search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிருஷ்ணகிரி அருகே லாரி கவிழ்ந்த விபத்தில் 30 ஆடுகள் பலி
    X

    இறந்த ஆடுகளை படத்தில் காணலாம்.

    கிருஷ்ணகிரி அருகே லாரி கவிழ்ந்த விபத்தில் 30 ஆடுகள் பலி

    • ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் நேற்றிரவு சோமநாதபுரம் மேம்பாலம் அருகே வந்த போது, சாலையின் நடுவே கிடந்த சக்கரத்தின் மீது லாரி ஏறியது.
    • விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார், நிகழ்விடத்திற்கு விரைந்து சென்று காயம் அடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர்.

    கிருஷ்ணகிரி:

    தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம் பாப்பாரப்பட்டியைச் சேர்ந்தவர் சங்கர் (31). லாரி ஓட்டுநர். அதே பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் (32), ரமேஷ் (31). இவர்கள் மூவரும், மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து 30 ஆடுகளை விலைக்கு வாங்கி, ஒரு லாரியில், பாப்பாரப்பட்டிக்கு வந்து கொண்டிருந்தனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் நேற்றிரவு சோமநாதபுரம் மேம்பாலம் அருகே வந்த போது, சாலையின் நடுவே கிடந்த சக்கரத்தின் மீது லாரி ஏறியது.

    இதில் நிலை தடுமாறி, லாரி கவிழ்ந்தது. இந்த விபத்தில், லாரி ஓட்டுனர் சங்கர், நாகராஜ், ரமேஷ் ஆகிய மூவருக்கும் காயம் ஏற்பட்டது.

    30 ஆடுகளும் பலியாகின. இதனால், ஓசூர்-கிருஷ்ணகிரி இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இந்த விபத்து குறித்து, தகவல் அறிந்த போலீசார், நிகழ்விடத்திற்கு விரைந்து சென்று, காயம் அடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர்.

    விபத்துக்குள்ளான லாரி, ஆடுகளை அப்புறப்படுத்தினர். போக்குவரத்தை சீர்படுத்தினர். இந்த விபத்து குறித்து, குருபரப்பள்ளி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

    Next Story
    ×