search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அருப்புக்கோட்டை"

    • அருப்புக்கோட்டையில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • ஆக்கிரமிப்புகளை மீட்க வலியுறுத்தப்பட்டது.

    அருப்புக்கோட்டை

    அருப்புக்கோட்டையில் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் கிழக்கு மாவட்ட தலைவர் பாண்டு ரங்கன் தலைமை தாங்கி னார். மாவட்ட பார்வையாளர் வெற்றி வேல் முன்னிலை வகித்தார்.

    அருப்புக்கோட்டையில் உள்ள செவல் கண்மாய் துமைக்குளம் கண்மாய் பெரியகண்மாகளை சூழ்ந் துள்ள ஆகாயத்தாமரை களை அகற்ற வேண்டும். நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டும், நகர் பகுதியில் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்திற்காக தோண்டப்பட்ட குழிகளை உடனடியாக மூட வேண்டும் இந்த தோண்டப்பட்ட குழி களால் பல இடங்களில் விபத்து நடக்கிறது.

    அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட கோவில் நிலங்களை ஆக்கிரமித்து உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக மீட்க வேண் டும் என வலியுறுத்தப்பட்டது.

    சாலை, குடிநீர் வசதி போன்ற எந்தவித அடிப்படை வசதிகளும் செய்யாமல் வஞ்சிக்கும் அருப்புக்கோட்டை நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கோஷமிட்டனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கஜேந்திரன், கிழக்கு மாவட்ட பொது செயலாளர் சீதாராமன், நகர பொதுச்செயலாளர் பாண்டி ஓ.பி.சி. அணி மாவட்ட தலைவர் ஆசைத்தம்பி மற்றும் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

    • அருப்புக்கோட்டையில் யோகா நிகழ்ச்சி நடந்தது.
    • மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.

    அருப்புக்கோட்டை

    உலக யோகா தினத்தை முன்னிட்டு அருப்புக் க்கோட்டை நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட எஸ்.பி.கே. கல்லூரியில் யோகா தினம் கொண்டா டப்பட்டது. இதில் பங்கேற்ற மாணவ-மாணவிகளுக்கு மன வளக்கலை மன்றத்தி னர் யோகா பயிற்சியை செய்து காட்டினர்.

    மாணவ-மாணவிகளும் இந்த பயிற்சியில் பங்கேற்ற னர்.

    இந்த நிகழ்ச்சியில் கல்லூரி செயலாளர். முத்து தினகரன், முதல்வர் செல்லத்தாய், துணை முதல்வர் பால் ஜாக்குலின் பெரியநாயகம் மற்றும் மனவளக்கலை மன்றத்தை சேர்ந்த தலைவர் ஜோதிமணி, முத்து முருகன், சிவராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். ஆசிரியர் காசிமாயன் நன்றி கூறினார்.

    • அருப்புக்கோட்டை யூனியனில் வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • சூரியகுமாரி, காஜாமைதீன் பந்தே நவாஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    விருதுநகர்

    அருப்புக்கோட்டை யூனியனுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் மூலம் நடைபெற்று வரும் பணிகள் குறித்து கலெக்டர் ஜெய சீலன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், பெரிய வள்ளிகுளம் ஊராட்சியில் 15-வது நிதிக்குழுமானிய திட்டத்தின் கீழ் ரூ.60 ஆயிரம் மதிப்பில் பள்ளிக்கூட சமையலறை புனரமைப்பு பணிகளையும், பெரிய வள்ளிகுளம் ஊராட்சியில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.3 லட்சம் மதிப்பில் குளியலறை கட்டுமான பணிகளையும், குல்லூர்சந்தை இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தில் 70 வீடுகள் ரூ.351.30 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுவரும் பணிகளையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    குல்லூர்சந்தை, வண்ணான் ஊரணியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் மதிப்பில் மேற்குவரத்து கால்வாய் பணிகள் நடைபெற்று வருவதையும், பாலவநத்தம் ஊராட்சியில் பிரதமரின் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் ரூ.2.40 லட்சம் மானியத்தில் வீடு கட்டப்பட்டுவரும் பணிகளையும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.76 ஆயிரம் மதிப்பில் நூலக கட்டிட பராமரிப்பு பணிகளையும் கலெக்டர் பார்வையிட்டார்.

    செட்டிபட்டி கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.8.8 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள கதிர் அடிக்கும் களத்தையும், வடக்கு ஊரணியில் ரூ.12.50 லட்சம் மதிப்பில் தடுப்புச்சுவர் மற்றும் கரை பலப்படுத்துதல் பணிகள் முடிக்கப்பட்டுள்ளதையும், கோபாலபுரம் ஊராட்சியில் ரூ.12.98 லட்சம் மதிப்பில் புதிய அங்கன் வாடி மைய கட்டிட பணிகளையும், சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.9 லட்சம் மதிப்பில் நாடக மேடை அமைக்கப்பட்டு வரும் பணிகளையும் கலெக்டர் ஜெயசீலன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மேற்கண்ட பணிகளை தரமாகவும், விரைந்து முடித்தும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு அலுவலர்களை கலெக்டர் அறிவுறுத்தினார்.

    இந்த ஆய்வின்போது திட்ட இயக்குநர் தண்டபாணி, செயற்பொ றியாளர் இந்துமதி, வட்டாட்சியர் அறிவழகன், வட்டார வளர்ச்சி அலுவர்கள் சூரியகுமாரி, காஜாமைதீன் பந்தே நவாஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    • அருப்புக்கோட்டையில் கனமழை பெய்தது.
    • சுற்றுப்பகுதிகளில் 43 மில்லி மீட்டர் மழை செய்துள்ளது.

    அருப்புக்கோட்டை

    தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை இருக்கும் என்று வானிலை மையம் அறிவித்திருந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் நேற்று மதியம் கனமழை பெய்தது. இதனால் நகர் பகுதியில் வெள்ளம் போல் காட்சி அளித்தது. மணி நகரம், ஓடை தெரு குடியிருப்பு பகுதியில் மழை நீர் மற்றும் சாக்கடை நீர் கலந்து வெள்ளம் போல் அந்த பகுதியை சூழ்ந்தது. மழை காலங்களில் இந்த பகுதிகளில் சிறிய அளவிலான சாக்கடைகள் உள்ளதால் அந்த பகுதிக்கு வரும் மக்கள் வழி தெரியாமல் சாக்கடையில் விழுந்து விடுகிறார்கள் என்று வேதனை தெரிவித்தனர்.

    நேற்று பெய்த மழையில் அங்குள்ள சாக்கடையில் விழுந்த நபரை வாலிபர் காப்பாற்றினார். 20 வருடங்களுக்கு மேலாக ஓடைகளை தூர் வாராமல் இருப்பதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. உடனடியாக ஓடைகளை தூர்வாரி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். நேற்று அருப்புக்கோட்டை மற்றும் சுற்றுப்பகுதிகளில் 43 மில்லி மீட்டர் மழை செய்துள்ளது.

    • அருப்புக்கோட்டையில் பள்ளி மாணவர்கள் செல்லும்சாலையை சீரமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    • ெரயில்வே பீடர் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது.

    பாலையம்பட்டி,

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ெரயில்வே பீடர் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. சிமெண்டு சாலை முழுவதும் சேதமடைந்து கற்கள் வெளியே தெரியும் அளவுக்கு சாலை சேதமடைந்துள்ளது.

    இந்தச் சாலையை தினமும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் சைக்கிளில் இந்த சாலை வழியாக பள்ளிக்கு சென்று வருகின்றனர்.

    இந்த சாலை சேதமடைந்து காணப்படுவதால் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.மோசமான சாலையால் பள்ளி மாணவர்களின் சைக்கிள்களும், பொதுமக்களின் இருசக்கர வாகனங்களும் பழுதடைகின்றன. மழைக்காலங்களில் இந்த சாலையில் மழைநீர் கழிவு நீருடன் கலந்து குளம்போல் தேங்கி நிற்பதால் பள்ளம் இருப்பது தெரியாமல் சைக்கிள்களில் செல்லும் மாணவ-மாணவிகள், இருசக்கர வாகனங்களில் செல்லும் பொதுமக்கள் தவறி கீழே விழுந்து விபத்து ஏற்படுகிறது. பள்ளி மாணவர்களின் நலன் கருதி இந்தச் சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள், பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    • அருப்புக்கோட்டையில் ஆவின் பாலகம் உணவகமாக மாறியது.
    • அங்கு வேலை பார்ப்பவர்களில் சிலர் தன்னிச்சையாக முடிவு எடுத்து உணவுகளை விற்று வருகின்றனர்.

    அருப்புக்கோட்டை

    அருப்புக்கோட்டை நகராட்சி பகுதிகளில் புதிய பேருந்து நிலையம் மற்றும் மதுரை சாலையில் ஆவின் பாலகங்கள் இயங்கி வருகின்றன. இங்கு சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பால் மற்றும் அதனை சார்ந்த பொருட்களை வாங்கி வருகின்றனர்.

    இந்த நிலையில் மேற்கண்ட 2 ஆவின் பாலகங்களில் ஆவின் பொருட்களைத் தவிர உணவுப்பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. காலையில் வடை மற்றும் பூரி போன்ற உணவுகளை பொதுமக்கள் வாங்கிச் செல்கின்றனர்.

    ஆனால் பாலகங்களில் பால் பொருட்கள் பெரும்பாலான நேரங்களில் கிடைப்பதில்லை. அதற்கு பதிலாக அங்கு வேலை பார்ப்பவர்களில் சிலர் தன்னிச்சையாக முடிவு எடுத்து உணவுகளை விற்று வருகின்றனர். இதனால் மேற்கண்ட 2 ஆவின் பாலகங்களும் நஷ்டத்சதை சந்திக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    எனவே மாவட்ட நிர்வாகம் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுத்து ஆவின் பாலகங்களை உணவகமாக மாறிய நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அந்தப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×