search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொழில் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம்
    X

    தொழில் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம்

    • திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை எதிரே நடந்தது
    • 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்றனர்

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் கேத்தான்டப்பட்டியில் உள்ள திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை எதிரே அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

    சர்க்கரை ஆலை நிர்வாக குழு தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். அண்ணா தொழிற்சங்க மாநில பேரவை தலைவர் (சர்க்கரைப் பிரிவு) திருப்பதி, ஐ.என்.டி.யுசி. மாநில பேரவை பொருளாளர் (சர்க்கரை பிரிவு) தங்கராஜ் பாட்டாளி தொழிற்சங்க தலைவர் அன்பழகன் உள்பட 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்றனர்.

    கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலை ஊழியர்களிடையே கடந்த 1990 முதல் 33 ஆண்டுகளாக வழங்கி வரும் இரட்டை ஊதிய முறையை கலைந்து அனைவருக்கும் ஒரே மாதிரியான அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்த நாட்றம்பள்ளி தாசில்தார் குமார் உண்ணாவிரதம் இருந்தவர்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

    Next Story
    ×