search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆடுகள் பலி"

    • முதுகுளத்தூரில் இருந்து கமுதி வழியாக அருப்புக்கோட்டைக்கு செல்லும் தனியார் பஸ் அந்த வழியாக வந்தது.
    • அதிவேகமாக வந்த பஸ் ஆடுகள் மீது மோதியது. இதில் 32 ஆடுகள் பஸ் சக்கரத்தில் சிக்கி படுகாயமடைந்து பரிதாபமாக இறந்தன.

    கமுதி:

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்த கொல்லங்குளத்தை சேர்ந்தவர் திருநாவுக்கரசு. இவர் 300-க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார். அவர் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள கோவிலாங்குளத்தில் கிடை போட்டு ஆடுகளை தினமும் மேய்ச்சலுக்கு கொண்டு சென்று வந்தார்.

    இந்த நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருநாவுக்கரசு தனது சொந்த ஊர் செல்ல முடிவு செய்தார். இதை தொடர்ந்து கோவிலாங்குளத்தில் இருந்து ஆடுகளை ஓட்டிக்கொண்டு கொல்லங்குளத்திற்கு புறப்பட்டார். அவர் இன்று காலை கமுதி அருகே உள்ள பாக்கு வெட்டி பாலத்தில் வந்து கொண்டிருந்தார்.

    அப்போது முதுகுளத்தூரில் இருந்து கமுதி வழியாக அருப்புக்கோட்டைக்கு செல்லும் தனியார் பஸ் அந்த வழியாக வந்தது. அதிவேகமாக வந்த அந்த பஸ் ஆடுகள் மீது மோதியது. இதில் 32 ஆடுகள் பஸ் சக்கரத்தில் சிக்கி படுகாயமடைந்து பரிதாபமாக இறந்தன. பலியான ஆடுகள் சாலையில் சிதறி கிடந்தன. இதனால் அந்த சாலை முழுவதும் ஆட்டின் சதைகள் மற்றும் ரத்தம் சிதறி கிடந்தது. இறந்த ஆடுகளின் மதிப்பு ரூ.2½ லட்சம் என்று கூறப்படுகிறது.

    இதுபற்றி திருநாவுக்கரசு பேரையூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சிவசாமி வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய பஸ் டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகிறார். பஸ் மோதியதில் 32 ஆடுகள் பலியான சம்பவம் அந்த பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தியது.

    • ஆடுகளை ஓட்டி வந்த லட்சுமணன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.
    • சாலை முழுவதும் ஆடுகளின் ரத்தம் வெள்ளமாக ஓடியதால் அந்த இடம் முழுவதும் பெரும் பரபரப்பாக இருந்தது.

    வேப்பூர்:

    சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் பகுதியை சேர்ந்தவர் காசிநாதன். அவரது மகன் லட்சுமணன் (வயது 40) ஆடுகள் மேய்த்து வந்தார். இவர்களது உறவினர்களான ராமர், செல்வம், அய்யப்பன் ஆண்டுதோறும் ஆடுகளை வெவ்வேறு பகுதிகளுக்கு கொண்டு சென்று அங்கு ஆடுகளுக்கு பட்டியமைத்து கிடை போட்டு வருவது வழக்கம்.

    அதன்படி காசிநாதன் சுமார் 300 ஆடுகளுடன் கள்ளக்குறிச்சி மாவட்டம் எலவனாசூர் கோட்டை பகுதிகளில் ஆடுகளுக்கு பட்டியமைத்து விற்பனை செய்து வந்தனர்.

    நேற்று இரவு சுமார் 11 மணியளவில் ஆடுகளை காசிநாதன், அவரது மகன் லட்சுமணன் எலவனாசூர் கோட்டையில் இருந்து வேப்பூருக்கு தேசிய நெடுஞ்சாலை வழியாக ஓட்டி சென்றனர். அப்போது சென்னையில் இருந்து திருச்சி நோக்கி அரசு பஸ் ஒன்று வந்தது.

    அந்த பஸ் வேப்பூர்-சேப்பாக்கம் மணி முக்தாறு அருகே வந்த போது பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் சென்ற ஆடுகள் கூட்டத்தில் புகுந்தது. மேலும் லட்சுமணன் மீதும் பஸ் வேகமாக மோதியது.

    இந்த விபத்தில் 125 ஆடுகள் பலியானது. ஆடுகளை ஓட்டி வந்த லட்சுமணன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த விபத்தால் சாலை முழுவதும் ஆடுகளின் உடல் சாலையின் நீண்ட தூரம் கிடந்தது.

    மேலும் சாலை முழுவதும் ஆடுகளின் ரத்தம் வெள்ளம் போல் ஓடியது.

    தகவல் அறிந்த வேப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் இறந்த லட்சுமணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருத்தாச்சலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இறந்த ஆடுகளை எல்லாம் சாலையிலிருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்.

    மேலும் கால்நடை மருத்துவர் சம்பவ இடத்திற்கு வந்து விபத்தில் இறந்த ஆடுகள் எத்தனை மற்றும் படுகாயம் அடைந்த ஆடுகள் குறித்து கணக்கீடு செய்து வருகின்றனர். மேலும் இது குறித்து காசிநாதன் புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சாலை முழுவதும் ஆடுகளின் ரத்தம் வெள்ளமாக ஓடியதால் அந்த இடம் முழுவதும் பெரும் பரபரப்பாக இருந்தது.

    • தகவல் அறிந்த சாத்தூர் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
    • சிவகாசி தேவர்குளம் பகுதியைச் சேர்ந்த அனந்தன் மது போதையில் காரை ஓட்டி வந்தது தெரிய வந்தது.

    சாத்தூர்:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகில் உள்ள செவல்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சிங்கம். இவரது மகன் பாண்டி முருகன் (வயது 23) என்பவர் 500 ஆடுகளுக்கு மேல் வளர்த்து வருகிறார். இவர் அவ்வப்போது பல்வேறு இடங்களில் கிடை அமைத்து வருவது வழக்கம்.

    இந்நிலையில் தற்போது சாத்தூர் அருகில் உள்ள சின்னக்காமன்பட்டி பகுதியில் கிடை ஆடுகள் வளர்த்து வருகிறார். நேற்று இரவு சின்னகாமன்பட்டி காட்டுப்பகுதியில் மேய்ச்சலுக்கு சென்ற சில ஆடுகள் திரும்ப வராததால் அப்பகுதியில் பாண்டி முருகன் தேடி அலைந்து உள்ளார்.

    காணாமல் போன 50 ஆடுகளை கண்டு பிடித்து மீண்டும் கிடை போட்ட இடத்திற்கு அழைத்து வந்துள்ளார். அப்போது சின்னக்காமன்பட்டி பஸ் நிறுத்தம் அருகே சாத்தூர்-சிவகாசி சாலையை ஆடுகள் கடந்து சென்று கொண்டிருந்தபோது மதுரையில் இருந்து சிவகாசி நோக்கி வந்த கார் ஒன்று அதிவேகமாக வந்து ஆடுகள் மீது மோதியது. இதில் ஏராளமான ஆடுகள் தூக்கி வீசப்பட்டன. இதனால் பலத்த காயம் அடைந்த 21 ஆடுகள் சம்பவ இடத்திலேயே பலியாகின.

    தகவல் அறிந்த சாத்தூர் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது சிவகாசி தேவர்குளம் பகுதியைச் சேர்ந்த அனந்தன் (43) இவர் மதுபோதையில் காரை ஓட்டி வந்தது தெரிய வந்தது.

    இதனை அடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்த சாத்தூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 17 செம்மறி ஆடுகளின் கழுத்துப் பகுதியிலும், முதுகுப் பகுதியிலும், வயிற்றுப் பகுதியிலும் மர்ம விலங்குகள் கடித்து குதறி உள்ளது.
    • இறந்து போன ஆடுகள் சுமார் ரூ.2 லட்சம் மதிப்புள்ளதாகும்.

    அம்மாபேட்டை:

    அம்மாபேட்டை அருகே குருவரெட்டியூர் அடுத்துள்ள காந்திநகர் பகுதியில் சக்திவேல் (48) என்பவர் 32 செம்மறி ஆடுகள் வளர்த்து வருகிறார்.

    இவர் வழக்கம் போல் ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டு பின் மாலை வீட்டு அருகே உள்ள ஆட்டுப்பட்டியின் வெளிப்புறத்தில் கட்டி வைத்திருந்தார். இந்நிலையில் நள்ளிரவு ஒரு மணி அளவில் ஆடுகள் அலறல் சத்தம் கேட்டு வீட்டில் படுத்து இருந்த சக்திவேல் வெளியே வந்து பார்த்தார்.

    அப்போது ஆடுகள் மர்ம விலங்குகளால் கடித்து குதறி இருப்பது தெரியவந்தது. இதில் 17 செம்மறி ஆடுகள் கழுத்துப் பகுதியிலும், முதுகுப் பகுதியிலும், வயிற்றுப் பகுதியிலும் மர்ம விலங்குகள் கடித்து குதறி உள்ளது. இறந்து போன ஆடுகள் சுமார் ரூ.2 லட்சம் மதிப்புள்ளதாகும்.

    இதுகுறித்து சென்னம்பட்டி வனச்சரக அதிகாரிகளுக்கும், வருவாய்த்துறை அதிகாரிகளுக்கும், அம்மாபேட்டை போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து இன்று காலை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்திருந்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • சந்தானம் அன்றாட வாழ்வாதாரத்திற்காக ஆடுகள் வளர்த்து வருகிறார்.
    • 12 ஆடுகளை கடித்து குதறிய நாய்கள் அடுத்த கட்டமாக மனிதரை தாக்கவும் வாய்ப்புள்ளது.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே சிறுமுலை கிராமத்தில் வசித்து வரும் சந்தானம்( 53) கூலி தொழிலாளி. இவர் அன்றாட வாழ்வாதாரத்திற்காக ஆடுகள் வளர்த்து வருகிறார். இவர் தனது வீட்டிலிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு அப்பால் ஒரு கொட்டகை அமைத்து அதில் 15 ஆடுகளை கட்டி வைத்துள்ளார். நேற்று மாலை சுமார் 5 மணி அளவில் நேற்று அப்பகுதியில் உள்ள தெரு நாய்கள் ஆடுகளை கடித்துக் குதறி உள்ளது. இதில் 12 ஆடுகள் இறந்து போனது இறந்து போன ஆடுகள் மீதமுள்ள 3 ஆடுகளை ஒரு மாட்டு வண்டியில் ஏற்றிக்கொண்டு இன்று காலை திட்டக்குடி காவல் நிலையத்திற்கு வந்து புகார் அளித்துள்ளார். இது போன்று அப்பகுதியில் தொடர்ந்து ஆடுகளை தெரு நாய்கள் வெகுவாக வேட்டையாடுவது தொடர் கதையாக உள்ளது.

    இது சம்பந்தமாக ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை நேரில் தெரிவித்தும் அவர்கள் கண்டுகொள்ள வில்லை கூறி எட்டடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஒரே நாளில் 12 ஆடுகளை கடித்து குதறிய நாய்கள் அடுத்த கட்டமாக மனிதரை தாக்குவதற்கு முன்பு தெருநாய்களை பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கடந்த 10 நாட்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த சிவகுமார் என்பவருக்கு சொந்தமான 3 ஆடுகளையும் நாய்கள் கடித்து இறந்தது.
    • மேலும் துரை, பாலு ஆகியோரது 4 ஆடுகளையும் செல்வராஜ் என்பவரது கன்று குட்டியும் நாய்கள் கடித்து இறந்து விட்டது.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பிரம்மதேசம் புதூர் மேற்கு தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள் (65). இவர் 20-க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகின்றார்.

    இந்த நிலையில் நள்ளிரவு 10-க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் அவரது ஆட்டுப்பட்டிக்குள் புகுந்து கடித்ததில் 7 ஆடுகள் இறந்து விட்டது. இதேபோல் கடந்த 10 நாட்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த சிவகுமார் என்பவருக்கு சொந்தமான 3 ஆடுகளையும் நாய்கள் கடித்து இறந்தது.

    மேலும் துரை, பாலு ஆகியோரது 4 ஆடுகளையும் செல்வராஜ் என்பவரது கன்று குட்டியும் நாய்கள் கடித்து இறந்து விட்டது. இதனால் அந்தப் பகுதியில் உள்ள விவசாயிகளும், வீடுகளில் ஆடுகள் வளர்ப்போரும் இரவு நேரங்களில் மிகுந்த அச்சத்தோடு உள்ளனர்.

    இது தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் சந்தோஷ் இடம் தெரிவித்தனர். மேலும் பிரம்மதேசம் ஊராட்சி நிர்வாகத்திடம் கூறி உள்ளனர். தெருநாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரம்மதேசம் புதூர் பகுதி மக்களும் கோரிக்கை விடுத்தனர். இதனைத் தொடர்ந்து அந்தியூர் பேரூராட்சியில் தெரு நாய் பிடிப்பதற்கு கேட்டுள்ளனர். ஒரு நாய் பிடிப்பதற்கு ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.

    மேலும் அந்த நாய்களை பிடிக்க ஒரு மாத காலம் ஆகும் என்றும் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்தப் பகுதி மக்களும் விவசாயிகளும் மிகுந்த வேதனையோடும் அச்சத்தோடும் உள்ளனர்.

    • ஒவ்வொரு பயனாளிக்கும் 17 ஆயிரத்து 500 ரூபாய் அரசின் சார்பில் ஒதுக்கப்படுகிறது.
    • இறந்த ஆடுகளின் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களையும் சேகரித்து வருகின்றனர்.

    திருப்பூர்:

    கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் இலவச ஆடுகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு வட்டாரத்திலும் 100 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு ஒவ்வொருவருக்கு தலா, 3,500 ரூபாய் பெறுமானமுள்ள 5 ஆடுகள் வழங்கப்படுகிறது. அந்த வகையில் ஒவ்வொரு பயனாளிக்கும் 17 ஆயிரத்து 500 ரூபாய் அரசின் சார்பில் ஒதுக்கப்படுகிறது.

    அவிநாசி ஒன்றிய பகுதியில் சின்னேரிபாளையம், நடுவச்சேரி, புலிப்பார், தண்டுக்காரன்பாளையம் உள்ளிட்ட ஊராட்சி பகுதிகளில் பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட ஆடுகளில் சில அடுத்தடுத்து இறந்தன. இறப்புக்கான காரணம் குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டு வரும் கால்நடை பராமரிப்புத்துறையினர் பயனாளிகளுக்கு இழப்பீடு தொகையை பெற்றுத்தருவதற்கான முயற்சியையும் மேற்கொண்டு வருகின்றனர்.அதற்கேற்ப பயனாளிகளின் விவரங்கள் இறந்த ஆடுகளின் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களையும் சேகரித்து வருகின்றனர்.

    • தனது வீட்டின் அருகே கொட்டகை அமைத்து பத்துக்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார்.
    • வனத்துறையினர் கால்நடை துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

    உடுமலை :

    உடுமலை அருகே உள்ள ஊராட்சி கவுண்டன் புதூர் இப் பகுதியில் வசித்து வருபவர் விவசாயி பரணி இவர் தனது வீட்டின் அருகே கொட்டகை அமைத்து பத்துக்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார்.

    இந்நிலையில் நேற்று பரணி வழக்கமான மேய்ச்சலுக்கு ஆடுகளை திறந்துவிட கொட்டகைக்குச் சென்று உள்ளார். அப்போது அங்கு மூன்று ஆடுகளை மர்ம விலங்கு கடித்து இறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், இது தொடர்பாக வனத்துறையினர் கால்நடை துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

    இதனை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர் மர்ம விலங்குகளின் கால் தடங்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×