சாமிதோப்பு அய்யா வைகுண்டர் அன்புவனத்தில் திருஏடு வாசிப்பு திருவிழா தொடங்கியது

17 நாட்கள் திருஏடு வாசிப்பு நடைபெறுகிறது.17-வது நாள் பட்டாபிஷேக விழா நடைபெறுகிறது.
சாமிதோப்பு அய்யா வைகுண்டர் அன்புவனத்தில் திருஏடு வாசிப்பு திருவிழா தொடங்கியது
Published on

சாமிதோப்பு அய்யா வைகுண்டர் அன்புவனத்தில் திரு ஏடு வாசிப்பு விழா நேற்று முன்தினம் தொடங்கியது. இதை குரு பால பிரஜாபதி அடிகளார் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். விஜயநகரி ராஜபழம், தங்கேஸ்வரி ஆகியோர் திருஏட்டினை வாசிக்கின்றனர். இதையொட்டி மாலை 5 மணிக்கு அய்யாவுக்கு சிறப்பு பணிவிடைகள் நடைபெற்றன. தொடர்ந்து 17 நாட்கள் மாலை 5.30 மணிக்கு திருஏடு வாசிப்பு நடைபெறுகிறது.

விழாவில் பேராசிரியர் ஆர்.தர்ம ரஜினி, மும்பை அய்யாவு, வென்னிமல், மார்த்தாண்டம் செல்லையா நாடார், மகாராஜன் ஆசாரி உள்பட பலர் கலந்து கொண்டனர். 15-வது நாள் திருக்கல்யாண திருஏடு வாசிப்பும், 17-வது நாள் பட்டாபிஷேக விழாவும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com