search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ayya Vaikunder"

    • தினமும் உகப்படிப்பு, அன்னதர்மம் வழங்குதல் நடக்கிறது.
    • தேரோட்டம் 31-ந்தேதி நடக்கிறது.

    திருச்செந்தூர் சுப்பிர மணிய சுவாமி கோவில் கடற் கரையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதாரப்பதியில் ஆடித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    முன்னதாக கொடி பட்டம் பதியைச்சுற்றி வந்து பதியை வந்தடைந்தது. பின்னர் கொடி மரத்தில் கொடியை வள்ளியூர் அய்யா வழி அகிலத் திருக்குடும்ப மக்கள் சபை தலைவர் எஸ்.தர்மர் கொடியேற்றினார். கொடி யேற்றத்தை தொடர்ந்து காலை 7 மணிக்கு அய்யா வைகுண்டர் புஷ்ப வாக னத்தில் பவனி, 9 மணிக்கு அன்னதர்மம், 12 மணிக்கு உச்சிபடிப்பு, பணிவி டையம் நடைபெற்றது

    பகல் 1 மணிக்கு அன்ன தர்மம், மாலை 4 மணிக்கு உகப்படிப்பு பணிவிடை 5 மணிக்கு புஷ்ப வாகன பவனி, 6 மணிக்கு அன்னதர்மம் இனிமம் வழங்குதல் நடக்கிறது. 11 நாட்கள் நடக்கும் இவ்விழாவில் ஒவ்வொரு நாளும் காலை மற்றும் மாலையில் உகப்படிப்பு, பணிவிடை, மதியம் உச்சிப்படிப்பு பணிவிடை, அன்னதர்மம், வழங்குதல் நடக்கிறது.

    இதே போல் விழாவில் ஒவ்வொரு நாளும் மாலை 5 மணிக்கு அய்யா வைகுண்டர் புஷ்ப வாகனம், மயில், அன்னம், சர்ப்பம், கருட வாகனம், குதிரை, ஆஞ்சநேயர்,இந்திரன் என பல்வேறு வாகனங்களில் பவனி நடக்கிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 31-ந்தேதி பகல் 12.05 மணிக்கு நடக்கிறது.

    தேரோட்டத்தை தமிழக மீன்வளம் மீனவர் நலம் மற்றும் கால்நடை பரா மரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் களக்காடு சுந்தர பாகவதர் குமார் ஜெய ராமன் ஆகியோர் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைக்கின்றனர். அன்று இரவு 1மணிக்கு காளை வாகன பவனியும் நடக்கிறது.

    • அய்யா வைகுண்ட சாமியின் ஜெயந்தி நாளான மாசி 20-ந்தேதியை (மார்ச்-4) அய்யா வைகுண்டர் சுவாமியின் அவதார தின விழாவாக அய்யாவழி மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
    • சாமிதோப்பு தலைமைபதியில் வாகன பவனியும், அன்னதானமும், அய்யாவழி மாநாடும் நடை பெறுகிறது.

    தென்தாமரைகுளம்:

    குமரி மாவட்டத்தில் புகழ் பெற்ற திருத்தலங்களில் சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப் பதியும் ஒன்றாகும்.

    இங்கு அய்யா வைகுண்ட சாமியின் ஜெயந்தி நாளான மாசி 20-ந்தேதியை (மார்ச்-4) அய்யா வைகுண்டர் சுவாமியின் அவதார தின விழாவாக அய்யாவழி மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

    இந்த அவதார தின விழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் அய்யா வழி பக்தர்கள் திரளாக கலந்து கொள்ளும் மாபெரும் அவதார தின விழா ஊர்வலம் நடைபெறுவது வழக்கம். இந்த ஊர்வலம் நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு சாமிதோப்பு தலைமைப்பதியை வந்தடையும். இந்த வருடம் 191-வது அவதார தின ஊர்வலம் வருகிற 4-ந் தேதி (சனிக்கிழமை) நடைபெறுகிறது.

    அய்யா வைகுண்ட சுவாமியின் அவதார தினத்திற்கு முந்திய தினமான மார்ச் 3-ம் தேதி காலை 6 மணிக்கு அய்யா வைகுண்டசுவாமி விஞ்சை பெற்ற திருச்செந்தூர், செந்தூர்பதியில் இருந்து நாகர்கோவிலை நோக்கி வாகன பேரணி ஒன்று புறப்படுகிறது. இந்தப் பேரணிக்கு ஜனா. வைகுந்த், பையன் அம்ரிஷ், கவுதம் ராஜ் ஆகியோர் தலைமை வகிக்கிறார்கள்.

    இந்த பேரணி திருச்செந்தூர் சீர்காய்ச்சி, திசையன் விளை, உடன்குடி, கூடங் குளம், செட்டிகுளம், ஆரல் வாய்மொழி வழியாக இரவு நாகர்கோவில் வந்தடைகிறது. அதேதினம் (மார்ச் 3-ந்தேதி) காலை 9 மணிக்கு திருவனந்தபுரம் சிங்காரத்தோப்பு. பத்ம நாபசுவாமி கோவில் வடக்கு வாசலில் இருந்து சாமிதோப்பை நோக்கி மற்றொரு வாகன பேரணி புறப்படுகிறது. இந்த வாகன பேரணியை பாலலோகாதிபதி துவக்கி வைக்கிறார். பையன் நேம்ரிஷ் தலைமை வகிக்கிறார்.

    இந்த வாகன பேரணி திருவனந்தபுரம், பாற சாலை, குழித்துறை, மார்த்தாண்டம், தக்கலை, வெட்டூர்ணிமடம் வழியாக இரவு நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலை சென்றடைகிறது. அதே தினம் (மார்ச் 3-ந்தேதி) மாலை 6 மணிக்கு சாமிதோப்பு தலைமைப்பதியிலிருந்து வைகுண்ட தீபம் கொண்டு சென்று ஆதலவிளை மாமலையில் தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சிக்கு பையன் கிருஷ்ணராஜ் தலைமை வகிக்கிறார்.

    திருச்செந்தூர் மற்றும் திருவனந்தபுரத்திலிருந்து புறப்பட்ட ஊர்வலம் நாகர்கோவில் நாக ராஜா கோவில் திடலை வந்தடைகிறது. அதைப்போல பல ஊர்களிலுள்ள அய்யா வழி நிழல் தாங்கலில் இருந்து ஊர்வலமாக வருகின்ற அய்யா வழி மக்களும் நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலை வந்தடைகிறார்கள். அங்கு இரவு 10 மணிக்கு மாசி மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டிற்கு பால. ஜனாதிபதி தலைமை வகிக்கிறார்.

    இந்த மாநாட்டில் அய்யா வழி அறிஞர்கள் பலர் பேசுகின்றனர். தொடர்ந்து கலை நிகழ்ச்சிகளும் நடை பெறுகிறது.

    வைகுண்ட சுவாமியின் அவதார தினமான வருகிற மார்ச் 4-ந்தேதி (சனிக்கிழமை) காலை 5 மணிக்கு நாகர்கோவில் நாகராஜா திடலில் இருந்து அவதார தினவிழா மாசி ஊர்வலம் சாமிதோப்பு நோக்கிப் புறப்படுகிறது.

    இந்த ஊர்வலத்திற்கு பால. ஜனாதிபதி தலைமை வகிக்கிறார். ஜனாயுகேந்த் முன்னிலை வகிக்கிறார்.

    இந்த ஊர்வலம் நாகர்கோவில், கோட்டார், சுசீந்திரம், வழுக்கம்பாறை. வடக்கு தாமரைகுளம் வழியாக சாமி தோப்பு தலைமைப்பதியை வந்தடை கிறது. ஊர்வலம் வரும் வழியில் பல மதத்தை சார்ந்தவர்களும், மற்றும் அய்யாவழி பக்தர்களும் வரவேற்பு கொடுக்கின்றனர். அன்று இரவு சாமிதோப்பு தலைமைபதியில் வாகன பவனியும், அன்னதானமும், அய்யாவழி மாநாடும் நடை பெறுகிறது.

    ×