search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    நெட்டியான்விளை அய்யா வைகுண்டர் திருப்பதியில் திருஏடு வாசிப்பு விழா
    X

    நெட்டியான்விளை அய்யா வைகுண்டர் திருப்பதியில் திருஏடு வாசிப்பு விழா

    • இந்த விழா 20-ந்தேதி வரை 11 நாட்கள் நடக்கிறது.
    • 18-ந்தேதி திருஏடு வாசிப்பு நடக்கிறது.

    மார்த்தாண்டம் மாமூட்டுக்கடை நெட்டியான் விளை அய்யா வைகுண்டர் திருப்பதி கோவிலில் 191-வது ஆண்டு அய்யா வைகுண்டர் அவதார தின விழா மற்றும் 73-வது ஆண்டு திருஏடு வாசிப்பு விழாவும் நேற்று தொடங்கியது. இந்த விழா 20-ந்தேதி வரை 11 நாட்கள் நடக்கிறது.

    இதையொட்டி தினமும் அதிகாலை 5 மணிக்கு பணிவிடையும், உகப்படிப்பும், மாலை 5 மணிக்கு பணிவிடையும், திருஏடு வாசிப்பும், இரவு 9 மணிக்கு உகப்படிப்பும், 9.30 மணிக்கு அன்ன தர்மம் ஆகியவை நடைபெறுகிறது. நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு சமய வகுப்பு மாணவ மாணவிகளின் பண்பாட்டு போட்டியும், இரவு 10 மணிக்கு வைகுண்டர் கலைக்குழுவின் கலை நிகழ்ச்சியும் நடக்கிறது. 17-ந் தேதி மாலை 5.30 மணிக்கு திருஏடு வாசிப்பும், இரவு 7 மணிக்கு திருக்கல்யாண திருஏடு வாசிப்பும், அன்னதானமும் நடைபெறுகிறது.

    18-ந் தேதி மாலை திருஏடு வாசிப்பு, இரவு 10 மணிக்கு கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. 19-ந் தேதி காலை 9 மணிக்கு பரிசு வழங்குதலும், பிற்பகல் 3 மணிக்கு பால் வைப்பு, 4 மணிக்கு திருஏடு வாசிப்பும், பட்டாபிஷேகமும், 7 மணிக்கு திருவிளக்கு பணிவிடையும் நடக்கிறது. 20-ந் தேதி காலை மற்றும் மாலை பணிவிடை, உகப்படிப்பு, 5 மணிக்கு அய்யா இந்திர வாகனத்தில் பவனி வருதல் ஆகியவை நடைபெறுகிறது. இந்த வாகனம் மாமூட்டுக்கடை, கீழ்விளை, இட விளாகம் ஸ்ரீ பத்திரகாளி அம்மன் கோவில், பங்காணிவிளை வழியாக கோவிலை வந்து அடைகிறது. இரவு 9 மணிக்கு பள்ளியுணர்த்தல், 9.30 மணிக்கு அன்னதானம் ஆகியவை நடைபெறுகிறது.

    Next Story
    ×