search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆடுகள் பலி"

    • அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதம்
    • வனப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை

    ஆலங்காயம்:

    வாணியம்பாடி வனத்துறையினர் தொடர்ந்து அந்த கிராமத்தில் கண்காணித்து வந்தனர்.

    இருப்பினும் முருகன்குட்டை, சங்கத்து வட்டம், மதனாஞ்சேரி ஆகிய பகுதிகளில் இதுவரை சுமார் 50 ஆடுகளை மர்ம விலங்கு கடித்த குதறியது. ஊருக்குள் புகுந்து ஆடுகளை கடித்து குதறிய மர்ம விலங்கால் அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர். இதனால் பொதுமக்கள் இரவு நேரங்களில் வெளியே வராமல் வீட்டிற்க்குள்ளேயே முடங்கினர்.

    மதனாஞ்சேரி ஒன்றிய கவுன்சிலர் சாவித்திரி தனது வீட்டில் 20 ஆடுகளை வளர்த்து வந்தார்.நேற்று இரவு வழக்கம்போல் ஆடுகளை கொட்டகைகள் கட்டி வைத்திருந்தார்.

    நள்ளிரவில் கிராமத்திற்குள் புகுந்த மர்ம விலங்கு, கொட்டகையில் கட்டி வைக்கப்பட்டிருந்த 13 ஆடுகளை கடித்து குதறியது. இதில் 10 ஆடுகள் அங்கேயே பலியானது. ஆடுகளின் அலறல் சத்தம் கேட்டு பொதுமக்கள் ஓடி வந்து பார்த்தபோது, அந்த வழியாக 4 ஓநாய்கள் போன்ற விலங்குகள் கூட்டமாக செல்வதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி வனச்சரக அலுவலர் குமார் தலைமையான வனத்துறையினர் விரைந்து சென்று, சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். அப்போது பொதுமக்கள், வனத்துறை அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இதுவரை 50 ஆடுகள் பலியாகி உள்ளது. மர்ம விலங்கு பிடிக்க வனத்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

    பொதுமக்கள் கூறியபடி, தொடர்ந்து ஆடுகளை கடித்துக் குதறும் மர்ம விலங்கு, ஓநாயாக இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகமடைந்தனர். சிறுத்தை போன்ற விலங்குகள் ஆடுகளை கடித்த உடன் வனப் பகுதிக்குள் சென்று விடும். ஆனால் ஓநாய் போன்ற விளக்குகள் கிராமத்தை ஒட்டி உள்ள வனப்பகுதியிலேயே பதுங்கி இருந்து, நள்ளிரவு நேரங்களில் வேட்டையாடும் சுபாவம் கொண்டவை.

    எனவே மதனாஞ்சேரியை ஒட்டி உள்ள வனப்பகுதியில் ஓநாய் போன்ற மர்ம விலங்குகள் பதுங்கி உள்ளதாக என வனத்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

    • முதற்கட்ட விசாரணையில் நள்ளிரவில் செல்லப்பன் பட்டிக்குள் புகுந்த மர்ம விலங்கு ஆடுகளை கடித்துக்கொன்றது தெரிய வந்தது.
    • ஏதேனும் விலங்குகள் கால் தடம் பதிவாகியுள்ளதா என்று வனத்துறையினர் ஆய்வு செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் திங்களூர் செல்லப்பன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் செல்லப்பன் (வயது 54). விவசாயியான இவர் தனது தோட்டத்தில் 24 ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று இரவு வழக்கம் போல் ஆடுகளை பட்டியில் அடைத்து வைத்து தூங்க சென்று விட்டார்.

    பின்னர் இன்று காலை செல்லப்பன் பட்டியை பார்த்தபோது பட்டியில் இருந்த 10 ஆடுகள் மர்மமான முறையில் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். 4 ஆடுகள் காயத்துடன் கிடந்தன. பின்னர் இது குறித்து திங்களூர் போலீசாருக்கும், வனத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    சம்பவ இடத்திற்கு வனத்துறையினரும் போலீசாரும் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் நள்ளிரவில் செல்லப்பன் பட்டிக்குள் புகுந்த மர்ம விலங்கு ஆடுகளை கடித்துக்கொன்றது தெரிய வந்தது. வனத்துறையினர் அங்கு ஏதேனும் விலங்குகள் கால் தடம் பதிவாகியுள்ளதா என்று ஆய்வு செய்தனர்.

    மேலும் காயம் அடைந்த 4 ஆடுகளுக்கு கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். உயிரிழந்த ஆடுகளுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என செல்லப்பன் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் வனத்துறையினர் இந்தப் பகுதியில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். மர்ம விலங்கு கடித்து 10 ஆடுகள் இறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    நேற்று அம்மாபேட்டை அருகே மர்ம விலங்கு கடித்து 4 ஆடுகள் உயிரிழந்தது. அதேபோல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சித்தோடு அருகே மர்ம விலங்கு கடித்து ஆடுகள் உயிரிழந்தது. தொடர்ந்து மர்ம விலங்குகள் கடித்து ஆடுகள் உயிரிழக்கும் சம்பவம் பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தி வருகிறது.

    • பாப்பாத்தி அப்பகுதியில் 5 செம்மறி ஆடுகளை வைத்து வளர்த்து வருகிறார்.
    • மற்ற விலங்குகள் ஏதாவது கடித்துள்ளதா? என்பது குறித்து வனத்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

    அம்மாபேட்டை:

    அம்மாபேட்டை அருகே சென்னம்பட்டி சனி சந்தை பகுதியில் வசித்து வருபவர் கிருஷ்ணன் மனைவி பாப்பாத்தி (50). இவர் அப்பகுதியில் கீத்துப் பின்னும் தொழில் செய்து கொண்டு 5 செம்மறி ஆடுகளை வைத்து வளர்த்து வருகிறார்.

    இந்நிலையில் நேற்று மாலை செம்மறியாடுகளை தனது வீட்டு அருகே உள்ள கொட்டகையில் கட்டி வைத்துள்ளார். தொடர்ந்து இன்று அதிகாலை ஆட்டுக்கொட்டைக்குச் சென்று பார்த்த பொழுது 4 செம்மறி ஆடுகளை மர்ம விலங்குகள் கடித்து குதறி இறந்துள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து சென்னம்பட்டி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். வனப்பகுதி அருகில் உள்ளதால் வனவிலங்குகள் ஏதேனும் கடித்துள்ளதா? அல்லது மற்ற விலங்குகள் ஏதாவது கடித்துள்ளதா? என்பது குறித்தும் வனத்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

    மேலும் இதுகுறித்து வருவாய் துறைக்கும், வெள்ளித்திருப்பூர் போலீஸ் நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நாய்கள் கூட்டமாக சேர்ந்து பட்டிகளில் உள்ள ஆடுகளை கடித்து குதறி வருகின்றன.
    • ஆடுகளை கடிக்கும் நாய்களை பிடிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சென்னிமலை:

    சென்னிமலை யூனியன், வடமுகம் வெள்ளோடு ஊராட்சிக்குட்பட்ட கொம்மக்கோயில், கும்மாக்காளி பாளையம், உருமாண்டம் பாளையம், கூனம்பட்டி ஆகிய பகுதிகளில் நாய்கள் கூட்டமாக சேர்ந்து பட்டிகளில் உள்ள ஆடுகளை கடித்து குதறி வருகின்றன. இது வரை பல ஆடுகள் இறந்துள்ளன.

    இதனால் விவசாயிகளுக்கு லட்சக்கண க்கான ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நாய்கள் பெருந்துறை, பணிக்கம் பாளையத்தில் உள்ள குப்பை கிடங்கு அருகே கூட்டமாக தங்கி இருப்பதாக தெரிய வருகிறது.

    கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக இது போன்ற பல சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இதனை உடனடியாக தடுத்து நிறுத்தாவிட்டால், ஆடு, மாட்டை கடித்து, மனிதனை கடித்த கதையாக மாறும் அபாயம் உள்ளது.

    எனவே ஆடுகளை கடிக்கும் நாய்களை பிடிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கொம்மக்கோயில் கொல்லங்காடு, கிருஷ்ணமூர்த்தி என்பவரின் ஆடுகளை காலை நாய்கள் கடித்து குதறியதில் 5 ஆடுகள் இறந்து விட்டது. மேலும் 6 ஆடுகள் உயிருக்கு போராடி வருகிறது.

    • பிரவு நேற்று இரவு ஆடுகளுக்கு வழக்கம் போல் உணவுகளை வைத்துவிட்டு தூங்க சென்று விட்டார்.
    • ஒரு ஆட்டின் உடல் பாகங்கள் அனைத்தையும் மர்ம விலங்கு கடித்து சென்றுள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு வில்லரசம்பட்டி நால்ரோடு அடுத்த வேலப்பன்கவுண்டன் வலசு அருகே உள்ள முருகன் நகரை சேர்ந்தவர் பிரபு. இவர் தனது தோட்டத்தில் 10 ஆடுகளை வளர்த்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று இரவு ஆடுகளுக்கு வழக்கம் போல் உணவுகளை வைத்துவிட்டு தூங்க சென்று விட்டார். இன்று காலை ஆடுகளுக்கு உணவு வைக்க வந்தபோது பட்டியில் உள்ள 8 ஆடுகள் மர்ம விலங்கு கடித்துக் கொடூரமான முறையில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    ஒரு ஆட்டின் உடல் பாகங்கள் அனைத்தையும் மர்ம விலங்கு கடித்து சென்றுள்ளது. முருகன் நகர் பகுதி காடுகள் நிறைந்த பகுதியாகும். இந்த பகுதியில் ஏராளமானோர் தங்களது தோட்டத்தில் ஆடு, மாடு கோழிகளை வளர்த்து வருகின்றனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு வில்லரசம்பட்டி அருகே உள்ள கருவில்பாறை வலசு பகுதியில் 19 கோழிகள், 4 ஆடுகளை அதே பகுதியில் சுற்றி தெரியும் 5 தெரு நாய்கள் கடித்து கொன்றது. அதேபோல் இந்த ஆடுகளையும் தெருநாய்கள் கடித்து கொன்று இருக்கலாம் என முதலில் சந்தேகம் ஏற்பட்டது.

    ஆனால் இறந்த ஆடுகளின் உடல் பாகங்கள் முழுவதும் கடித்து குதறப்பட்டு உள்ளதால் வேறு ஏதாவது மர்ம விலங்குகள் கடித்து கொன்று இருக்கலாம் என அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.

    • ஆட்டுப்பட்டி மீது இடி தாக்கியதில் அதிலிருந்த 16 செம்மறியாடுகள், 4 வெள்ளாடுகள் பரிதாபகமாக உயிர் இழந்தன.
    • இறந்து போன ஆடுகளை கால்நடை மருத்துவர் மூலம் உடல் கூறு ஆய்வு செய்து அப்பகுதியில் புதைத்தனர்.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த கொளத்தூர் காரைக்காடு பகுதியை சேர்ந்தவர் விவசாயி அய்யந்துறை (47). கால்நடை வளர்ப்பிலும் ஈடுபட்டு வருகிறார்.

    இவர் நேற்று மாலை வழக்கம் போல் ஆடுகளை மேய்த்து விட்டு தனக்கு சொந்தமான நிலத்தில் உள்ள பட்டியில் ஆடுகளை அடைத்துவிட்டு உறங்க சென்றார்.

    இந்த நிலையில் அந்த பகுதியில் நேற்று இரவு இடி, மின்னலுடன் பலத்த கனமழை பெய்தது. நள்ளிரவு 1 மணியளவில் ஆட்டுப்பட்டி மீது இடி தாக்கியதில் அதிலிருந்த 16 செம்மறியாடுகள், 4 வெள்ளாடுகள் பரிதாபகமாக உயிர் இழந்தன.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வருவாய் துறையினர் அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டனர்.

    இறந்து போன ஆடுகளை கால்நடை மருத்துவர் மூலம் உடல் கூறு ஆய்வு செய்து அப்பகுதியில் புதைத்தனர். மேலும் காயம் அடைந்த ஆடுகளுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.

    இறந்து போன ஆடுகளின் மதிப்பு ரூ.3 லட்சம் இருக்கும் என்றும், இறந்த ஆடுகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்ற செம்மறி ஆடுகளை, வழக்கம் போல் இரவு வீட்டின் அருகே உள்ள பட்டியில் அடைத்து வைத்துள்ளார்.
    • மர்ம விலங்கு கடித்து பலியான ஆடுகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த ஜலகண்டாபுரம் அருகே உள்ள தர்ம கிணறு பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ், விவசாயி. இவர் செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார்.

    நேற்று மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்ற செம்மறி ஆடுகளை, வழக்கம் போல் இரவு வீட்டின் அருகே உள்ள பட்டியில் அடைத்து வைத்துள்ளார்.

    இந்நிலையில் இன்று காலையில் செல்வராஜின் மனைவி சந்திரா, எழுந்து பார்த்தபோது, பட்டியில் இருந்த 6 ஆடுகள், மர்ம விலங்கு கடித்து இறந்து கிடந்தது. மேலும் சில ஆடுகளுக்கு உடலில் காயம் ஏற்பட்டிருந்தது. இது குறித்து தகவல் அறிந்தவுடன், செல்வராஜ், கால்நடை மருத்துவரை அழைத்து வந்து காயமடைந்த ஆடுகளுக்கு சிகிச்சை அளித்தார்.

    மேலும் மர்ம விலங்கு கடித்து பலியான ஆடுகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

    ஆடுகளை கடித்த மர்ம விலங்கு எது? என்று விசாரணை நடந்து வருகிறது. வனத்துறையினர் விரைந்து வந்து மர்ம விலங்கின் கால் தடம் பதிவாகி உள்ளதாக என்று ஆய்வு செய்து வருகிறார்கள். 

    • ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் நேற்றிரவு சோமநாதபுரம் மேம்பாலம் அருகே வந்த போது, சாலையின் நடுவே கிடந்த சக்கரத்தின் மீது லாரி ஏறியது.
    • விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார், நிகழ்விடத்திற்கு விரைந்து சென்று காயம் அடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர்.

    கிருஷ்ணகிரி:

    தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம் பாப்பாரப்பட்டியைச் சேர்ந்தவர் சங்கர் (31). லாரி ஓட்டுநர். அதே பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் (32), ரமேஷ் (31). இவர்கள் மூவரும், மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து 30 ஆடுகளை விலைக்கு வாங்கி, ஒரு லாரியில், பாப்பாரப்பட்டிக்கு வந்து கொண்டிருந்தனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் நேற்றிரவு சோமநாதபுரம் மேம்பாலம் அருகே வந்த போது, சாலையின் நடுவே கிடந்த சக்கரத்தின் மீது லாரி ஏறியது.

    இதில் நிலை தடுமாறி, லாரி கவிழ்ந்தது. இந்த விபத்தில், லாரி ஓட்டுனர் சங்கர், நாகராஜ், ரமேஷ் ஆகிய மூவருக்கும் காயம் ஏற்பட்டது.

    30 ஆடுகளும் பலியாகின. இதனால், ஓசூர்-கிருஷ்ணகிரி இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இந்த விபத்து குறித்து, தகவல் அறிந்த போலீசார், நிகழ்விடத்திற்கு விரைந்து சென்று, காயம் அடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர்.

    விபத்துக்குள்ளான லாரி, ஆடுகளை அப்புறப்படுத்தினர். போக்குவரத்தை சீர்படுத்தினர். இந்த விபத்து குறித்து, குருபரப்பள்ளி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

    • மேய்ச்சலுக்கு செல்ல கொட்டகையில் வந்து பார்த்த போது மர்மவிலங்கு கடித்து 13 ஆடுகள் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • தகவல் அறிந்து சிங்காரப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.

    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த எக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் பார்த்திபன். விவசாயியான இவருக்கு சொந்தமாக சுமார் 30-க்கும் மேற்பட்ட ஆடுகள் வளர்த்து வந்துள்ளார்.

    இந்த நிலையில் நேற்று மாலை வழக்கம் போல் மேய்ச்சல் முடித்து தனது வீட்டின் பின்புறம் உள்ள கொட்டகையில் அனைத்து ஆடுகளையும் கட்டி வைத்தார்.

    பின்னர் இன்று காலை மேய்ச்சலுக்கு செல்ல கொட்டகையில் வந்து பார்த்த போது மர்மவிலங்கு கடித்து 13 ஆடுகள் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்து சிங்காரப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது மர்ம விலங்குகள் கடித்து இறந்து கிடந்த ஆடுகளை பார்வையிட்டனர்.

    இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 30-க்கும் மேற்பட்ட ஆடுகள் வளர்த்து வந்துள்ளார்.
    • 13 ஆடுகள் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த எக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் பார்த்திபன். விவசாயியான இவருக்கு சொந்தமாக சுமார் 30-க்கும் மேற்பட்ட ஆடுகள் வளர்த்து வந்துள்ளார்.

    இந்த நிலையில் நேற்று மாலை வழக்கம் போல் மேய்ச்சல் முடித்து தனது வீட்டின் பின்புறம் உள்ள கொட்டகையில் அனைத்து ஆடுகளையும் கட்டி வைத்தார்.

    பின்னர் இன்று காலை மேய்ச்சலுக்கு செல்ல கொட்ட கையில் வந்து பார்த்த போது மர்ம விலங்கு கடித்து 13 ஆடுகள் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்து சிங்காரப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது மர்ம விலங்குகள் கடித்து இறந்து கிடந்த ஆடுகளை பார்வையிட்டனர்.

    இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தொழுவத்திற்குள் நள்ளிரவில் புகுந்த வெறிநாய் ஒன்று ஆடுகளை கடித்து குதறியது.
    • குடல் சரிந்த நிலையில் 7 ஆடுகள் இறந்த கிடப்பதை பார்த்து வேலுச்சாமி அதிர்ச்சி அடைந்தார்.

    கயத்தாறு:

    தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு பாரதிநகரை சேர்ந்தவர் வேலுச்சாமி. இவர் தனது வீட்டில் 10 ஆடுகளை வளர்த்து வந்தார். நேற்று அவர் வழக்கம்போல் ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்றுவிட்டு வீடு திரும்பினார்.

    ஆடுகளை வீட்டின் அருகே உள்ள தொழுவத்தில் கட்டியிருந்தார். இந்நிலையில் நள்ளிரவில் தொழுவத்திற்குள் புகுந்த வெறிநாய் ஒன்று ஆடுகளை கடித்து குதறியது. இதில் குடல் சரிந்த நிலையில் 7 ஆடுகள் இறந்த கிடப்பதை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து கயத்தாறு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். அதே தெருவில் வசித்து வரும் சின்னகருப்பசாமி என்பவருக்கு சொந்தமான 2 ஆடுகளையும் வெறிநாய் கடித்துக்கொன்றது.

    • முதுகுளத்தூரில் இருந்து கமுதி வழியாக அருப்புக்கோட்டைக்கு செல்லும் தனியார் பஸ் அந்த வழியாக வந்தது.
    • அதிவேகமாக வந்த பஸ் ஆடுகள் மீது மோதியது. இதில் 32 ஆடுகள் பஸ் சக்கரத்தில் சிக்கி படுகாயமடைந்து பரிதாபமாக இறந்தன.

    கமுதி:

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்த கொல்லங்குளத்தை சேர்ந்தவர் திருநாவுக்கரசு. இவர் 300-க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார். அவர் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள கோவிலாங்குளத்தில் கிடை போட்டு ஆடுகளை தினமும் மேய்ச்சலுக்கு கொண்டு சென்று வந்தார்.

    இந்த நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருநாவுக்கரசு தனது சொந்த ஊர் செல்ல முடிவு செய்தார். இதை தொடர்ந்து கோவிலாங்குளத்தில் இருந்து ஆடுகளை ஓட்டிக்கொண்டு கொல்லங்குளத்திற்கு புறப்பட்டார். அவர் இன்று காலை கமுதி அருகே உள்ள பாக்கு வெட்டி பாலத்தில் வந்து கொண்டிருந்தார்.

    அப்போது முதுகுளத்தூரில் இருந்து கமுதி வழியாக அருப்புக்கோட்டைக்கு செல்லும் தனியார் பஸ் அந்த வழியாக வந்தது. அதிவேகமாக வந்த அந்த பஸ் ஆடுகள் மீது மோதியது. இதில் 32 ஆடுகள் பஸ் சக்கரத்தில் சிக்கி படுகாயமடைந்து பரிதாபமாக இறந்தன. பலியான ஆடுகள் சாலையில் சிதறி கிடந்தன. இதனால் அந்த சாலை முழுவதும் ஆட்டின் சதைகள் மற்றும் ரத்தம் சிதறி கிடந்தது. இறந்த ஆடுகளின் மதிப்பு ரூ.2½ லட்சம் என்று கூறப்படுகிறது.

    இதுபற்றி திருநாவுக்கரசு பேரையூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சிவசாமி வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய பஸ் டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகிறார். பஸ் மோதியதில் 32 ஆடுகள் பலியான சம்பவம் அந்த பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தியது.

    ×