search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    4வது நாள் தேநீர் இடைவேளை - 2வது இன்னிங்சில் இந்தியா 41/1
    X

    4வது நாள் தேநீர் இடைவேளை - 2வது இன்னிங்சில் இந்தியா 41/1

    • இந்தியா வெற்றி பெற 444 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.
    • தேநீர் இடைவேளை வரை இந்தியா 2வது இன்னிங்சில் ஒரு விக்கெட்டுக்கு 41 ரன்கள் எடுத்துள்ளது.

    லண்டன்:

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா அணி 469 ரன்கள் குவித்தது. தொடர்ந்து ஆடிய இந்தியா முதல் இன்னிங்சில் 296 ரன்களில் ஆல் அவுட்டானது.

    இதையடுத்து, ஆஸ்திரேலியா அணி இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. டேவிட் வார்னர் ஒரு ரன்னிலும், உஸ்மான் கவாஜா 13 ரன்னிலும் அவுட்டாகினர். ஸ்மித் 34 ரன்னில் வீழ்ந்தார். டிராவிஸ் ஹெட் 18 ரன்னில் ஆட்டமிழந்தார். 3-ம் நாள் முடிவில் ஆஸ்திரேலியா 4 விக்கெட்டுக்கு 123 ரன்கள் எடுத்து 296 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது.

    நான்காவது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் லபுசேன் 41 ரன்னில் அவுட்டானார். கேமரூன் கிரீன் 25 ரன்னில் போல்டானார். மிட்செல் ஸ்டார்க் 41 ரன்னில் அவுட்டானார். அலெக்ஸ் கேரி பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்தார்.

    இறுதியில், ஆஸ்திரேலியா 8 விக்கெட்டுக்கு 270 ரன்களை எடுத்து 443 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. அலெக்ஸ் கேரி 66 ரன்னுடன் அவுட்டாகாமல் உள்ளார். இதையடுத்து, இந்தியா வெற்றி பெற 444 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது.

    இந்தியா சார்பில் ஜடேஜா 3 விக்கெட்டும், உமேஷ் யாதவ், ஷமி ஆகியோர் தலா 2 விக்கெட்டும், சிராஜ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    444 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மா, சுப்மன் கில் இருவரும் பவுண்டரிகளாக விளாசினர்.

    தேநீர் இடைவேளையின் போது இந்தியா ஒரு விக்கெட்டுக்கு 41 ரன்கள் எடுத்துள்ளது. சுப்மன் கில் 18 ரன்னில் அவுட்டானார். ரோகித் சர்மா 21 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    Next Story
    ×