search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இங்கிலாந்து இந்தியா தொடர்"

    • இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக மொயீன் அலி 47 ரன்கள் சேர்த்தார்.
    • இந்தியா தரப்பில் யுஸ்வேந்திர சாகல் 10 ஓவர்கள் வீசி 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

    லாட்ஸ்:

    இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான 2வது ஒரு நாள் போட்டி இன்று நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் ஆடிய இங்கிலாந்து அணி, 49 ஓவர்களில் 246 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக மொயீன் அலி 47 ரன்கள் சேர்த்தார். டேவிட் வில்லே 41 ரன்கள், ஜேனி பேர்ஸ்டோ 38 ரன்கள், லியாம் லிவிங்ஸ்டோன் 33 ரன்கள், ஜேசன் ராய் 23 ரன்கள் எடுத்தனர்.

    இந்தியா தரப்பில் யுஸ்வேந்திர சாகல் 10 ஓவர்கள் வீசி 47 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். பும்ரா, ஹர்திக் பாண்ட்யா தலா 2 விக்கெட் எடுத்தனர். இதையடுத்து 247 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்குகிறது.

    • இந்தியா-இங்கிலாந்து அணி சிக்சரால் காயமடைந்த சிறுமிக்கு பரிசுகள் வழங்கியது.
    • ரோகித் சர்மா அடித்த சிக்சரால் காயமடைந்த சிறுமியின் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரல்

    இங்கிலாந்து-இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி 12-ந் தேதி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணி பும்ரா, சமி ஆகியோரின் சிறப்பான பந்து வீச்சால் 110 ரன்னில் ஆல் அவுட் ஆனது.

    இதனையடுத்து பேட்டிங் செய்த இந்திய அணி 18.4 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 114 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதனால் 3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.


    இந்த போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா 76 ரன்கள் குவித்தார். இதில் 5 சிக்சர் 6 பவுண்டரி அடங்கும். இவர் அடித்த சிக்சரில் 6 வயது சிறுமி காயமடைந்தார். அதனால் சிறிது நேரம் தடைப்பட்டது. அதன் பின் இங்கிலாந்து அணியின் மருத்துவக்குழு அந்த குழந்தைக்கு சிகிச்சை அளித்தனர்.


    போட்டி முடிந்த பிறகு இந்திய கேப்டன் ரோகித் சர்மா அந்த குழந்தையை சந்தித்து சாக்லேட் வழங்கியுள்ளார். மேலும் இங்கிலாந்து அணி அவருக்கு இங்கிலாந்து அணியின் ஒருநாள் போட்டிக்கான ஜெர்சியை பரிசாக வழங்கியது. இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

    • பும்ராவும், முகமது ஷமியும் மீண்டும் ஒரு முறை இங்கிலாந்தை பதம் பார்க்க ஆயத்தமாக உள்ளனர்.
    • முன்னணி வீரர்கள் ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், கேப்டன் ஜோஸ் பட்லர் ஆகியோர் நிலைத்து நின்று ஆடுவதை பொறுத்தே இங்கிலாந்தின்ன் ஸ்கோர் அமையும்.

    லண்டன்:

    இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. லண்டன் ஓவலில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    இந்த நிலையில் இந்தியா- இங்கிலாந்து இடையிலான 2-வது ஒருநாள் போட்டி புகழ்பெற்ற லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று நடக்கிறது. முதல் ஆட்டத்தில் ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி ஆகியோரது ஆக்ரோஷமான பந்து வீச்சு சீற்றத்தை எதிர்கொள்ள முடியாமல் இங்கிலாந்து வெறும் 110 ரன்னில் 'சரண்' அடைந்தது. 'ஸ்விங்' தாக்குலில் அட்டகாசப்படுத்திய பும்ரா 19 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை அள்ளினார்.

    இதில் ஜாசன் ராய், ஜோ ரூட், லிவிங்ஸ்டன் ஆகியோரை டக்-அவுட்டில் வீழ்த்தியதும் அடங்கும். இந்திய அணி எளிய இலக்கை 18.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி எட்டிப்பிடித்து அசத்தியது. தொடக்க ஆட்டத்தில் செய்த தவறுகளை சரி செய்து அதற்கு இன்றைய ஆட்டத்தில் பரிகாரம் தேடிக்கொள்ள இங்கிலாந்து வீரர்கள் தீவிரமாக உள்ளனர்.

    மேகமூட்டமான சீதோஷ்ண நிலையில் அவசரகதியில் மட்டையை சுழட்டுவதை தவிர்த்து நிதானத்தை கடைபிடிக்க வேண்டும் என்பதை உணர்ந்து இருப்பார்கள். முன்னணி வீரர்கள் ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், கேப்டன் ஜோஸ் பட்லர் ஆகியோர் நிலைத்து நின்று ஆடுவதை பொறுத்தே அந்த அணியின் ஸ்கோர் அமையும். அதே சமயம் ஓவலில் கிடைத்த வெற்றியால் கூடுதல் நம்பிக்கையுடன் இந்திய வீரர்கள் களம் இறங்குவார்கள். பும்ராவும், முகமது ஷமியும் மீண்டும் ஒரு முறை இங்கிலாந்தை பதம் பார்க்க ஆயத்தமாக உள்ளனர்.

    • மைக்கெல் வாகன் இந்த போட்டிக்கு முன்பு இங்கிலாந்து அணி 400 ரன்கள் வரை குவிப்பார்கள் என பேசியிருந்தார்.
    • இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான மைக்கேல் வாகனை இந்திய ரசிகர்கள் பலரும் சமூக வலைதளத்தின் மூலம் கிண்டல் அடித்து கேலி செய்து வருகின்றனர்.

    இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியானது நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி டாஸ் வென்று முதலில் பந்து வீசியது.

    இந்நிலையில் இந்த போட்டிக்கு பின்னர் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான மைக்கேல் வாகனை இந்திய ரசிகர்கள் பலரும் சமூக வலைதளத்தின் மூலம் கிண்டல் அடித்து கேலி செய்து வருகின்றனர்.

    மைக்கெல் வாகன் இந்த போட்டிக்கு முன்பு இங்கிலாந்து அணி 400 ரன்கள் வரை குவிப்பார்கள் என பேசியிருந்தார். ஆனால் அதற்கு எதிர்மாறாக நடந்ததால் இந்திய ரசிகர்கள் அவரை வாட்டி எடுத்தனர். முதலாவது ஒருநாள் போட்டி துவங்குவதற்கு முன்பாக இந்த ஆட்டம் குறித்து அவர் பேசியதாவது:-

    இங்கிலாந்து அணியில் தற்போது ஜோ ரூட், பேர்ஸ்டோ, ஸ்டோக்ஸ் போன்ற முக்கிய வீரர்கள் இணைந்துள்ளதால் இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்யும் பட்சத்தில் 400 ரன்களை அடித்தால் கூட ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்று தெரிவித்திருந்தார். ஆனால் அவர் கூறியிருந்தபடி அந்த மூவரில் பேர்ஸ்டோ 7 ரன்களை மட்டுமே அடிக்க ரூட் மற்றும் ஸ்டோக்ஸ் ஆகியோர் டக் அவுட்டாகி வெளியேறினர்.

    இப்படி அதிரடியான வீரர்கள் இருப்பதால் இங்கிலாந்து 400 ரன்கள் குவிக்கும் என்று பெரிய அளவில் பில்டப் கொடுத்த வேளையில் நேற்று இங்கிலாந்து அணி 110 ரன்களுக்கு சுருண்டு சொதப்பியதால் மைக்கேல் வாகனை சமூக வலைதளத்தின் மூலம் இந்திய ரசிகர்கள் கேலி, கிண்டல் செய்து வருகின்றனர். 

    • நியூசிலாந்து 126 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.
    • நியூசிலாந்து 126 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

    இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஐசிசி ஒருநாள் தரவரிசையில் பாகிஸ்தானை பின்னுக்குத் தள்ளியது இந்தியா.

    ஐசிசி ஒருநாள் அணி தரவரிசையில் இந்திய அணி 105 புள்ளிகளுடன் நான்காவது இடத்தைப் பிடித்திருந்தது. நேற்றைய போட்டியில் இங்கிலாந்து அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியதன் மூலம் 108 ரேட்டிங் புள்ளிகளுக்கு உயர்த்தியது. இதனால் ஒருநாள் அணி தரவரிசையில் பாகிஸ்தானை பின்னுக்குத் தள்ளி இந்தியா அணி மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.

    நியூசிலாந்து 126 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்திலும், இங்கிலாந்து 122 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளன.

    இங்கிலாந்துக்கு எதிரான மீதமுள்ள இரண்டு ஒருநாள் போட்டிகள் மற்றும் இந்த மாத இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா தனது முன்னிலையை மேலும் நீட்டிக்க அதிக வாய்ப்பு உள்ளது. மாறாக இங்கிலாந்துக்கு எதிரான தொடரின் கடைசி இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்தால் இந்தியா மறுபடியும் நான்காவது இடத்திற்கு தள்ளப்படலாம்.

    பாகிஸ்தான் அணி அடுத்த மாதம் நெதர்லாந்திற்கு எதிராக ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. பாபர் ஆசமின் தலமையில் பாகிஸ்தான் அணி மூன்று 50 ஓவர் போட்டிகளில் விளையாட திட்டமிடப்பட்டுள்ளது.

    • இங்கிலாந்தின் 10 விக்கெட்டுகளையும் இந்திய வேகப்பந்து வீச்சாளர்களே வீழ்த்தினர்.
    • ஒருநாள் கிரிக்கெட்டில் இன்னிங்சின் 10 விக்கெட்டுகளையும் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் முழுமையாக வீழ்த்துவது இது 7-வது நிகழ்வாகும்.

    லண்டன்:

    இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி ஓவல் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றிய நிலையில் ஒருநாள் தொடரையும் வெல்லும் நோக்கத்தில் இந்திய அணி களமிறங்கியது. இந்த போட்டியில் இந்திய அணி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்த போட்டியில் இங்கிலாந்தின் 10 விக்கெட்டுகளையும் இந்திய வேகப்பந்து வீச்சாளர்களே (பும்ரா-6, ஷமி-3, பிரசித் கிருஷ்ணா-1) சாய்த்தனர். ஒருநாள் கிரிக்கெட்டில் இன்னிங்சின் 10 விக்கெட்டுகளையும் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் முழுமையாக வீழ்த்துவது இது 7-வது நிகழ்வாகும்.

    இந்த ஆட்டத்தில் 3 விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய பவுலர் முகமது ஷமியின் ஒட்டுமொத்த விக்கெட் எண்ணிக்கை 151 ஆக (80 ஆட்டம்) உயர்ந்தது. இதன் மூலம் 150 விக்கெட்டுகளை அதிவேகமாக எட்டிய இந்தியர் என்ற பெருமையை பெற்றார்.

    ஒட்டுமொத்தத்தில் ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித்கானுடன் 3-வது இடத்தை பகிர்ந்துள்ளார். சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் இதுவரை 10 இந்தியர்கள் இன்னிங்சில் 6 விக்கெட் வீழ்த்தியுள்ளனர். இதில் சிறந்த பந்து வீச்சை கொண்டுள்ள ஸ்டூவர்ட் பின்னி 4 ரன்னுக்கு 6 விக்கெட் (வங்காளதேசத்துக்கு எதிராக 2014) கைப்பற்றி உள்ளார். கும்பிளே (6-12), பும்ரா (6-19), ஆஷிஷ் நெஹரா (6-23), குல்தீப் யாதவ் (6-25), முரளிகார்த்திக் (6-27), அஜித் அகர்கர் (6-42), யுஸ்வேந்திர சாஹல் (6-42), அமித் மிஸ்ரா (6-48), ஸ்ரீசாந்த் (6-55), ஆஷிஷ் நெஹரா (6-59) ஆகியோர் 6 விக்கெட் வீழ்த்திய மற்ற இந்தியர்கள் ஆவர்.

    இந்த வெற்றி மூலம் 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 2-வது ஆட்டம் நாளை நடக்கிறது. 

    • முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 110 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
    • இந்திய அணி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    ஓவல்: 

    இங்கிலாந்திற்கு எதிராக ஓவல் மைதானத்தில் நேற்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்த போட்டியில் ரோகித் சர்மா 5 சிக்ஸர்கள் அடித்ததன் மூலம் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மொத்தம் 250 சிக்ஸ்ர்கள் குவித்த முதல் இந்தியர் என்ற புதிய சாதனையை படைத்துள்ளார். இந்த சாதனை படைத்ததில் சர்வதேச அளவில் முதல் இடத்தில் அப்ரிடி (351சிக்ஸர்), இரண்டாவது இடத்தில் கிறிஸ் கெயில் (331சிக்ஸர்), 3வது இடத்தில் ஜெயசூர்யா (270 சிக்ஸர்) உள்ளனர். ரோகித் சர்மாவுக்கு 4வது இடம் கிடைத்துள்ளது.

    நேற்றைய போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் ஒருநாள் போட்டிகளில் அதி விரைவாக 150 விக்கெட்களை கைப்பற்றிய இந்திய வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். மொத்தம் 80 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய ஷமி 150 விக்கெட்களை கைப்பற்றி உள்ளார்.

    இதற்கு முன்னர் இந்திய வீரர் அஜித் அகர்கர் 97 போட்டிகளில் விளையாடி 150 ஒருநாள் விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். சர்வதேச அளவில் அதி விரைவாக 150 விக்கெட்களை கைப்பற்றிய வீரர்கள் பட்டியலில் ஆப்கானிஸ்தானின் ரஷித் கான், ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்ஸ் மற்றும் பாகிஸ்தானின் சக்லைன் முஷ்டாக் ஆகியோர் முதல் மூன்று இடங்களில் உள்ளனர்.

    இனிடையே நேற்றைய போட்டியில் 7.2 ஓவர் வீசிய இந்திய வேகபந்து வீச்சாளர் பும்ரா 19 ரன்கள் விட்டுக் கொடுத்து 6 விக்கெட் கைப்பற்றி இருந்தார். இதன் மூலம் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்தின் 6 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

    • இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் பும்ரா 6 விக்கெட் வீழ்த்தினார்.
    • முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வென்றது.

    ஓவல்:

    இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி ஓவல் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 25.2 ஓவரில் 110 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக கேப்டன் ஜோஸ் பட்லர் 30 ரன்னும், டேவிட் வில்லி 21 ரன்னும்எடுத்தனர். முன்னணி வீரர்களான ஜேசன் ராய், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், லிவிங்ஸ்டோன் ஆகியோர் டக் அவுட்டாகினர்.

    இந்தியா சார்பில் பும்ரா 6 விக்கெட்டும், ஷமி 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 111 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஆடினர்.

    தவான் நிதானமாக ஆட ரோகித் சர்மா அதிரடியில் இறங்கினார். அரை சதம் கடந்த அவர் சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார்.

    இறுதியில், இந்தியா 18.4 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 114 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. ரோகித் சர்மா76 ரன்னும், ஷிகர் தவான் 31 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    இந்த வெற்றியின் மூலம் ஒருநாள் தொடரில் இந்தியா 1-0 என முன்னிலை வகிக்கிறது.

    • முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 110 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • கேப்டன் ஜோஸ் பட்லர் அதிகபட்சமாக 30 ரன்கள் எடுத்தார்.

    ஓவல்:

    இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி ஓவல் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    இந்திய அணியில் காயம் காரணமாக விராட் கோலி விலகினார். அவருக்கு பதிலாக ஷ்ரேயாஸ் அய்யர் அணியில் இடம் பிடித்தார்.

    அதன்படி, இங்கிலாந்து அணி முதலில் களமிறங்கியது. ஆரம்பம் முதலே இந்திய அணியினர் அசத்தலாக பந்து வீசினர்.

    தொடக்க ஆட்டக்காரரான ஜேசன் ராய், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், லிவிங்ஸ்டோன் ஆகியோர் டக் அவுட்டாகினர்.

    அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஜோஸ் பட்லர் 30 ரன்னும், டேவிட் வில்லி 21 ரன்னும், பிரைடன் கார்சே 15 ரன்னும், மொயீன் அலி 14 ரன்னும் எடுத்தனர்.

    இறுதியில், இங்கிலாந்து அணி 110 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.

    இந்தியா சார்பில் பும்ரா 6 விக்கெட்டும், ஷமி 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • 5 பந்துகள் சந்தித்த ஜேசன் ராய் பும்ரா பந்து வீச்சில் ஸ்டெம்புகள் பறக்க போல்ட் ஆனார்.
    • 5.3 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்ட நிலையில் இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகளை இழந்து 17 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

    இங்கிலாந்து-இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீசுவதாக தெரிவித்தது. இந்திய அணியில் காயம் காரணமாக விராட் கோலி விலகினார். அவருக்கு பதிலாக ஷ்ரேயாஸ் அய்யர் அணியில் இடம் பிடித்தார்.

    இதனையடுத்து இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜேசன் ராய் - பேர்ஸ்டோவ் களமிறங்கினர். 5 பந்துகள் சந்தித்த ஜேசன் ராய் பும்ரா பந்து வீச்சில் ஸ்டெம்புகள் பறக்க போல்ட் ஆனார். அடுத்து வந்த ரூட் 2 பந்துகள் மட்டுமே சந்தித்து பும்ரா பந்து வீச்சில் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

    அடுத்ததாக ஸ்டோக்ஸ் களமிறங்கினார். அவரும் வந்த வேகத்தில் முகமது சமி பந்து வீச்சில் விக்கெட்டை பறிக்கொடுத்து வெளியேறினர். அடுத்து வந்த கேப்டன் பட்லர் 2 பவுண்டரிகள் அடுத்தடுத்து விளாசினார். நிதானமாக விளையாடி வந்த பேர்ஸ்டோவ் 20 பந்தில் 7 ரன்கள் எடுத்து பும்ரா பந்து வீச்சில் அவுட் ஆனார். 5.3 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்ட நிலையில் இங்கிலாந்து அணி 4 முக்கிய விக்கெட்டுகளை இழந்து 17 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

    • முதல் போட்டி இன்று ஓவல் மைதானத்தில் நடக்கிறது.
    • டி20 தொடரை வென்றதுபோல் ஒரு நாள் போட்டியிலும் வெல்ல இந்திய அணி முயற்சிக்கும்.

    ஓவல்:

    ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளும் மோதிய 3 ஆட்டம் கொண்ட 20 ஓவர் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது.

    இந்நிலையில், இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி ஓவல் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, இங்கிலாந்து முதலில் களமிறங்குகிறது.

    இரு அணி வீரர்கள் வருமாறு:

    இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பண்ட், ஜடேஜா, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, சாஹல், முகமது சமி, பும்ரா, பிரசித் கிருஷ்ணா

    இங்கிலாந்து: ஜோஸ் பட்லர் (கேப்டன்), ஜேசன் ராய், ஜோ ரூட், பேர்ஸ்டோவ், லிவிங்ஸ்டோன், பென்ஸ்டோக்ஸ், டேவிட் வில்லி, மொய்ன் அலி, கிரேக் ஓவர்டன், பிரைடன் கார்சே, டாப்லே.

    • ஓவல் மைதானத்தில் ஷிகர் தவான், அஜய் ஜடேஜா ஆகிய 2 இந்திய பேட்ஸ்மேன்கள் மட்டுமே சதமடித்துள்ளார்கள்.
    • ஓவல் மைதானத்தில் ரவீந்திர ஜடேஜாவை தவிர வேற எந்த இந்திய பவுலரும் ஒரு போட்டியில் 5 விக்கெட் எடுத்ததில்லை.

    இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டெஸ்ட்டில் தோல்வியடைந்து தொடரை 2-2 என சமன் செய்தது. அடுத்ததாக நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 2 -1 என்ற கணக்கில் தொடரை வென்றது.

    இந்நிலையில் ஒருநாள் தொடரை வெல்வதற்கு இரு அணிகளும் தீவிரமாகப் பயிற்சியில் ஈடுபட்டு உள்ளன. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் ஷிகர் தவான், முகமது சமி ஆகியோர் ஒருநாள் தொடரில் இணைகின்றனர். இந்திய அணியின் முன்னாள் கேப்டனான விராட் கோலி காயம் காரணமாக முதல் ஒருநாள் போட்டியில் இருந்து விலகி உள்ளார்.

    இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி ஓவல் மைதானத்தில் இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கு நடக்கிறது.

    ஓவல் மைதானம் குறித்த தகவல்களை காண்போம்:-

    உலகிலேயே பழமையான மைதானங்களில் ஒன்றான ஓவல் மைதானத்தில் கடந்த 1880 முதல் சர்வதேச போட்டிகள் நடைபெற்று வருகின்றன. 23000 ரசிகர்கள் அமர்ந்து பார்க்கும் வகையில் நவீன வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்டுள்ள இம்மைதானத்தில் கடந்த 1973 முதல் பல வரலாற்றுச் சிறப்புமிக்க ஒருநாள் போட்டிகள் நடந்துள்ளன.

    இந்த மைதானத்தில் வரலாற்றில் இதுவரை மொத்தம் 74 ஒருநாள் போட்டிகள் நடைபெற்றுள்ளன. அதில் முதலில் பேட்டிங் செய்த அணிகள் 30 போட்டிகளில் வென்றுள்ளன. 41 போட்டிகளில் சேசிங் செய்த அணிகள் வென்றுள்ளன. 3 போட்டிகள் மழையால் கைவிடப்பட்டன.

    இங்கு 49 போட்டிகளில் விளையாடியுள்ள இங்கிலாந்து 30 வெற்றிகளைப் பெற்று வலுவான அணியாக திகழ்கிறது. 17 போட்டிகளில் தோற்றது. 2 போட்டிகள் மழையால் கைவிடப்பட்டது.

    இம்மைதானத்தில் 16 போட்டிகளில் பங்கேற்றுள்ள இந்தியா 6 போட்டிகளில் மட்டுமே வென்றுள்ளது. 9 போட்டிகளில் தோற்றுள்ளது. 1 போட்டி மழையால் கைவிடப்பட்டது.

    குறிப்பாக இங்கிலாந்துக்கு எதிராக இம்மைதானத்தில் களமிறங்கிய 8 போட்டிகளில் 5 போட்டிகளில் தோல்வியடைந்த இந்தியா 2 வெற்றிகளை மட்டுமே பதிவு செய்தது. 1 போட்டி ரத்து செய்யப்பட்டது.

    இம்மைதானத்தில் அதிக ரன்கள் குவித்த டாப் 3 இந்திய பேட்ஸ்மேன்கள்:

    1. ஷிக்கர் தவான் : 443

    2. சச்சின் டெண்டுல்கர் : 209

    3. ரோகித் சர்மா : 199

    இந்த மைதானத்தில் ஷிகர் தவான் (125) மற்றும் அஜய் ஜடேஜா (100*) ஆகிய 2 இந்திய பேட்ஸ்மேன்கள் மட்டுமே சதமடித்துள்ளார்கள். இங்கு ஷிகர் தவான் மட்டும் அதிகபட்சமாக 3 சதங்கள் அடித்துள்ளார். அதேபோல் ரோகித் சர்மா அதிகபட்சமாக 3 அரை சதங்கள் அடித்துள்ளார். இங்கு தலா 8 விக்கெட்டுகளுடன் அதிக விக்கெட்டுகள் எடுத்த இந்திய பவுலர்களாக ரவீந்திர ஜடேஜா மற்றும் புவனேஸ்வர் குமார் ஆகியோர் உள்ளனர்.

    இம்மைதானத்தில் ரவீந்திர ஜடேஜாவை தவிர வேற (5/36) எந்த இந்திய பவுலரும் ஒரு போட்டியில் 5 விக்கெட் எடுத்ததில்லை. இங்கு இந்தியா பதிவு செய்துள்ள அதிகபட்ச ஸ்கோர் 352/5, ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிராக. குறைந்தபட்ச ஸ்கோர் 158 ஆல்-அவுட்.

    பிட்ச் ரிப்போர்ட்:

    இங்கிலாந்தில் இருக்கும் மைதானங்களில் ஓவல் மைதானம் வரலாற்றில் பேட்டிங்க்கு அற்புதமாக சாதகமளிக்கும் வகையில் இருந்து வருகிறது. இங்கு காணப்படும் ஃப்ளாட்டான பிட்ச்சில் கிடைக்கும் வேகம் மற்றும் பவுன்ஸ் ஆகியவற்றை நம்பி பேட்ஸ்மேன்கள் அதிரடியாக பெரிய ஷாட்களை விளையாடி ரன்களை குவிக்கலாம். போட்டி நாளன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்பதால் ஆரம்பகட்ட ஓவர்களில் புதிய பந்தை ஸ்விங் செய்யும் வேகப்பந்து வீச்சாளர்கள் விக்கெட்டுகளை எடுப்பார்கள்.

    மிடில் ஓவர்களில் திறமையான சுழல்பந்து வீச்சாளர்களுக்கு இம்மைதானம் கை கொடுக்கலாம். இங்கு சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 254 ஆகும். மேலும் இப்போட்டி பகலிரவாக நடைபெறுவதாலும் இங்கு இதற்கு முன் சேசிங் செய்த அணிகள் அதிகம் வென்றுள்ளதாலும் டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பந்துவீச தீர்மானிப்பது வெற்றிக்கு வித்திடலாம்.

    ×