உடுமலை அருகே மர்ம விலங்கு கடித்து 3 ஆடுகள் பலி

தனது வீட்டின் அருகே கொட்டகை அமைத்து பத்துக்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார்.வனத்துறையினர் கால்நடை துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

உடுமலை :

உடுமலை அருகே உள்ள ஊராட்சி கவுண்டன் புதூர் இப் பகுதியில் வசித்து வருபவர் விவசாயி பரணி இவர் தனது வீட்டின் அருகே கொட்டகை அமைத்து பத்துக்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று பரணி வழக்கமான மேய்ச்சலுக்கு ஆடுகளை திறந்துவிட கொட்டகைக்குச் சென்று உள்ளார். அப்போது அங்கு மூன்று ஆடுகளை மர்ம விலங்கு கடித்து இறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், இது தொடர்பாக வனத்துறையினர் கால்நடை துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர் மர்ம விலங்குகளின் கால் தடங்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com