என் மலர்
உள்ளூர் செய்திகள்

கயத்தாறு அருகே வெறிநாய் கடித்து 9 ஆடுகள் பலி
- தொழுவத்திற்குள் நள்ளிரவில் புகுந்த வெறிநாய் ஒன்று ஆடுகளை கடித்து குதறியது.
- குடல் சரிந்த நிலையில் 7 ஆடுகள் இறந்த கிடப்பதை பார்த்து வேலுச்சாமி அதிர்ச்சி அடைந்தார்.
கயத்தாறு:
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு பாரதிநகரை சேர்ந்தவர் வேலுச்சாமி. இவர் தனது வீட்டில் 10 ஆடுகளை வளர்த்து வந்தார். நேற்று அவர் வழக்கம்போல் ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்றுவிட்டு வீடு திரும்பினார்.
ஆடுகளை வீட்டின் அருகே உள்ள தொழுவத்தில் கட்டியிருந்தார். இந்நிலையில் நள்ளிரவில் தொழுவத்திற்குள் புகுந்த வெறிநாய் ஒன்று ஆடுகளை கடித்து குதறியது. இதில் குடல் சரிந்த நிலையில் 7 ஆடுகள் இறந்த கிடப்பதை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து கயத்தாறு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். அதே தெருவில் வசித்து வரும் சின்னகருப்பசாமி என்பவருக்கு சொந்தமான 2 ஆடுகளையும் வெறிநாய் கடித்துக்கொன்றது.
Next Story






