search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உண்ணாவிரத போராட்டம்"

    • ஆளுநரை கேள்வி கேட்டவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜகவினர் புகார் அளித்துள்ளனர்.
    • காங்கிரஸ் கட்சியை அமர வைத்தால் நீட் தேர்வு ரத்தாகும்.

    தமிழகம் முழுவதும் நீட் தேர்வை எதிர்த்து தி.மு.க. சார்பில் உண்ணாவிரத போராட்டம் இன்று திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தொடங்கி வைத்தார்.

    இந்நிலையில், நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    நீட் தேர்வு 21 உயிர்களை பலி வாங்கி உள்ளது. நீட் தேர்வு மரணங்களுக்கு அதிமுக துணை நின்றது.

    நீட் மாணவர் உயிரிழப்பை தற்கொலை என கூறுகிறோம், அது தற்கொலை அல்ல கொலை.

    உயிரிழந்த 21 குழந்தைகளின் அண்ணனாக நான் பேசுகிறேன்.

    உண்ணாவிரத போராட்டத்தில் அமைச்சராகவோ, சட்டமன்ற உறுப்பினராகவோ பங்கேற்கவில்லை. சாதாரண மனிதனாக உதயநிதி ஸ்டாலினாக பங்கேற்று உள்ளேன்.

    நாம் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறோம். ஆளுநர் நீட் தேர்வுக்கு கோச்சிங் எடுக்கிறார்.

    ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு மக்களை சந்தித்து ஏதேனும் ஒரு தொகுதியில் நின்றால் வெற்றி பெறுவாரா ?

    ஆளுநரை கேள்வி கேட்டவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜகவினர் புகார் அளித்துள்ளனர்.

    நீட் தேர்வு விவகாரத்தில் இன்றைய போராட்டம் முடிவல்ல ஆரம்பம். பொதுக் தேர்வின்போது தற்கொலை செய்துகொள்வது வழக்கமானது என பாஜக தலைவர் கூறி உள்ளார்.

    மாடு பிடிக்க போராடுகிறோம், மாணவர்கள் உயிருக்காக போராட கூடாதா? நீட் விவகாரத்தில் கல்லூரி மாணவர்கள் போராட வேண்டும்.

    தமிழகத்திற்கு பாஜக என்ற கட்சி தேவையற்றது. அதிமுக மாநாட்டில் நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றுவார்களா ? நீட் விவகாரத்தில் பிரதமரின் வீட்டின் முன்பு அமர்ந்து போராட தயார் ? நீங்கள் வர தயாரா ?

    வரும் பாராளுமன்ற தேர்தலில் பாஜகவை விரட்டி, காங்கிரஸ் கட்சியை அமர வைத்தால் நீட் தேர்வு ரத்தாகும். ராகுல் காந்தி அந்த வாக்குறுதியை கொடுத்திருக்கிறார். அதுதான் நான் சொல்லும் ரகசியம்.

    வரும் பாராளுமன்ற தேர்தலில் பாஜகவை தோற்கடிப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தி.மு.க இளைஞரணி, மாணவரணி, மருத்துவ அணி சார்பில் இன்று காலை சேலம் கலெக்டர் அலுவலகம் அருகில் உண்ணா விரத போராட்டம் நடந்தது.
    • இந்த போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர்கள் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ, எஸ்.ஆர்.சிவ லிங்கம், டி.எம்.செல்வ கணபதி ஆகியோர் தலைமை தாங்கினர். எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி, மேயர் ராமச்சந்திரன் அவைத்தலைவர் சுபாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சேலம்:

    நீட் விலக்கு மசோதாவுக்கு விரைவில் ஒப்புதல் பெற்றிட வேண்டி தி.மு.க இளைஞரணி, மாணவரணி, மருத்துவ அணி சார்பில் இன்று காலை சேலம் கலெக்டர் அலுவலகம் அருகில் உண்ணா விரத போராட்டம் நடந்தது.

    இந்த போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர்கள் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ, எஸ்.ஆர்.சிவ

    லிங்கம், டி.எம்.செல்வ கணபதி ஆகியோர் தலைமை தாங்கினர். எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி, மேயர் ராமச்சந்திரன் அவைத்தலைவர் சுபாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இளைஞர் அணி அமைப்பாளர்கள் அருண் பிரசன்னா, வீரபாண்டி டாக்டர் பிரபு, மணிகண்டன், மாணவரணி அமைப்பாளர்கள் கோகுல் காளிதாஸ், கண்ணன், சீனிவாசன், மருத்துவ அணி அமைப்பாளர்கள் அருள், கே.கே.கோகுல், மாவட்ட துணை செயலாளர்கள்பாரப்பட்டி சுரேஷ்குமார், குமரவேல், திருநாவுக்கரசு, சுந்தரம், சம்பத், மண்டல தலைவர்கள் அசோகன், கலையமுதன், உமாராணி, மாநகர இளைஞரணி அமைப்பாளர் கேபிள்

    சரவணன், துணை அமைப்பா ளர்கள் பிரசன்னரமணன், சோளம்பள்ளம் கார்த்தி செழியன், லோகேஷ், இப்ராகிம், மனோஜ், ரமேஷ், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் கே. டி.மணி, தாமரைக்கண்ணன், சங்கர் என்ற சாமிநாதன்.

    பொதுக்குழு உறுப்பினர்கள் வக்கீல் எஸ்.ஆர்.அண்ணாமலை, நாசர் கான், குபேந்திரன், பூபதி, கோபால், சந்திரமோகன், மாநகர செயலாளர் ரகுபதி, துணைசெயலாளர்கள் கணேசன், தினகரன், பகுதிச் செயலாளர் தமிழரசன் சரவணன், ஜெயக்குமார், சாந்தமூர்த்தி தனசேகரன், ஜெகதீஷ், முருகன், மணல்மேடு மோகன், ராஜா ஒன்றிய செயலாளர்கள் வெண்ணிலா சேகர், விஜயகுமார், ரெயின்போ நடராஜன், சக்கரவர்த்தி செழியன், உமாசங்கர், அறி

    வழகன், ரமேஷ் செல்வ குமரன், சீனிவாச பெருமாள், வினு சக்கரவர்த்தி, சின்னு, பரமசிவம்,நல்லதம்பி ராஜேஷ், நகர செயலாளர் பாஷா, இலக்கிய அணி புலவர் முத்து கலைமாமணி, நிலவாரப்பட்டி தங்க ராஜ், ஏ.ஏ.ஆறுமுகம், நிர்மலா உள்பட ஆயிரக்கணக்கானோர் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    • நீட் தேர்வு ரத்து செய்ய மறுக்கும் மத்தியஅரசு மற்றும், தமிழக கவர்னரை கண்டித்து நாமக்கல் பூங்கா சாலையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
    • நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் கே.ஆர்.என்.ராஜேஷ்குமார், மேற்கு மாவட்ட செயலாளர் மதுரா செந்தில் தலைமை வகித்தனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட தி.மு.க இளைஞரணி, மருத்துவர் அணி, மாணவரணி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், நீட் தேர்வு ரத்து செய்ய மறுக்கும் மத்தியஅரசு மற்றும், தமிழக கவர்னரை கண்டித்து நாமக்கல் பூங்கா சாலையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

    நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் கே.ஆர்.என்.ராஜேஷ்குமார், மேற்கு மாவட்ட செயலாளர் மதுரா செந்தில் தலைமை வகித்தனர். இளைஞரணி மாநில துணை செயலாளர் ஆனந்த்குமார் எம்.எல்.ஏ.க்கள் ராமலிங்கம், பொன்னுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    போராட்டத்தில் நீட்தேர்வை கொண்டு வர வேண்டும். தமிழக ஆளுநர் ரவி இடையூறாக இருக்க கூடாது என வலியுறுத்தினர்.

    போராட்டத்தில் பார் இளங்கோவன், கிழக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் விஸ்வநாத், துணை அமைப்பாளர் இளம்பருதி, மருத்துவர் அமைப்பாளர் தீபக்குமார் மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பாலாஜி, துணை அமைப்பாளர்கள் சுந்தர், நவலடி ராஜா , கதிர், ஜெகதீசன், மருத்துவரணி தலைவர் பூபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • தமிழ்நாட்டு மாணவர்கள் மருத்துவராகும் கனவை சிதைத்து, அவர்களின் உயிரை பறிக்கின்ற உயிர் கொல்லியாக நீட் தேர்வு உருவெடுத்திருக்கிறது.
    • மருத்துவரணி சார்பில் மாபெரும் உண்ணாவிரத அறப்போராட்டம் தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் டி.மதியழகன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டு மாணவர்கள் மருத்துவராகும் கனவை சிதைத்து, அவர்களின் உயிரை பறிக்கின்ற உயிர் கொல்லியாக நீட் தேர்வு உருவெடுத்திருக்கிறது.

    மாணவர்கள் மட்டுமின்றி, பெற்றோரையும் மரண குழியில் தள்ளும் இந்த நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என தமிழக அரசின் சார்பிலும், தி.மு.க. சார்பிலும் தி.மு.க. தலைவரும், தமிழக முதல்-அமைச்சருமான மு.க. ஸ்டாலின் பல்வேறு முறை கோரிக்கை விடுத்தும், பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டும் இதுவரை அனைத்தும் பயனற்ற நிலையே நீடித்து வருகிறது.

    இந்த நீட் தேர்வை ரத்து செய்யாத மத்திய அரசையும், பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்ளும் தமிழக கவர்னரையும் கண்டித்து தி.மு.க. தலைவரும், தமிழக முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறி வுறுத்தலின்படி, நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில், கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை எதிரில், தி.மு.க. இளை ஞரணி, மாணவரணி, மருத்துவரணி சார்பில் மாபெரும் உண்ணாவிரத அறப்போராட்டம் தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.

    இந்த உண்ணாவிரத அறப்போராட்டத்தில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்தை சேர்ந்த மூத்த முன்னோடிகள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள், நகர, ஒன்றிய, பேரூர் கழக செயலாளர்கள், நிர்வாகிகள், மாவட்ட ஊராட்சி குழு, ஒன்றிய குழு, நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அனைத்து அணிகளின் தலைவர்கள், அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், கிளை கழக செயலாளர்கள், வாக்குச்சாவடி முகவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் இந்த உண்ணாவிரத அறப்போராட்டத்தில் கலந்து கொண்டு நீட் தேர்வை ஒழித்து, தமிழ்நாட்டு மக்களின் கல்வி உரிமையையும், விலை மதிப்பிலாத உயிரையும் காக்க அணி திரண்டு பங்கேற்க கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தருமபுரி கலைஞர் அறிவாலயத்தில் ஒருங்கிணைந்த மாவட்ட தி.மு.க சார்பில் ஆலோ சனைகூட்டம் நடை பெற்றது.
    • உண்ணாவிரத அறப் போராட்டத்தில் 5000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை பங்கேற்க செய்ய வேண்டு மென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    தருமபுரி,

    தமிழக முழுவதும் வரும் நாளை நீட் தேர்வை திணிக்கும் பா.ஜ.க. அரசை கண்டித்து தி.மு.க சார்பில் உண்ணாவிரதம் நடத்தப்படும் என தி.மு.க தலைவரும் தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி அறிவிப்பு வெளியாகி இருந்தது.

    இதனையடுத்து தருமபுரி கலைஞர் அறிவாலயத்தில் ஒருங்கிணைந்த மாவட்ட தி.மு.க சார்பில் ஆலோசனைகூட்டம் நடை பெற்றது.

    நிகழ்ச்சிக்கு கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி, மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன் ஆகியோர் தலைமை வகித்தனர்.

    கிழக்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பெரியண்ணன் முன்னிலை வகித்தார்.

    இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நாளை தருமபுரி தலைநகரில் நடைபெறும் நீட் தேர்வை திணிக்கும் பா.ஜ.க. அரசு மற்றும் தமிழக கவர்னரை கண்டி த்து உண்ணாவிரத அறப்போராட்டத்தில் 5000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை பங்கேற்க செய்ய வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இக்கூட்டத்தில் மாவட்ட அவைத் தலைவர்கள் செல்வராஜ், மனோகரன் மாநில விவசாய அணி துணை செயலாளர் சூடப்பட்டி சுப்பிரமணி ஆதிதிரா விடர் நலக்குழு மாநில துணை செயலாளர் ராஜேந்திரன், மாநில சுற்றுச்சூழல் அணி துணைச்செயலாளர் செந்தில்குமார், மாநில வர்த்தக அணி துணை செயலாளர் சத்யமூர்த்தி, மற்றும் தி.மு.க இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவர் அணியை சேர்ந்த கழக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

    • தி.மு.க. உண்ணாவிரத போராட்டத்தில் திரளாக பங்கேற்க வேண்டும்.
    • மாவட்ட செயலாளர் தளபதி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    மதுரை

    மதுரை மாநகர் மாவட்ட தி.மு.க. செயலாளர் தளபதி எம்.எல்.ஏ. இன்று வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்த லின்படி, 'தமிழ்நாட்டு மாண வர்களின் மருத்துவ கனவை சிதைத்து அவர்களின் உயிரை பறிக்கும் நீட் தேர்வை மத்திய பா.ஜ.க. அரசு திரும்ப பெற வலியுறுத்தியும், ஆளுநரை கண்டித்தும்', வருகிற 20-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணி அளவில் பழங்காநத்தம் ரவுண்டானா நடராஜ் தியேட்டர் அருகில் மதுரை மாநகர் மாவட்ட தி.மு.க. இளைஞரணி- மாணவரணி- மருத்துவரணி சார்பில் உண்ணாவிரத போ ராட்டம் நடைபெறுகிறது.

    இதில் மதுரை மாநகர் மாவட்டத்தை சேர்ந்த இளைஞரணி- மாணவரணி, மருத்துவரணி நிர்வாகிகள், மாவட்ட கழக நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதிக்கழக, வட்டக் கழக செயலாளர்கள், நிர்வாகிகள், ஒன்றிய, பேரூர், கிளை செயலாளர்கள், நிர்வாகிகள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், மாமன்ற உறுப்பினர்கள், கழக முன்னோடிகள் அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் அதில் கூறி உள்ளார்.

    • திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை எதிரே நடந்தது
    • 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்றனர்

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் கேத்தான்டப்பட்டியில் உள்ள திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை எதிரே அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

    சர்க்கரை ஆலை நிர்வாக குழு தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். அண்ணா தொழிற்சங்க மாநில பேரவை தலைவர் (சர்க்கரைப் பிரிவு) திருப்பதி, ஐ.என்.டி.யுசி. மாநில பேரவை பொருளாளர் (சர்க்கரை பிரிவு) தங்கராஜ் பாட்டாளி தொழிற்சங்க தலைவர் அன்பழகன் உள்பட 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்றனர்.

    கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலை ஊழியர்களிடையே கடந்த 1990 முதல் 33 ஆண்டுகளாக வழங்கி வரும் இரட்டை ஊதிய முறையை கலைந்து அனைவருக்கும் ஒரே மாதிரியான அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்த நாட்றம்பள்ளி தாசில்தார் குமார் உண்ணாவிரதம் இருந்தவர்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

    • பருவகால தொழிலாளர்களை நிரந்தர படுத்த கோரிக்கை
    • 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

    செய்யாறு:

    திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலை நிரந்தர தொழிலாளர்கள் 175 பேர் பணியாற்றி வருகின்றனர்.

    ஒப்பந்த தொழிலாளர்கள் 200-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். மொத்தம் 400-க்கும் இந்த நிலையில் கடந்த 30 ஆண்டுகளாக பணியாற்றியும் அரசுக்கு இணையான ஊதியம் வழங்க அரசு மறுத்து வருகிறது.

    இதனால் அரசு உயர்வுக்கு இணையான ஊதியம் பெறாமல் மெலிவடைந்த நிலையில் சர்க்கரை தொழிலாளர்கள் வாழ்ந்து வருகின்றனர்.

    இவர்களின் குறைகளை போக்கும் விதமாக அரசு உரிய பேச்சு வார்த்தை நடத்தி அரசுக்கு இணையான ஊதியம் வழங்கவும் அதே போல நீண்ட காலமாக பணியாற்றி வரும் பருவகால தொழிலாளர்களை நிரந்தர படுத்தவும் கோரிக்கை வைத்து உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    • சந்தனகுமார்பட்டியில் தனி நபர் ஒருவர் ஊரின் பெயர் பலகை வைத்ததாக கூறப்படுகிறது.
    • காலையில் தொடங்கிய போராட்டமானது மாலை 5 மணி வரை நீடித்தது.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் அருகே உள்ள ஆவுடையானூர் ஊராட்சிக்கு உட்பட்ட மாடியனூர், சந்தனகுமார்பட்டி ஆகிய பகுதி பொதுமக்கள் இடையே ஊர் பெயர் பலகை வைப்பது தொடர்பாக கடந்த சில மாதங்களாக பிரச்சினை இருந்து வருகிறது.

    தென்காசி தாசில்தார் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் ஏற்கனவே சமாதான கூட்டம் நடத்தப்பட்ட நிலையில் கூட்டத்தில் அரசு அனுமதி இன்றி வேறு பலகை வைக்க கூடாது என முடிவு எடுக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில் சந்தனகுமார்பட்டியில் தனி நபர் ஒருவர் ஊரின் பெயர் பலகை வைத்ததாக கூறப்படுகிறது. அதனை உடனடியாக அகற்ற வேண்டும் என கூறி 40-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் ஒன்று கூடி திடீரென நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பாவூர்சத்திரம் இன்ஸ்பெக்டர் பொறுப்பு ரமேஷ் கண்ணன் மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    எனினும் தாசில்தார் வந்து முழுமையான தகவல் தெரிவித்தால் தான் கலைந்து செல்வோம் என தெரிவித்ததால் காலையில் தொடங்கிய போராட்டமானது மாலை 5 மணி வரை நீடித்தது. தென்காசி தாசில்தார் சுப்பையன்,வருவாய் அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அதிகாரி கந்தசாமி உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு 25 நாட்களுக்குள் பெயர் பலகை தொடர்பாக தீர்வு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட வர்களிடம் தெரிவித்தனர். இதனையடுத்து அங்கிருந்து உண்ணாவிரதத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    • வழக்கறிஞர்கள் சேமநல நிதியை ரூ.10 லட்சத்திலிருந்து ரூ. 25 லட்சமாக உயர்த்த வேண்டும்.
    • வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு சார்பில் இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது

    நாகர்கோவில் :,

    குமரி மாவட்ட வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு சார்பில் நாகர்கோவில் கோர்ட்டு முன்பு இன்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. மத்திய மற்றும் மாநில அரசுகள், உடனடியாக வழக்கறிஞர்கள் பாதுகாப்புச் சட்டத்தை அமுல்படுத்த வேண்டும். வழக்கறிஞர்கள் சேமநல நிதியை ரூ.10 லட்சத்திலிருந்து ரூ. 25 லட்சமாக உயர்த்த வேண்டும்.

    வழக்கறிஞர்கள் கூட்ட மைப்பு தலைவர் நந்தகுமார் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கையை திரும்ப பெற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு சார்பில் இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது. இந்த போராட்டத்திற்கு வழக்கறிஞர்கள் சங்க தலைவர் பால ஜனாதிபதி தலைமை தாங்கினார். மூத்த வக்கீல் ஜெயச்சந்திரன் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி வைத்தார்.

    வழக்கறிஞர்கள் சங்க தலைவர்கள் சுரேஷ், சுந்தர் சிங், ஜோசப் ராஜ், பழனி, நாகர்கோவில் வழக்கறிஞர் சங்க செயலாளர் ஆதி லிங்கம், மூத்த வழக்கறி ஞர்கள் ராஜ குஞ்சரம், பரமதாஸ், வெற்றிவேல், ஜோசப் பெனடிக், ராதா கிருஷ்ணன், மரிய ஸ்டீபன், செல்வகுமார் , வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் சரவணன், அனிதா ராஜன், ஜாக்குலின் ஆஷா, கூட்டமைப்பு நிர்வாகிகள் பிரேம்குமார், சுரேஷ் தங்கம் , முருகேஸ்வரன் மற்றும் ஏராளமான வக்கீல்கள் கலந்து கொண்டனர் . மாலை 5 மணி வரை போராட்டம் நடக்கிறது.

    • போனஸ் வழங்கக்கோரி நடந்தது
    • கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை சிப்காட் பகுதியில் உள்ள பெல் நிறுவனத் தில் பணி புரியும் நிரந்தர ஊழியர்களுக்கு நிறுத்தி வைக்கப் பட்டுள்ள போனசை உடனடியாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பி.ஏ.பி. ஊழியர்கள் மற்றும் ஐ.என்.டி.யூ.சி. உள்ளிட்ட தொழிற்சங்கங்களின் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

    இதில் சுமார் 50-க்கும் மேற்பட்ட நிரந்தர ஊழியர்கள் பங்கேற்று தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தினர். காலை 8 மணி முதல் மதியம் 3 மணிவரை உண்ணாவிரத போராட் டம் நடைபெற்றது. முன்னதாக கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

    அப்போது ஜாயிண்ட் கமிட்டி கூட்டத்தை உடனடியாக கூட்டிபோனஸ் தொடர்பான பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும், போக்குவரத்து மற்றும் உணவுக்கு வழங் கப்பட்டமானியங்களை ஏற்கனவே வழங்கியது போல வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

    • சத்துணவு ஊழியர்களுக்கு, வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்கவேண்டும்.
    • குடும்ப பாதுகாப்பான ஓய்வூதியம் வழங்கவேண்டும்.

    தருமபுரி, 

    தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில் உண்ணாவிரத போராட்ட ஆயத்த மண்டல கூட்டம், தருமபுரி சிஐடியு அலுவலகத்தில், நடந்தது.

    மாவட்ட தலைவர் காவேரி தலைமை வகித்தார். இதில் மாவட்ட செயலாளர் தேவகி, மாநில துணைத்தலைவர் மஞ்சுளா, மாநில செயலாளர் மகேஸ்வரி, சிஐடியு மாநில செயலாளர் நாகராசன், ஜாக்டோ - ஜியோ நிதிகாப்பாளர் புகழேந்தி, தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் சங்க மாநில செயலாளர் லில்லிபுஷ்பம், மாவட்ட தலைவர்கள் கிருஷ்ணகிரி மணி, நாமக்கல் கோமதி, மாவட்ட செயலாளர்கள் சாந்தி, நாமக்கல் தங்கராஜ், சேலம் அமராவதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    30 ஆண்டுகாலமாக பணிபுரிந்து வரும் சத்துணவு ஊழியர்களுக்கு, வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்கவேண்டும். குடும்ப பாதுகாப்பான ஓய்வூதியம் வழங்கவேண்டும். தமிழ்நாடு முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை சத்துணவுடன் இணைக்கவேண்டும்.

    தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதியை தமிழக முதல்வர் நிறைவேற்றவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில், ஜூன் 26-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை 72 -மணிநேர உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற உள்ளது.

    இந்த உண்ணாவிரதப ்போராட்டத்தை வெற்றிகரமாக நடத்த, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் இருந்து சத்துணவு ஊழியர்கள் பெருந்திரளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்பது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. மாவட்ட பொருளாளர் வளர்மதி நன்றி கூறினார்.

    ×