search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்தி சினிமா"

    • ஷாருக்கானுடன் பிரியாமணி நடித்த ‘ஜவான்’ படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று வசூலிலும் சாதனை படைத்தது.
    • தமிழ் படங்களிலும், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி படங்களிலும் நடித்து வருகிறார்.

    கார்த்தி நடித்த பருத்தி வீரன் படத்தில் 'முத்தழகு' என்ற கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானவர் பிரியாமணி. தொடர்ந்து ஏராளமான தமிழ் படங்களிலும், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி படங்களிலும் நடித்து வருகிறார்.

    ஷாருக்கானுடன் பிரியாமணி நடித்த 'ஜவான்' படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று வசூலிலும் சாதனை படைத்தது. சமீபத்தில் இந்தியில் வெளியான ஆர்டிகிள் 370 படத்திலும் நடித்திருந்தார். இந்த படமும் மிகுந்த வரவேற்பை பெற்றது.

    இந்த நிலையில் இந்தி திரை உலகில் தென்னிந்திய நடிகையாக பணிபுரியும் போது எதிர்கொள்ளும் சவால்கள் பற்றி அவர் கூறியதாவது:- இந்தி தயாரிப்பாளர்கள் சிலர் எங்களிடம் இது ஒரு தென்னிந்திய கதாபாத்திரம் என்பதால் நாங்கள் உங்களை நடிக்க வைக்க விரும்புகிறோம் என்று கூறுவார்கள். விரைவில் இந்த நிலைமாறும் என நம்புகிறேன். நாங்களும், மற்றவர்களை போலவே அழகாக இருக்கிறோம்.

    தென்னிந்தியாவை சேர்ந்தவர்களாக இருந்தாலும் இந்தி மொழியை எங்களால் மிகவும் சரளமாக பேச முடியும். எங்களுடைய தோல் நிறம் இந்தி நடிகைகள் போல் பிரகாசமாகவும் வெளிர் நிறமாகவும் இல்லை தான். நடிப்பை பொருத்தமட்டில் அது ஒரு பொருட்டல்ல. தெற்கில் இருந்து வரும் ஆண்களாலும் பெண்களாலும் இந்தியை சரளமாக பேசமுடியும். வடக்கு, தெற்கு என்ற பாகுபாடு மாற வேண்டும். நாங்கள் எப்போதும் இந்திய நடிகர்கள் தான். இவ்வாறு அவர் கூறினார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கரீனா கபூர் , தபு, கிருதி சானோன் முன்னிலை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம் க்ரீவ்.
    • தங்க கட்டிகளுடன் ஒரு பயணி இறந்துக் கிடக்கிறார்.

    கரீனா கபூர் , தபு, கிருதி சானோன் முன்னிலை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம் க்ரீவ். இவர்கள் மூவரும் கோஹினூர் விமான நிறுவனத்தில் ஏர் ஹோஸ்டஸாக பணிப்புரிகிறார்கள். மூன்று கதாநாயகிகளுக்கும் அவர்களின் வாழ்க்கையில் ஒரு பண நெருக்கடி வருகிறது.

    வாழ்கையில் அடுத்து பணத்துக்காக என்ன செய்வது என்று தெரியாமல் இருக்க, அவர்கள் வேலை செய்யும் விமானத்தில் தங்க கட்டிகளுடன் ஒரு பயணி இறந்துக் கிடக்கிறார். அவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்க கட்டிகளை எடுத்துக் கொள்ளலாம் என்று திட்டம் தீட்டுகிறார்கள்.

    தங்க கட்டிகளை மூவரும் சேர்ந்து கடத்தினார்களா? இல்லையா? அதில் என்ன சிக்கல் ஏற்பட்டது என்பதே கதை. இப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

    டிரெயிலர் மிகவும் விறுவிறுப்பாக அமைந்துள்ளது. கதைக்களம் மிகவும் வித்தியாசமாக தேர்வு செய்து இருக்கிறார் இயக்குனர் ராஜேஷ் ஏ கிருஷ்ணன். இவர் இதற்கு முன் 2023-ஆம் ஆண்டு வெளிவந்த 'லூட் கேஸ்' படத்தை இயக்கியது குறிப்பிடத்தக்கது. பாலாஜி டெலி பிலிம்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது.

    மார்ச் 29-ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படம் மீது மிகுந்த எதிர்பார்ப்பு உண்டாகியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

     

    • தேவாஷிஷ் மகிஜாவுடன் மனோஜ் வாஜ்பாய் மூன்றாவது முறையாக பணியாற்றுகிறார்.
    • நான் இயக்கிய எனது படங்களின் மூலம் எனக்கு பணம் கிடைத்ததில்லை

    தேவாஷிஷ் மகிஜா இயக்கத்தில் 2023 ஆம் ஆண்டு மனோஜ் பாஜ்பாய், தன்னிஷ்தா சாட்டர்ஜி போன்ற முன்னணி நடிகர்களின் நடிப்பில் வெளியான படம் ஜோரம்.

    தேவாஷிஷ் மகிஜாவுடன் மனோஜ் வாஜ்பாய்  மூன்றாவது முறையாக பணியாற்றுகிறார். 69 ஆம் பிலிம் ஃபேர் விருது வழங்கும் விழாவில் சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த கதை என 3 பிரிவில் ஜோரம் படம் பரிந்துரைக்கப்பட்டது. அதில் சிறந்த படம் மற்றும் சிறந்த கதைக்கான விருதுகளை வென்றது.

    ஒரு அவநம்பிக்கையான தந்தை, அவர் இறந்துவிட விரும்பும் அமைப்பிலிருந்து தப்பிக்க தனது கைக்குழந்தையுடன் ஓடுகிறார் என்ற கதைகளத்தின் அமைந்த கதை . பல விமர்சகர்களால் ஜோரம் படம் பாராட்டை பெற்றது. இப்படம் பல சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.

    இந்நிலையில் இப்படத்தின் இயக்குனரான தேவாஷிஷ் மகிஜா சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் " நான் இயக்கிய எனது படங்களின் மூலம் எனக்கு பணம் கிடைத்ததில்லை. கடந்த 5 மாதங்களாக என் வீடு வாடகையை செலுத்த முடியாத நிலையில் நிற்கிறேன். காரணம் நான் இயக்கி தயாரித்த 'ஜோரம்' படம் எந்த லாபத்தையும் கொடுக்கவில்லை. அதனால் இப்போது நான் கடனாளியாக நிற்கிறேன்" என்று உருக்கமாக கூறியுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார்.
    • சல்மான் கான் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார்.

    தமிழ் சினிமாவில் மிக முக்கிய இயக்குநர்களில் ஏ.ஆர். முருகதாஸ் ஒருவராக இருக்கிறார். எஸ்.ஜே. சூர்யா இயக்கத்தில் விஜய் நடித்த குஷி படத்தில் உதவி இயக்குநராக ஆரம்ப காலத்தில் பணி புரிந்தார். பிறகு 2000 ஆம் ஆண்டில் அஜித் நடித்து வெளியான தீனா என்ற படத்தை இயக்கினார்.

    2005 ஆம் ஆண்டு சூர்யாவை வைத்து கஜினி படத்தை இயக்கினார். இந்த படம் சூர்யாக்கு மிக பெரிய திருப்பு முனையாக அமைந்தது. கஜினி படம் ஹிட்டானதை அடுத்து 2008 ஆம் ஆண்டு அவரின் திரையுலக பயணத்தை பாலிவுட் பக்கம் திருப்பினார்.

    இவர் இயக்கிய கஜினி படத்தை அமீர்கானை வைத்து இந்தியில் ரீமேக் செய்தார். இந்தியிலும் மிக முக்கியமான படமாக இது பேசப்பட்டது. வசூலில் உச்சமடித்தது இந்தி கஜினி. மேலும் வசூலில் ரூ. 100 கோடி தாண்டிய முதல் இந்தி படம் இதுவே.

    2011 ஆம் ஆண்டு மீண்டும் சூர்யாவுடன் இணைந்து 7ஆம் அறிவு படத்தை அவர் இயக்கினார். 2012 ஆம் ஆண்டில் நடிகர் விஜய் நடித்த துப்பாக்கி படத்தை இயக்கினார். நடிகர் விஜய்-க்கு கம்பேக் கொடுத்த படங்களில் துப்பாக்கி முதன்மை இடம் பிடித்தது.

    தமிழ் சினிமாவின் அதிக வசூல் பட்டியலில் துப்பாக்கி இடம் பிடித்தது. தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸ் கலக்ஷனில் மட்டும் 100 கோடி ரூபாய் வசூலித்தது என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் நடித்து 2018 ஆம் ஆண்டு வெளிவந்த சர்கார் படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கினார்.

    இந்த வரிசையில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார்.இது சிவகார்த்திகேயனின் 23-வது படம் ஆகும். இந்த படம் தொடர்பான தவவல்கள் கடந்த மாதம் வெளியானது. இந்நிலையில் ஏ. ஆர். முருகதாஸ் இயக்கும் மற்றொரு படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    அதன்படி ஏ.ஆர். முருகதாஸ் மீண்டும் பாலிவுட்டில் களமிறங்கவுள்ளார். இவர் இயக்க போகும் இந்தி படத்தில் சல்மான் கான் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார். இத்திரைப்படத்தின் பட்ஜெட் 400 கோடி என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

    சஜித் நதியத்வாலா இப்படத்தை தயாரிக்க இருக்கிறார். இந்த படத்தை 2025 ஆம் ஆண்டு ரம்ஜானுக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்த தகவல் சல்மான் கான் ரசிகர்களின் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

    ×