search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பைக் சாகசம்"

    • வீடியோ இணையத்தில் வைரலானதை அடுத்து போலீசார் நடவடிக்கை.
    • போக்குவரத்து விதிகளை மீறியதாக இருவர் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    டெல்லியில் துவாரகா பகுதியில் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பதிவிட, சூப்பர் ஹீரோக்களான ஸ்பைடர் மேன் மற்றும் ஸ்பைடர் வுமன் உடை அணிந்து பைக்கில் சாகசம் செய்த ஜோடியை போலீசார் கைது செய்துள்ளனர்.

    இந்த வீடியோ இணையத்தில் வைரலானதை அடுத்து போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    ஹெல்மெட் அணியாமல் நடுரோட்டில் இருவரும் சாகசம் செய்துள்ளனர். பிறகு, கண்ணாடி மற்றும் நம்பர் பிளேட் இல்லாத பைக்கில் பயணம் செய்து போக்குவரத்து விதிகளை மீறியதாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    • சேலம் பைபாஸ் ரோட்டில் தினமும் வாலிபர் ஒருவர் அதிவேகமாக செல்லக்கூடிய பைக் ஒன்றில், அபாயகரமாக ஓட்டி சென்று சாகசம் செய்வதாக பொதுமக்கள் போலீசாருக்கு தகவல்கள் தெரிவித்தனர்.
    • பைக்கை பறிமுதல் செய்த போலீசார் துரைராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் ஊத்துக்குளி அருகே செங்கப்பள்ளியில் கோவை - சேலம் பைபாஸ் ரோட்டில் தினமும் வாலிபர் ஒருவர் அதிவேகமாக செல்லக்கூடிய பைக் ஒன்றில், அபாயகரமாக ஓட்டி சென்று சாகசம் செய்வதாகவும் இதனால் போக்குவரத்துக்கு இடையூறாகவும், விபத்து அபாயம் உள்ளதாகவும் அப்பகுதி பொதுமக்கள் ஊத்துக்குளி போலீசாருக்கு தகவல்கள் தெரிவித்தனர்.

    இந்த புகாரின் அடிப்படையில் ஊத்துக்குளி போலீசார் அந்த வாலிபரை ரகசியமாக கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று செங்கப்பள்ளி அருகே பைக் சாகசத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது வாலிபரை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

    பின்னர் ஊத்துக்குளி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தியபோது அவர் அவிநாசி, திருமுருகன்பூண்டியை சேர்ந்த துரைராஜ் (23) என்பதும், பெருமாநல்லுாரில் உள்ள பைனான்ஸ் நிறுவனத்தில் வேலை செய்வதும் தெரிய வந்தது. மேலும் இவர் தனது பைக்கில் அபாயகரமாக பைபாஸ் ரோட்டில் ஓட்டி சென்று, அதை வீடியோ எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்ததும் தெரியவந்தது. இதனை அடுத்து பைக்கை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • இருசக்கர வாகனத்தில் அமர்ந்து கொண்டு பட்டாசுகளை வெடித்து கொண்டு சாகசம் செய்துள்ளனர்.
    • தேசிய நெடுஞ்சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம், நாட்டறம்பள்ளி அருகே சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் 2 வாலிபர்கள் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பைக்கில் பட்டாசை பொருத்தி வெடித்து சாகசம் செய்தனர். இதனை வீடியோ எடுத்தனர். இது சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

    மேலும் அந்த இருசக்கர வாகனத்தில் அமர்ந்து கொண்டு பட்டாசுகளை வெடித்து கொண்டு சாகசம் செய்துள்ளனர். பைக்கில் முன்புறம் பட்டாசை பொருத்தி அதனை வெடிக்க செய்தனர்.

    இதன் காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். பொதுமக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டு வீடியோ போடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

    • வீடியோ பதிவிட்ட இன்ஸ்டாகிராம் பக்கத்தை வைத்து திருச்சியில் எடுக்கப்பட்டது என்று உறுதி செய்யப்பட்டது.
    • பைக் ரைடர்ஸ் மணிகண்டன் அவரது நண்பர் அஜய் ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    திருச்சி:

    திருச்சியில் ஆங்காங்கே இளைஞர்கள் பைக் சாகசங்களில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அதிவேக பைக்குகளில் வீலிங் உள்ளிட்ட சாகசங்களில் ஈடுபடுவதும், இதனை வீடியோவாக பதிவு செய்து, இன்ஸ்டாகிராம், பேஸ்புக், வாட்ஸ்அப் பக்கங்களில் பதிவிட்டு பெருமைபட்டு கொள்வதும் வாடிக்கையாகி வருகிறது. இந்த வீடியோக்களுக்கு அதிகளவு லைக்குகளும், கமாண்டுகளும் வருவதால் இளைஞர்கள் இவ்வாறு வீடியோ பதிவிடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். போலீசார் எத்தனை முறை அறிவுரைகள் கூறினாலும், இளைஞர்கள் செவிசாய்க்க மறுக்கின்றனர்.

    இந்நிலையில் தீபாவளியை முன்னிட்டு, இளைஞர் ஒருவர் தொடர்ச்சியாக கீழே இருந்து மேலே சென்று வெடிக்கும் பேன்சி ரக பட்டாசை பைக்கின் முன்புறம் பொருத்தி அதனை கொளுத்தி வெடிக்க செய்து கொண்டு பைக்கை நெடுஞ்சாலையில் ஓட்டியதும், வீலிங் செய்வது போன்ற ஒரு வீடியோ பதிவிடப்பட்டது. டெவில் ரைடர்ஸ் என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோ பதிவிடப்பட்டிருந்தது. இந்த வீடியோ வைரல் ஆகியது.

    முதலில் இது எங்கு எடுத்தது என்று தெரியாமல் இருந்த நிலையில், திருச்சி போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போது வீடியோ பதிவிட்ட இன்ஸ்டாகிராம் பக்கத்தை வைத்து திருச்சியில் எடுக்கப்பட்டது என்று உறுதி செய்யப்பட்டது.

    இதையடுத்து திருச்சி போலீசார் நடத்திய தொடர் விசாரணையில், பைக் சாகசத்தில் ஈடுபட்டது தஞ்சாவூர் சேர்ந்த மணிகண்டன் என்பதும், இந்த சாகசத்தை வீடியோவாக எடுத்து வலைதளங்களில் வெளியிட்டது திருச்சி வயலூர் ரோடு குமரன் நகர், கல்லாங்காடு பகுதியை சேர்ந்த அஜய்(வயது 24) என்பதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மாவட்ட எஸ்.பி. வருண்குமார் உத்தரவின் பேரில் பைக் ரைடர்ஸ் மணிகண்டன் அவரது நண்பர் அஜய் ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் திருச்சியை சேர்ந்த அஜய் கைது செய்யப்பட்டார். மணிகண்டனை போலீசார் தேடி வருகின்றனர்.

    திருச்சியில் பட்டாசுகளை வைத்து வீலிங் செய்யும் சாகசத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய மாநகர போலீஸ் கமிஷனர் காமினி, எஸ்.பி. வருண்குமார் உத்தரவிட்டதை தொடர்ந்து கோட்டை போலீஸ் ஸ்டேஷன் உட்பட்ட சாலையில் வீலிங்கில் ஈடுபட்ட சிந்தாமணி டைமண்ட் பஜார் பகுதியை சேர்ந்த உசேன் பாஷா(வயது 24), காந்தி மார்க்கெட் பகுதியில் உள்ள பால்பண்ணை முதல் செந்தண்ணீர்புரம் பகுதியில் உள்ள சாலையில் வீலிங் செய்த தாரநல்லூர் ராஜேஷ்(24) ஆகியோர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

    இதே போல புறநகர் பகுதியில் ஜீயபுரம், லால்குடி, சமயபுரம், கானகிளியநல்லூர் ஆகிய 4 காவல் நிலையங்களில் வாக்கு பதியப்பட்டு உள்ளது. இப்பகுதிகளில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட பர்ஷத் அலி(24 ), அஜித் (22) சக்திவேல், விஜய், வசந்தகுமார், அருள் முருகன், பெருமாள், கிரீஷ்குமார், அஜீத்குமார் ஆகிய 9 பேரை போலீசார் கைது செய்தனர்.

    கைதான 11 பேரின் லைசென்சை ரத்து செய்ய போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

    • சில இளைஞர்கள் செய்யும் சேட்டையால் சரியாக வாகனம் ஓட்டிச் செல்லும் மக்களும் விபத்துக்குள் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
    • இளைஞர்களின் அசாதாரண சாகச பயணம் காண்போரின் ரத்த அழுத்தத்தை எகிற செய்கிறது.

    திருச்சி:

    தமிழகத்தின் தலைநகரான சென்னையில் இரவு நேரங்களில் ஆட்கள் நடமாட்டம் குறைந்த சாலையில் பெற்றோரை நச்சரித்து லட்சங்களை கொட்டி வாங்கும் இருசக்கர வாகனங்களில் இளைஞர்கள் மேற்கொள்ளும் சாகச பயணம் பார்ப்போரை பதற வைப்பது இயல்பாகிவிட்டது.

    ரேஸ் என்ற பெயரில் நடத்தப்படும் இதுபோன்ற ஆபத்தான பயணங்களை தடுக்க போலீசார் கடிவாளம் போட்டாலும், அவர்கள் கண்களை மறைத்து இரவு நேரங்களில் சாலையில் தீப்பொறிகளை பறக்கவிட்டவாறு நடத்தும் சாகசங்களால் பலர் உயிரையும் பறிகொடுத்துள்ளனர்.

    தலைநகரில் மட்டும்தான் இதை செய்ய முடியுமா, நாங்களும் செய்வோம் என்று போட்டி போட்டுக்கொண்டு இரண்டாம் தலைநகர் என்ற அடைமொழியுடன் கூடிய திருச்சியிலும் இந்த கூத்து சமீப காலமாக அரங்கேறி வருகிறது. மத்திய மாவட்டமான மலைக்கோட்டை மாநகர் ஏற்கனவே போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்து தினம் ஒரு விபத்து என்று நகர்கிறது.

    இதற்கிடையே இளைஞர்களின் இந்த அசாதாரண சாகச பயணம் காண்போரின் ரத்த அழுத்தத்தை எகிற செய்கிறது. திருச்சி சத்திரம் மற்றும் ஸ்ரீரங்கத்தை இணைக்கும் காவிரி பாலம் சமீபத்தில் புனரமைக்கப்பட்டு திறக்கப்பட் டது. தற்போது புது பொலிவுடன் காட்சி தரும் இந்த பாலம் மாநகர மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் ஒரு பகுதியாக உள்ளது. மாலை நேரங்களில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் குடும்பத்துடன் வந்து இயற்கையை ரசிக்கின்றனர்.

    அதுமட்டுமல்லாமல் 24 மணி நேரமும் அதிக வாகனங்கள் செல்லும் பகுதியாகவும் காவிரி பாலம் விளங்குகிறது. இந்நிலையில் சில இளைஞர்கள் பகல் மற்றும் இரவு நேரங்களில் விலை உயர்ந்த அதிக குதிரைத்திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்களில் இந்த காவிரி பாலத்தில் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் சாகச பயணம் செய்கின்றனர்.

    பளபளக்கும் சாலையில் டயர்களை தூக்கி ஆக்சிலேட்டரை முறுக்கிக் கொண்டு சில இளைஞர்கள் செய்யும் சேட்டையால் சரியாக வாகனம் ஓட்டிச் செல்லும் மக்களும் விபத்துக்குள் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு சாகச பயணம் செய்யும் இளைஞர்கள் அதனை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்கின்றனர்.

    இதுபோன்ற சாகச பயணங்களை திருச்சி-சென்னை பைபாஸ் கூத்தூர் பாலம் அருகாமையில் உள்ள புதிய அரியலூர்-சிதம்பரம் சாலையிலும், போக்குவரத்து நெரிசல் மிகுந்த திருச்சி மாநகராட்சி பகுதி, சர்ச் ரோடு பகுதிகளிலும் அவர்கள் நடத்தி வருகின்றனர்.

    ஏற்கனவே சாலை விபத்துகளில் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டு வரும் நிலையில் அசம்பாவிதங்கள் ஏற்படும் முன்பு இதனை தடுத்து நிறுத்த வேண்டும். பொறுப்பில்லாமல் இவ்வாறு வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் செயல்படும் இளைஞர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. 

    ×