அருப்புக்கோட்டையில் கனமழை

அருப்புக்கோட்டையில் கனமழை பெய்தது. சுற்றுப்பகுதிகளில் 43 மில்லி மீட்டர் மழை செய்துள்ளது.
அருப்புக்கோட்டையில் கனமழை
Published on

அருப்புக்கோட்டை

தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை இருக்கும் என்று வானிலை மையம் அறிவித்திருந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் நேற்று மதியம் கனமழை பெய்தது. இதனால் நகர் பகுதியில் வெள்ளம் போல் காட்சி அளித்தது. மணி நகரம், ஓடை தெரு குடியிருப்பு பகுதியில் மழை நீர் மற்றும் சாக்கடை நீர் கலந்து வெள்ளம் போல் அந்த பகுதியை சூழ்ந்தது. மழை காலங்களில் இந்த பகுதிகளில் சிறிய அளவிலான சாக்கடைகள் உள்ளதால் அந்த பகுதிக்கு வரும் மக்கள் வழி தெரியாமல் சாக்கடையில் விழுந்து விடுகிறார்கள் என்று வேதனை தெரிவித்தனர்.

நேற்று பெய்த மழையில் அங்குள்ள சாக்கடையில் விழுந்த நபரை வாலிபர் காப்பாற்றினார். 20 வருடங்களுக்கு மேலாக ஓடைகளை தூர் வாராமல் இருப்பதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. உடனடியாக ஓடைகளை தூர்வாரி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். நேற்று அருப்புக்கோட்டை மற்றும் சுற்றுப்பகுதிகளில் 43 மில்லி மீட்டர் மழை செய்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com