search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "goats died"

    • கால்நடை மருத்துவருக்கு தகவல் கொடுத்து காயம் பட்ட ஆடுகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
    • ஆடு வளர்ப்பதையே நம்பி இருக்கும் விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் அருகே உள்ள காடையூரான்வலசு என்ற பகுதியில் கனகராஜ் ( வயது 65) என்பவர் தனது தோட்டத்தில் செம்மறி ஆடுகளை வளர்த்து வருகின்றார்.நேற்று முன்தினம் 5 ந்தேதி இரவு வழக்கம்போல் ஆடுகளை தோட்டத்து பட்டியில் அடைத்து வைத்திருந்தார். மீண்டும் காலையில் சென்று பார்த்தபோது 8 ஆடுகள் இறந்து கிடந்தன. 2 ஆடுகள் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தன, அதன் பின் விசாரித்த போது நாய்கள் வாயில் ரத்த கரையுடன் சுற்றிக்கொண்டு இருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து கால்நடை மருத்துவருக்கு தகவல் கொடுத்து காயம் பட்ட ஆடுகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இறந்த ஆடுகளின் மதிப்பு ரூ. 50 ஆயிரம் ஆகும். சில மாதங்களுக்கு முன்பு இவரது தோட்டத்தில் இருந்த ஆடுகளை நாய் கடித்துள்ளது. அதேபோல் பக்கத்து தோட்டத்திலும் நாய்கள் ஆடுகளை கடித்துள்ளது.கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாச்சிபாளையம், சொரியங்கிணத்துபாளையம், கச்சேரி வலசு, சேனாபதிபாளையம் ஆகிய பகுதிகளில் நாய்கடித்து 100க்கும் மேற்பட்ட ஆடுகள் இறந்துள்ளன, ஆடு வளர்ப்பதையே நம்பி இருக்கும் விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டுமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தனது வீட்டின் அருகே கொட்டகை அமைத்து பத்துக்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார்.
    • வனத்துறையினர் கால்நடை துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

    உடுமலை :

    உடுமலை அருகே உள்ள ஊராட்சி கவுண்டன் புதூர் இப் பகுதியில் வசித்து வருபவர் விவசாயி பரணி இவர் தனது வீட்டின் அருகே கொட்டகை அமைத்து பத்துக்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார்.

    இந்நிலையில் நேற்று பரணி வழக்கமான மேய்ச்சலுக்கு ஆடுகளை திறந்துவிட கொட்டகைக்குச் சென்று உள்ளார். அப்போது அங்கு மூன்று ஆடுகளை மர்ம விலங்கு கடித்து இறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், இது தொடர்பாக வனத்துறையினர் கால்நடை துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

    இதனை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர் மர்ம விலங்குகளின் கால் தடங்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னிமலை அருகே மேய்ந்து கொண்டிருந்த 6 ஆடுகள் மீது இடி தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தன.

    சென்னிமலை:

    சென்னிமலை அருகே உள்ள வடமுகம் வெள்ளோடு அடுத்த கொம்ம கோவில் ஆதி திராவிடர் காலனி பகுதியை சேர்ந்தவர் பெருமாள் (வயது 70). இவர் ஆடு மேய்த்து பிழைத்து வருகிறார். இவர் 13 பெரிய செம்பறி ஆடுகள், 17 குட்டிகள் வளர்த்து வருகிறார். இந்த கால்நடைகளை பெருமாள் நேற்று மாலை கொம்ம கோவில் அருகில் உள்ள பாலமுருகன் குடியிருப்பு பகுதியில் மேய்த்துக் கொண்டிருந்தார்.

    அப்போது மழை வருவதற்கான அறிகுறிகள் தென்பட்டது. அந்த நேரத்தில் எதிர்பாராத விதமாக பலத்த இடி ஒன்று ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்த இடத்தில் விழுந்தது. இந்த இடி தாக்குதலில், காட்டுப்பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த 6 பெரிய செம்பறி ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தன.

    இதன் மதிப்பு ரூ.30 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது. தனது வெள்ளாடுகள் இறந்ததை பார்த்து பெருமாளும் அவரது மனைவி பாப்பாவும் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. கொம்மகோவில் பகுதியில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஊதியூர் அருகே பட்டியில் அடைக்கப்பட்டு இருந்த வெள்ளாடுகளை நாய்கள் கடித்து குதறியதில் 10 ஆடுகள் பலியானது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் ஊதியூர் அருகே உள்ள அய்யாக்குட்டி வலசு, செம்மடைக்காட்டு தோட்டத்தை சேர்ந்தவர் முத்துசாமி (76). விவசாயி. இவர் ஆடுகள் வளர்த்து வருகிறார்.

    சம்பவத்தன்று மாலை முத்துச்சாமி தனது 9 வெள்ளாடுகளை பட்டியில் அடைத்து விட்டு வீட்டிற்கு சென்றார். மறுநாள் காலை வந்து பார்த்த போது 9 ஆடுகள் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    பட்டியில் அடைக்கப்பட்டு இருந்த வெள்ளாடுகளை வெறி நாய்கள் கடித்து குதறியது தெரியவந்தது. முத்துசாமியின் ஒரு ஆடு காயங்களுடன் உயிர் பிழைத்தது.

    இதே பகுதியில் பழனிசாமி என்பவரது தோட்டத்தில் 2 வெள்ளாடுகளை வெறிநாய்கள் கடித்து கொன்றது. இறந்த ஆடுகளை கடலைக்காட்டுபுதூர் கால்நடை மருத்துவர் பரிசோதனை செய்தார்.

    இறந்த ஆடுகளின் மதிப்பு 90 ஆயிரம் ரூபாய் ஆகும். வெறிநாய் கடித்து இறந்த ஆடுகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயி முத்துசாமி, பழனிசாமி ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர்

    ×