என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஊத்தங்கரை அருகே மர்ம விலங்கு கடித்து 13 ஆடுகள் பலி
- மேய்ச்சலுக்கு செல்ல கொட்டகையில் வந்து பார்த்த போது மர்மவிலங்கு கடித்து 13 ஆடுகள் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
- தகவல் அறிந்து சிங்காரப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.
மத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த எக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் பார்த்திபன். விவசாயியான இவருக்கு சொந்தமாக சுமார் 30-க்கும் மேற்பட்ட ஆடுகள் வளர்த்து வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று மாலை வழக்கம் போல் மேய்ச்சல் முடித்து தனது வீட்டின் பின்புறம் உள்ள கொட்டகையில் அனைத்து ஆடுகளையும் கட்டி வைத்தார்.
பின்னர் இன்று காலை மேய்ச்சலுக்கு செல்ல கொட்டகையில் வந்து பார்த்த போது மர்மவிலங்கு கடித்து 13 ஆடுகள் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து தகவல் அறிந்து சிங்காரப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது மர்ம விலங்குகள் கடித்து இறந்து கிடந்த ஆடுகளை பார்வையிட்டனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story