search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கமுதி அருகே தனியார் பஸ் மோதி 32 ஆடுகள் பலி- போலீசார் விசாரணை
    X

    கமுதி அருகே தனியார் பஸ் மோதி 32 ஆடுகள் பலி- போலீசார் விசாரணை

    • முதுகுளத்தூரில் இருந்து கமுதி வழியாக அருப்புக்கோட்டைக்கு செல்லும் தனியார் பஸ் அந்த வழியாக வந்தது.
    • அதிவேகமாக வந்த பஸ் ஆடுகள் மீது மோதியது. இதில் 32 ஆடுகள் பஸ் சக்கரத்தில் சிக்கி படுகாயமடைந்து பரிதாபமாக இறந்தன.

    கமுதி:

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்த கொல்லங்குளத்தை சேர்ந்தவர் திருநாவுக்கரசு. இவர் 300-க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார். அவர் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள கோவிலாங்குளத்தில் கிடை போட்டு ஆடுகளை தினமும் மேய்ச்சலுக்கு கொண்டு சென்று வந்தார்.

    இந்த நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருநாவுக்கரசு தனது சொந்த ஊர் செல்ல முடிவு செய்தார். இதை தொடர்ந்து கோவிலாங்குளத்தில் இருந்து ஆடுகளை ஓட்டிக்கொண்டு கொல்லங்குளத்திற்கு புறப்பட்டார். அவர் இன்று காலை கமுதி அருகே உள்ள பாக்கு வெட்டி பாலத்தில் வந்து கொண்டிருந்தார்.

    அப்போது முதுகுளத்தூரில் இருந்து கமுதி வழியாக அருப்புக்கோட்டைக்கு செல்லும் தனியார் பஸ் அந்த வழியாக வந்தது. அதிவேகமாக வந்த அந்த பஸ் ஆடுகள் மீது மோதியது. இதில் 32 ஆடுகள் பஸ் சக்கரத்தில் சிக்கி படுகாயமடைந்து பரிதாபமாக இறந்தன. பலியான ஆடுகள் சாலையில் சிதறி கிடந்தன. இதனால் அந்த சாலை முழுவதும் ஆட்டின் சதைகள் மற்றும் ரத்தம் சிதறி கிடந்தது. இறந்த ஆடுகளின் மதிப்பு ரூ.2½ லட்சம் என்று கூறப்படுகிறது.

    இதுபற்றி திருநாவுக்கரசு பேரையூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சிவசாமி வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய பஸ் டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகிறார். பஸ் மோதியதில் 32 ஆடுகள் பலியான சம்பவம் அந்த பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தியது.

    Next Story
    ×