search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இளைஞர்கள்"

    • கிராம வளர்ச்சிக்காக ரூ.30 லட்சம் வழங்கிய இளைஞர்களை பொதுமக்கள் பாராட்டினர்.
    • பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்ற முடிவு செய்துள்ளோம் என்றனர்.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ளது கோவில்பட்டி கிராமம். இங்கு கோவில்பட்டி மற்றும் தாண்டவன்பட்டி கிராம மக்களால் ஒன்றிணைந்து வழிபடும் பழமையான காணப்படை அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவிலை புதிதாக கட்டுவ தற்கு நிதி ஆதாரம் தேவைப்பட்டது. இதனால் கிராம மக்கள் ஒன்றிணைந்து தங்களால் இயன்ற நிதி உதவி செய்து இந்த கோவிலை கட்டும் பணியை ெதாடங்கினர்.

    இந்த நிலையில் கடந்த 2004-ம் ஆண்டு கோவில் ட்டி மற்றும் தாண்டவன்பட்டி கிராமத்தை சேர்ந்த இளை ஞர்கள் துபாய் நாட்டில் கம்பி கட்டுதல், கொத்தனார் வேலை, கார்பெண்டர் போன்ற பல்வேறு உடல் உழைப்பு சார்ந்த தொழி லுக்கு பணியாட்களாக சென்று வேலை பார்த்து வந்தனர்.

    அவர்கள் தங்கள் கிராம மேம்பாட்டிற்கு உதவுவ தற்காக அவர்கள் பணியில் இருந்த 2004-ம் ஆண்டு முதல் 19 இளைஞர்கள் ஒன்று சேர்ந்து மாதம் ரூ.115 வீதம் சேமிக்க முடிவு செய்த னர். இதனைத்தொடர்ந்து அடுத்தடுத்து இந்த கிராமங்களில் இருந்து வந்த நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் இந்த குழுவில் இணைந்து, தங்களது பங்கிற்கான தொகையினை யும் கொடுத்து சேமித்து வந்தனர்.

    இவ்வாறு சேமித்த பணம் ரூ.30 லட்சத்தை தாண்டியது. இதனை தொடர்ந்து தங்களது கிராமத்தில் உள்ள கோவிலை சிறப்பாக கட்டி கும்பாபிஷேகம் நடத்துவ தற்கு நிதி உதவி செய்ய துபாய் வாழ் இளைஞர்கள் முடிவு செய்தனர்.

    இதனை தொடர்ந்து அவர்கள் கோவில் கட்டுவதற்கு ரூ.15 லட்சமும், கிராமத்தில் பேவர் பிளாக் தளம் அமைக்க ரூ.8 லட்சம் என பல்வேறு பணிகளுக்கு மொத்தம் ரூ.30 லட்சம் வழங்கினர். அவர்களுக்கு கிராம மக்கள் சார்பில் சால்வை அணிவித்து பாராட்டு தெரிவிக்கப்பட் டது.

    இதுபற்றி அந்த இளைஞர்கள் கூறுகையில், ேகாவில் திருப்பணி மற்றும் கிராம மேம்பாட்டுக்கு உதவி செய்தது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. எனவே தொடர்ந்து இதுபோல் சேமித்து பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்ற முடிவு செய்துள்ளோம் என்றனர்.

    • மார்ச் 31-ந்தேதி அன்று 35 வயதுக்குள்ளாக இருத்தல் வேண்டும்.
    • வருகிற 31-ந்தேதி மாலை 4 மணி வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் விடுத்து ள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களின் பணியை அங்கீகரிக்கும் பொருட்டு, "முதல்-அமைச்சர் மாநில இளைஞர் விருது" ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று வழங்கப்பட்டு வருகிறது.

    15 வயது முதல் 35 வயது வரை உள்ள 3 ஆண்கள் மற்றும் 3 பெண்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த விருது ரூ.1 லட்சம் ரொக்கம், பாராட்டு பத்திரம், பதக்கம் ஆகியவற்றை உள்ளடக்கியது.

    அதன்படி, 2023-ம் ஆண்டுக்கான முதல்-அமைச்சர் மாநில இளைஞர் விருது வருகிற ஆகஸ்டு மாதம் 15-ந்தேதி நடைபெறும் சுதந்திர தின விழாவில் வழங்கப்படுகிறது.

    இந்த விருது தொடர்பாக கீழ்க்காணும் தகுதிகள் வரையறுக்கப்பட்டுள்ளன.

    15 வயது முதல் 35 வயது வரையுள்ள ஆண் அல்லது பெண் ஆகியோர் இந்த விருதுக்கு விண்ணப்பி க்கலாம்.

    2022-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந்தேதி அன்று 15 வயது நிரம்பியவராகவும், இந்த ஆண்டு மார்ச் 31-ந்தேதி அன்று 35 வயதுக்குள்ளாக இருத்தல் வேண்டும்.

    கடந்த நிதியாண்டில் (2022-2023) அதாவது 1-4-2022 முதல் 31-3-2023 வரை மேற்கொள்ளப்பட்ட சேவைகள் மட்டுமே கருத்தில் கொள்ளப்படும்.

    விருதிற்கு விண்ணப்பி க்கும் முன்பு குறைந்தபட்சம் 5 வருடங்கள் தமிழகத்தில் குடியிருந்தவராக இருத்தல் வேண்டும்.

    (சான்று இணைக்கப்பட வேண்டும்) விண்ணப்ப தாரர்கள் சமுதாய நலனுக்காக தன்னார்வத்துடன் தொண்டாற்றியிருக்க வேண்டும். அவ்வாறு அவர்கள் செய்த தொண்டு, கண்டறி யப்படக் கூடியதாகவும், அளவிடக்கூடியதாகவும் இருத்தல் வேண்டும். கடைசி நாள் மத்திய அல்லது மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள், பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகளில் பணியாற்று பவர்கள் இந்த விருதிற்கு விண்ணப்பிக்க இயலாது.

    விண்ணப்பதாரருக்கு உள்ளூர் மக்களிடம் உள்ள செல்வாக்கு இவ்விருதிற்கான பரிசீலனையில் கணக்கில் கொள்ளப்படும்.

    இதற்கான விண்ணப்பபடிவத்தினை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதள முகவரியான www.sdat.tn.gov.in மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

    கடைசி நாள் வருகிற 31-ந்தேதி (புதன்கிழமை) மாலை 4 மணி வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

    மேலும் விவரங்களுக்கு தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு அரங்க அலுவலகத்திற்கு 04362-235 633 என்ற எண்ணிலும், 7401703496 என்ற கைபேசி எண்ணிலும் அலுவலக வேலை நாட்களில் காலை 10 முதல் மாலை 5 மணி வரை தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நூலகங்கள் மேம்பாட்டில் எவ்வித முன்னேற்றமும் இல்லை.
    • ஐந்தாண்டுகளில் பல அரசுப்பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டு படிப்பறிவு சதவீதம் கணிசமாக அதிகரித்துள்ளது.

    உடுமலை :

    உடுமலை நகரில் மாவட்ட நூலக ஆணைக்குழு சார்பில் மாதிரி நூலகம் ஒன்றும், இரண்டாம் நிலை கிளை நூலகங்கள் இரண்டும் செயல்பட்டு வருகின்றன.உடுமலை, குடிமங்கலம் ஒன்றிய கிராமங்களில் 10க்கும் மேற்பட்ட கிளை நூலகங்களும் செயல்பட்டு வருகின்றன.மடத்துக்குளம் தாலுகாவில் மடத்துக்குளத்தில் இரண்டாம் நிலை நூலகமும், கணியூர், கொமரலிங்கம் உட்பட பகுதிகளில் கிளை நூலகங்களும் செயல்பட்டு வருகின்றன.

    இதில் தளி ரோட்டில் இருந்த கிளை நூலகம் மட்டும் மாதிரி நூலகமாக தரம் உயர்த்தப்பட்டது. பிற நூலகங்கள் மேம்பாட்டில் எவ்வித முன்னேற்றமும் இல்லை.உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவில், ஐந்தாண்டுகளில் பல அரசுப்பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டு படிப்பறிவு சதவீதம் கணிசமாக அதிகரித்துள்ளது.

    இதனால் அரசு போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. போட்டித்தேர்வுகளுக்கு படிக்கும் மாணவர்கள், அரசு நூலகங்களை மட்டுமே நம்பியுள்ளனர்.ஆனால், இரண்டாம் நிலை நூலகங்களில் போதியளவு புத்தகங்கள் இருப்பதில்லை. குடிமைப்பணிகள் தேர்வுக்கு தயாராக தேவையான, கட்டமைப்பு வசதிகள் எந்த நூலகத்திலும் இல்லை. தனியாக இருக்கை வசதி, கூடுதல் புத்தகங்கள், கழிப்பிட வசதியில்லாததால் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.இதனால் கிராமப்புற இளைஞர்கள் அதிகம் பாதிக்கப்பட்டு அதிருப்தியில் உள்ளனர். நூலகங்களை தரம் உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக கண்டுகொள்ளப்படவில்லை.போட்டித்தேர்வுக்கு தயாராகும் இளைஞர்கள் மற்றும் பொதுமக்களுக்காக நூலகங்களை தரம் உயர்த்த வேண்டும். குடிமைப்பணிகள் தேர்வு பிரிவு அனைத்து கிளை நூலகங்களிலும் துவக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.

    • கமுதி கோட்டைமேட்டில் மீனவ இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டது.
    • கடலோர காவல் படையில் வேலையில் சேர முன்னுரிமை வழங்கபடும்.

    பசும்பொன்

    ராமநாத புரம் மாவட்டம், கமுதி கோட்டைமேட்டில் உள்ள ஆயுதப்படை வளாகத்தில் மீனவ கிராம இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டது. இதற்கான விழாவில் ஓய்வு பெற்ற கடலோர காவல்படை அதிகாரி ஈசன், ராமநாதபுரம் கடலோர பாதுகாப்பு குழும ஏ.டி.எஸ்.பி. பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு திறன் மேம் பாட்டு வகுப்புகளை ஆய்வு செய்தனர். 90 நாட்கள் உணவு, உறைவிடம், ஊக்க தொகை மாதம் ஆயிரம் உள்ளிட்டவை பயிற்சி பெற்றவர்களுக்கு வழங்கப்படுகிறது.

    இந்த பயிற்சி முடித்த மீனவ இளைஞர்களுக்கு கடற்படை மற்றும் கடலோர காவல் படையில் வேலையில் சேர முன்னுரிமை வழங்கபடும்.

    • மேலூர் அருகே வேலை வாய்ப்பு முகாம் நடந்தது.
    • 25-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்களும் 402-க்கும் மேற்பட்ட இளைஞர்களும் கலந்து கொண்டனர்.

    மேலூர்

    மேலூர் அருகே உள்ள வண்ணாம்பாறை பட்டியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் மேலூர், கொட்டாம்பட்டி வட்டாரங்கள் இணைந்து நடத்திய வட்டார அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் அங்குள்ள சமுதாய கூடத்தில் நடைபெற்றது. மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் காளிதாசன் முகாமை தொடங்கி வைத்து தேர்வு பெற்ற இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

    வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் மாவட்ட செயல் அலுவலர் ஜெயபிரகாஷ் கலந்து கொண்டார். மாநில ஊரக வாழ்வாதார இயக்க உதவி திட்ட அலுவலர் சின்னத்துரை வரவேற்புரை ஆற்றினார். இம்முகாமில் 25-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்களும் 402-க்கும் மேற்பட்ட இளைஞர்களும் கலந்து கொண்டனர். மேலூர் வட்டார இயக்க மேலாளர் ராமு நன்றி கூறினார். மேலூர் மற்றும் கொட்டாம்பட்டி வட்டார ஒருங்கிணைப் பாளர்கள் முகாம் ஏற்பாடுகளை செய்திருந்தனர். மேலும் சமுதாய பணியாளர்களும் கலந்து கொண்டனர்.

    • சில இளைஞர்கள் செய்யும் சேட்டையால் சரியாக வாகனம் ஓட்டிச் செல்லும் மக்களும் விபத்துக்குள் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
    • இளைஞர்களின் அசாதாரண சாகச பயணம் காண்போரின் ரத்த அழுத்தத்தை எகிற செய்கிறது.

    திருச்சி:

    தமிழகத்தின் தலைநகரான சென்னையில் இரவு நேரங்களில் ஆட்கள் நடமாட்டம் குறைந்த சாலையில் பெற்றோரை நச்சரித்து லட்சங்களை கொட்டி வாங்கும் இருசக்கர வாகனங்களில் இளைஞர்கள் மேற்கொள்ளும் சாகச பயணம் பார்ப்போரை பதற வைப்பது இயல்பாகிவிட்டது.

    ரேஸ் என்ற பெயரில் நடத்தப்படும் இதுபோன்ற ஆபத்தான பயணங்களை தடுக்க போலீசார் கடிவாளம் போட்டாலும், அவர்கள் கண்களை மறைத்து இரவு நேரங்களில் சாலையில் தீப்பொறிகளை பறக்கவிட்டவாறு நடத்தும் சாகசங்களால் பலர் உயிரையும் பறிகொடுத்துள்ளனர்.

    தலைநகரில் மட்டும்தான் இதை செய்ய முடியுமா, நாங்களும் செய்வோம் என்று போட்டி போட்டுக்கொண்டு இரண்டாம் தலைநகர் என்ற அடைமொழியுடன் கூடிய திருச்சியிலும் இந்த கூத்து சமீப காலமாக அரங்கேறி வருகிறது. மத்திய மாவட்டமான மலைக்கோட்டை மாநகர் ஏற்கனவே போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்து தினம் ஒரு விபத்து என்று நகர்கிறது.

    இதற்கிடையே இளைஞர்களின் இந்த அசாதாரண சாகச பயணம் காண்போரின் ரத்த அழுத்தத்தை எகிற செய்கிறது. திருச்சி சத்திரம் மற்றும் ஸ்ரீரங்கத்தை இணைக்கும் காவிரி பாலம் சமீபத்தில் புனரமைக்கப்பட்டு திறக்கப்பட் டது. தற்போது புது பொலிவுடன் காட்சி தரும் இந்த பாலம் மாநகர மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் ஒரு பகுதியாக உள்ளது. மாலை நேரங்களில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் குடும்பத்துடன் வந்து இயற்கையை ரசிக்கின்றனர்.

    அதுமட்டுமல்லாமல் 24 மணி நேரமும் அதிக வாகனங்கள் செல்லும் பகுதியாகவும் காவிரி பாலம் விளங்குகிறது. இந்நிலையில் சில இளைஞர்கள் பகல் மற்றும் இரவு நேரங்களில் விலை உயர்ந்த அதிக குதிரைத்திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்களில் இந்த காவிரி பாலத்தில் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் சாகச பயணம் செய்கின்றனர்.

    பளபளக்கும் சாலையில் டயர்களை தூக்கி ஆக்சிலேட்டரை முறுக்கிக் கொண்டு சில இளைஞர்கள் செய்யும் சேட்டையால் சரியாக வாகனம் ஓட்டிச் செல்லும் மக்களும் விபத்துக்குள் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு சாகச பயணம் செய்யும் இளைஞர்கள் அதனை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்கின்றனர்.

    இதுபோன்ற சாகச பயணங்களை திருச்சி-சென்னை பைபாஸ் கூத்தூர் பாலம் அருகாமையில் உள்ள புதிய அரியலூர்-சிதம்பரம் சாலையிலும், போக்குவரத்து நெரிசல் மிகுந்த திருச்சி மாநகராட்சி பகுதி, சர்ச் ரோடு பகுதிகளிலும் அவர்கள் நடத்தி வருகின்றனர்.

    ஏற்கனவே சாலை விபத்துகளில் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டு வரும் நிலையில் அசம்பாவிதங்கள் ஏற்படும் முன்பு இதனை தடுத்து நிறுத்த வேண்டும். பொறுப்பில்லாமல் இவ்வாறு வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் செயல்படும் இளைஞர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. 

    • சிவகங்கை மாவட்ட இளைஞர்கள் ராணுவத்தில் சேர இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
    • இந்த தகவலை சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

    சிவகங்கை

    இந்திய ராணுவத்தில் (Agniveer) திட்டத்தின் கீழ் பல்வேறு வகையான பணிகளுக்கு ஆட்தேர்வு செய்ய விண்ணப்பிக்கும் பணி நடைபெற உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்ப முள்ள சிவகங்கை மாவட்டத்தைச் சார்ந்த இளை ஞர்கள் www.joinindianarmy.nic.in என்ற இணையதள முகவரி மூலமாக 15.3.2023-க்குள் விண்ணப்பிக்கலாம். இந்த ராணுவ ஆட்சேர்ப்பில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மேற்கண்ட இணையதள முகவரியில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

    இந்த தகவலை சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

    • ராமநாதபுரம், கீழக்கரை பகுதிகளில் இளைஞர்களிடம் அதிகரித்து வரும் போதை ஊசி பழக்கம்.
    • கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் வளர்ந்துள்ள காட்டு கருவேல மரங்கள் தான் இந்த போதை ஊசி நபர்களின் சொர்க்க பூமியாக திகழ்கிறது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு நகரங்களில் கடந்த சில மாதங்களாக மது, சிகரெட் போன்றவற்றை தொடர்ந்து இளைஞர்கள் போதை வஸ்துகளை பயன்படுத்தி வரத்தொடங்கி உள்ளனர். ராமநாதபுரம், கீழக்கரை நகரில் ஒதுக்குப்புறமான இடங்களில் காட்டு கருவேல மரங்கள் வளர்ந்துள்ள பகுதிகளில் ஏராளமான போதை ஊசிகள் கிடக்கின்றன.

    இந்த ஊசிகள் போதை தரும் மருந்துகள் மற்றும் மாத்திரைகளை ஏற்ற பயன்படுத்தியதாக தெரிய வந்துள்ளது. இன்னும் சிலர் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு அதில் போதை ஏற்றி வருகின்றனர்.

    தற்போது இளைஞர்கள் பலர் போதை மாத்திரை களையும், அது கிடைக்காத இன்னும் சிலர் தூக்க மாத்திரைகளையும் பொடியாக்கி அதனை தண்ணீரில் கலந்து ஊசி மூலம் கை நரம்புகளில் ஏற்றி அரை மயக்கத்தில் போதையாக இருந்து வருவது தொடர்கதையாகி வருகிறது.

    கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் வளர்ந்துள்ள காட்டு கருவேல மரங்கள் தான் இந்த போதை ஊசி நபர்களின் சொர்க்க பூமியாக திகழ்கிறது.

    இந்த மரங்களின் இடையில் நடமாட்டம் தெரியாததால் போதை ஊசி மற்றும் மருந்து களுடன் செல்லும் நபர்கள் அங்கு தங்கள் கை நரம்புகளில் போதை ஊசிகளை ஏற்றிக்கொண்டு அரை மயக்கத்தில் பகல் முழுவதும் கிடக்கின்றனர்.

    இதுபோன்ற நபர்களுக்கு மோட்டார் சைக்கிள்களில் வரும் மர்ம நபர்கள் சிலர் போதை மாத்திரைகளையும், ஊசிகளையும் இருக்கும் இடத்திற்கே வந்து விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது. மன அமைதிக்காகவும், தூக்கமின்மைக்காகவும் விற்பனை செய்யப்படும் தூக்க மாத்திரைகளை போதைக்காக பயன்படுத்தி வருவது உடல்நலத்திற்கு தீங்கானது.

    இது போன்ற மாத்திரை களை டாக்டர்களின் பரிந்துரை இல்லாமல் விற்பனை செய்யக்கூடாது என்ற நிலை உள்ள நிலையில் எவ்வாறு இவற்றை வாங்கி பயன்படுத்துகின்றனர் என்பது மர்மமாக உள்ளது.

    கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துக்களை விற்பனை செய்வதை விட போதை ஊசி மருந்துகள் மற்றும் மாத்திரைகளை விற்பனை செய்வதில் அதிக லாபம் கிடைப்பதால் இதில் பலர் ஈடுபட்டு வருவதாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது.

    இது குறித்து போலீசார் அதிரடி சோதனை நடத்தி போதை ஊசி மருந்து விற்பனை செய்பவர்களையும், அதனை பயன்படுத்துபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • இளம் தலைமுறைகள் சாதனை செய்ய கல்வி மட்டுமே காரணம்.
    • இளைஞர்கள் முன் ஏராளமான வாய்ப்புகள் உள்ளது.

    கும்பகோணம்:

    அன்னை கல்வி குழுமத்தின் சார்பில் கும்பகோணம் அருகே கோவிலாச்சேரியில் உள்ள பல்தொழில்நுட்ப கல்லூரியின் 14-வது பட்டமளிப்பு விழா அன்னை கல்வி குழும தலைவர் அன்வர்கபீர் தலைமையில் நடைபெற்றது.

    தாளாளர் அப்துல்கபூர் முன்னிலை வகித்தார்.

    இதில் மாநில அரசு உரிமையியல் வழக்கறிஞர் பாலமுருகன் கலந்து கொண்டு 881-க்கும் பட்டயங்களை வழங்கி பேசியதாவது:-

    உலகம் முழுவதும் இளம் தலைமுறைகள் சாதனை செய்ய கல்வி மட்டுமே காரணம். கல்வி பயிலும் மாணவர்களுக்கு தேவையான தொழில்நுட்ப படிப்புகளை அரசு செய்து தருகின்றது.

    பட்டயங்கள் பெற்ற அனைவரும் நம்பிக்கையுடன் திகழ வேண்டும். இளைஞர்கள் முன் ஏராளமான வாய்ப்புகள் உள்ளது

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் கல்லூரி முதல்வர் சபாநாயகம், தேர்வு அலுவலர் சாமிநாதன், துணை முதல்வர் ராஜ்குமார், நிர்வாக அதிகாரி கௌதம் மற்றும் பேராசிரியர்கள். மாணவ-மாணவிகள், பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • இளைஞர்களின் வேலைவாய்ப்பிற்காக பல்வேறு வகையான திறன் பயிற்சிகளை செயல்படுத்தி வருகிறது.
    • விருப்பத்தின் அடிப்படையில் தேர்வு செய்து திறன் பயிற்சி பெற்று வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும்.

    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் இளைஞர் திறன் திருவிழா திருத்துறைப்பூண்டி எம்.எல்.ஏ. மாரிமுத்து, மகளிர் திட்ட இயக்குநர் வடிவேல் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

    இதில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் செயல்ப டுத்தப்பட்டு வரும் தீன்தயாள் உபாத்யாய கிராமப்புற திறன் பயிற்சி திட்டத்தின் மூலம் 2022-23 ஆம் ஆண்டில் தமிழகத்தில் உள்ள அனைத்து வட்டாரங்க ளிலும் இளைஞர்களின் வேலைவாய்ப்பை மேம்ப டுத்தும் வகையில் வட்டார அளவிலான இளைஞர் திறன் திருவிழா நடை பெற்றது.

    அப்போது இந்திய அரசும், மாநிலஅரசும் இளைஞர்களின் வேலை வாய்ப்பிற்காக பல்வேறு வகையான திறன் பயிற்சிகளை அரசுத்துறைகள், வங்கிகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் செயல்படுத்தி வருகிறது.

    திறன் பயிற்சி திட்டங்க ளில், இளைஞர்களின் தகுதிக்கு ஏற்ப, விருப்பத்தின் அடிப்படையில் தேர்வு செய்து திறன் பயிற்சி பெற்று வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக பொதுமக்களிடமும் இளைஞர்களிடமும் விழிப்பணர்வு ஏற்படுத்துவதே இளைஞர் திருவிழாவின் நோக்கம் என இதில் கலந்துக்கொண்டவர்கள் கருத்து தெரிவித்து பேசினர்.

    இந்த திறன் பயிற்சியில் தேர்வானவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

    முன்னதாக உதவி திட்ட இயக்குநர் தில்லைமணி கண்ணன் வரவேற்று பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவர் கனியமுதா ரவி, பேருராட்சி தலைவர் மும்தாஜ் நவாஸ்கான், மாவட்ட கவுன்சிலர்கள் அமுதா மனோகரன், தமயந்தி, பேருராட்சி அலுவலர் கார்த்தி. வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தி, கமல்ராஜன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் உமேஷ்பாபு, நகர செயலாளர் மார்க்ஸ் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரையாற்றினர்.

    பின்னர் இளைஞர்களுக்கு சான்றிதழ் வழங்கினர். இதில் ஏராளமான இளம்பெண்கள் உட்பட பலரும் கலந்துக்கொ ண்டனர்.

    • வேலைக்காக வெளிநாடு செல்லும் இளைஞர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார்
    • இதுவரை 1200 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

    திருச்சி:

    கலாச்சார கலாச்சார நட்புறவு கழக தமிழ் மாநில மாநாடு திருச்சியில் இன்று நடைபெற்றது. வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் மஸ்தான் கலந்து கொண்டு பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும் போது,

    1200 பேர் மீட்பு

    தமிழகத்திலிருந்து வேலை உள்ளிட்ட காரணங்களுக்காக வெளிநாடுகள் சென்று தவித்த 1200 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர். இந்த ஒரு மாதத்தில் மட்டும் கம்போடியா மற்றும் மியான்மர் ஆகிய நாடுகளில் இருந்து 64 பேர் மீட்டுவரப்பட்டுள்ளனர். இவ்வாறு மீட்கப்பட்டவர்களின் முழு விமான கட்டணம் உள்ளிட்ட முழு செலவினங்களையும் மனிதநேயத்தோடு தமிழக முதலமைச்சரே ஏற்றுக் கொண்டுள்ளார்.

    விழிப்பாக இருக்க வேண்டும்

    வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்லும் இளைஞர்கள் விழிப்பாக இருக்க வேண்டும். தாங்கள் வேலைக்கு செல்லும் நிறுவனத்தின் உண்மை தன்மையை ஆராய்ந்த பின்னர் செல்ல வேண்டும்.

    திருச்சியில் கூட வெளிநாடுகளுக்கு இளைஞர்களை அனுப்பி ஏமாற்றிய 2 பேரை குண்டர் சட்டத்தில் அடைத்திருக்கிறார்கள். தமிழக அரசு தனியார் வேலை வாய்ப்பு நிறுவனங்களை அழைத்து வேலை வாய்ப்பு முகாம்களை நடத்தி ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் அயலக வேலைவாய்ப்பு நிறுவனம் மூலம் இதுவரை 181 பேர் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறார்கள்.

    500 செவிலியர்கள்

    தற்போது இங்கிலாந்துக்கு 500 செவிலியர்களை அனுப்ப அவர்களை தேர்வு செய்து திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. என்.ஆர்.சி. கணக்கெடுப்பு பணி வட மாநிலங்களில் நடைபெறுவதாக சொல்கிறீர்கள். வேற்றுமையில் ஒற்றுமை காணும் நாடாக இந்தியா இருக்கிறது. தமிழக முதலமைச்சரும் இதனை வலியுறுத்தி வருகின்றார்.

    இவ்வாறு அமைச்சர் கூறினார்.

    • தொழில் திறன் பயிற்சி கடந்த 10 ஆண்டுகளாக முடக்கம்.
    • ஜி.எஸ்.டி வரி விதிப்பை மத்திய அரசு குறைத்தால் வேலைவாய்ப்பு பெருக்கம் ஏற்படும்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்ட கலெக்டர்ர் அலுவலகத்தில் கட்டுமான தொழிலாளர் நலத்துறை சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் சி.வி.கணேசன் 3,928 பயனாளிகளுக்கு, 77 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை நேற்று வழங்கினார்.

    நிகழ்ச்சியில் நிருபர்களுக்கு அமைச்சர் சிவி.கணேசன் பேட்டியளித்தபோது கூறுகையில்,

    கல்வி, திருமண உதவித்தொகை, விபத்து, மரணம் உள்ளிட்டவைகளில் 1 லட்சம் 7 ஆயிரம் தொழிலாளர்களுக்கு நிலுவை தொகைகள் வழங்கப்பட்டுள்ளது. திரையரங்கம், அடுக்குமாடி குடியிருப்பு, மால் உள்ளிட்ட பல்வேறு கட்டிடங்களை கட்டிய கொத்தனார் உள்ளிட்ட தொழிலாளர்களுக்கு இதுவரை சொந்த வீடு இல்லை என்று வேதனை தெரிவித்த அமைச்சர், தமிழகத்தில் முதற்கட்டமாக 10 ஆயிரம் தொழிலாளர்களுக்கு ரூ. 400 கோடி மதிப்பில் வீடு கட்டும் திட்டம் வருகிற 15ம் தேதி முதல் அமைச்சரால் தொடங்கப்பட உள்ளதாக கூறினார்.

    தொடர்ந்து நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய கட்டுமான தொழிலாளர் நலவாரிய தலைவர் பொன்.குமார் கூறுகையில்; கட்டிடத் தொழிலில் தமிழகத்தில் வட மாநிலத்தவர்கள் ஆதிக்கம் அதிகரித்துவிட்டது என்று வேதனை தெரிவித்தார். உள்நாட்டு தொழிலாளர்களின் பற்றாக்குறையை போக்க தி.மு.க ஆட்சியில் வருடத்திற்கு ஒரு லட்சம் இளைஞர்களுக்கு அளித்து வந்த தொழில் திறன் பயிற்சி கடந்த 10 ஆண்டுகளாக அ.தி.மு.க ஆட்சியில் முடங்கி கிடந்ததாக குற்றம்சாட்டினார்.

    இந்த பயிற்சி கொடுத்தால் தமிழகத்தில் உள்ள வெளிமாநில தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைவதற்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தார். தொழிலாளர் நலத்துறைக்கு மத்திய அரசு 28 சதவீத ஜி.எஸ்.டி வரி விதித்து இருப்பது கொடூர செயல் என்று கடுமையாக விமர்சித்த பொன்.குமார், ஜிஎஸ்டி வரி விதிப்பை மத்திய அரசு 5 சதவீதமாக குறைத்தால், கட்டுமான வளர்ச்சி பொருளாதார வளர்ச்சி வேலைவாய்ப்பு பெருக்கம் ஏற்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

    ×