search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அய்யா வைகுண்டர்"

    • வாகன பவனி திருவனந்தபுரம் மற்றும் திருச்செந்தூரில் இருந்து நாகர்கோவில் நோக்கி வரும்.
    • 4-ந்தேதி நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலில் இருந்து சாமிதோப்பை நோக்கி புறப்படுகிறது.

    அய்யா வைகுண்டசாமியின் அவதார தின விழாவை முன்னிட்டு வருடந்தோறும் திருச்செந்தூர் மற்றும் திருவனந்தபுரத்தில் இருந்து சாமிதோப்பை நோக்கி அய்யா வழி பக்தர்கள் கலந்து கொள்ளும் வாகன பவனி நடைபெறுவது வழக்கம். இந்த வருட வாகன பவனி நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை தொடங்குகிறது.

    திருவனந்தபுரத்தில் பத்மநாபசாமி கோவில் வடக்கு வாசலில் இருந்து காலை 9 மணிக்கு வாகன பவனி புறப்படுகிறது. இந்த வாகன பவனி திருவனந்தபுரம், பாறசாலை, நெய்யாற்றின்கரை, மார்த்தாண்டம், தக்கலை மற்றும் வெட்டூர்ணிமடம் வழியாக இரவு நாகர்கோவில் நாகராஜாகோவில் திடலை வந்தடைகிறது.

    இதே போல் திருச்செந்தூர், செந்தூர் அவதார பதியில் இருந்து காலை 6 மணிக்கு மற்றொரு வாகன பவனி நாகர்கோவில் நோக்கி புறப்படுகிறது.

    இந்த வாகன பவனி திருச்செந்தூர், கூடங்குளம், செட்டிகுளம், ஆரல்வாய்மொழி வழியாக நாகர்கோவிலை வந்தடைகிறது.

    இதற்கிடையே நாளை மறுநாள் மாலை 6 மணிக்கு சாமிதோப்பு தலைமை பதியிலிருந்து தீபம் கொண்டு சென்று ஆதலவிளை வைகுண்ட மாமலையில் வைகுண்ட தீபம் ஏற்றப்படுகிறது.

    திருச்செந்தூர் மற்றும் திருவனந்தபுரத்தில் இருந்து வரும் வாகன பவனி நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலை வந்தடைகி றது. இதே போல் மாவட்டத்தின் பல பகுதிகளில் உள்ள நிழல் தாங்கல்களிலிருந்து அவதார தின ஊர்வலத்தில் கலந்துகொள்ள நடைபயணமாக வரும் பக்தர்கள் அன்று இரவு நாகர்கோவில் நாகராஜாகோவில் திடலை வந்தடைகின்றனர்.

    பின்னர் நாகராஜா கோவில் திருமண மண்டபத்தில் இரவு 7 மணிக்கு அய்யா வழி சமய மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டுக்கு பால.ஜனாதிபதி தலைமை தாங்குகிறார். அய்யா வழி அறிஞர்கள் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.

    அய்யா வைகுண்டசாமி 191-வது அவதார தினவிழா ஊர்வலம் 4-ந்தேதி (சனிக்கிழமை) காலை 6 மணிக்கு நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலில் இருந்து சாமிதோப்பை நோக்கி புறப்படுகிறது.

    ஊர்வலத்துக்கு பால.ஜனாதிபதி தலைமை தாங்குகிறார். ஜனா.யுகேந்த் முன்னிலை வகிக்கிறார். இந்த ஊர்வலத்தில் குமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்கள் மட்டுமல்லாமல் தமிழ்நாடு முழுவதும் இருந்தும் திரளான அய்யா வழி பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.

    விழா ஏற்பாடுகளை தலைமை பதி நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

    • அய்யா வைகுண்ட சாமியின் ஜெயந்தி நாளான மாசி 20-ந்தேதியை (மார்ச்-4) அய்யா வைகுண்டர் சுவாமியின் அவதார தின விழாவாக அய்யாவழி மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
    • சாமிதோப்பு தலைமைபதியில் வாகன பவனியும், அன்னதானமும், அய்யாவழி மாநாடும் நடை பெறுகிறது.

    தென்தாமரைகுளம்:

    குமரி மாவட்டத்தில் புகழ் பெற்ற திருத்தலங்களில் சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப் பதியும் ஒன்றாகும்.

    இங்கு அய்யா வைகுண்ட சாமியின் ஜெயந்தி நாளான மாசி 20-ந்தேதியை (மார்ச்-4) அய்யா வைகுண்டர் சுவாமியின் அவதார தின விழாவாக அய்யாவழி மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

    இந்த அவதார தின விழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் அய்யா வழி பக்தர்கள் திரளாக கலந்து கொள்ளும் மாபெரும் அவதார தின விழா ஊர்வலம் நடைபெறுவது வழக்கம். இந்த ஊர்வலம் நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு சாமிதோப்பு தலைமைப்பதியை வந்தடையும். இந்த வருடம் 191-வது அவதார தின ஊர்வலம் வருகிற 4-ந் தேதி (சனிக்கிழமை) நடைபெறுகிறது.

    அய்யா வைகுண்ட சுவாமியின் அவதார தினத்திற்கு முந்திய தினமான மார்ச் 3-ம் தேதி காலை 6 மணிக்கு அய்யா வைகுண்டசுவாமி விஞ்சை பெற்ற திருச்செந்தூர், செந்தூர்பதியில் இருந்து நாகர்கோவிலை நோக்கி வாகன பேரணி ஒன்று புறப்படுகிறது. இந்தப் பேரணிக்கு ஜனா. வைகுந்த், பையன் அம்ரிஷ், கவுதம் ராஜ் ஆகியோர் தலைமை வகிக்கிறார்கள்.

    இந்த பேரணி திருச்செந்தூர் சீர்காய்ச்சி, திசையன் விளை, உடன்குடி, கூடங் குளம், செட்டிகுளம், ஆரல் வாய்மொழி வழியாக இரவு நாகர்கோவில் வந்தடைகிறது. அதேதினம் (மார்ச் 3-ந்தேதி) காலை 9 மணிக்கு திருவனந்தபுரம் சிங்காரத்தோப்பு. பத்ம நாபசுவாமி கோவில் வடக்கு வாசலில் இருந்து சாமிதோப்பை நோக்கி மற்றொரு வாகன பேரணி புறப்படுகிறது. இந்த வாகன பேரணியை பாலலோகாதிபதி துவக்கி வைக்கிறார். பையன் நேம்ரிஷ் தலைமை வகிக்கிறார்.

    இந்த வாகன பேரணி திருவனந்தபுரம், பாற சாலை, குழித்துறை, மார்த்தாண்டம், தக்கலை, வெட்டூர்ணிமடம் வழியாக இரவு நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலை சென்றடைகிறது. அதே தினம் (மார்ச் 3-ந்தேதி) மாலை 6 மணிக்கு சாமிதோப்பு தலைமைப்பதியிலிருந்து வைகுண்ட தீபம் கொண்டு சென்று ஆதலவிளை மாமலையில் தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சிக்கு பையன் கிருஷ்ணராஜ் தலைமை வகிக்கிறார்.

    திருச்செந்தூர் மற்றும் திருவனந்தபுரத்திலிருந்து புறப்பட்ட ஊர்வலம் நாகர்கோவில் நாக ராஜா கோவில் திடலை வந்தடைகிறது. அதைப்போல பல ஊர்களிலுள்ள அய்யா வழி நிழல் தாங்கலில் இருந்து ஊர்வலமாக வருகின்ற அய்யா வழி மக்களும் நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலை வந்தடைகிறார்கள். அங்கு இரவு 10 மணிக்கு மாசி மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டிற்கு பால. ஜனாதிபதி தலைமை வகிக்கிறார்.

    இந்த மாநாட்டில் அய்யா வழி அறிஞர்கள் பலர் பேசுகின்றனர். தொடர்ந்து கலை நிகழ்ச்சிகளும் நடை பெறுகிறது.

    வைகுண்ட சுவாமியின் அவதார தினமான வருகிற மார்ச் 4-ந்தேதி (சனிக்கிழமை) காலை 5 மணிக்கு நாகர்கோவில் நாகராஜா திடலில் இருந்து அவதார தினவிழா மாசி ஊர்வலம் சாமிதோப்பு நோக்கிப் புறப்படுகிறது.

    இந்த ஊர்வலத்திற்கு பால. ஜனாதிபதி தலைமை வகிக்கிறார். ஜனாயுகேந்த் முன்னிலை வகிக்கிறார்.

    இந்த ஊர்வலம் நாகர்கோவில், கோட்டார், சுசீந்திரம், வழுக்கம்பாறை. வடக்கு தாமரைகுளம் வழியாக சாமி தோப்பு தலைமைப்பதியை வந்தடை கிறது. ஊர்வலம் வரும் வழியில் பல மதத்தை சார்ந்தவர்களும், மற்றும் அய்யாவழி பக்தர்களும் வரவேற்பு கொடுக்கின்றனர். அன்று இரவு சாமிதோப்பு தலைமைபதியில் வாகன பவனியும், அன்னதானமும், அய்யாவழி மாநாடும் நடை பெறுகிறது.

    • நாகர்கோவிலில் இருந்து சாமிதோப்புக்கு மாபெரும் ஊர்வலம்
    • 4-ந்தேதி நடக்கிறது

    கன்னியாகுமரி:

    அய்யா வைகுண்டரின் 191-வது உதய தின விழா அடுத்த மாதம் (மார்ச்) 4-ந் தேதி (மாசி 20) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மார்ச் 3-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு திருவனந்தபுரம் ஸ்ரீ பத்மனாப சுவாமி கோவில் வடக்கு வாசலில் இருந்து நாகர்கோவிலுக்கு வாகன பேரணி நடைபெறுகிறது.

    இந்த வாகன பேரணிக்கு குரு. பையன் நேம்ரிஷ் தலைமை தாங்குகிறார். குரு. பால.லோகாதிபதி தொடங்கி வைக்கிறார். இதேபோல் அன்று காலை 6 மணிக்கு திருச்செந்தூர் அவதாரப்பதியில் இருந்து நாகர்கோவிலுக்கு வாகன பேரணி நடைபெறுகிறது. இந்த வாகன பேரணிக்கு குரு. ஜனா. வைகுந்த், குரு. பையன் அம்ரிஷ், குரு. கவுதம் ராஜ் ஆகியோர் தலைமை தாங்குகின்றனர். அன்று மாலை 6 மணிக்கு சாமிதோப்பு தலைமை பதியிலிருந்து தீபம் கொண்டு சென்று ஆதலவிளையில் வைகுண்ட தீபம் ஏற்றப்படுகிறது. இந்நிகழ்ச்சிக்கு குரு. பையன் கிருஷ்ணராஜ் தலைமை தாங்குகிறார், குரு. பையன் கிருஷ்ணநாமமணி முன்னிலை வகிக்கிறார். குரு.பையன் செல்ல வடிவு மாமலை தீபம் ஏற்றுகிறார்.

    திருவனந்தபுரம், திருச் செந்தூரில் இருந்து புறப்பட்ட வாகன பேரணி நாகராஜா கோவில் வந்தடைகிறது. அன்று இரவு 7 மணிக்கு நாகர்கோவில் நாகராஜா கோவில் திருமண மண்டபத்தில் குரு. பால. ஜனாதிபதி தலைமையில் அய்யாவழி சமய மாநாடு நடைபெறுகிறது. 4-ம் தேதி சனிக்கிழமை காலை 6 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து சாமிதோப்பு தலைமை பதி நோக்கி மாபெரும் ஊர்வலம் நடைபெறுகிறது.

    இந்த ஊர்வலத்திற்கு குரு.பால. ஜனாதிபதி தலைமை தாங்குகிறார். குரு. ஜனா.யுகேந்த் முன்னிலை வகிக்கிறார். ஊர்வலத்தில் குமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட தமிழ்நாடு முழுவதிலிருந்தும் திருவனந்தபுரத்தில் இருந்தும் திரளான அய்யா வழி பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். விழா ஏற்பாடுகளை தலைமை பதி நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

    • விழா நாளை தொடங்கி 11 நாட்கள் நடக்கிறது.
    • 24-ந்தேதி திருக்கல்யாண ஏடு வாசித்தல் நடக்கிறது.

    அருமனை அருகே உள்ள கொக்கஞ்சி சாமிபுரம் அய்யா வைகுண்ட சாமி கருணைபதியின் 62-வது ஆண்டு திருவிழா, திருஏடு வாசிப்பு விழா நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி 11 நாட்கள் நடக்கிறது. நாளை காலையில் பள்ளி உணர்த்தல், அய்யாவுக்கு பணிவிடை, உகப்படிப்பு, அகண்ட நாம ஜெபம் அணையா விளக்கு ஏற்றுதல், மதியம் உச்சிப்படிப்பு, அன்னதானம், மாலை 4 மணி முதல் அய்யாவுக்கு பணிவிடை, உகப்படிப்பு, 5 மணிக்கு திருஏடு வாசிப்பு, விளக்கவுரை போன்றவை நடைபெறும்.

    திருஏடு வாசிப்பை கோவில் தர்மகர்த்தா அர்ஜுனன் தொடங்கி வைப்பார். அண்டுகோடு கோபாலகிருஷ்ணன், பால்வர்ணநாதன் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். தெருகடை சரோஜா, ஆலங்கோடு பால்தங்கம் ஆகியோர்கள் திருஏடு வாசிப்பார்கள். குமாரி பால் நாடார் விளக்க உரை வழங்குகிறார். இரவு 8 மணிக்கு திருவிளக்கு பணிவிடை நடைபெறும். முதல் விளக்கை திருவட்டார் துணை தாசில்தார் மரகதவல்லி தொடங்கி வைக்கிறார்.

    வருகிற விழா நாட்களில் அய்யாவுக்கு பணிவிடை, உகப்படிப்பு, மதியம் அன்னதானம், மாலையில் திருஏடு வாசிப்பு, இரவில் திருவிளக்கு பணிவிடை போன்றவை நடக்கிறது.

    19-ந் தேதி வழக்கான பூஜைகளுடன் பண்பாட்டுப் போட்டிகள் நடைபெறும். 22-ந் தேதி இரவு 8 மணிக்கு சமய வகுப்பு மாணவ- மாணவிகளுக்கு பரிசு வழங்குதல், 24-ந் தேதி திருக்கல்யாண ஏடு வாசித்தல், இரவு 7 மணிக்கு பணிவிடை சுருள் நியமித்தல், அலங்கார திருவிளக்கு ஏற்றுதல், திருக்கல்யாண திருவைபவம், சமபந்தி விருந்து போன்றவை நடைபெறும்.

    26-ந் தேதி அய்யாவுக்கு பணிவிடை, உகப்படிப்பு, பட்டாபிஷேக வாசிப்பு, இரவு அய்யா அனுமன் வாகனத்தில் கருணைப் பதியை வலம் வருதல் ஆகியவை நடைபெறும்.

    விழாவின் இறுதி நாளான 27-ந் அய்யாவுக்கு பணிவிடை, உச்சிப்படிப்பு, அன்னதானம், மாலை 6 மணிக்கு அய்யா புஷ்ப வாகனத்தில் பவனி வருதல் போன்றவை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து வருகிறார்கள்.

    • தைத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • விழாவில் 11 நாட்களும் அன்னதர்மம் நடைபெறும்.

    அம்பை வாகைக்குளம் வாகைபதியில் தை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் கருடன், தண்டிகை, சிங்கம், அன்னம், சூரியன், நாகம், பூ பல்லக்கு, குதிரை, அனுமன், இந்திரன், ரிஷப வாகனத்தில் பவனி நடைபெறும். விழாவில் 11 நாட்களும் தினமும் மதியம் உச்சிப்படிப்பு மற்றும் உச்சிப்பால் தர்மமும், இரவு 7 மணிக்கு அன்னதர்மமும் நடைபெறும். சிறப்பு நிகழ்ச்சியாக 8-ம் திருநாளான 10-ந் தேதி காலை 11 மணிக்கு வாகைபதி பால் கிணற்றில் இருந்து பால் குடம் எடுத்தல் நிகழ்ச்சியும், இரவு 8 மணிக்கு அன்னதர்மமும் நடைபெறும். பின்னர் 3 மணிக்கு அய்யா ஆதிநாராயண வைகுண்டர் குதிரை வாகனத்தில் எழுந்தருளி கலி வேட்டையாடுதல் நிகழ்ச்சி நடைபெறும்.

    12-ந் தேதி காலை 11 மணிக்கு வாகைபதி பால் கிணற்றில் இருந்து கிணற்று பால் குடம் மற்றும் ஆண்கள் மற்றும் பெண்கள் சந்தனக்குடம் எடுத்தல் மற்றும் கும்பிடு நமஸ்கார நிகழ்ச்சி, அதிகாலை 3 மணிக்கு அய்யா ஆதிநாராயண வைகுண்டர் இந்திரன் வாகனத்தில் பவனி வருதல் நடைபெறும். விழாவின் சிகர நிகழ்ச்சியாக 13-ந் தேதி மாலை 4 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. ஏற்பாடுகளை வாகைகுளம் வாகைப்பதி அய்யாவழி தொண்டர்களும், அன்பு கொடி மக்களும் செய்து வருகின்றனர்.

    • 30-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது
    • நாளை அய்யா வைகுண்ட சாமி இந்திர வாகனத்தில் பவனி வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

    சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தைத் திருவிழா கடந்த 20-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் 8-வது நாளான நேற்று அய்யா வைகுண்டசாமி வெள்ளை குதிரை வாகனத்தில் எழுந்தருளி கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சியையொட்டி அதிகாலை 4 மணிக்கு அய்யாவுக்கு சிறப்பு பணிவிடையும், மாலை 6 மணிக்கு அய்யா வைகுண்டசாமி கலிவேட்டைக்கு புறப்படும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட வெள்ளை குதிரை வாகனத்தில் அய்யா வைகுண்டசாமி கொலு வீற்றிருக்க கலிவேட்டைக்கு வாகனம் புறப்பட்டு சென்றது.

    இந்த நிகழ்ச்சிக்கு தலைமைப்பதி குரு பால ஜனாதிபதி தலைமை தாங்கினார். குருமார்கள் பால லோகாதிபதி, ராஜவேல், பையன் கிருஷ்ண ராஜ், பையன் கிருஷ்ண நாம மணி, பையன் ஆனந்த், ஜனா யுகேந்த், ஜனா வைகுந்த், நேம்ரிஷ், பால் பையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தலைமைப்பதி முன்பு இருந்து புறப்பட்ட வாகனம் தலைமைப்பதியை சுற்றிவந்து முத்திரி கிணற்றங்கரைக்கு சென்றது. அங்கு கூடியிருந்த திரளான அய்யாவழி பக்தர்கள் "அய்யா சிவ சிவ அரகரா அரகரா" என்ற கோஷம் முழங்க கலி வேட்டையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. முத்திரி கிணற்றங்கரையில் பக்தர்களுக்கு பதம் வழங்கப்பட்டது.

    அங்கிருந்து புறப்பட்ட குதிரை வாகனம் சுற்றுப்பகுதி கிராமங்களான செட்டிவிளை, சாஸ்தான்கோவில் விளை, கோட்டையடி புதூர், சோட்டப்பணிக்கன் தேரிவிளை, காமராஜபுரம் வழியாக இரவு 9 மணிக்கு சாமிதோப்பு தலைமை பதியை வந்தடைந்தது. கிராமங்களில் வழிநெடுகிலும் பக்தர்கள் அய்யாவுக்கு பூ, பழம், பன்னீர், தேங்காய் போன்றவற்றை சுருளாக வைத்து ஆசி பெற்றனர். இரவு 10 மணிக்கு தலைமைப்பதியின் வடக்கு வாசலில் அய்யா வைகுண்ட சாமியின் தவக்கோல காட்சி நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    கலிவேட்டை நிகழ்ச்சியில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த அய்யாவழி பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். இன்று (சனிக்கிழமை) இரவு அனுமன் வாகன பவனியும், நாளை அய்யா வைகுண்ட சாமி இந்திர வாகனத்தில் பவனி வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. நாளை மறுநாள் (திங்கட்கிழமை) தேரோட்டம் நடைபெறுகிறது.

    விழா நாட்களில் தினமும் காலை, மாலை பணிவிடையும், இரவு வாகன பவனியும், உச்சிப்படிப்பு, உகப்படிப்பு ஆகியவையும் நடைபெறுகிறது. மேலும் 3 வேளையும் அன்னதானம் வழங்கப்படுகிறது.

    • விழா தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறுகிறது.
    • 30-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது.

    கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பில் அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதி அமைந்துள்ளது. இங்கு ஆண்டு தோறும் வைகாசி, ஆவணி மற்றும் தை மாதங்களில் 11 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான தை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    கொடியேற்றத்தை யொட்டி இன்று அதிகாலை 4 மணிக்கு முத்திரி பதமிடுதல், திருநடை திறந்து விளக்கேற்றுதல், காலை 6 மணிக்கு கொடிப்பட்டம் தயாரித்து பதியை சுற்றி வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை தொடர்ந்து 6.30 மணிக்கு திருக்கொடியேற்றம் நடை பெற்றது. தலைமைப்பதி குரு பால ஜனாதிபதி திருக்கொடியை ஏற்றி வைத்தார்.

    குருமார்கள் பால லோகாதிபதி, ராஜவேல், பையன் கிருஷ்ணராஜ், பையன் கிருஷ்ண நாமமணி, பையன் ஆனந்த், ஜனாயுகேந்த், ஜனா வைகுந்த், நேம்ரிஷ்,பால் பையன் ஆகியோர் முன்னிலை வகித்து பணிவிடைகளை செய்திருந்தனர்.

    தொடர்ந்து அய்யா வைகுண்டசாமி தொட்டில் வாகனத்தில் எழுந்தருளி பதியை சுற்றி வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். பகல் 12 மணிக்கு வடக்கு வாசலில் அன்னதர்மம் நடைபெற்றது. இன்று இரவு அய்யா தொட்டில் வாகனத்தில் தெருவை சுற்றி பவனி வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    கொடியேற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு, கேரளா முழுவதும் இருந்து அய்யா வழி பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். விழா தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறுகிறது. விழா நாட்களில் தினமும் காலை, மாலை பணிவிடை, இரவு வாகன பவனி, அன்னதர்மம் நடக்கிறது.

    வருகிற 27-ந்தேதி மாலை 4 மணிக்கு அய்யா வைகுண்டசாமி வெள்ளை குதிரை வாகனத்தில் எழுந்தருளி முத்திரி கிணற்றங்கரையில் கலி வேட்டையாடும் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து சாஸ்த்தான் கோவில்விளை, செட்டிவிளை உட்பட பல சுற்றுப்புற கிராமங்களுக்கு குதிரை வாகனத்தில் சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தல், இரவு 11 மணிக்கு தலைமைப்பதியின் வடக்கு வாசலில் அய்யாவின் தவக்கோல காட்சி அதனை தொடர்ந்து அன்னதர்மம் நடக்கிறது.

    30-ந் தேதி (திங்கட்கிழ மை) பகல் 12 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. இதில் தமிழ்நாடு மற்றும் கேரளாவைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அய்யா வைகுண்டசாமியை வழிபடுவார்கள். விழாவுக்கான ஏற்பாடுகளை பதி நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    • 27-ந் தேதி கலி வேட்டை நடக்கிறது.
    • 30-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.

    கன்னியாகுமரி மாவட்டம் சாமித்தோப்பில் அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதி அமைந்துள்ளது. இங்கு ஆண்டு தோறும் வைகாசி, ஆவணி மற்றும் தை மாதங்களில் 11 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான தை திருவிழா வருகிற 20-ந் தேதி (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    கொடி யேற்றத்தையொட்டி அதிகாலை 4 மணிக்கு முத்திரி பதமிடுதல், நடை திறந்து விளக்கேற்றுதல், காலை 6 மணிக்கு கொடிப்பட்டம் தயாரிக்கும் நிகழ்ச்சி, தொடர்ந்து 6.30 மணிக்கு திருக்கொடியேற்றம் நடை பெறுகிறது. தலைமைப்பதி குரு பால ஜனாதிபதி திருக்கொடியை ஏற்றி வைக்கிறார்.

    குருமார்கள் பால லோகாதிபதி, ராஜவேல், பையன் கிருஷ்ண ராஜ், பையன் கிருஷ்ண நாம மணி, பையன் ஆனந்த், ஜனா யுகேந்த், ஜனா வைகுந்த், நேம்ரிஷ், பால் பையன் ஆகியோர் முன்னிலை வகித்து பணிவிடைகளை செய்கின்றனர். தொடர்ந்து வாகன பவனி, பகல் 12 மணிக்கு வடக்கு வாசலில் அன்னதர்மம், இரவு அய்யா தொட்டில் வாகனத்தில் தெருவை சுற்றி பவனி வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    கொடியேற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு, கேரளா முழுவதும் இருந்து அய்யா வழி பக்தர்கள் திரளாக கலந்து கொள்கின்றனர். விழா நாட்களில் தினமும் காலை, மாலை பணிவிடை, இரவு வாகன பவனி, அன்னதர்மம் நடக்கிறது. வருகிற 27-ந் தேதி மாலை 4 மணிக்கு அய்யா வெள்ளை குதிரை வாகனத்தில் எழுந்தருளி முத்திரி கிணற்றங்கரையில் கலி வேட்டையாடும் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து சுற்றுப்புற கிராமங்களுக்கு குதிரை வாகனத்தில் சென்று பக்தர்களுக்கு அருள் பாலித்தல், இரவு 11 மணிக்கு தலைமைப்பதியின் வடக்கு வாசலில் அய்யாவின் தவக்கோல காட்சி, அன்னதர்மம் நடக்கிறது.

    30-ந் தேதி (திங்கட் கிழமை) பகல் 12 மணிக்கு தேரோட்டம் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அய்யா வைகுண்டசாமியை வழிபடுவார்கள். விழா வுக்கான ஏற்பாடுகளை பதி நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    • திருஏடு வாசிப்பு திருவிழா 7 நாட்கள் நடைபெற்றது.
    • அய்யா வைகுண்டர் புஷ்ப வாகனத்தில் எழுந்தருளினார்.

    திருச்செந்தூர் கடற்கரையோரம் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதாரபதியில் திருஏடு வாசிப்பு திருவிழா கடந்த 9-ந்தேதி தொடங்கி, 17 நாட்கள் நடைபெற்றது. விழா காலங்களில் தினசரி மாலை 3 மணிக்கு திருஏடு வாசிப்பு நடந்தது. கடந்த 23-ந்தேதி திருக்கல்யாணம் நடந்தது.

    விழாவின் நிறைவு நாளான நேற்று முன்தினம் மாலையில் சிகர நிகழ்ச்சியான பட்டாபிஷேக திருஏடு வாசிப்பு திருவிழா நடந்தது. இதனை அய்யாவழி அகில திருக்குடும்ப மக்கள்சபை தலைவர் வள்ளியூர் எஸ்.தர்மர் தொடங்கி வைத்தார். பின்னர் வைகுண்ட மகராஜன்மற்றும் ஆனந்த் குழுவினர் பட்டாபிஷேக திருஏடு வாசித்தனர். இரவில் அய்யா வைகுண்டர் புஷ்ப வாகனத்தில் எழுந்தருளி, பதியை சுற்றி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    விழாவில் பலர் கலந்து கொண்டனர்.

    • அய்யா வைகுண்டர் அவதாரப்பதியில் திரு ஏடு வாசிப்பு திருவிழா கடந்த 9-ந் தேதி தொடங்கியது.
    • அய்யா வைகுண்டர் புஷ்ப வாகன பவனி மாலை 6 மணிக்கு நடைபெற்றது.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவில் கடற்கரையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதாரப்பதியில் திரு ஏடு வாசிப்பு திருவிழா கடந்த 9-ந் தேதி தொடங்கியது. 17 நாட்கள் நடைபெற்ற இவ் விழாவில் ஒவ்வொரு நாளும் மாலை 3 மணிக்கு திரு ஏடு வாசிப்பு திருவிழா நடைபெற்றது.

    திருக்கல்யாணம்

    திரு ஏடு வாசிப்பு திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் கடந்த 23-ந் தேதி (வெள்ளிக் கிழமை) மாலை 3 மணிக்கு நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியான பட்டாபிசேக திரு ஏடு வாசிப்பு திருவிழா நேற்று மாலை 5 மணிக்கு நடந்தது.பட்டாபிசேக ஏட்டை அய்யா வழி அகிலத்திருக்குடும்ப மக்கள் சபை தலைவர் வள்ளியூர் எஸ்.தர்மர் எடுத்து கொடுத்து தொடங்கி வைத்தார்.

    தொடர்ந்து மாலை 6 மணிக்கு அய்யா வைகுண்டர் புஷ்ப வாகன பவனி நடைபெற்றது.

    கலந்துகொண்டவர்கள்

    விழாவில் திருச்செந்துர் சார்பு நீதிபதி வஷித்குமார், அய்யாவழி அகில திரு குடும்ப மக்கள் சபை இணை தலைவர்கள் பால்சாமி, ராஜதுரை,கோபால், இணைச் செயலாளர்கள், ராதாகிருஷ்ணன், செல்வின் வக்கீல் சந்திர சேகர், முன்னாள் இணை தலைவர். சிங்கபாண்டி, முன்னாள் துணை செயலாளர் ராமகிருஷ்ணன்,நிர்வாக குழு உறுப்பினர்கள் பாலகிருஷ்ணன், வினோத், சிவாஜி, ராமமூர்த்தி, ஆசிரியர் தங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    விழாவுக்கான ஏற்பாடு களை வள்ளியூர் அய்யா வழி அகிலத்திருக்குடும்ப மக்கள் சபை தலைவர் வள்ளியூர் எஸ். தர்மர், செயலாளர் பொன்னுதுரை, பொருளாளர் ராமையா நாடார், துணைத் தலைவர் அய்யாபழம், துணை செயலாளர் ராஜேந்திரன், மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் செய்தி ருந்தனர். திரு ஏடு வாசிப்புப்பை வைகுண்ட மகராஜன் மற்றும் ஆனந்து குழுவினர் செய்திருந்தனர்.

    • ஜனவரி 6-ந்தேதி திருக்கல்யாண திருஏடு வாசிப்பு நடக்கிறது.
    • 8-ந்தேதி பட்டாபிஷேக திரு ஏடுவாசிப்பு நடக்கிறது.

    புத்தளம் பொருத்தட்டுவிளையில் உள்ள அய்யா வைகுண்ட பதியில் மார்கழி திருஏடு வாசிப்பு விழா நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி ஜனவரி 8-ந்தேதி வரை நடக்கிறது. நாளை அதிகாலை 5 மணிக்கு பணிவிடை. உகப்பெருக்கு, பகல் 12 மணிக்கு உச்சிப்படிப்பு, மாலை 5.30 மணிக்கு திருஏடுவாசிப்பு, இரவு 9 மணிக்கு அன்னதர்மம் நடைபெறுகிறது.

    ஜனவரி 6-ந்தேதி திருக்கல்யாண திருஏடு வாசிப்பு நடக்கிறது. அன்று அதிகாலை 5 மணிக்கு பணிவிடை, பகல் 12 மணிக்கு அன்னதர்மம், இரவு 7 மணிக்கு திருக்கல்யாண ஏடுவாசிப்பு, 8 மணிக்கு அய்யா வைகுண்டர் கருட வாகனத்தில் எழுந்தருளி பதிவலமும், திருதேர் வீதிஉலாவும், 10 மணிக்கு அன்னதர்மமும் நடக்கிறது. 8-ந்தேதி மாலை 5 மணிக்கு பட்டாபிஷேக திரு ஏடுவாசிப்பு நடைபெறுகிறது.

    • திருஏடு வாசிப்பு திருவிழா கடந்த 2-ந்தேதி தொடங்கியது.
    • ஆயிரக்கணக்கான அய்யாவழி பக்தர்கள் பதிக்கு வந்தனர்.

    சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமியின் தலைமைபதியில் திருஏடு வாசிப்பு திருவிழா கடந்த 2-ந் தேதி தொடங்கியது. விழாவில் தினமும் மாலையில் திருஏடு வாசிப்பு, இரவு வாகன பவனி போன்றவை நடந்தது. கடந்த வெள்ளிக்கிழமை அய்யா வைகுண்ட சாமிக்கு திருக்கல்யாண திருஏடு வாசிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

    விழாவின் நிறைவு நாளான நேற்று மாலையில் அய்யாவுக்கு சிறப்பு பணிவிடை, இரவு 7 மணிக்கு பட்டாபிஷேக திருஏடு வாசிப்பு, அன்னதானம் போன்றவை நடந்தன. நிகழ்ச்சியில் தலைமைபதி குரு பால. ஜனாதிபதி அகிலத்திரட்டு பாராயண விளக்கவுரையாற்றினார். குருமார்கள் பால. லோகாதிபதி, ஜனா.யுகேந்த், ஜனா.வைகுந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நேற்று மார்கழி முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் குமரி, சென்னை, நெல்லை, தூத்துகுடி, தென்காசி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான அய்யாவழி பக்தர்கள் பதிக்கு வந்தனர்.

    அவர்கள் முத்திரிகிணற்றில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து பால், பழம், பன்னீர், தேங்காய், பூ ஆகியவற்றை சுருளாக வைத்து அய்யாவை வணங்கினர்.

    ×