search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "spider man"

    • வீடியோ இணையத்தில் வைரலானதை அடுத்து போலீசார் நடவடிக்கை.
    • போக்குவரத்து விதிகளை மீறியதாக இருவர் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    டெல்லியில் துவாரகா பகுதியில் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பதிவிட, சூப்பர் ஹீரோக்களான ஸ்பைடர் மேன் மற்றும் ஸ்பைடர் வுமன் உடை அணிந்து பைக்கில் சாகசம் செய்த ஜோடியை போலீசார் கைது செய்துள்ளனர்.

    இந்த வீடியோ இணையத்தில் வைரலானதை அடுத்து போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    ஹெல்மெட் அணியாமல் நடுரோட்டில் இருவரும் சாகசம் செய்துள்ளனர். பிறகு, கண்ணாடி மற்றும் நம்பர் பிளேட் இல்லாத பைக்கில் பயணம் செய்து போக்குவரத்து விதிகளை மீறியதாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    பாரிஸ் நகரில் நான்காவது மாடி பால்கனியில் தொங்கிய குழந்தையின் உயிரை காப்பாற்றிய மாலி நாட்டு அகதிக்கு பிரான்ஸ் குடியுரிமை அளிக்கப்படும் என அதிபர் இமானுவேல் மேக்ரன் அறிவித்துள்ளார். #parishero #parisspiderman #EmmanuelMacron
    பாரிஸ்:

    மாலி நாட்டை சேர்ந்தவர் மமூது கசாமா (22). இவர் வேலை தேடி பிரான்ஸ் நாட்டுக்கு வந்திருந்தார். பாரீசில் வடக்கு பகுதியில் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது ஒரு அடுக்குமாடி கட்டிடத்தின் முன்பு மக்கள் கூட்டமாக நின்று கொண்டிருந்தனர். எனவே கூட்டத்தை வேடிக்கை பார்க்க சென்றார். அங்கு கட்டிடத்தின் 4-வது மாடியில் பால்கனியை பிடித்தபடி 4 வயது குழந்தை அழுதபடி தொங்கிக் கொண்டிருந்தது.

    அதை கீழே விழாமல் பக்கத்து வீட்டில் தங்கியிருக்கும் நபர் பிடித்துக் கொண்டிருந்தார். குழந்தையை கீழே நின்று வேடிக்கை பார்த்து கொண்டிருந்தவர்களில் யாரும் காப்பாற்ற முன்வரவில்லை.

    ஆனால் எந்தவித தயக்கமும் இன்றி கசாமா ஸ்பைடர் மேன் பாணியில் கட்டிடத்தின் முன்புறத்தில் சுவரை பிடித்தபடி சிலந்தி பூச்சி போன்று மேலே ஏறினார்.

    பின்னர் மாடி பால்கனியில் தொங்கி கொண்டிருந்த குழந்தையை பத்திரமாக மீட்டு காப்பாற்றினார். இதற்கிடையே தீயணைப்பு படையினரும் அங்கு வந்து விட்டனர். ஆனால் குழந்தையை கசாமா காப்பாற்றி விட்டார்.

    இந்த வீடியோ பேஸ்புக் சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது. அதை தொடர்ந்து மமூது கசாமாவுக்கு பாராட்டுகள் குவிந்தன.

    இச்சம்பவம் நடந்த போது குழந்தையின் பெற்றோர் வீட்டில் இல்லை. வெளியே சென்று இருந்தனர். இதுகுறித்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

    ஸ்பைடர் மேன் பாணியில் குழந்தையை காப்பாற்றிய மமூது கசாமாவை பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரன் நேரில் அழைத்து பாராட்டினார். பாரிஸ் மேயர் ஆன்னி ஹிடால்கோ பேஸ்புக் சமூக தளத்தில் வாழ்த்தி நன்றி தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், மமூது கசாமாவின் வீரதீரத்தை பாராட்டி கவுரவிக்கும் வகையில் அவருக்கு பிரான்ஸ் நாட்டின் நிரந்தர குடியுரிமை அளிப்பதாகவும், பாரிஸ் நகர தீயணைப்புத்துறையில் பணி வழங்கப்படும் என்றும் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் இன்று அறிவித்துள்ளார். #parishero #parisspiderman #EmmanuelMacron

    பாரீசில் 4-வது மாடியில் தொங்கிய குழந்தையை ஸ்பைடர் மேன் போல் காப்பாற்றிய மாலி நாட்டைச் சேர்ந்த வாலிபருக்கு அதிபர் நேரில் பாராட்டு தெரிவித்தார். #spiderman #paris
    பாரீஸ்:

    மாலி நாட்டை சேர்ந்தவர் மமூது கசாமா (22). இவர் வேலை தேடி பிரான்ஸ் நாட்டுக்கு வந்திருந்தார். பாரீசில் வடக்கு பகுதியில் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது ஒரு அடுக்குமாடி கட்டிடத்தின் முன்பு மக்கள் கூட்டமாக நின்று கொண்டிருந்தனர். எனவே கூட்டத்தை வேடிக்கை பார்க்க சென்றார். அங்கு கட்டிடத்தின் 4-வது மாடியில் பால்கனியை பிடித்தபடி 4 வயது குழந்தை அழுதபடி தொங்கிக் கொண்டிருந்தது.

    அதை கீழே விழாமல் பக்கத்து வீட்டில் தங்கியிருக்கும் நபர் பிடித்துக் கொண்டிருந்தார். இதை கீழே நின்று வேடிக்கை பார்த்து கொண்டிருந்தவர்களில் யாரும் காப்பாற்ற முன்வரவில்லை.

    ஆனால் எந்தவித தயக்கமும் இன்றி கசாமா ஸ்பைடர் மேன் பாணியில் கட்டிடத்தின் முன்புறத்தில் சுவரை பிடித்தபடி சிலந்தி பூச்சி போன்று மேலே ஏறினார்.

    பின்னர் மாடி பால்கனியில் தொங்கி கொண்டிருந்த குழந்தையை பத்திரமாக மீட்டு காப்பாற்றினார். இதற்கிடையே தீயணைப்பு படையினரும் அங்கு வந்து விட்டனர். ஆனால் குழந்தையை கசாமா காப்பாற்றி விட்டார்.

    இந்த வீடியோ பேஸ்புக் சமூக வலை தளத்தில் வைரலாக பரவியது. அதை தொடர்ந்து மமூது கசாமாவுக்கு பாராட்டுகள் குவிந்தன.

    இச்சம்பவம் நடந்த போது குழந்தையின் பெற்றோர் வீட்டில் இல்லை. வெளியே சென்று இருந்தனர். இதுகுறித்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

    ஸ்பைடர் மேன் பாணியில் குழந்தையை காப்பாற்றிய மமூது கசாமாவை பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரன் நேரில் அழைத்து பாராட்டினார். பாரிஸ் மேயர் ஆன்னி ஹிடால்கோ பேஸ்புக் சமூக தளத்தில் வாழ்த்தி நன்றி தெரிவித்துள்ளார். #spiderman #paris
    ×