search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திரு ஏடு வாசிப்பு"

    • நாளை தொடங்கி 17 நாட்கள் நடக்கிறது
    • விழாவுக்கான ஏற்பாடுகளை மாதவரம் ஊர் நிர்வாக குழுவினர் மற்றும் பொது மக்கள் செய்து வருகிறார்கள்.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி அருகே உள்ள மாதவபுரத்தில் ஸ்ரீமன் நாராயணசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் திரு ஏடு வாசிப்பு திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. இந்த திருவிழா அடுத்த மாதம் (டிசம்பர்) 3-ந்தேதி வரை 17 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது. திருவிழாவையொட்டி தினமும் இரவு 7 மணிக்கு திருஏடு வாசித்து விளக்க உரை நடக்கிறது.

    3-ம் திருவிழாவான 19-ந்தேதி பகல் அய்யாவுக்கு பணிவிடை, உச்சிப்படிப்பு மற்றும் சமபந்தி விருந்து நடக்கிறது. 15-ம் திருவிழாவான டிசம்பர் 1-ந்தேதி திருக்கல்யாண வைபவம் நடக்கிறது. இதையொட்டி அன்று இரவு 9.30 மணிக்கு பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட இந்திர வாகனத்தில் அய்யா எழுந்தருளி கோவிலை சுற்றி பவனி வரும் நிகழ்ச்சி நடக்கிறது. அதைத்தொடர்ந்து அன்னதா னம் நடக்கிறது. டிசம்பர் 3-ந்தேதி பட்டாபி ஷேக விழா நடக்கிறது.

    இதையொட்டி அன்று மாலை 5 மணிக்கு திருஏடு வாசிப்பும், இரவு 8 மணிக்கு அன்னதானமும், நள்ளிரவு 12 மணிக்கு அய்யாவுக்கு சிறப்பு பணிவிடை மற்றும் திருவிழாவும் நடக்கிறது. மறுநாள் 4-ந்தேதி அதி காலை 5 மணிக்கு அய்யாவுக்கு பால் வைத்து பணிவிடையும் காலை 8 மணிக்கு விழா நிறைவு நிகழ்ச்சியும் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை மாதவரம் ஊர் நிர்வாக குழுவினர் மற்றும் பொது மக்கள் செய்து வருகிறார்கள்.

    • அய்யா வைகுண்டர் அவதாரப்பதியில் திரு ஏடு வாசிப்பு திருவிழா கடந்த 9-ந் தேதி தொடங்கியது.
    • அய்யா வைகுண்டர் புஷ்ப வாகன பவனி மாலை 6 மணிக்கு நடைபெற்றது.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவில் கடற்கரையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதாரப்பதியில் திரு ஏடு வாசிப்பு திருவிழா கடந்த 9-ந் தேதி தொடங்கியது. 17 நாட்கள் நடைபெற்ற இவ் விழாவில் ஒவ்வொரு நாளும் மாலை 3 மணிக்கு திரு ஏடு வாசிப்பு திருவிழா நடைபெற்றது.

    திருக்கல்யாணம்

    திரு ஏடு வாசிப்பு திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் கடந்த 23-ந் தேதி (வெள்ளிக் கிழமை) மாலை 3 மணிக்கு நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியான பட்டாபிசேக திரு ஏடு வாசிப்பு திருவிழா நேற்று மாலை 5 மணிக்கு நடந்தது.பட்டாபிசேக ஏட்டை அய்யா வழி அகிலத்திருக்குடும்ப மக்கள் சபை தலைவர் வள்ளியூர் எஸ்.தர்மர் எடுத்து கொடுத்து தொடங்கி வைத்தார்.

    தொடர்ந்து மாலை 6 மணிக்கு அய்யா வைகுண்டர் புஷ்ப வாகன பவனி நடைபெற்றது.

    கலந்துகொண்டவர்கள்

    விழாவில் திருச்செந்துர் சார்பு நீதிபதி வஷித்குமார், அய்யாவழி அகில திரு குடும்ப மக்கள் சபை இணை தலைவர்கள் பால்சாமி, ராஜதுரை,கோபால், இணைச் செயலாளர்கள், ராதாகிருஷ்ணன், செல்வின் வக்கீல் சந்திர சேகர், முன்னாள் இணை தலைவர். சிங்கபாண்டி, முன்னாள் துணை செயலாளர் ராமகிருஷ்ணன்,நிர்வாக குழு உறுப்பினர்கள் பாலகிருஷ்ணன், வினோத், சிவாஜி, ராமமூர்த்தி, ஆசிரியர் தங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    விழாவுக்கான ஏற்பாடு களை வள்ளியூர் அய்யா வழி அகிலத்திருக்குடும்ப மக்கள் சபை தலைவர் வள்ளியூர் எஸ். தர்மர், செயலாளர் பொன்னுதுரை, பொருளாளர் ராமையா நாடார், துணைத் தலைவர் அய்யாபழம், துணை செயலாளர் ராஜேந்திரன், மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் செய்தி ருந்தனர். திரு ஏடு வாசிப்புப்பை வைகுண்ட மகராஜன் மற்றும் ஆனந்து குழுவினர் செய்திருந்தனர்.

    • ஸ்ரீமன் நாராயண சுவாமி நிழல் தாங்கலில் திருஏடு வாசிப்பு கார்த்திகை மாதம் 25-ந் தேதி வரை நடைபெற்றது.
    • கார்த்திகை 23-ந் தேதி அய்யா வைகுண்டருக்கு பட்டாபிஷேகம் நடைபெற்றது.

    சாத்தான்குளம்:

    சங்கரன் குடியிருப்பு ‌ ஸ்ரீமன் நாராயண சுவாமி நிழல் தாங்கலில் திருஏடு வாசிப்பு கார்த்திகை மாதம் 9-ந் தேதி முதல் கார்த்திகை மாதம் 25-ந் தேதி வரை நடைபெற்றது. தினமும் மாலை 7 மணிக்கு பனிவிடையும் அதனைத் தொடர்ந்து திருஏடு வாசிப்பும் சிறப்பு தர்மங்களும் தினம்தோறும் நடைபெற்றது.

    கார்த்திகை 23-ந் தேதி மக்கள் அனைவரும் சுருள் ஏந்தி மாபெரும் திருக்கல்யாண ஊர்வலம்மும் அதனைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரம், பனிவிடையும், திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெற்றது. அய்யா வைகுண்டருக்கு பட்டாபிஷேகம் நடைபெற்றது.ஏற்பாடுகளை தாங்கல் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    ×