என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    தென்னிந்திய நடிகைகளுக்கு பாகுபாடு - பிரியாமணி ஆதங்கம்
    X

    தென்னிந்திய நடிகைகளுக்கு பாகுபாடு - பிரியாமணி ஆதங்கம்

    • ஷாருக்கானுடன் பிரியாமணி நடித்த ‘ஜவான்’ படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று வசூலிலும் சாதனை படைத்தது.
    • தமிழ் படங்களிலும், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி படங்களிலும் நடித்து வருகிறார்.

    கார்த்தி நடித்த பருத்தி வீரன் படத்தில் 'முத்தழகு' என்ற கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானவர் பிரியாமணி. தொடர்ந்து ஏராளமான தமிழ் படங்களிலும், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி படங்களிலும் நடித்து வருகிறார்.

    ஷாருக்கானுடன் பிரியாமணி நடித்த 'ஜவான்' படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று வசூலிலும் சாதனை படைத்தது. சமீபத்தில் இந்தியில் வெளியான ஆர்டிகிள் 370 படத்திலும் நடித்திருந்தார். இந்த படமும் மிகுந்த வரவேற்பை பெற்றது.

    இந்த நிலையில் இந்தி திரை உலகில் தென்னிந்திய நடிகையாக பணிபுரியும் போது எதிர்கொள்ளும் சவால்கள் பற்றி அவர் கூறியதாவது:- இந்தி தயாரிப்பாளர்கள் சிலர் எங்களிடம் இது ஒரு தென்னிந்திய கதாபாத்திரம் என்பதால் நாங்கள் உங்களை நடிக்க வைக்க விரும்புகிறோம் என்று கூறுவார்கள். விரைவில் இந்த நிலைமாறும் என நம்புகிறேன். நாங்களும், மற்றவர்களை போலவே அழகாக இருக்கிறோம்.

    தென்னிந்தியாவை சேர்ந்தவர்களாக இருந்தாலும் இந்தி மொழியை எங்களால் மிகவும் சரளமாக பேச முடியும். எங்களுடைய தோல் நிறம் இந்தி நடிகைகள் போல் பிரகாசமாகவும் வெளிர் நிறமாகவும் இல்லை தான். நடிப்பை பொருத்தமட்டில் அது ஒரு பொருட்டல்ல. தெற்கில் இருந்து வரும் ஆண்களாலும் பெண்களாலும் இந்தியை சரளமாக பேசமுடியும். வடக்கு, தெற்கு என்ற பாகுபாடு மாற வேண்டும். நாங்கள் எப்போதும் இந்திய நடிகர்கள் தான். இவ்வாறு அவர் கூறினார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    Next Story
    ×