற்று சாதனையை ஆஸ்திரேலியா அணி படைத்துள்ளது.

    ஐசிசி 50 ஓவர் உலக கோப்பை, டி 20 உலக கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஆகிய சர்வதேச தொடர்களை நடத்தி வருகிறது. இந்த 4 விதமான தொடர்களிலும் சாம்பியன் பட்டம் வென்ற முதல் அணி என்ற சாதனையை ஆஸ்திரேலியா படைத்துள்ளது.

    • இந்தியா வெற்றி பெற 444 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.
    • 2வது இன்னிங்சில் இந்தியா 234 ரன்களில் ஆல் அவுட்டானது.

    லண்டன்:

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா அணி 469 ரன்கள் குவித்தது. தொடர்ந்து ஆடிய இந்தியா முதல் இன்னிங்சில் 296 ரன்களில் ஆல் அவுட்டானது.

    நேற்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 8 விக்கெட்டுக்கு 270 ரன்களை எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. இதனால் இந்தியா வெற்றி பெற 444 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. நான்காம் நாள் முடிவில் இந்தியா 3 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் எடுத்திருந்தது.

    இந்நிலையில், ஐந்தாவது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் விராட் கோலி 49 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய ஜடேஜா ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

    ஒரே ஓவரில் போலண்ட் இந்தியாவின் முக்கிய இரு வீரர்களை அவுட்டாக்கினார். அப்போது இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்திருந்தது.

    அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரகானே 46 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய ஷர்துல் தாக்குர் டக் அவுட்டானார். நிதானமாக ஆடிய ஸ்ரீகர் பரத் 23 ரன்னில் வெளியேறினார். உமேஷ் யாதவ் ஒரு ரன்னில் அவுட்டானார்.

    இறுதியில் இந்தியா 234 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் ஆஸ்திரேலியா 209 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.

    ஆஸ்திரேலியா சார்பில் நாதன் லயன் 4 விக்கெட்டும், போலண்ட் 3 விக்கெட்டும், ஸ்டார்க் விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • 4ம் நாள் முடிவில் இந்தியா 3 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் எடுத்திருந்தது.
    • 5ம் நாள் தொடக்கத்தில் இந்தியா அடுத்தடுத்து 2 விக்கெட்களை இழந்தது.

    லண்டன்:

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா அணி 469 ரன்கள் குவித்தது. தொடர்ந்து ஆடிய இந்தியா முதல் இன்னிங்சில் 296 ரன்களில் ஆல் அவுட்டானது.

    நேற்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 8 விக்கெட்டுக்கு 270 ரன்களை எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. இதனால் இந்தியா வெற்றி பெற 444 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. நான்காம் நாள் முடிவில் இந்தியா 3 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் எடுத்திருந்தது.

    இந்நிலையில், ஐந்தாவது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் விராட் கோலி 49 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய ஜடேஜா ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

    ஒரே ஓவரில் போலண்ட் இந்தியாவின் முக்கிய இரு வீரர்களை அவுட்டாக்கினார். அப்போது இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்திருந்தது.

    • இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் அவுட் சர்ச்சை ஆனது.
    • ரகானே - விராட் கோலி ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை சரிவில் இருந்து மீட்டது.

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சாம்பியன்ஷிப் பட்டத்தை வெல்வதற்காக இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. நான்காவது நாளான நேற்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 8 விக்கெட்டுக்கு 270 ரன்களை எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. இதனால் இந்தியா வெற்றி பெற 444 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

    இந்த கடின இலக்கை நோக்கி இந்திய அணி ஆடிவருகிறது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா, சுப்மன் கில் களமிறங்கினர். சுப்மன் கில் 18 ரன்கள் இருந்த போது அவுட் ஆனார். அவரது அவுட் சர்ச்சை ஆனது. ஸ்காட் போலன்ட் வீசிய பந்தை கில் தடுத்து ஆட முயற்சித்தபோது, எட்ஜாஜி தாழ்வாக சென்ற பந்தை கேமரூன் கிரீன் இடது கையால் பிடித்தபடி தரையில் விழுந்தார். அப்போது பந்தை பிடித்து இருந்த அவரது கை தரையில் உரசியது. இதனால் கில் வெளியேறாமல் நின்றார். உடனடியாக கள நடுவர்கள் 3-வது நடுவரிடம் அப்பீல் செய்தனர். வீடியோ பதிவை பல்வேறு கோணங்களில் ஆய்வு செய்த 3-வது நடுவர் கேட்ச் சரியானது என்று உறுதி செய்ததால் கில் வெளியேறினார்.

    அவரை அடுத்து ரோகித் சர்மாவுடன் இணைந்த புஜாரா சிறப்பாக ஆடி ரன்களை சேர்த்தார். பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேப்டன் ரோகித் சர்மா 43 ரன்னில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். அவர் அவுட் ஆன சிறிது நேரத்திலேயே புஜாரா 27 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து ரகானே - விராட் கோலி ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை சரிவில் இருந்து மீட்டது. அவ்வப்போது பவுண்டரிகளை பறக்க விட்ட இந்த ஜோடி பாட்னர்ஷிப்பில் 50 ரன்களை கடந்தது.

    இதனால் இந்திய அணி 4-ம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் எடுத்திருந்தது. இன்று கடைசி நாள் ஆட்டம் நடைபெறுகிறது.  இந்திய அணி வெற்றி பெற 280 ரன்கள் தேவை. கைவசம் 7 விக்கெட்டுகள் உள்ளன.

    விராட் கோலி 44 ரன்னிலும் ரகானே 20 ரன்னிலும் ஆட்டமிழக்காமல் உள்ளனர். இந்த பார்ட்னர்ஷிப் நெருக்கடியை சமாளித்து இன்று நம்பிக்கை அளித்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றுவார்கள் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. 

    • கில் 18 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கேட்ச் மூலம் அவுட் ஆனார்.
    • இன்றைய கடைசி நாள் ஆட்டத்திற்கு பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது என்பதில் சந்தேகமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில், இந்தியா - ஆஸ்திரேலியா மோதி வருகின்றன. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 469 ரன்கள் குவித்தது.

    இதையடுத்து களமிறங்கிய இந்தியா 296 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனை தொடர்ந்து 2வது இன்னிங்சில் ஆடிய ஆஸ்திரேலியா 8 விக்கெட் இழப்பிற்கு 270 ரன்கள் எடுத்திருந்தபோது டிக்ளேர் செய்தது. இதையடுத்து, 444 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் இந்தியா நேற்று களமிறங்கியது.

    தொடக்க வீரர்களாக சுப்மன் கில், ரோகித் சர்மா களமிறங்கினர். கில் 18 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கேட்ச் மூலம் அவுட் ஆனார். போலன்ட் பந்துவீச்சில் கெமரூன் கிரீனிடம் கேட்ச் கொடுத்து கில் அவுட் ஆனார். ஆனால், கிரீன் பிடித்த கேட்ச் சர்ச்சைக்குள்ளானது. பந்து தரையில் பட்டது போல இருந்தது. அதேவேளை, பந்து தரையில் படுவதற்குள் கிரீனின் கைவிரல் பந்திற்கு மேல் இருந்தது போலும் காட்சியளித்தது. இதன் காரணமாக 3ம் நடுவர் அவுட் கொடுத்தார். இந்த முடிவு சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இதனை தொடர்ந்து மைதானத்தில் இருந்த இந்திய ரசிகர்கள் கிரீன் நோக்கியும், ஆஸ்திரேலிய வீரர்கள் நோக்கியும் 'மோசடி... மோசடி... மோசடி' என கூச்சலிட்டனர். இதனால் மைதானத்தில் சற்று பரபரப்பு ஏற்பட்டது.

    இறுதியில் 4ம் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா 3 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் சேர்த்துள்ளது. விராட் கோலி 44 ரன்களுடனும், ரஹானே 20 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இன்று (5-ம் நாள்) ஆட்டத்தின் இறுதிநாள் என்ற நிலையில் இந்தியா வெற்றிபெற இன்னும் 280 ரன்கள் தேவைப்படுகிறது. அதேவேளை ஆஸ்திரேலியா வெற்றிபெற இன்னும் 7 விக்கெட்டுகள் வீழ்த்த வேண்டும். இதனால் இன்றைய கடைசி நாள் ஆட்டத்திற்கு பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது என்பதில் சந்தேகமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்திய அணி 4-ம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் எடுத்துள்ளது.
    • கைவசம் 7 விக்கெட்டுகள் இந்திய அணிக்கு உள்ளது.

    இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதும் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் 3-ம் நாள் முடிவில் ஆஸ்திரேலியா 4 விக்கெட்டுக்கு 123 ரன்கள் எடுத்து 296 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் இருந்தது.

    இதனையடுத்து நான்காவது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் லபுசேன் 41 ரன்னில் அவுட்டானார். கேமரூன் கிரீன் 25 ரன்னில் போல்டானார். மிட்செல் ஸ்டார்க் 41 ரன்னில் அவுட்டானார். அலெக்ஸ் கேரி பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்தார். இறுதியில், ஆஸ்திரேலியா 8 விக்கெட்டுக்கு 270 ரன்களை எடுத்து 443 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

    இந்நிலையில் இந்தியா வெற்றி பெற 444 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மா, சுப்மன் கில் இருவரும் பவுண்டரிகளாக விளாசினர். சுப்மன் கில் 18 ரன்கள் இருந்த போது அவுட் ஆனார். அடுத்து வந்த புஜாரா சிறப்பாக ஆடி ரன்களை சேர்த்தார். பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேப்டன் ரோகித் சர்மா 43 ரன்னில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.

    அவர் அவுட் ஆன சிறிது நேரத்திலேயே புஜாரா 27 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து ரகானே - விராட் கோலி ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அவ்வப்போது பவுண்டரிகளை பறக்க விட்ட இந்த ஜோடி பாட்னர்ஷிப்பில் 50 ரன்களை கடந்தது.

    இந்திய அணி 4-ம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் எடுத்துள்ளது. கடைசி நாளான நாளை இந்திய அணிக்கு 280 ரன்கள் தேவை. விராட் கோலி 44 ரன்னிலும் ரகானே 20 ரன்னிலும் ஆட்டமிழக்காமல் உள்ளது. கைவசம் 7 விக்கெட்டுகள் இந்திய அணிக்கு உள்ளது.

    • இந்தியா வெற்றி பெற 444 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.
    • தேநீர் இடைவேளை வரை இந்தியா 2வது இன்னிங்சில் ஒரு விக்கெட்டுக்கு 41 ரன்கள் எடுத்துள்ளது.

    லண்டன்:

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா அணி 469 ரன்கள் குவித்தது. தொடர்ந்து ஆடிய இந்தியா முதல் இன்னிங்சில் 296 ரன்களில் ஆல் அவுட்டானது.

    இதையடுத்து, ஆஸ்திரேலியா அணி இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. டேவிட் வார்னர் ஒரு ரன்னிலும், உஸ்மான் கவாஜா 13 ரன்னிலும் அவுட்டாகினர். ஸ்மித் 34 ரன்னில் வீழ்ந்தார். டிராவிஸ் ஹெட் 18 ரன்னில் ஆட்டமிழந்தார். 3-ம் நாள் முடிவில் ஆஸ்திரேலியா 4 விக்கெட்டுக்கு 123 ரன்கள் எடுத்து 296 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது.

    நான்காவது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் லபுசேன் 41 ரன்னில் அவுட்டானார். கேமரூன் கிரீன் 25 ரன்னில் போல்டானார். மிட்செல் ஸ்டார்க் 41 ரன்னில் அவுட்டானார். அலெக்ஸ் கேரி பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்தார்.

    இறுதியில், ஆஸ்திரேலியா 8 விக்கெட்டுக்கு 270 ரன்களை எடுத்து 443 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. அலெக்ஸ் கேரி 66 ரன்னுடன் அவுட்டாகாமல் உள்ளார். இதையடுத்து, இந்தியா வெற்றி பெற 444 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது.

    இந்தியா சார்பில் ஜடேஜா 3 விக்கெட்டும், உமேஷ் யாதவ், ஷமி ஆகியோர் தலா 2 விக்கெட்டும், சிராஜ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    444 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மா, சுப்மன் கில் இருவரும் பவுண்டரிகளாக விளாசினர்.

    தேநீர் இடைவேளையின் போது இந்தியா ஒரு விக்கெட்டுக்கு 41 ரன்கள் எடுத்துள்ளது. சுப்மன் கில் 18 ரன்னில் அவுட்டானார். ரோகித் சர்மா 21 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    • இந்தியா முதல் இன்னிங்சில் 276 ரன்கள் எடுத்தது.
    • 2-வது இன்னிங்சில் ஆஸ்திரேலியா 270 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்துள்ளது.

    லண்டன்:

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா அணி 469 ரன்கள் குவித்தது. தொடர்ந்து ஆடிய இந்தியா முதல் இன்னிங்சில் 296 ரன்களில் ஆல் அவுட்டானது.

    இதையடுத்து, ஆஸ்திரேலியா அணி இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. டேவிட் வார்னர் ஒரு ரன்னிலும், உஸ்மான் கவாஜா 13 ரன்னிலும் அவுட்டாகினர். ஸ்மித் 34 ரன்னில் வீழ்ந்தார். டிராவிஸ் ஹெட் 18 ரன்னில் ஆட்டமிழந்தார். 3-ம் நாள் முடிவில் ஆஸ்திரேலியா 4 விக்கெட்டுக்கு 123 ரன்கள் எடுத்து 296 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது.

    இந்நிலையில், நான்காவது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் உமேஷ் யாதவ் பந்துவீச்சில் புஜாராவிடம் கேட்ச் கொடுத்து லபுசேன் 41 ரன்னில் அவுட்டானார். சிறிது நேரத்தில் ஜடேஜா பந்துவீச்சில் கேமரூன் கிரீன் 25 ரன்னில் போல்டானார். மிட்செல் ஸ்டார்க் 41 ரன்னில் அவுட்டானார்.

    அலெக்ஸ் கேரி நிதானமாக ஆடி அரை சதம் கடந்தார்.

    இறுதியில், ஆஸ்திரேலியா 7 விக்கெட்டுக்கு 270 ரன்களை எடுத்து 443 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. அலெக்ஸ் கேரி 66 ரன்னுடன் அவுட்டாகாமல் உள்ளார்.

    இதையடுத்து, இந்தியா வெற்றி பெற 444 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது.

    இந்தியா சார்பில் ஜடேஜா 3 விக்கெட்டும், உமேஷ் யாதவ், ஷமி ஆகியோர் தலா 2 விக்கெட்டும், சிராஜ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 469 ரன்கள் குவித்தது.
    • 2-வது இன்னிங்சில் உணவு இடைவேளை வரை ஆஸ்திரேலியா 374 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

    லண்டன்:

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா அணி 469 ரன்கள் குவித்தது. தொடர்ந்து ஆடிய இந்தியா முதல் இன்னிங்சில் 296 ரன்களில் ஆல் அவுட்டானது. ரகானே 89 ரன்னிலும், ஷர்துல் தாகூர் 51 ரன்னிலும் அவுட்டாகினர். ஜடேஜா 48 ரன்னில் வெளியேறினார்.

    ஆஸ்திரேலிய சார்பில் பாட் கம்மின்ஸ் 3 விக்கெட்டும், மிட்செல் ஸ்டார்க், போலண்ட், கிரீன் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, ஆஸ்திரேலியா அணி இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. டேவிட் வார்னர் ஒரு ரன்னிலும், உஸ்மான் கவாஜா 13 ரன்னிலும் அவுட்டாகினர்.

    லபுசேனுடன் ஸ்மித் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 62 ரன்கள் சேர்த்த நிலையில் ஸ்மித் 34 ரன்னில் வீழ்ந்தார். டிராவிஸ் ஹெட் 18 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    மூன்றாம் நாள் முடிவில் ஆஸ்திரேலியா 4 விக்கெட்டுக்கு 123 ரன்கள் எடுத்து, 296 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது. கேமரூன் கிரீன் 7 ரன்னுடனும், லபுசேன் 41 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    இந்நிலையில், நான்காவது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் உமேஷ் யாதவ் பந்துவீச்சில் புஜாராவிடம் கேட்ச் கொடுத்து லபுசேன் 41 ரன்னில் அவுட்டானார். சிறிது நேரத்தில் ஜடேஜா பந்துவீச்சில் கேமரூன் கிரீன் 25 ரன்னில் போல்டானார். அலெக்ஸ் கேரி நிதானமாக ஆடினார்.

    நான்காம் நாள் உணவு இடைவேளை வரை ஆஸ்திரேலியா 6 விக்கெட்டுக்கு 201 ரன்களை எடுத்து 374 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. அலெக்ஸ் கேரி 41 ரன்னுடன் அவுட்டாகாமல் உள்ளார்.

    இந்தியா சார்பில் ஜடேஜா 3 விக்கெட்டும், உமேஷ் யாதவ் 2 விக்கெட்டும், சிராஜ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • பந்து வீச்சுக்கு சாதமாக இருக்கும் என ரோகித் சர்மா டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்தார்
    • டிராவிஸ் ஹெட், ஸ்மித் சிறப்பாக விளையாடி முதல் இன்னிங்சில் சதம் விளாசினர்

    இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வெல்லும் அணி பேட்டிங் தேர்வு செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், முதல் நாள் மேகமூட்டத்துடன் காணப்பட்டதாலும், ஆடுகளத்தின் மேற்பகுதியில் அதிக புற்கள் பச்சையாக காணப்பட்டதாலும் ரோகித் சர்மா பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    ஆனால், வெயில் நன்றாக அடித்ததால் ஆடுகளம் காய்ந்து பவுன்ஸ், சுழற்பந்து வீச்சுக்கு உதவும் வகையில் உள்ளது. இந்த நிலையில் இந்தியா தவறான அணியை தேர்வு செய்துள்ளதாகவும், 2019-ம் ஆண்டில் ஆஸ்திரேலியா ஆஷஸ் தொடரில் செய்த தவறை தற்போது இந்தியாவும் செய்துள்ளதாக ஸ்டீவ் வாக் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஸ்டீவ் வாக் கூறியதாவது:-

    இந்தியா டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்ததுபோன்று நாங்களும் 2019-ல் தவறு செய்தோம். 2019-ல் ஆஸ்திரேலியா கேப்டன் டிம் பெய்ன் ஆஷஸ் தொடரில் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனால் இங்கிலாந்திடம் 145 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தோம்.

    ஓவல் எப்போதுமே ஒரு தந்திரமான (tricky) ஆடுகளம். மேற்பகுதி பச்சையாக இருப்பதுபோல் தோன்றும், ஆனால், அடியில் சற்று காய்ந்த நிலையில், உடையும் நிலையில் இருக்கும்.

    பச்சை ஆடுகளம், சீதோஷ்ண நிலை ஆகியவற்றை மனதில் கொண்டு பந்து வீச்சில் சாதித்து விடலாம் என இருக்கலாம். ஆனால், சூரியன் வெளியே வந்தபின் ஒட்டுமொத்தமாக ஆடுகளத்தின் தன்மை மாறிவிடும்.

    மேலும், இந்தியா தவறான அணியை தேர்வு செய்ததாக நினைக்கிறேன். சுழற்பந்து வீச்சு ஏற்றத்தாழ்வுடன் முக்கிய பங்கு வகிக்கும். நானாக இருந்தால் பந்து வீச்சு மற்றும் பேட்டிங்கில் அஸ்வினை தேர்வு செய்திருப்பேன். அவர் டெஸ்டில் ஐந்து சதங்கள் அடித்துள்ள நிலையில், அவர் பேட்டிங் செய்யமாட்டார் என என்னால் நம்ப முடியாது. இந்த முடிவு விசித்திரமானதாக இருந்தது.

    இவ்வாறு ஸ்டீவ் வாக் தெரிவித்தார்.

    முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 469 ரன்கள் குவித்தது. ஆனால், இந்தியா முதல் இன்னிங்சில் 296 ரன்னில் சுருண்டது.

    • ஆஸ்திரேலியா அணி 44 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 123 ரன்கள் எடுத்துள்ளது.
    • இந்தியா சார்பில் சிராஜ், உமேஷ் யாதவ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும், ஜடேஜா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

    முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 469 ரன்கள் குவித்தது. இந்தியா முதல் இன்னிங்சில் 296 ரன்கள் சேர்த்து ஆல் அவுட்டானது.

    சிறப்பாக ஆடிய ரகானே 89 ரன்னில் அவுட்டானார்.

    பொறுப்புடன் ஆடிய ஷர்துல் தாகூர் அரை சதமடித்த நிலையில் 51 ரன்னில் அவுட்டானார். இதன்மூலம் இந்திய அணி 173 ரன்கள் பின்தங்கியுள்ளது.

    ஆஸ்திரேலிய சார்பில் பாட் கம்மின்ஸ் 3 விக்கெட்டும், மிட்செல் ஸ்டார்க், போலண்ட், கிரீன் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, ஆஸ்திரேலியா அணி இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கியது. தொடக்க வீரர் டேவிட் வார்னர் ஒரு ரன்னில் அவுட்டாகினார். உஸ்மான் கவாஜா 13 ரன்னில் வெளியேறினார்.

    அடுத்து லபுசேனுடன் ஸ்மித் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ரன் குவிப்பில் ஈடுபட்டது. 3வது விக்கெட்டுக்கு 62 ரன்கள் சேர்த்த நிலையில் ஸ்மித் 34 ரன்னில் வீழ்ந்தார். அடுத்ததாக களமிறங்கிய கேமரூன் கிரீன் 7 ரன்கள் எடுத்தார். லபுசேனே 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    ஆஸ்திரேலியா அணி தற்போது 4 விக்கெட்டுக்கு 123 ரன்கள் எடுத்து, 296 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது.

    இந்தியா சார்பில் சிராஜ், உமேஷ் யாதவ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும், ஜடேஜா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    ×