search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "goats dead"

    • தொழுவத்திற்குள் நள்ளிரவில் புகுந்த வெறிநாய் ஒன்று ஆடுகளை கடித்து குதறியது.
    • குடல் சரிந்த நிலையில் 7 ஆடுகள் இறந்த கிடப்பதை பார்த்து வேலுச்சாமி அதிர்ச்சி அடைந்தார்.

    கயத்தாறு:

    தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு பாரதிநகரை சேர்ந்தவர் வேலுச்சாமி. இவர் தனது வீட்டில் 10 ஆடுகளை வளர்த்து வந்தார். நேற்று அவர் வழக்கம்போல் ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்றுவிட்டு வீடு திரும்பினார்.

    ஆடுகளை வீட்டின் அருகே உள்ள தொழுவத்தில் கட்டியிருந்தார். இந்நிலையில் நள்ளிரவில் தொழுவத்திற்குள் புகுந்த வெறிநாய் ஒன்று ஆடுகளை கடித்து குதறியது. இதில் குடல் சரிந்த நிலையில் 7 ஆடுகள் இறந்த கிடப்பதை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து கயத்தாறு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். அதே தெருவில் வசித்து வரும் சின்னகருப்பசாமி என்பவருக்கு சொந்தமான 2 ஆடுகளையும் வெறிநாய் கடித்துக்கொன்றது.

    • கடந்த 10 நாட்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த சிவகுமார் என்பவருக்கு சொந்தமான 3 ஆடுகளையும் நாய்கள் கடித்து இறந்தது.
    • மேலும் துரை, பாலு ஆகியோரது 4 ஆடுகளையும் செல்வராஜ் என்பவரது கன்று குட்டியும் நாய்கள் கடித்து இறந்து விட்டது.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பிரம்மதேசம் புதூர் மேற்கு தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள் (65). இவர் 20-க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகின்றார்.

    இந்த நிலையில் நள்ளிரவு 10-க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் அவரது ஆட்டுப்பட்டிக்குள் புகுந்து கடித்ததில் 7 ஆடுகள் இறந்து விட்டது. இதேபோல் கடந்த 10 நாட்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த சிவகுமார் என்பவருக்கு சொந்தமான 3 ஆடுகளையும் நாய்கள் கடித்து இறந்தது.

    மேலும் துரை, பாலு ஆகியோரது 4 ஆடுகளையும் செல்வராஜ் என்பவரது கன்று குட்டியும் நாய்கள் கடித்து இறந்து விட்டது. இதனால் அந்தப் பகுதியில் உள்ள விவசாயிகளும், வீடுகளில் ஆடுகள் வளர்ப்போரும் இரவு நேரங்களில் மிகுந்த அச்சத்தோடு உள்ளனர்.

    இது தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் சந்தோஷ் இடம் தெரிவித்தனர். மேலும் பிரம்மதேசம் ஊராட்சி நிர்வாகத்திடம் கூறி உள்ளனர். தெருநாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரம்மதேசம் புதூர் பகுதி மக்களும் கோரிக்கை விடுத்தனர். இதனைத் தொடர்ந்து அந்தியூர் பேரூராட்சியில் தெரு நாய் பிடிப்பதற்கு கேட்டுள்ளனர். ஒரு நாய் பிடிப்பதற்கு ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.

    மேலும் அந்த நாய்களை பிடிக்க ஒரு மாத காலம் ஆகும் என்றும் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்தப் பகுதி மக்களும் விவசாயிகளும் மிகுந்த வேதனையோடும் அச்சத்தோடும் உள்ளனர்.

    ×