search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அய்யா வைகுண்டர்"

    • இந்த ஊர்வலத்தை குரு பால ஜனாதிபதி தொடங்கி வைத்தார்.
    • அய்யாவழி பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெற்றது.

    சாமிதோப்பு தலைமைப் பதியில் அய்யா வைகுண்ட சாமி வடக்கு வாசலில் 6 வருடங்கள் பக்தர்களுக்காக தவமிருந்தார். இந்த தவம் நிறைவு பெற்றபிறகு அந்த தவத்தின் பலனை பற்றி அறிவதற்காக முட்டப்பதி பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் திருமால் கலைமுனி, ஞானமுனி ஆகிய இருவரை அனுப்பி சாமிதோப்பில் இருந்து அய்யா வைகுண்டசாமியை முட்டப்பதிக்கு அழைத்து வர ஏற்பாடு செய்தார்.

    முட்டப்பதியிலிருந்து சாமிதோப்பு வந்த கலைமுனி, ஞானமுனி ஆகிய இருவருடனும் மற்றும் தனது பக்தர்களுடன் அய்யா வைகுண்டசுவாமி பங்குனி மாதம் கடைசி வெள்ளிக்கிழமையன்று ஊர்வலமாக முட்டப்பதி நோக்கி சென்றார். அங்கு பக்தர்கள் கடற்கரையில் காத்திருக்க வைகுண்டசாமி திருப்பாற் கடலுக்குள் சென்று திருமாலுடன் ஆலோசனை பெற்று பின்னர் அன்று மாலையே சாமி தோப்புக்கு திரும்பி வந்ததாக கூறப்படுகிறது.

    அதன்படி ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை சாமிதோப்பு தலைமைப் பதியிலிருந்து முட்டப்பதிக்கு அய்யா வழி பக்தர்கள் செல்லும் முத்துக் குடை ஊர்வலம் நடை பெறுவது வழக்கம். அதே போல் நேற்று காலை 6 மணிக்கு தலைமை பதியிலிருந்து முத்து குடை ஊர்வலம் தொடங்கியது.

    முத்துக்குடை ஊர்வலத்தை முன்னிட்டு சாமிதோப்பு அய்யா வைகுண்ட சுவாமி தலைமைப்பதியில் நேற்று அதிகாலை 4 மணிக்கு முத்திரி பதமிடுதலும், அய்யாவுக்கு சிறப்பு பணிவிடையும், வாகன பவனியும், காலை 6 மணிக்கு தலைமைப்பதி முன்பிருந்து மேளதாளங்கள் முன்செல்ல முத்துக் குடை ஊர்வலம் புறப்பட்டது.

    இந்த ஊர்வலத்தை குரு பால ஜனாதிபதி தொடங்கி வைத்தார். குரு நேம்ரிஷ் ஊர்வலத்திற்கு தலைமை தாங்கினார். குருமார்கள் பால.லோகாதிபதி, பையன் கிருஷ்ணராஜ், ஜனா.யுகேந்த், டாக்டர் வைகுந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஊர்வலம் சாமிதோப்பில் இருந்து புறப்பட்டு கரும்பாட்டூர், வெள்ளையந்தோப்பு, ஈச்சன்விளை, அகஸ்தீஸ்வரம், வழியாக முட்டப்பதி சென்றடைந்தது. ஊர்வலம் செல்லும் பகுதிகளில் உள்ள அய்யா வைகுண்டசாமி நிழல்தாங்கல்களில் சிறப்பு வழிபாடு மற்றும் தர்மம் நடைபெற்றது.

    நண்பகல் ஊர்வலம் முட்டப்பதியை சென்றடைந்து முட்டப்பதி பால் கடலில் பதமிட்டு அய்யா வைகுண்ட சாமிக்கு சிறப்பு பணிவிடையும், உச்சி படிப்பும் தொடர்ந்து அய்யாவழி பக்தர்களுக்கு அன்னதானமும் நடைபெற்றது.

    மீண்டும் மாலை 4 மணிக்கு முட்டப்பதியிலிருந்து ஊர்வலம் புறப்பட்டு கொட்டாரம், அச்சங்குளம், பொற்றையடி, கரும்பாட்டூர் வழியாக சாமிதோப்பு தலைமை பதியை வந்தடைந்தது. இந்த ஊர்வலத்தில் திரளான அய்யாவழி பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • ஊர்வலத்தை தலைமைப்பதி குரு பால ஜனாதிபதி தொடங்கி வைக்கிறார்.
    • நிழல்தாங்கல்களில் சிறப்பு வழிபாடு மற்றும் தர்மம் நடைபெறுகிறது.

    சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் இருந்து முட்டப்பதிக்கு அய்யாவழி பக்கதர்கள் கலந்து கொள்ளும் முத்துக்குடை ஊர்வலம் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான முத்துக்குடை ஊர்வலம் நாளை(வெள்ளிக்கிழமை) காலை 6 மணிக்கு நடைபெறுகிறது.

    ஊர்வலத்தை முன்னிட்டு சாமிதோப்பு தலைமைப்பதியில் அதிகாலை 4 மணிக்கு முத்திரி பதமிடுதல், அய்யாவுக்கு சிறப்பு பணிவிடை, காலை 6 மணிக்கு தலைமைப்பதி முன்பு இருந்து முத்துக்குடைகள், மேளதாளங்கள் முன்செல்ல முத்துக்குடை ஊர்வலம் புறப்படுகிறது. ஊர்வலத்தை தலைமைப்பதி குரு பால ஜனாதிபதி தொடங்கி வைக்கிறார்.

    டாக்டர் வைகுந்த் ஊர்வலத்திற்கு தலைமை தாங்குகிறார். பால.லோகாதிபதி, பையன் கிருஷ்ணராஜ், ஜனா.யுகேந்த், பையன் நேம்ரிஷ் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். ஊர்வலமானது சாமிதோப்பில் இருந்து புறப்பட்டு கரும்பாட்டூர், வெள்ளையந்தோப்பு, ஈச்சன்விளை, அகஸ்தீஸ்வரம், வழியாக முட்டப்பதி சென்றடைகிறது.

    ஊர்வலம் செல்லும் பகுதிகளில் உள்ள நிழல்தாங்கல்களில் சிறப்பு வழிபாடு மற்றும் தர்மம் நடைபெறுகிறது. நண்பகல் ஊர்வலம் முட்டப்பதியை சென்றடைந்ததும் முட்டப்பதி பால்கடலில் பதமிட்டு அய்யா வைகுண்டசாமிக்கு சிறப்பு பணிவிடை, உச்சி படிப்பு, அய்யாவழி பக்தர்களுக்கு அன்னதானம் நடக்கிறது. பின்னர், ஊர்வலம் மீண்டும் மாலை 4 மணிக்கு முட்டப்பதியிலிருந்து புறப்பட்டு கொட்டாரம், அச்சங்குளம், பொற்றையடி, கரும்பாட்டூர் வழியாக சாமிதோப்பு தலைமைபதியை வந்தடைகிறது. இந்த ஊர்வலத்தில் திரளான அய்யாவழி பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.

    • திருயேடு வாசிப்பு நிகழ்ச்சி கடந்த மாதம் 24-ந் தேதி தொடங்கியது.
    • கருடவாகனத்தில் அய்யா வைகுண்டர் ஊர்வலம் புறப்பட்டு பாவூர்சத்திரம் வந்தடைந்தது.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் சுற்றுவட்டார தலைமைப் பதியில் அய்யா வைகுண்டரின் அகிலத்திரட்டு அம்மானை திருயேடு வாசிப்பு நிகழ்ச்சி கடந்த மாதம் 24-ந் தேதி முதல் தொடங்கியது. 8-ம் திருநாளான 30-ந் தேதி மாலையில் அன்னதானமும், இரவில் அய்யா வைகுண்டரின் இகனைதிருக்கல்யாண நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    அதனைத்தொடர்ந்து நேற்று அகிலத்திரட்டு திருயேடு வாசிப்பும், குறும்பலாபேரி பெரும்பனையூர் தெருவில் உள்ள அய்யா நிழல் தாங்கள் பதியில் இருந்து கருடவாகனத்தில் அய்யா வைகுண்டர் ஊர்வலம் புறப்பட்டு பாவூர்சத்திரம் வந்தடைந்தது. இரவில் அய்யா வைகுண்டரின் பட்டாபிஷேக நிகழ்ச்சியும், அதனைத்தொடர்ந்து அன்னதானமும் நடைபெற்றது.

    இதில் சுவாமிதோப்பு குரு பாலபிரஜாபதி அடிகளார் கலந்துகொண்டு சொற்பொழிவாற்றினார். திருவிழாவில் பாவூர்சத்திரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த அய்யாவழி பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

    • இந்த திருவிழா ஏப்ரல் 3-ந்தேதி வரை 11 நாட்கள் நடக்கிறது.
    • 31-ந்தேதி கலி வேட்டையாடும் நிகழ்ச்சி நடக்கிறது.

    கன்னியாகுமரிஅருகே உள்ள முட்டப்பதியில் அய்யா வைகுண்டசாமி கோவில் உள்ளது. இது அய்யா வைகுண்ட சாமியின் பஞ்சபதிகளில் ஒன்றாகும். இந்த கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் 11 நாட்கள் திருவிழா நடை பெறுவது வழக்கம். அதே போல இந்தஆண்டுக்கான பங்குனி தேரோட்ட திருவிழா வருகிற 24-ந்தேதிகொடி ஏற்றத்துடன் தொடங்குகிறது.

    இந்ததிருவிழாஅடுத்த மாதம் (ஏப்ரல்) 3-ந்தேதி வரை 11 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது. இதையொட்டி 1-ம் திருவிழாவான நாளை (24-ந்தேதி) அதிகாலை 5.30 மணிக்கு திருக்கொடியேற்றம் நிகழ்ச்சி நடக்கிறது. பகல் 11.30 மணிக்கு முட்டப்பதி திருபாற் கடலில்அய்யாவழிபக்தர் கள்தீர்த்த மாடி பதமிடும் நிகழ்ச்சி நடக்கிறது.பின்னர் உச்சிப்படிப்பு, அன்னதர்மம் போன்ற நிகழ்ச்சிகள் நடக்கி றது. இரவு 7.30 மணி க்குஅய்யா கருட வாகனத் தில்எழுந்தருளி கோவிலை சுற்றி மேளதா ளங்கள் முழங்க வலம் வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

    2-ம் திருவிழாவான 25-ந்தேதி முதல் 7-ம் திருவிழாவான 30-ந்தேதி வரை தினமும் பணிவிடைகள், உச்சிப்படிப்பு, தர்மங்கள் மற்றும் இரவு வாகன பவனி போன்றவை நடக்கிறது. 2 மற்றும் 3-ம் திருவிழா அன்று இரவு7-30 மணிக்கு அய்யா கருட வாகனத்தில் பவனி வரும் நிகழ்ச்சியும் 4 மற்றும்5-ம்திருவிழா அன்று இரவு 7-30மணிக்கு அன்ன வாகனத்தில் அய்யா பவனி வரும் நிகழ்ச்சியும் 6-ம் திருவிழா அன்று இரவு 7-30 மணிக்கு சர்ப்ப வாகனத்தில் அய்யா பவனி வரும் நிகழ்ச்சியும் 7-ம் திருவிழாஅன்றுஇரவு7-30 அய்யா கருட வாகனத்தில் பவனி வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

    8-ம் திருவிழா வான 31-ந்தேதி இரவு அய்யா வைகுண்டசாமி முட்டப்பதி கடலில் கலி வேட்டையாடும் நிகழ்ச்சி நடக்கிறது. இதையொட்டி அன்றுஅதிகாலை 4 மணி க்கு அய்யாவுக்கு பணிவிடையும் அதைத்தொடர்ந்து உகப்ப டிப்பும் நடக்கிறது. பகல் 12மணிக்குஉச்சிப்படிப்பு, பால்அன்னதர்மம் போன்றவை நடக்கிறது. இரவு 7 மணிக்கு அய்யா வைகுண்டசாமி பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட குதிரை வாகனத்தில் எழுந்தருளி கோவிலில் இருந்து மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக புறப்பட்டு ஒற்றையால்விளை, மாதவபுரம் வழியாக முட்டப்பதி வரை பவனி வந்து வடக்கு வாசலுக்கு எதிரே அமைந்துஉள்ள கடலில் கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடக்கிறது.இரவு 11 மணிக்குஅன்னதர்மம் நிகழ்ச்சி நடக்கிறது.

    9 மற்றும் 10-ம் திருவிழா வான அடுத்த மாதம் (ஏப்ரல்) 1 மற்றும் 2-ந்தேதிகளில் இரவு7-30மணிக்கு சப்பர வாகனத்தில் அய்யா எழுந்தருளி கோவிலை சுற்றி பவனி வரும் நிகழ்ச்சி நடக்கிறது.11-ம் திருவிழாவான 3-ந்தேதி பகல் 12 மணிக்கு அய்யா தேரில் எழுந்தருளி பதியை சுற்றி வலம்வரும் தேரோட்ட நிகழ்ச்சி நடக்கிறது. மறுநாள் (4-ந்தேதி) அதிகாலை திருக்கொடி இறக்க நிகழ்ச்சியும் தான தர்மங்களும் நடக்கிறது. திருவிழாவுக்கான ஏற்பாடுகளை முட்டப்பதி தலைமை தர்மகர்த்தாஆர்.பாலசுந்தர ம், தர்மகர்த்தா ஆர்.செல்வராஜன் ஆகியோர் செய்து வருகிறார்கள்.

    • 17 நாட்கள் திருஏடு வாசிப்பு நடைபெறுகிறது.
    • 17-வது நாள் பட்டாபிஷேக விழா நடைபெறுகிறது.

    சாமிதோப்பு அய்யா வைகுண்டர் அன்புவனத்தில் திரு ஏடு வாசிப்பு விழா நேற்று முன்தினம் தொடங்கியது. இதை குரு பால பிரஜாபதி அடிகளார் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். விஜயநகரி ராஜபழம், தங்கேஸ்வரி ஆகியோர் திருஏட்டினை வாசிக்கின்றனர். இதையொட்டி மாலை 5 மணிக்கு அய்யாவுக்கு சிறப்பு பணிவிடைகள் நடைபெற்றன. தொடர்ந்து 17 நாட்கள் மாலை 5.30 மணிக்கு திருஏடு வாசிப்பு நடைபெறுகிறது.

    விழாவில் பேராசிரியர் ஆர்.தர்ம ரஜினி, மும்பை அய்யாவு, வென்னிமல், மார்த்தாண்டம் செல்லையா நாடார், மகாராஜன் ஆசாரி உள்பட பலர் கலந்து கொண்டனர். 15-வது நாள் திருக்கல்யாண திருஏடு வாசிப்பும், 17-வது நாள் பட்டாபிஷேக விழாவும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

    • இந்த விழா 20-ந்தேதி வரை 11 நாட்கள் நடக்கிறது.
    • 18-ந்தேதி திருஏடு வாசிப்பு நடக்கிறது.

    மார்த்தாண்டம் மாமூட்டுக்கடை நெட்டியான் விளை அய்யா வைகுண்டர் திருப்பதி கோவிலில் 191-வது ஆண்டு அய்யா வைகுண்டர் அவதார தின விழா மற்றும் 73-வது ஆண்டு திருஏடு வாசிப்பு விழாவும் நேற்று தொடங்கியது. இந்த விழா 20-ந்தேதி வரை 11 நாட்கள் நடக்கிறது.

    இதையொட்டி தினமும் அதிகாலை 5 மணிக்கு பணிவிடையும், உகப்படிப்பும், மாலை 5 மணிக்கு பணிவிடையும், திருஏடு வாசிப்பும், இரவு 9 மணிக்கு உகப்படிப்பும், 9.30 மணிக்கு அன்ன தர்மம் ஆகியவை நடைபெறுகிறது. நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு சமய வகுப்பு மாணவ மாணவிகளின் பண்பாட்டு போட்டியும், இரவு 10 மணிக்கு வைகுண்டர் கலைக்குழுவின் கலை நிகழ்ச்சியும் நடக்கிறது. 17-ந் தேதி மாலை 5.30 மணிக்கு திருஏடு வாசிப்பும், இரவு 7 மணிக்கு திருக்கல்யாண திருஏடு வாசிப்பும், அன்னதானமும் நடைபெறுகிறது.

    18-ந் தேதி மாலை திருஏடு வாசிப்பு, இரவு 10 மணிக்கு கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. 19-ந் தேதி காலை 9 மணிக்கு பரிசு வழங்குதலும், பிற்பகல் 3 மணிக்கு பால் வைப்பு, 4 மணிக்கு திருஏடு வாசிப்பும், பட்டாபிஷேகமும், 7 மணிக்கு திருவிளக்கு பணிவிடையும் நடக்கிறது. 20-ந் தேதி காலை மற்றும் மாலை பணிவிடை, உகப்படிப்பு, 5 மணிக்கு அய்யா இந்திர வாகனத்தில் பவனி வருதல் ஆகியவை நடைபெறுகிறது. இந்த வாகனம் மாமூட்டுக்கடை, கீழ்விளை, இட விளாகம் ஸ்ரீ பத்திரகாளி அம்மன் கோவில், பங்காணிவிளை வழியாக கோவிலை வந்து அடைகிறது. இரவு 9 மணிக்கு பள்ளியுணர்த்தல், 9.30 மணிக்கு அன்னதானம் ஆகியவை நடைபெறுகிறது.

    • அவதார தின விழா பணிவிடையும் அன்னதர்மம் நடைபெற்றது.
    • அய்யா வைகுண்டரை அவதாரபதிக்கு அழைத்து வரும் நிகழ்ச்சி நடந்தது.

    திருச்செந்தூர் கடற்கரையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதாரப்பதியில் அய்யா வைகுண்டர் 191-வது அவதார தின விழா நடைபெற்றது.

    இதை முன்னிட்டு நேற்று அதிகாலை 5 மணிக்கு பணிவிடை, உகப்படிப்பு, காலை 6 மணிக்கு அன்னதர்மமும், பகல் 12 மணிக்கு உச்சபடிப்பு, பணிவிடையும், தொடர்ந்து ஒரு மணிக்கு அன்னதர்மம், மாலை 7 மணிக்கு பணிவிடை, தொடர்ந்து அய்யா புஷ்ப வாகனத்தில் எழுந்தருளி பதியை சுற்றி பவனி வரும் நிகழ்ச்சியும் அன்னதர்மம் நடைபெற்றது. இரவு சிவசந்திரன் இன்னிசை கச்சேரியும் தொடர்ந்து பட்டிமன்றம் நடைபெற்றது.

    191-வது அவதார தினமான இன்று அதிகாலை 5 மணிக்கு தாலாட்டு, பள்ளி உணர்த்தல் அபயம் பாடுதல் காலை 6.50 மணிக்கு சூரிய உதயத்தில் கடல் பதமிட்டு சூரிய பிரகாச சுத்த அய்யா வைகுண்டரை அவதாரபதிக்கு அழைத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, அவதார தின விழா பணிவிடையும் அன்னதர்மம் நடைபெற்றது.

    அவதார தின விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். அவதார தின விழாவையொட்டி இன்று நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரி மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    விழாவில் சபாநாயகர் அப்பாவு, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன், சார்பு நீதிபதி வஷித்குமார், சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் சந்திரசேகர், முன்னாள் எம்.எல்.ஏ.ரெட்டியார்பட்டி நாராயணன், அய்யா வழி அகிலத் திருக் குடும்ப மக்கள் சபை இணை தலைவர்கள் கோபால் நாடார், பால்சாமி,விஜயகுமார், ராஜதுரை, இணை செயலாளர்கள் வரதராஜ பெருமாள், ராதா கிருஷ்ணன், செல்வின், தங்க கிருஷ்ணன்,நிர்வாக குழு உறுப்பினர் ஆதிநாரா யணன், மோகன் குமாரராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை வள்ளியூர் அய்யாவழி அகில திருக்குடும்ப மக்கள் சபை தலைவர் எஸ்.தர்மர், செயலாளர் பொன்னு துரை, பொருளாளர் ராமையா நாடார், துணை தலைவர் அய்யாபழம், துணை செயலாளர் ராஜேந்திரன் மற்றும் இணை தலைவர்கள், இணை செயலாளர்கள், நிர்வாக குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

    • சில பக்தர்கள் தலையில் சந்தனக்குடம் எடுத்துச் சென்றனர்.
    • ஊர்வலத்தின் முன்னால் சிறுமிகள் கோலாட்டம் அடித்தபடி சென்றனர்.

    அய்யா வைகுண்ட சாமி யின் 191-வது அவதார தின விழா இன்று கொண்டாடப்பட்டது. இதில் அய்யா வழி பக்தர்கள் திரளாக பங்கேற்றனர். விழாவை முன்னிட்டு கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களுக்கு இன்று உள்ளூர் விடுமுறையும் அளிக்கப்பட்டு இருந்தது.

    அய்யாவின் அவதார தின விழாவை முன்னிட்டு திருச்செந்தூர் மற்றும் திருவனந்தபுரத்தில் இருந்து வாகன பேரணி நேற்று தொடங்கியது. இந்த பேரணி இரவில் நாகர்கோவில் நாக ராஜா கோவில் திடலை வந்தடைந்தது. தொடர்ந்து அங்கு மாசி மாநாடு நடை பெற்றது.

    மாநாட்டுக்கு பாலஜனாதிபதி தலைமை தாங்கினார். மேயர் மகேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்று பேசினர்.முன்னதாக மாலையில் சாமி தோப்பு தலைமை பதியில் இருந்து மகாதீபம் கொண்டு வரப்பட்டு ஆதலவிளை வைகுண்ட மாமலையில் ஏற்றப்பட்டது.

    இன்று அதிகாலை நாகராஜா கோவில் திடலில் இருந்து சாமிதோப்புக்கு அவதார தின ஊர்வலம் தொடங்கியது. இதில் பால ஜனாதிபதி, விஜய் வசந்த் எம்.பி., உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஊர்வலத்தில் பங்கேற்பதற்காக பக்தர்கள் நேற்று இரவே நாகராஜா கோவில் திடலில் குவிந்திருந்தனர்.

    அவர்கள் இன்று காலை அய்யா சிவ...சிவ.. அரகர...அரகரா... என்ற பக்தி கோஷத்துடன் சாமிதோப்பை நோக்கி ஊர்வலமாக சென்றனர். காவி உடை அணிந்த அவர்கள் கைகளில் காவி கொடிகளை ஏந்தியபடி சென்றனர். சில பக்தர்கள் தலையில் சந்தனக்குடம் எடுத்துச் சென்றனர்.

    ஊர்வலத்தின் முன்னால் சிறுமிகள் கோலாட்டம் அடித்தபடி சென்றனர். நாகராஜா கோவிலில் இருந்து கோட்டார், இடலாக்குடி, சுசீந்திரம், வழுக்கம்பாறை, ஈத்தன்காடு வழியாக சாமி தோப்புக்கு ஊர்வலம் சென்றது. ஊர்வலம் சென்ற பகுதிகளில் எல்லாம் பக்தர்கள் திரண்டு உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

    வெற்றிலை,பாக்கு, பழம் என சுருள் வைத்து பல இடங்களில் வரவேற்பு அளிக்கப்பட்டது.ஊர்வ லத்தில் பங்கேற்றவர்க ளுக்கு வழிநெடுக மோர், குளிர்பானம், பானகரம் வழங்கப்பட்டன.

    சாமிதோப்பு தலைமை பதியை ஊர்வலம் சென்ற டைந்ததும் அங்கு அய்யா வுக்கு பணிவிடை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதனால் தலைமைபதியில் இன்று பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.

    கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து மட்டு மின்றி தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும், கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமான அய்யாவழி பக்தர்கள் சாமிதோப்பில் திரண்டனர். இதனால் திரும்பிய இடமெல்லாம் மக்கள் தலைகளே காணப்ப ட்டன.

    நேற்று இரவே ஆயிரக்க ணக்கானோர் தரிசனத்திற்கு குவிந்ததால், வடக்குவாசல் பள்ளியறை பதி மற்றும் 4 ரத வீதிகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. அவர்கள் தரிசனத்திற்காக நீண்ட வரிசையில் காத்திரு ந்தனர்.ஒருவர் தரிசனம் பெற சுமார் 2 மணி நேரம் வரை ஆனது. இன்று இரவு சாமிதோப்பு கலையரங்கில் அய்யாவழி மாநாடு மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

    விழாவை முன்னிட்டு போக்குவரத்திலும் மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. ஈத்தங்காடு-சாமிதோப்பு சாலையில் இயக்கப்படும் பஸ் போக்குவரத்து இன்று காலை முதல் மாற்றுப்பாதை யில் இயக்கப்பட்டது. மேலும் பதி வளாகப் பகுதியில் வாகனங்கள் நுழைய தடை விதிக்கப்பட்டு இருந்தது.

    விழாவை முன்னிட்டு மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் மேற்பார்வையில் போலீசார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

    சாமிதோப்பு பதி மட்டுமல்லாமல் மாவட்டம் முழுவதும் உள்ள பதிகள்,நிழல் தாங்கல்களிலும் இன்று அய்யா அவதார தின சிறப்பு வழிபாடுகள் நடந்தன. உச்சிப்படிப்பு, உகப்படிப்பு, பணிவிடை உள்ளிட்ட நிகழ்ச்சிகளுடன் வாகன பவனியும் நடந்தது.

    • தவத்தின் போது நீரைமட்டுமே உணவாக அய்யா வைகுண்டர் உட்கொண்டார்.
    • பத்மாசனத்தில் அமர்ந்து வடக்கு முகமாக தவத்தை மேற்கொண்டார்.

    அய்யா வைகுண்டசாமியின் தலைமைப்பதியாக திகழும் சாமிதோப்பில் உள்ள முத்திரி கிணற்றில் பதமிட்டு வழிபட்ட பக்தர்கள் வடக்கு வாசலுக்கு வருவார்கள். அவர்கள் வந்ததும் அய்யாவை வழிபடுவார்கள்.அய்யா வைகுண்டர் வடக்கு வாசலில் தவம் புரிந்ததால், இதனை "தல வாசல்" என்றும் அழைப்பார்கள். முற்காலத்தில் பகவான் அய்யா வைகுண்டர் தவம் புரிய தீர்மானித்தார். அதனால் சாமிதோப்பில் தற்போது வடக்கு வாசலாக இருக்கும் இடத்தில் அய்யா வைகுண்டர் 6 ஆண்டுகள் தவம் புரிந்தார்.

    தவம் புரிவதற்காக மூன்றுக்கு மூன்று சதுர அடி அகலம், கழுத்தளவு உள்ள பள்ளத்தில் வடக்கு முகமாக நின்று முதல் இரு ஆண்டுகள் தவத்தை மேற்கொண்டார். அந்த தவத்தின் போது நீரைமட்டுமே உணவாக அய்யா வைகுண்டர் உட்கொண்டார்.

    அடுத்த இரண்டாண்டு தவம், அந்த பள்ளத்தை மூடி அதன் மேல் பத்மாசனத்தில் அமர்ந்து வடக்கு முகமாக தவத்தை மேற்கொண்டார். இத்தவத்தின் போது பாலையும், பழத்தையும் அய்யா வைகுண்டர் உணவாக உட்கொண்டார்.

    மூன்றாவது இரண்டாண்டு தவம் என்பது காவி துணி விரித்த ஆறுகால் உள்ள பனை நார் கட்டிலில் வடக்கு பார்த்து தவத்தை மேற்கொண்டார். இவ்வாறு அய்யா வைகுண்டர் தவங்களை மேற்கொண்டாலும் மக்களுக்கு போதனைகளையும் எடுத்து அருளினார். இதன் காரணமாக அய்யா வைகுண்டர் பதிகளில் வடக்கு வாசல் அமைக்கப்படுகின்றன.

    தலைமைப்பதியாம் சாமிதோப்பில் அமைந்துள்ள வடக்கு வாசலில் அய்யா வைகுண்டர் சாந்த சொரூபமாக தவம் இருந்தார். அதனால் இங்கு பக்தர்கள் அமைதியாக, "அய்யா சிவ சிவ அரகர அரகரா" என்று வழிபடுகின்றனர்.

    வடக்கு வாசலில் அய்யாவின் இருக்கையும், தூண்டா மணி விளக்கும், நிலை கண்ணாடியும், திருமண்ணும் வைக்கப்பட்டு இருக்கும். பக்தர்கள் நிலை கண்ணாடியை பார்த்து வழிபட வேண்டும். இதற்கு காரணம் "உன்னிலும் நான் இருக்கிறேன்" என்ற உயர்ந்த கொள்கையாகும். 'நான்' என்றால் பகவானாகிய அய்யா வைகுண்டரை குறிக்கிறது.

    நிலை கண்ணாடியை வழிபட்ட பின்னர் அங்கு வைக்கப்பட்டிருக்கும் திருமண்ணை பக்தர்கள் தங்கள் நெற்றியில் இட வேண்டும். இந்த திருமண் அப்பகுதியில் பக்தர்கள் மிதித்து காலடி பட்ட மண், அந்த திருமண்ணுக்கு பல மகிமை உண்டு.

    திருமண்ணுக்கு பல மருத்துவ குணங்களும் உண்டு. மகாபாரதத்தில் கண்ணனாக வந்த அய்யா வைகுண்டர் ஒரு சமயம் தன் பக்தர்களின் காலடி மண்ணை எடுத்து, அதை தனக்கு தானே தூவி அர்ச்சித்து கொண்டதாக கூறப்படுகிறது. பக்தர்களின் காலடி மண்ணுக்கு உரிய மகிமை அன்றே வெளிப்பட்டது. பக்தர்களின் நோயை குணப்படுத்தும் மகத்துவம் உடையது.

    தலைமைப்பதியின் வடக்கு வாசலின் முகப்பில் உள்ள கோபுரம் பார்ப்பதற்கு கம்பீரமாகவும், அழகாகவும் இருக்கிறது. இங்கு வழிபடும் பக்தர்களுக்கு அய்யா வைகுண்டர் பல அற்புதங்களை நிகழ்த்தி வருகிறார்.

    • சிவத்தொண்டன்போல் வேடமிட்டு கயிலாயம் சென்று சிவனை சந்தித்தார் நாராயணர்.
    • முழு பிரபஞ்ச ஆளுமையை நாராயணருக்கு சிவன் வழங்கினார்.

    பிரபஞ்சம் மனிதர்கள் மட்டுமின்றி அனைத்து ஜீவராசிகளுக்குமான இருப்பிடமாக இருந்து வருகிறது. படைப்பின் தத்துவத்தை பரிணாமத்தின் உச்சத்தில் கொண்டு நிறுத்திக்கொண்டிருக்கிறார்கள் மனிதர்கள். அப்படிப்பட்ட உயிரோட்டமான பிரபஞ்சத்தில் நல்ல உயிர்கள் ஜனிப்பதையே தடுத்து வந்தான் குரோணி.

    ஆதியுகமான நீடிய யுகத்தில் கயிலையில் சிவபெருமான் வேள்வி ஒன்றை வளர்த்தார். அதில் இருந்து பூமியில் தோன்றிய அரக்கன்தான் குரோணி. அந்த குரோணி பிரபஞ்சத்தில் ஜனித்த உயிர்களை இரையாக தின்று கொண்டே இருந்தான். இதனால் மேலும், உயிர்கள் பிறப்பெடுக்க முடியாதநிலை ஏற்பட்டது. அவன் 14 லோகங்களையும் விழுங்கினான்.

    மாயக்கலி பிறப்பு

    எனவே, குரோணியை அழித்து பிரபஞ்சத்தை காக்க பூமியில் மகா விஷ்ணு தவம் இருந்தார். அதன்பின்னர் தனது தவ சக்தியால் குரோணியை 6 துண்டுகளாக வெட்டி பூமியில் தள்ளினார். பூமியில் தள்ளப்பட்ட குரோணியின் 6 துண்டுகள் கடலுக்குள் 6 குழிகள் ஏற்படுத்தப்பட்டு அதற்குள் தேவர்களால் புதைக்கப்பட்டு அவற்றுக்கான சடங்குகளும் செய்து முடிக்கப்பட்டன.

    அந்த துண்டுகளில் இருந்து யுகங்கள் தோறும் குரோணி அரக்கனாக பிறப்பெடுத்தான். அப்போது மகாவிஷ்ணுவும் அவதாரமெடுத்து அந்த அரக்கனை வதம் செய்தார்.

    இந்தநிலையில் தான் கலியுகத்தில் குரோணியின் 6-வது துண்டு தானாகவே உயிர்நிலை பெற்றது. 6-வது துண்டில் இருந்து மாயனின் உருவான மனு சொரூபத்தில் தலைகீழாக உருவெடுத்து நின்றது. அது ஈசனே பார்த்து அதிசயிக்கும் வகையில் கலியனாக இருந்தது. அதனால் அவன் பல்வேறு வரங்களை பெற்று ஈரேழு ேலாகத்தின் ஆதிக்கத்தையும் தமதாக்கிக்கொண்டான்.

    இதனால் பரப்பிரம்மத்தின் சகல சொரூபங்களும் கலிக்கு வசப்பட்டு நலிவடைந்து போனது. இதனால் சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளும் தங்கள் சுயரூபத்தில் சென்று கலியை அழிக்க இயலாத நிலை ஏற்பட்டது. கலியின் ஆதிக்கத்தின் உச்சத்தால் பூமி அழியப்போகும் அபாயத்தை பராசக்தி தெரிந்து கொண்டார். இதனால் அவர் மகாவிஷ்ணுவை தேடி அலைந்தார்.

    அவரோ ஸ்ரீரங்கத்தில் பூஜை முறை சரியில்லையென்று திருவனந்தபுரத்தில் அனந்த பத்மநாபனாக பள்ளிகொண்டிருந்தார். அந்த காலத்தில் கலியனின் ஆதிக்கத்திலிருந்த திருவிதாங்கூர் மன்னர்கள் சான்றோர்களை கொடுமைப்படுத்தி வந்தனர். இதனால் மன்னருக்கு புத்திகூறியபோது அதை அவர் ஏற்கவில்லை. இதன் காரணமாக அங்கிருந்த நாராயணர் திருச்செந்தூர் வாரிக்கரையில் ஆண்டியாக பள்ளிகொண்டிருந்தார்.

    அவதாரத்தை அறிவித்தார்

    இதை அறிந்த தேவர்களும், ரிஷிகளும், உமையவளும் நாராயணரை வேண்டி கயிலாயம் சென்று சிவனை சந்திக்கும் படியும், கலியின் கொடுமை அதிகரித்து வருவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் கூறினர். அதனைத்தொடர்ந்து சிவத்தொண்டன்போல் வேடமிட்டு கயிலாயம் சென்று சிவனை சந்தித்தார் நாராயணர்.

    அதன்பின்னர் முழு பிரபஞ்ச ஆளுமையை நாராயணருக்கு சிவன் வழங்கினார். அதனைத்தொடர்ந்து கலியழிக்க நாராயணர் முடிவு செய்தார்.

    இந்தநிலையில்தான் குமரி மாவட்டம் சாமிதோப்பில் சான்றோர் குலத்தில் ஒரு ஆண்குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு முடிசூடும் பெருமாள் என்று பெயர் சூட்டினர். அந்த குழந்தையும் தவவாழ்வில் சிறந்து விளங்கியது.

    அப்போது கயிலையில் கொல்லம் ஆண்டு 1008-ல் வைகுண்டர் அவதாரம் புரியப்போவதை நாராயணர் அறிவித்தார். இதற்காக அவரோடு சிவன் முதல் தேவர்கள் அனைவரும் திருச்செந்தூருக்கு புறப்பட்டனர்.

    திருச்செந்தூரில் அவதாரம்

    அதேநேரம் 24 வயதான முடிசூடும் பெருமாளுக்கு உடலில் நோய் ஏற்பட்டது போல் காட்சி அளித்தார். நோய் தீரவேண்டும் என்றால் அவனை திருச்செந்தூருக்கு அழைத்து வாருங்கள் என்று முடிசூடும் பெருமாளின் தாயார் கனவில் நாராயணர் கூறினார்.

    அதன்படி முடிசூடும்பெருமாளை உறவினர்கள் உதவியுடன் திருச்செந்தூருக்கு அழைத்து சென்றார் அவரது தாயார். திருச்செந்தூர் அருகே சென்றதும் இயக்கமற்று இருந்த முடிசூடும்பெருமாள் குதிரைநடை கொண்டு கடலுக்குள் இறங்கினார்.

    கடலுக்குள் தவத்தில் நின்ற பொன்மகரலெட்சுமியை தனது ஆதி உருவம் காட்டி நாராயணர் அரவணைத்தார். இதன்பயனாக மகரகருவறையில் பரப்பிரம்மம் பாலனாக உருவெடுத்து இருந்தது. அந்த பரப்பிரம்மம் சிவமயத்தை பெற்று மகர தரிசனம் அடைந்த நற்சொரூபனாக பாற்கடலில் இருந்து பூமிக்கு புறப்பட்டார்.

    அப்போது மகரத்துக்குள் இருந்த வைகுண்ட பரப்பிரம்ம பாலனுக்கு சகல அதிகாரங்களையும் வழங்கியதோடு, 1008-ல் நாராயணரே பண்டாரமாக பள்ளிகொள்ளப்போகும் விஞ்சை பற்றி கூறப்பட்டது.

    அதன்பிறகு பாலனை பொன்தொட்டிலில் அமர்த்தி சரஸ்வதியும், வீரமகாலெட்சுமியும் தாலாட்டு பாடினர். தேவர்களும், முனிவர்களும் பள்ளி எழுச்சி சேவை செய்தனர். அதனால் தனது யுகக்கடமையை உணர்ந்த வைகுண்ட பரப்பிரம்ம பாலன் தந்தை விஸ்வநாராயணரிடம் ஆதி ஆகம விதிப்படி பள்ளிகொள்ள விடை வேண்டினார்.

    வைகுண்டரை வரவேற்றனர்

    உடனே விஸ்வநாராயணர் மகிழ்ச்சியடைந்து கலைமுனி, ஞானமுனியை அழைத்து அவர்களுக்கான விதிகளைகூறி வைகுண்டரோடு கூடி இருக்க உபதேசித்தார். வைகுண்ட பாலனின் இடது முன் பகுதியில் கலை முனியும், வலது பின் பகுதியில் ஞானமுனியும் நின்றிட பரப்பிரம்ம பாலனின் முன்நிறுத்தி அவர் பின்னால் விஸ்வ நாராயணரும், அவருள் அடங்கிய சகல மூர்த்தியரும் ஒரே சொரூபமாகினர். இந்த நிலையில்தான் ஒரே சொரூபமாய் திருச்செந்தூர் கடலுக்குள் இருந்து எழுந்தருளினர். அதுவே வைகுண்டர் அவதாரம் ஆகும். அன்றைய நாள்தான் கொல்லம் ஆண்டு 1008 மாசி 20 ஆகும். முடிசூடும் பெருமாள் கடலுக்குள் சென்ற 3-வது நாள் இந்த அவதாரம் நிகழ்ந்தது.

    வைகுண்டர் அவதாரம் எடுத்ததை அறிந்ததும் சகல லோகத்தாரும் வந்து தரிசனம் செய்தனர். அங்கிருந்து வைகுண்டர் தெச்சணம் நோக்கி புறப்பட்டார். அப்போது அடுக்கடுக்காக அண்ட வீதிகளில் நின்றவாறு மேல் லோகத்தார் சகல வாத்திய இசையுடன் பாடி ஆடி வைகுண்டரை வணங்கினர்.

    வைகுண்ட அவதாரம் வையத்தில் இருவேறு நிலையில் எழுந்தருளியது. மங்கள நாதனாகிய பரப்பிரம்ம பாலனாம் வைகுண்டர் மனு சொரூபம் கொண்டார். அவரைத்தொடர்ந்து விஸ்வ நாராயணரும், அவருள் அடங்கிய சகல மூர்த்தியரும், விஸ்வ மகாலெட்சுமியும், அவருள் அடங்கிய தேவியரும், முடிசூடும் பெருமாளின் ஒரே சொரூபத்தில் ஏக அநேகமாக வந்தனர்.

    நாராயணர் வைகுண்ட மூர்த்திக்கு அருளிய முதல் விஞ்சைப்படி விஸ்வ நாராயணர் ஆண்டிப்பண்டாரமாக தெச்சணத்தில் பள்ளி கொண்டார்.

    உருவமற்ற கலியை அழிக்க வேண்டும் என்றால் எந்த பொருள் மீதும் நாட்டம் இல்லாத நிலை இருக்க வேண்டும். அதற்காகவே மாய கலியழிக்க அய்யா வைகுண்டர் பண்டார வேடமெடுத்து வந்தார். உருவமற்ற கலி அனைவரது மனங்களையும் கொள்ளை கொள்ளும் சக்தி கொண்டது. அந்த கலியை அறுத்தெறிய வேண்டும் என்றால் நாமும் மனதளவில் ஆசைகளை துறந்து வாழ வேண்டும் என்பதே இந்த அவதாரத்தின் நோக்கம். கலியை அழிக்க அய்யா வைகுண்டரை பின்தொடருவோம்.

    -வி.பூஜியபுத்திரன், ஏரணிதர்மசாலை.

    • திருச்செந்தூரில் இருந்து பக்தர்கள் பேரணி இன்று தொடங்கியது
    • 4-ந்தேதி இரவு சாமிதோப்பு தலைமைபதியில் வாகன பவனியும், அய்யா வழி மாநாடும் நடக்கிறது.

    அய்யா வைகுண்ட சுவாமியின் 191-வது அவதார தினம் நாளை (4-ந்தேதி) நடக்கிறது.

    இதனை முன்னிட்டு அய்யா வைகுண்ட சுவாமியின் அவதார தினத்திற்கு முந்தைய தினமான இன்று (வெள்ளிக்கிழமை) காலை 6 மணிக்கு திருச்செந்தூரில் இருந்து வாகன பேரணி நாகர்கோவிலை நோக்கி புறப்பட்டது.

    அய்யா வைகுண்டசுவாமி விஞ்சை பெற்ற திருச்செந்தூர்,செந்தூர் பதியில் இருந்து புறப்பட்ட இந்தப் பேரணிக்கு பாலஜனாதிபதி தலைமை தாங்கினார். பையன் அம்ரிஷ் முன்னிலை வகித்தார். திருச்செந்தூர் சீர்காய்ச்சி, திசையன் விளை, உடன்குடி, கூடங் குளம், செட்டிகுளம், ஆரல்வாய்மொழி வழியாக பேரணி இரவு நாகர்கோ விலை வந்தடைகிறது.

    அதேபோல் இன்று (வெள்ளிக்கிழமை) மதியம் திருவனந்தபுரம் சிங்காரத்தோப்பு, பத்ம நாபசுவாமி கோவில் வடக்கு வாசலில் இருந்து சாமிதோப்பை நோக்கி மற்றொரு வாகன பேரணி புறப்படுகிறது. இந்த வாகன பேரணி திருவனந்தபுரம், பாற சாலை, குழித்துறை, மார்த்தாண்டம், தக்கலை, வெட்டூர்ணிமடம் வழியாக இரவு நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலை வந்தடைகிறது.

    இன்று மாலை 6 மணிக்கு சாமிதோப்பு தலைமை பதியிலிருந்து வைகுண்ட தீபம் கொண்டு சென்று ஆதலவிளை மாமலையில் தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சிக்கு பையன் கிருஷ்ணராஜ் தலைமை தாங்குகிறார். நாகராஜா திடலில் இரவு 10 மணிக்கு பால. ஜனாதிபதி தலைமை யில் மாசி மாநாடு நடை பெறுகிறது.

    வைகுண்ட சுவாமியின் அவதார தினமான நாளை (4-ந்தேதி) காலை 5 மணிக்கு நாகர்கோவில் நாகராஜா திடலில் இருந்து அவதார தினவிழா மாசி ஊர்வலம் சாமிதோப்பு நோக்கி புறப்படுகிறது. இந்த ஊர்வலத்திற்கு பால. ஜனாதிபதி தலைமை வகிக்கிறார். ஜனாயுகேந்த் முன்னிலை வகிக்கிறார்.

    இந்த ஊர்வலம் நாகர் கோவில், கோட்டார், சுசீந்திரம், வழுக்கம்பாறை. வடக்கு தாமரைகுளம் வழியாக சாமி தோப்பு தலைமைப்பதியை சென்ற டைகிறது. குமரி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதி யில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக் கான பக்தர்கள் வந்து ஊர்வலத்தில் கலந்து கொள்வார்கள்.

    நாளை (4-ந்தேதி) இரவு சாமிதோப்பு தலைமைபதியில் வாகன பவனியும், அய்யா வழி மாநாடும் நடக்கிறது.

    • நாளை பணிவிடை, உகப்படிப்பு நடக்கிறது.
    • அன்னதர்மம் நடக்கிறது.

    திருச்செந்தூர் கடற்கரையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் 191-வது அவதார தின விழா நாளை மறுநாள் (சனிக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி நாளை (வெள்ளிக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு பணிவிடை, உகப்படிப்பு நடக்கிறது. காலை 6 மணிக்கு அன்னதர்மமும், பகல் 12 மணிக்கு உச்சபடிப்பு, பணிவிடையும், தொடர்ந்து ஒரு மணிக்கு அன்னதர்மம் நடக்கிறது. மாலை 7 மணிக்கு பணிவிடை, அய்யா புஷ்ப வாகனத்தில் எழுந்தருளி பதியை சுற்றி பவனி வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது. தொடர்ந்து அன்னதர்மம் நடக்கிறது.

    191-வது அவதார தினமான நாளை மறுநாள் அதிகாலை 5 மணிக்கு தாலாட்டு, பள்ளி உணர்த்தல் அபயம் பாடுதல் நடக்கிறது. பின்னர் காலை 6.36 மணிக்கு சூரிய உதயத்தில் கடல் பதமிட்டு சூரிய பிரகாச சுத்த அய்யா வைகுண்டரை அவதாரபதிக்கு அழைத்து வரும் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து, அவதார தின விழா பணிவிடை நடக்கிறது. பின்னர் அன்னதர்மம் நடக்கிறது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை வள்ளியூர் அய்யாவழி அகில திருக்குடும்ப மக்கள் சபை தலைவர் வள்ளியூர் எஸ்.தர்மர், செயலாளர் பொன்னுதுரை, பொருளாளர் ராமையாநாடார், துணை தலைவர் அய்யாபழம், துணை செயலாளர் ராஜேந்திரன் மற்றும் இணை தலைவர்கள், இணை செயலாளர்கள், நிர்வாக குழு உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.

    ×