search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நீட் தேர்வை ரத்து செய்ய கோரி உண்ணாவிரத போராட்டம்
    X

    நீட் தேர்வை ரத்து செய்ய கோரி உண்ணாவிரத போராட்டம்

    • தமிழ்நாட்டு மாணவர்கள் மருத்துவராகும் கனவை சிதைத்து, அவர்களின் உயிரை பறிக்கின்ற உயிர் கொல்லியாக நீட் தேர்வு உருவெடுத்திருக்கிறது.
    • மருத்துவரணி சார்பில் மாபெரும் உண்ணாவிரத அறப்போராட்டம் தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் டி.மதியழகன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டு மாணவர்கள் மருத்துவராகும் கனவை சிதைத்து, அவர்களின் உயிரை பறிக்கின்ற உயிர் கொல்லியாக நீட் தேர்வு உருவெடுத்திருக்கிறது.

    மாணவர்கள் மட்டுமின்றி, பெற்றோரையும் மரண குழியில் தள்ளும் இந்த நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என தமிழக அரசின் சார்பிலும், தி.மு.க. சார்பிலும் தி.மு.க. தலைவரும், தமிழக முதல்-அமைச்சருமான மு.க. ஸ்டாலின் பல்வேறு முறை கோரிக்கை விடுத்தும், பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டும் இதுவரை அனைத்தும் பயனற்ற நிலையே நீடித்து வருகிறது.

    இந்த நீட் தேர்வை ரத்து செய்யாத மத்திய அரசையும், பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்ளும் தமிழக கவர்னரையும் கண்டித்து தி.மு.க. தலைவரும், தமிழக முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறி வுறுத்தலின்படி, நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில், கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை எதிரில், தி.மு.க. இளை ஞரணி, மாணவரணி, மருத்துவரணி சார்பில் மாபெரும் உண்ணாவிரத அறப்போராட்டம் தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.

    இந்த உண்ணாவிரத அறப்போராட்டத்தில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்தை சேர்ந்த மூத்த முன்னோடிகள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள், நகர, ஒன்றிய, பேரூர் கழக செயலாளர்கள், நிர்வாகிகள், மாவட்ட ஊராட்சி குழு, ஒன்றிய குழு, நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அனைத்து அணிகளின் தலைவர்கள், அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், கிளை கழக செயலாளர்கள், வாக்குச்சாவடி முகவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் இந்த உண்ணாவிரத அறப்போராட்டத்தில் கலந்து கொண்டு நீட் தேர்வை ஒழித்து, தமிழ்நாட்டு மக்களின் கல்வி உரிமையையும், விலை மதிப்பிலாத உயிரையும் காக்க அணி திரண்டு பங்கேற்க கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×