search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆர்ப்பாட்டம்"

    • அருப்புக்கோட்டையில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • ஆக்கிரமிப்புகளை மீட்க வலியுறுத்தப்பட்டது.

    அருப்புக்கோட்டை

    அருப்புக்கோட்டையில் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் கிழக்கு மாவட்ட தலைவர் பாண்டு ரங்கன் தலைமை தாங்கி னார். மாவட்ட பார்வையாளர் வெற்றி வேல் முன்னிலை வகித்தார்.

    அருப்புக்கோட்டையில் உள்ள செவல் கண்மாய் துமைக்குளம் கண்மாய் பெரியகண்மாகளை சூழ்ந் துள்ள ஆகாயத்தாமரை களை அகற்ற வேண்டும். நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டும், நகர் பகுதியில் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்திற்காக தோண்டப்பட்ட குழிகளை உடனடியாக மூட வேண்டும் இந்த தோண்டப்பட்ட குழி களால் பல இடங்களில் விபத்து நடக்கிறது.

    அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட கோவில் நிலங்களை ஆக்கிரமித்து உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக மீட்க வேண் டும் என வலியுறுத்தப்பட்டது.

    சாலை, குடிநீர் வசதி போன்ற எந்தவித அடிப்படை வசதிகளும் செய்யாமல் வஞ்சிக்கும் அருப்புக்கோட்டை நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கோஷமிட்டனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கஜேந்திரன், கிழக்கு மாவட்ட பொது செயலாளர் சீதாராமன், நகர பொதுச்செயலாளர் பாண்டி ஓ.பி.சி. அணி மாவட்ட தலைவர் ஆசைத்தம்பி மற்றும் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

    28-ந் தேதி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்திலும் ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட பொருளாளர் ராஜேஸ்வரி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வட்டத் தலைவர் பாலசுப்ரமணியன், செயலாளர் பத்மாவதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் கருணை அடிப்படையில் வாரிசுக்கு வேலை வழங்க வேண்டும், மாற்றுத்திறனாளி கிராம உதவியாளர்களுக்கு வழங்கப்பட்ட எரிபொருள் படி ரூ.2,500 நிறுத்தியதை கண்டிப்பது, சி.பி.எஸ். திட்டத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கும், இறந்தவர்களுக்கு பிடித்தம் செய்த தொகையை வழங்காமல் காலம் தாழ்த்துவதை கண்டிப்பது உட்பட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற டிசம்பர் 7-ந் தேதி தாலுக்கா அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டத்திலும், 19-ந் தேதி ஒரு நாள் விடுப்பு போராட்டத்திலும், 28-ந் தேதி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்திலும் ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளது.

    அரியலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

    அரியலூர் 

    அரியலூர் மாவட்டத்திலுள்ள மின்வாரிய அலுவலகங்கள் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்பாட்டத்தில், மின்சார வாரியத்தை தனியார்மயமாக்கும் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை தமிழக அரசு நிராகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. அரியலூர் ராஜாஜி நகரிலுள்ள மின்சார வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு அக்கட்சியின் ஒன்றியச் செயலர் அருண்பாண்டியன் தலைமை வகித்தார். ஒன்றியக் குழு உறுப்பினர் ஆர்.சிற்றம்பலம்,மாவட்டக் குழு உறுப்பினர் பி.துரைசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.கிருஷ்ணன் மற்றும் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் மலர்கொடி, ஆதிலட்சுமி, மங்கையர்கரசி உள்ளிட்டோர் கலந்து கொண்டு ஸ்மார்ட் மீட்டர் திட்டத்துக்கு எதிராக முழக்கமிட்டனர். பின்னர் அவர்கள், மின்சார வாரிய செயற்பொறியாளரை சந்தித்து,இத்திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்தக் கூடாது என வலியுறுத்தி மனு அளித்தனர்.

    அரியலூரில் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

    அரியலூர்,  

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் பருவநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்ட முந்திரிக்கும், படைப்புழுக்களின் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ள மக்காச்சோள பயிர்களுக்கும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும். அதில் மக்காச்சோள பாதிப்புக்கு ஏக்கருக்கு ரூ.40ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்துக்கு அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் பூ.விஸ்வநாதன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் பாதிக்கப்பட்ட முந்திரி, மக்காச்சோள பயிர்களுடன் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    • விளைநிலம் கையகப்படுத்துவதை கைவிடக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • நில ஒருங்கிணைப்பு சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    தஞ்சாவூர்:

    திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சிப்காட் வளாகத்திற்கு மேல்மா விவசாயிகளின் விளைநிலம் கையகப்படுத்துவதை அரசு கைவிட வேண்டும்.

    சிப்காட் வளாகத்தில் தொழில் பூங்கா அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராடிய விவசாயிகள் மீது போடப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று தஞ்சை ரெயிலடியில் சமவெளி விவசாயிகள் இயக்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதற்கு அதன் ஒருங்கிணைப்பாளர் பொறியாளர் பழனிராஜன் தலைமை வகித்தார்.

    கோரிக்கைகளை விளக்கி உலகத் தமிழர் பேரமைப்பின் துணைத் தலைவர் அய்யனாபுரம்.

    முருகேசன், மக்கள் அதிகாரம் மாநில பொருளாளர் காளியப்பன், சி. பி. எம். எல் மக்கள் விடுதலை பொதுச் செயலாளர் விடுதலைகுமரன், மாவட்ட செயலாளர் அருணாச்சலம் ஆகியோர் பேசினர்.

    ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தியும், நில ஒருங்கிணைப்பு சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    இதில் ஜனநாயக விவசாய சங்க மாநில தலைவர் ராமர் , தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாவட்ட தலைவர் செந்தில்குமார், ஐக்கிய விவசாயிகள் முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் என்.வி.கண்ணன், ஜனநாயக மாதர் சங்க மாநில நிர்வாகி தமிழ்ச்செல்வி, விடுதலை தமிழ் புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் முகிலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் இடதுசாரிகள் பொதுமேடை பொது மேடை ஒருங்கிணைப்பாளர் துரை.மதிவாணன் நன்றி கூறினார்.

    • பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகம் முன் வருவாய் கிராம உதவியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • வட்ட செயலாளர் குமாரசாமி, வட்ட பொருளாளர் சுகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டையில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தினர் தாலுகா அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    எரிபொருள் படி ரூ. 2500 வழங்க வேண்டும். 1.1.2004 வருடத்துக்கு பிறகு பணிக்கு வந்தவர்களுக்கு பழைய முறையிலான ஓய்வு ஊதியம் வழங்க வேண்டும். சி.பி.எஸ். திட்டத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கும், இறந்து போனவர்களுக்கும் அவர்களிடம் பிடித்தம் செய்த தொகையை வழங்க வேண்டும். கிராம உதவியாளர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம், வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட துணை தலைவர் மணிகண்டன் தலைமை தாங்கினார். வட்ட செயலாளர் லாலாஜி, பொருளாளர் முனிவேல், துணைத் தலைவர் கருணாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகம் முன் வருவாய் கிராம உதவியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு வருவாய் கிராம உதவியாளர்கள் சங்க மாநில பொதுச் செயலாளர் ரவி, மாவட்ட பொருளாளர் குணசேகர், சுரேஷ்குமார், பொன்னேரி வட்ட தலைவர் ரவிக்குமார், வட்ட செயலாளர் குமாரசாமி, வட்ட பொருளாளர் சுகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் காங்கயம் வட்ட கிளை தலைவர் சந்திரசேகரன் தலைமை தாங்கினார்.
    • சங்க நிர்வாகிகள், வருவாய் கிராம ஊழியர்கள் உள்பட பலர் திரளாக கலந்து கொண்டனர்.

    முத்தூர்:

    திருப்பூர் மாவட்டம் காங்கயம் தாசில்தார் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் காங்கயம் வட்ட கிளை தலைவர் சந்திரசேகரன் தலைமை தாங்கினார்.

    இதில் தமிழ்நாடு வருவாய் ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்கி அரசு ஊழியர் பட்டியல் டி-பிரிவில் இணைக்க வேண்டும். 23 ஆண்டுகளாக பெற்று வந்த கருணை அடிப்படையிலான வாரிசுக்கு வேலை திரும்ப வழங்கிட வேண்டும் உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதில் சங்க நிர்வாகிகள், வருவாய் கிராம ஊழியர்கள் உள்பட பலர் திரளாக கலந்து கொண்டனர்.

    • அய்யப்பன் எம்.எல்.ஏ. தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • 58 கிராம கால்வாயில் தண்ணீர் திறக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மதுரை

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி, தேனி சாலை யில் முன்னாள் முதல்வர், ஓ.பன்னீர்செல்வம் உத்தரவுப்படி உசிலம்பட்டி 58 கிராம கால்வாயில் தண்ணீர் திறக்க கோரியும், தி.மு.க. அரசை கண்டித்தும் ஓ.பி.எஸ்.அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    தெற்கு மாவட்ட செயலாளர் அய்யப்பன் எம்.எல்.ஏ. தலைமை வகித்தார். இளைஞர் அணி மாநில செயலாளர் வி.ஆர்.ராஜ்மோகன் முன்னிலை வகித்தார். வடக்கு மாவட்ட செயலாளர் முருகேசன், நகர் மாவட்ட செயலாளர் முன்னாள் எம்.பி. கோபால கிருஷ்ணன் ஆகியோர் வரவேற்று பேசினர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் 58 கிராம கால்வாயில் தண்ணீர் திறந்து விட வலியுறுத்தி கோசங்கள் எழுப்பப்பட்டது. மேலும் அய்யப்பன் எம்.எல்.ஏ. பேசுகையில், 58 கிராம கால்வாயில் உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும். இல்லையென்றால் தொடர் உண்ணாவிரதப் போ ராட்டம் நடத்துவோம். கடையடைப்பு, மறியல் போராட்டத்திலும் ஈடுபடுவோம் என்றார்.

    இதில் ஊராட்சி மன்ற தலைவர்கள் பாரப்பத்தி முத்தையா, காசிநாதன், மாவட்ட ஓட்டுநர் அணி செயலாளர் பிரபு, மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கார்த்திகைசாமி, முன்னாள் எம்.எல்.ஏ. பாண்டியம்மாள், அவைத்தலைவர் வேலுச்சாமி, நகர செய லாளர் சசிக்குமார், உசிலம் பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் ஜான்சன், வடக்கு ஒன்றிய செயலாளர் கோஸ்மீன், செல்லம்பட்டி ஒன்றிய செயலாளர்கள் போத்திராஜன், அய்ய னார்குளம் ஜெயக்குமார், திருமங்கலம் ஒன்றிய செய லாளர் சிவா, சேடப்பட்டி ஒன்றிய செயலாளர்கள் அய்யர், கார்த்திகேயன், செல்லம்பட்டி சவுந்திர பாண்டி, வேங்கைமார்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வேளாண் நிலம் பறிப்புக்காக நில ஒருங்கிணைப்பு சட்டமும் கொண்டு வந்துள்ளார்கள்.
    • செய்யாறு மூன்றாம் அலகு சிப்காட் திட்டத்தை முற்றிலுமாக கைவிட வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் இன்று காவிரி உரிமை மீட்பு குழு ஒருங்கிணைப்பாளர் மணியரசன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது

    திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் பகுதியில் ஏற்கனவே இரண்டு சிப்காட் அலகுகள் இருக்கும் போது மூன்றாவது சிப்காட் அலகு தேவையில்லாதது. அங்கு பணிபுரிபவர்களில் 30 சதவீதம் பேர் இந்திக்காரர்கள்.

    மூன்றாவது சிப்காட் அலகுக்காக தமிழ்நாடு அரசு அப்பகுதியில் 3174 ஏக்கரில் விளைநிலங்களை கைப்பற்றுவதை எதிர்த்து விவசாயிகள் கடந்த நான்கு மாதங்களுக்கு மேல் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    இதில் விவசாயிகள் 7 பேர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டது.

    பல தரப்பினர் எதிர்ப்புகளுக்குப் பிறகு ஆறு விவசாயிகள் மீதான குண்டர் சட்டத்தை நீக்கினார்கள். ஆனால் பொறியாளரும் தீவிர சாகுபடியாளருமான அருள் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை அரசு ரத்து செய்யவில்லை. தற்போது அருள் பாளையங்கோட்டை சிறையில் உள்ளார்.

    சென்னை- சேலம் எட்டு வழி சாலைக்கு எதிராக போராடியவர் அருள்.

    அதன் அடிப்படையில் அவர் மீது குண்டர் சட்டத்தை நீக்கவில்லை என தெரிகிறது.

    உடனடியாக அருள் மீது உள்ள குண்டர் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.

    மேலும் சிப்காட்டுக்கு எதிராக போராடிய விவசாயிகள் மீது போடப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டும்.

    திமுக அரசு தேர்தல் வாக்குறுதியில் விவசாய உற்பத்தி பாதிக்கப்படும் வகையில் விவசாயிகளின் ஒப்புதல் இல்லாமல் விளை நிலங்களை வேறு பயன்பாட்டிற்கு மாற்றுவது தடுக்கப்பட்டு விளைநிலங்கள் பாதுகாக்கப்படும் என கூறியது.

    ஆனால் ஆட்சிக்கு வந்த பின் அதற்கு நேர் எதிராக செயல்பட்டு கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக வேளாண் நிலங்களை பறிக்கிறார்கள்.

    மேலும் வேளாண் நிலம் பறிப்புக்காக நில ஒருங்கிணைப்பு சட்டமும் கொண்டு வந்துள்ளார்கள்.

    வேளாண்மையை அழித்து தொழிற்சாலைகளை பெருக்குவது கிராமங்கள் அளிப்பதாகும். மிகையான தொழிற்சாலை பெருக்கம் மண்ணையும் நீரையும் நஞ்சாக்கும்.

    எனவே நில ஒருங்கிணைப்பு சட்டத்தை நீக்க வேண்டும்.

    செய்யாறு மூன்றாம் அலகு சிப்காட் திட்டத்தை முற்றிலுமாக கைவிட வேண்டும். விவசாயிகளிடம் இருந்து பறித்த நிலங்களை அவர்களுக்கு திருப்பிக் கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிற 30-ம் தேதி தஞ்சை ரயில் நிலையம் முன்பு காவிரி உரிமை மீட்பு குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

    இதில் அனைவரும் கலந்து கொண்டு ஆதரவு அளிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது பொருளாளர் மணிமொழியன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் பழ. ராஜேந்திரன், சாமி கரிகாலன், செயற்குழு வெள்ளாம் பெரம்பூர் துரை ரமேஷ், திருவாரூர் கலைச்செல்வன், ஜெயக்குமார், தமிழ் தேசியப் பேரியக்கம் மாவட்ட செயலாளர் வைகறை , இந்திய ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் சிமியோன் சேவியர்ராஜ் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    • சிறையில் உள்ள விவசாயிகளை விடுதலை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • குண்டர் தடுப்பு சட்டத்தை ரத்து செய்யக்கோரி கோரிக்கை மனு அளித்தனர்.

    சீர்காழி:

    சீர்காழி புதிய பேருந்து நிலையம் அருகே தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் சார்பில் விவசாயிகளின் மீது போடப்பட்ட வழக்குகளை ரத்து செய்யக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் மேல்மா சிப்காட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிய விவசாயிகள் மீது போட ப்பட்ட குண்டர் சட்டத்தை கண்டித்தும், சிறையில் உள்ள விவசா யிகளை விடுதலை செய்ய கோரியும், விவசாயிகளின் மீது போடப்பட்ட வழக்குகளை ரத்து செய்யக்கோரியும், நில ஒருங்கிணைப்பு சட்டம் 2023 திரும்ப பெறக்கோரியும் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் சீர்காழி நகர தலைவர் கோவி.நடராஜன் தலைமை வகித்தார்.

    தமிழக காவிரி விவசாயிகள் சங்கங்களின் மாவட்ட செயலாளர் விஸ்வநாதன், பொருளாளர் கணேசன், இயற்கை விவசாயி நலம்.சுதாகர், அபாஸ்அலி,அரவிந்தன்,செந்தில்முருகன் முன்னிலை வகித்தனர். தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க மாவட்டத்தலைவர் ஆ.ராமலிங்கம் ,ஜெக.சண்முகம் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

    அதனை தொடர்ந்து சீர்காழி கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு விவசா யிகள் பேரணியாக சென்று உ.அர்ச்சனாவிடம் விவசாயிகளின் மீது போடப்பட்ட குண்டர் தடுப்பு சட்டத்தை ரத்து செய்யக்கோரி கோரிக்கை மனுவினை அளித்தனர்.

    தமிழக அரசு உரிய நடவடி க்கை எடுக்கவில்லை என்றால் அடுத்த கட்டமாக மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம் என தெரிவித்தனர்.

    • தென்காசி இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
    • உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் தெரிவித்ததை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

    தென்காசி:

    பாவூர்சத்திரம், தென்காசி, செங்கோட்டை, குற்றாலம், சுரண்டை, கடையநல்லூர், கடையம், இடைகால், ஆலங்குளம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த அனைத்து ஓட்டுநர் நல சங்கத்தை சேர்ந்த வேன் டிரைவர்கள் மற்றும் உரிமையாளர்கள் சுமார் 150-க்கும் மேற்பட்டோர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தென்காசி வட்டார போக்குவரத்து அலுவலகத்தை முற்றுகை யிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது அவர்கள், வரி உயர்வு சம்பந்தமாக தெளிவு வேண்டும், ஆயுள் வரியை 15 ஆண்டுகளாக நீட்டிக்க வேண்டும், சொந்த பயன்பாடு வாகனங்களை வாடகைக்கு ஓட்டுவதை கண்டிக்க வேண்டும், ஆன்லைன் அபராதங்களை தடை செய்தல், சாலை வரிகளை கட்டுவதற்கு கால அவகாசம் அளித்தல், சாலை வரிகளை கட்டிய வாகனங்களுக்கு எப்.சி. காட்டுவதற்கு கால அவகாசம் வழங்குதல் உள்ளிட்ட தங்களின் கோரிக்கைகளை பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர்.

    அவர்களுடன், தென்காசி இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க ஆர்.டி.ஓ. அலுவலக அதிகாரிகள் தெரிவித்ததை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். ஆர்ப்பாட்டத்தில் பாவூர்சத்திரம் பகுதி மோட்டார் வாகன ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் நல சங்கத்தின் தலைவர் ஆறுமுகம், பொருளாளர் ஆனந்த், செயலாளர் தங்கராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சிப்காட் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி கோஷம்
    • 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்பு

    கோவை,

    திருவண்ணாமலை மாவட்டம் மேல்மா சிப்காட் திட்டத்தை ரத்து செய்யக்கோரியும், போராடிய விவசாயிகள் மீது பொய் வழக்கு போட்டு குண்டர் சட்டத்தில் கைது செய்ததை கண்டித்தும் தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் போராட்டக் குழு சார்பில் கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

    தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைவர் அரசேந்திரன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு விவசாய பாதுகாப்பு நலசங்க தலைவர் சுப்பிரமணியம், தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்க அமைப்பு செயலாளர் பிரபாகரன், கோவை கிழக்கு மாவட்ட செயலாளர் பஞ்சலிங்கம், மாவட்ட செயலாளர் மந்தராசலம், தமிழ்நாடு கட்சிசார்பற்ற விவசாய சங்க பொருளாளர் டாக்டர் தங்கராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தமிழக அரசை கண்டித்து கோசங்கள் எழுப்பினர். 

    ×