search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி"

    • திட்டமிட்டப்படி 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை ஜூன் 1-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படுகிறது.
    • 1 முதல் 5 ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் ஜூன் 5 தேதி திறக்கப்படுகிறது.

    சென்னை:

    தமிழகத்தில் கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்படலாம் என்று தகவல் பரவிய நிலையில் திட்டமிட்டப்படி ஜூன் 1-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.

    ஏற்கனவே திட்டமிட்டப்படி 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை ஜூன் 1-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படுகிறது. 1 முதல் 5 ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் ஜூன் 5 தேதி திறக்கப்படுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சட்டவிதிகளுக்கு உட்பட்டு அன்னவாசலில் உள்ள அந்த பள்ளிக்கு இடம் வழங்க முடியவில்லை.
    • பள்ளிக்கு கட்டிடம் கட்ட வருவாய் துறையால் இடம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது.

    சென்னை:

    இந்த கல்வி ஆண்டு முதல் ஒன்பதாம் வகுப்பு தமிழ் பாடத்தில் மறைந்த முதலமைச்சர் கருணாநிதி பற்றிய பாடம் கொண்டு வரப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேரவையில் அறிவித்துள்ளார்.

    இன்றைய சட்டப்பேரவை நிகழ்வின்போது வினாக்கள் விடைகள் நேரத்தில் அ.தி.மு.க. விராலிமலை சட்டமன்ற உறுப்பினர் விஜயபாஸ்கர் கேள்வி எழுப்பினார்.

    அப்போது பேசிய அவர், "விராலிமலை தொகுதி அன்னவாசல் பேரூராட்சியில் உள்ள அரசினர் பெண்கள் உயர்நிலைப்பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்ட அரசு ஆவண செய்யுமா? என கேள்வி எழுப்பினார்.

    இதற்கு பதிலளித்த பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, "ஓடி வந்த இந்தி பெண்ணே கேள் நீ தேடி வந்த நாடு இதுவல்லவே என்று தன்னுடைய 13-வது வயதில் போர் பாவை பாடி, 86-வது வயதில் தமிழுக்கு செம்மொழி என்ற அந்தஸ்தை பெற்று தந்த கலைஞரின் நூற்றாண்டு ஒட்டி, அவர் தமிழுக்கு ஆற்றிய தொண்டை போற்றும் வகையில், பணியை குறிக்கும் விதத்தில் இந்த கல்வி ஆண்டு முதல் ஒன்பதாம் வகுப்பு தமிழ் பாடத்தில் அவரைப் பற்றிய பாடம் வருகிறது என்றார்.

    மேலும், சட்டவிதிகளுக்கு உட்பட்டு அன்னவாசலில் உள்ள அந்த பள்ளிக்கு இடம் வழங்க முடியவில்லை. மேலும், பயன்பாடற்ற காவல் நிலைய குடியிருப்பு மற்றும் பொதுப்பணித்துறை சாலையாக இருப்பதாலும் பள்ளிக்கு இடம் வழங்க ஏற்றதாக இல்லை.

    எனவே பள்ளிக்கு கட்டிடம் கட்ட வருவாய் துறையால் இடம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது. தேர்வு செய்யப்பட்டவுடன் நபார்டு திட்டம், பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டத்தின் மூலமாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு புதிய கட்டிடம் கட்ட ஆவண செய்யப்படும்", என்றார்.

    • மாணவர்கள் தேர்வு எழுத வராததற்கு என்ன காரணம் என்பதை ஒவ்வொரு மாவட்ட அளவிலும் அதிகாரிகளிடம் கேட்டறிய வேண்டும்.
    • தேர்வு எழுத வராத 50 ஆயிரத்து 674 மாணவர்களின் படிப்பை மீண்டும் தொடர வைக்க என்ன செய்யலாம் என்று கருத்து கேட்டார்.

    சென்னை:

    பிளஸ்-2 பொதுத்தேர்வின்போது முதல் நாள் நடைபெற்ற தமிழ் தேர்வை 50 ஆயிரத்து 674 மாணவர்கள் எழுதாமல் 'ஆப்சென்ட்' ஆனது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இந்த பரபரப்பு அடங்குவதற்குள் அடுத்ததாக நேற்று நடைபெற்ற ஆங்கில தேர்வையும் 50 ஆயிரம் பேர் எழுதவில்லை. இது கல்வியாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    பரீட்சை எழுத வராதவர்களில் 44 ஆயிரம் பேர் இடைநிற்றல் மாணவர்கள் என்பது தற்போது தெரிய வந்துள்ளது. 6 ஆயிரம் பேர் பள்ளிக்கு வந்த மாணவர்கள் மற்றும் தனித் தேர்வர்கள் என தெரிய வந்துள்ளது.

    அதுமட்டுமின்றி பிளஸ்-2 வகுப்பில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் கொரோனா கால கட்டத்தில் 10-ம் வகுப்பில் ஆல் பாஸ் பெற்றவர்கள் இவர்கள் நேரடியாக பிளஸ்-1 வகுப்பில் கடந்த ஆண்டு சேர்ந்து முதன் முதலாக பொதுத்தேர்வை எதிர்கொண்டவர்கள்.

    அவ்வாறு நடைபெற்ற தேர்வில் ஏராளமான மாணவர்கள் தோல்வி அடைந்திருந்தனர். விதிமுறைப்படி பிளஸ்-2 வகுப்பில் சேர அனுமதிக்கப்பட்ட நிலையில் பிளஸ்-1 அரியர் தேர்வையும் பிளஸ்-2 வகுப்பு பொதுத்தேர்வுடன் எழுதி தேர்ச்சி அடைய வேண்டும் என்ற பயம் ஏற்பட்டதால் மாணவர்கள் பலர் தேர்வு எழுத வரவில்லை என்று காரணம் சொல்லப்படுகிறது.

    அது மட்டுமல்ல கொரோனா காலத்திற்கு பிறகு மாணவர்கள் பள்ளிகளுக்கு வராமல் வேலைக்கு சென்றுவிட்டது உள்பட பல்வேறு காரணங்களும் முன் வைக்கப்பட்டுள்ளது.

    கடந்த ஆண்டு 32 ஆயிரத்து 674 மாணவர்கள் பொது தேர்வை எழுத வராத நிலையில் இந்த ஆண்டு 50 ஆயிரத்து 674 மாணவர்கள் தேர்வை எழுதவில்லை என்ற தகவல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்துக்கு அதிகாரிகள் கொண்டு சென்றனர்.

    இதைத் தொடர்ந்து அவர் பள்ளிக் கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷாவிடம் உடனடியாக பேசினார். மாணவர்கள் ஆப்சென்ட் ஆனதின் உண்மை காரணத்தை விசாரிக்குமாறு அறிவுறுத்தினார்.

    மாணவர்கள் தேர்வு எழுத வராததற்கு என்ன காரணம் என்பதை ஒவ்வொரு மாவட்ட அளவிலும் அதிகாரிகளிடம் கேட்டறிய வேண்டும் என்று உத்தரவிட்டார்.

    அதன் அடிப்படையில் சென்னை தலைமை செயலகத்தில் இன்று காலை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கல்வித்துறையின் உயர் அதிகாரிகள் கூட்டத்தை கூட்டினார். இதில் துறையின் செயலாளர் காகர்லா உஷா, கமிஷனர் நந்தகுமார், தொடக்க கல்வி இயக்குனர் அறிவொளி, தேர்வுத் துறை இயக்குனர் நாகராஜ முருகன் ஆகியோர் பங்கேற்றனர்.

    இவர்களுடன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளும் காணொலி வாயிலாக இணைந்திருந்தனர். கூட்டத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தேர்வு எழுத வராத 50 ஆயிரத்து 674 மாணவர்களின் படிப்பை மீண்டும் தொடர வைக்க என்ன செய்யலாம் என்று கருத்து கேட்டார். பரீட்சை எழுத முன்வராத காரணத்தை ஒவ்வொரு மாணவரிடம் கேட்டறிய வேண்டும் என்றும் இதற்காக அவர்கள் படித்த பள்ளியின் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

    சட்டசபை தொடங்க உள்ள நிலையில் இதுபற்றி எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்புவார்கள் என்பதால் விரிவாக விசாரித்து உண்மையான காரணத்தை அறிக்கையாக தயார் செய்திட வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    • தாலிக்கு தங்கம் திட்டத்தை முற்றிலும் நிறுத்தி விட்டோம் என கூறுவது தவறு.
    • தாலிக்கு தங்கம் திட்டத்தை விட மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தில் அதிகமான மாணவிகள் பயன் அடைந்து வருகின்றனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் இன்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் தாலிக்கு தங்கம் மற்றும் திருமண நிதி உதவிதிட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடைபெற்றது. விழாவுக்கு கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கினார்.

    இதில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    பின்னர் அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    நீட் தேர்வுக்கு எதிராக ஒரு பக்கம் சட்ட போராட்டம் நடைபெற்று வருகிறது. இருந்தாலும் மாணவர்கள் ஏமாந்து விடக்கூடாது என்பதற்காக நீட் தேர்விற்கான பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

    கொரோனா காரணமாக 2021-22-ல் 1 லட்சத்து 90 ஆயிரம் மாணவர்கள் இடைநிற்பது கண்டறியப்பட்டு மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர். அந்த மாணவர்களை பள்ளியில் சேர்க்கவில்லை என்றால் பொதுத்தேர்வு இந்த ஆண்டு 6 லட்சத்து 70 ஆயிரம் மாணவர்கள் தான் எழுதி இருப்பார்கள்.

    தற்போது 8 லட்சத்து 81 ஆயிரம் பேர் எழுத வேண்டும் என்பதற்காக தான் இந்த பணிகளை மேற்கொண்டோம்.

    தற்போது பிளஸ்-2, பிளஸ்-1 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடந்து வருகிறது. வழக்கமாக 4.5, 4.6 சதவீதம் தான் தேர்வு எழுதாமல் இருப்பார்கள். இந்த ஆண்டு 5 சதவீதம் மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை என தகவல் வந்துள்ளது. உடனடியாக இது குறித்து கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று கல்வித்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளோம்.

    கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும், தேர்ச்சி பெறாத மாணவர்கள் உடன் சேர்த்து தேர்வுக்கு வராதவர்களையும் சேர்த்து சிறப்பு பயிற்சி அளித்து வரும் ஜூன் மாதத்தில் தேர்வு எழுத வைப்போம். அதன் பிறகு தேர்வுக்கு வராதவர்களின் எண்ணிக்கை குறையும். அனைத்து மாணவர்களும் தேர்வு எழுத வேண்டும் என்பது தான் எங்களது நோக்கம். அதை சரி செய்ய வேண்டிய பொறுப்பு பள்ளிக்கல்வித்துறைக்கு உள்ளது. அதை படிப்படியாக செய்வோம்.

    தாலிக்கு தங்கம் திட்டத்தை முற்றிலும் நிறுத்தி விட்டோம் என கூறுவது தவறு. அந்த திட்டத்தை மாற்றி உள்ளோம். கடந்த 10 ஆண்டு கால ஆட்சியில் இருந்தவர்கள் தாலிக்கு தங்கம் திட்டத்தை முறையின்றி செயல்படுத்தி வந்தனர். தற்போது அரசு கல்லூரி மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. தாலிக்கு தங்கம் திட்டத்தை விட மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தில் அதிகமான மாணவிகள் பயன் அடைந்து வருகின்றனர். இதன் மூலம் அவர்கள் தங்களது உயர் கல்வியை தடையின்றி படிப்பதற்கு வழி வகுத்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • காலை உணவு திட்டம் 1,545 பள்ளிகளில் வழங்கப்பட்டு வருகிறது.
    • அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நிதிசார்ந்த பிரச்சினைகள் மட்டுமே நிறைவேற்றப்படாமல் உள்ளது.

    சென்னை:

    74-வது குடியரசு தினத்தையொட்டி, சென்னை காமராஜர் சாலையில் உள்ள பாரத சாரண-சாரணியர் மாநில தலைமை அலுவலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தேசியகொடி ஏற்றினார். நிகழ்ச்சி முடிந்ததும், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களிடம் கூறியதாவது:-

    பாரத சாரண-சாரணியர் இயக்கத்தில் 10 லட்சம் மாணவர்களை இணைக்கவேண்டும் என்ற இலக்கில் செல்கிறோம். பள்ளிக்கல்வித்துறை மானிய கோரிக்கையில் புதிய அறிவிப்புகள் வெளியாகும். மதுரை கலைஞர் நூலகம் கட்டுமான பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா தொடக்கத்தில் மதுரை கலைஞர் நூலகம் திறக்கப்படும். இதற்கான திறப்பு விழா குறித்து தமிழ்நாடு அரசு அறிவிக்கும்.

    நிதி நிலைமை படிப்படியாக சரிசெய்யும் பணியில் முதல்-அமைச்சர் ஈடுபட்டு வருகிறார். பள்ளிக்கல்வித்துறை சார்ந்த 29 தேர்தல் வாக்குறுதிகளில், 22 வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம். அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நிதிசார்ந்த பிரச்சினைகள் மட்டுமே நிறைவேற்றப்படாமல் உள்ளது.

    காலை உணவு திட்டம் 1,545 பள்ளிகளில் வழங்கப்பட்டு வருகிறது. அடுத்தகட்டமாக 500 பள்ளிகளில் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. படிப்படியாக அனைத்து பள்ளிகளிலும் காலை உணவு திட்டம் கொண்டுவரப்படும். சென்னையில் 'ஜி20' கல்வி கருத்தரங்கில் மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் கலந்துகொள்கின்ற போது தேசிய கல்விக்கொள்கையில் தமிழ்நாடு அரசுக்கு இருக்கக்கூடிய ஆட்சேபனைகள் குறித்து தெரிவிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தனியார் பள்ளிகளில் சேரும் மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று தனியார் பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.
    • மடிக்கணினிக்கு தேவையான ‘சிப்' தற்போது சந்தையில் போதுமான அளவில் இல்லை.

    சென்னை:

    சென்னையில் நடந்த தனியார் கல்வி நிறுவனம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார். நிகழ்ச்சியின் முடிவில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் அரசு ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கான விவரங்களை பதிவேற்றம் செய்யும் நிதித்துறையின் இணையதளத்தில் பிரச்சினை இருந்தது. அதனை சம்பந்தப்பட்ட துறையினருக்கு தெரிவித்து, தற்போது அவை சரிசெய்யப்பட்டு, அந்த இணையதளம் வழக்கம்போல் இயங்குகிறது. ஆசிரியர்களுக்கு சம்பளம் கிடைப்பதில் எந்த சிக்கலும் இல்லாமல் தற்போது வழங்கப்படுகிறது.

    கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேரும் மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று தனியார் பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. விதிகளை மீறி கூடுதல் கட்டணம் வசூலித்தால், அரசுக்கு தகவல் தெரிவிக்கலாம். விதிமீறலில் ஈடுபடும் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

    இலவச மடிக்கணினி (லேப்டாப்) திட்டத்தில், 11 லட்சம் அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்க வேண்டியிருக்கிறது. மடிக்கணினிக்கு தேவையான 'சிப்' தற்போது சந்தையில் போதுமான அளவில் இல்லை. இதனால் விரைவில் கொள்முதல் செய்து, மாணவ-மாணவிகளுக்கு தேவையான மடிக்கணினிகள் வினியோகிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தமிழக பதிப்பாளர்கள் வெளிநாட்டிற்கு செல்லவும் எதிர்காலத்தில் அரசு திட்டமிடும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
    • தமிழகத்தின் 30 புத்தகங்கள் வெளிநாட்டு மொழிகளுக்கு கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளோம்.

    சென்னை:

    நந்தனம் ஒய்.எம்.சி. திடலில் 2023 சர்வதேச புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக சர்வதேச புத்தக கண்காட்சி இன்று முதல் வரும் 18-ந் தேதிவரை நடக்க இருக்கிறது.

    சர்வதேச புத்தக கண்காட்சியை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழ் இலக்கியங்களை உலகம் முழுவதும் கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளோம். அதன்படி சர்வதேச புத்தக கண்காட்சி தொடங்கி இருக்கிறது. இதில் எழுத்தாளர்கள் பலரும் கலந்து கொண்டு இருக்கின்றனர்.

    3 நாள் நடைபெறுவதில் பங்கேற்க முடியாத வெளிநாட்டு பதிப்பாளர்கள் கூட வீடியோ கான்பரன்சிங் மூலமாக கூட இணையலாம். அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது.

    தமிழகத்தின் 30 புத்தகங்கள் வெளிநாட்டு மொழிகளுக்கு கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளோம்.

    அதேபோல் தமிழக பதிப்பாளர்கள் வெளிநாட்டிற்கு செல்லவும் எதிர்காலத்தில் அரசு திட்டமிடும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

    புதன்கிழமை பள்ளிக்கு விடுமுறை தொடர்பாக எந்த முடிவும் அரசு எடுக்கவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காக்கர்லா உஷா பொது நூலகத்துறை இயக்குனர் இளம்பகவத் உள்ளிட்ட அதிகாரிகள் எழுத்தாளர்கள் பதிப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

    • அனைவரும் படித்து முன்னேற வேண்டும் என்பதுதான் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசின் எண்ணம்.
    • பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டத்தில் 2021-22-ம் ஆண்டிற்கான கர்ப்பிணி பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு விழா தஞ்சையில் இன்று நடைபெற்றது. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் நடைபெற்ற இந்த விழாவுக்கு மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கினார்.

    பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டு 400 கர்ப்பிணி பெண்களுக்கு வளையல், மஞ்சள், குங்குமம், பாக்கு, சாத்துக்குடி, மாதுளை உள்ளிட்ட பல்வேறு வகையான மங்கள பொருட்களை வழங்கினார்.

    இதனைத் தொடர்ந்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சை மாவட்டத்தில் சமுதாய வளைகாப்பு விழா திட்டத்தின் மூலம் 2950 கர்ப்பிணி பெண்கள் பயனடைந்து வருகின்றனர். அவர்களுக்கு தேவையான ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கப்பட்டது. இது தவிர மாவட்ட நிர்வாகம் சார்பில் கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான ஊட்டச்சத்து பொருட்களை கலெக்டர் வழங்கியுள்ளார். மேலும் அவர்களுக்கு தேவையான புடவைகள் வழங்கும் பணியை டி.கே.ஜி.நீலமேகம் எம்.எல்.ஏ. மேற்கொண்டுள்ளார். இப்படி அனைவரும் ஒன்றிணைந்து சமுதாய வளைகாப்பு விழாவை நடத்தி வருகிறோம்.

    அனைவரும் படித்து முன்னேற வேண்டும் என்பதுதான் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசின் எண்ணம். அதற்கான பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக கடந்த ஆண்டு பள்ளியில் பாதியிலே படிப்பை விட்ட இடைநிற்றல் மாணவ-மாணவிகள் 1 லட்சத்து 80 ஆயிரம் பேரை கண்டறிந்து பள்ளியில் சேர்த்துள்ளோம். எந்த மாணவர்கள் இடைநிற்றலுக்கு உள்ளாவார்கள் என்பதை முன்கூட்டியே கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளோம்.

    நம்ம ஊரு பள்ளி திட்டத்தை முதல்-அமைச்சர் தொடங்கி வைத்து அவர் தனது சொந்த நிதியில் இருந்து ரூ.5 லட்சம் வழங்கியுள்ளார். பள்ளியில் படித்து பெரிய தொழில் அதிபராக உள்ளவர்கள், பெரிய இடத்தில் உள்ளவர்கள், முன்னாள் மாணவர்கள் என அனைவரும் தாங்கள் படித்த பள்ளிக்கு தேவையான நிதி வழங்குவார்கள் என எதிர்பார்க்கிறோம். நிதி வழக்குபவர்களுக்கு உடனுக்குடன் ரசீது கொடுக்கப்படுகிறது. இந்தத் திட்டம் தொடங்கிய முதல் நாளே ரூ.50 கோடி வசூலாகி உள்ளது. அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்றது மகிழ்ச்சி அளிக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பள்ளிக்கல்வித்துறை சார்பில் 24 வகையான விளையாட்டில் 208 வகையான போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன.
    • விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழகத்தை இந்தியாவின் விளையாட்டு தலைநகராக மாற்ற அறிவித்துள்ளார்.

    ஈரோடு:

    பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஈரோட்டில் பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககத்தின் சார்பில் புதிய பாரத எழுத்தறிவு திட்ட தன்னார்வல ஆசிரியர்களுக்கான பயிற்சி தொடக்க விழா திண்டல் வேளாளர் கல்லூரி வளாக கலையரங்கில் இன்று நடந்தது.

    பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககத்தின் இணை இயக்குநர் சசிகலா வரவேற்றார். இயக்குனர் குப்புசாமி திட்ட விளக்க உரை ஆற்றினார். கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கினார். அமைச்சர் முத்துசாமி முன்னிலை வகித்து பேசினார். விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு பயிற்சியை தொடங்கி வைத்து பேசினார்.

    புதிய கல்விக் கொள்கை குறித்த ஆய்வு தமிழகம் முழுவதும் முடிவடைந்துள்ளது. இப்பொழுது தனியார் பள்ளி சங்கங்கள் போன்ற துறை சார்ந்த கருத்துக்கள் கேட்கப்பட்டு வருகின்றன. டிசம்பரில் இது முடிவடையும். ஜனவரியில் முதல்-அமைச்சரிடம் இந்த ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்கப்படும். அதன் பிறகு முதல்-அமைச்சர் அதை ஆய்வு செய்து ஆணை வெளியிடுவார்.

    நடப்பாண்டு தமிழகம் முழுவதும் புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் கீழ் 4.8 லட்சம் பேருக்கு எழுத்தறிவு கற்பிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதில் ஈரோடு மாவட்டத்தின் இலக்கு 23 ஆயிரத்து 598. கடந்த ஆண்டு 3.10 லட்சம் பேருக்கு திட்டம் பயன் தந்தது. இலக்கை விஞ்சி 5 லட்சம் பேர் வரை இத்திட்டத்தில் பயன் அடைவார்கள்.

    பள்ளிக்கல்வித்துறை சார்பில் 24 வகையான விளையாட்டில் 208 வகையான போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன. விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழகத்தை இந்தியாவின் விளையாட்டு தலைநகராக மாற்ற அறிவித்துள்ளார். அத்துறையுடன் இணைந்து மேலும் விளையாட்டை மேம்படுத்த நடவடிக்கை எடுப்போம்.

    விளையாட்டு நேரத்தில் மாணவர்களுக்கு மற்ற வகுப்புகள் எடுக்க கூடாது என்று வலியுறுத்தப்படும். பள்ளிகளில் குழந்தைகள் கஞ்சா போன்ற தீய பழக்கத்திற்கு அடிமையாகக் கூடாது என்று முதல்-அமைச்சர் ஏற்கனவே தெரிவித்துள்ளார். ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கூட்டத்தில் கூட போதை பொருள் இல்லா மாநிலத்தை உருவாக்குவதை அவர் வலியுறுத்தி உள்ளார். எனவே காவல்துறை உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அனைத்து பிரிவினருக்கும் சிறந்த நூலக சேவை வழங்கும்.
    • பொது நூலக துறையின் உயரிய நோக்கத்திற்கு நூலக நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டத்தில் பொது நூலகத்துறை சார்பில் நூலக நண்பர்கள் திட்டம் தொடக்க விழா எம்.எஸ்.பி. சோலை நாடார் பள்ளியில் நடைபெற்றது.

    விழாவுக்கு மாவட்ட கலெக்டர் விசாகன் தலைமை வகித்தார். அமைச்சர் அர.சக்கரபாணி, எம்.எல்.ஏ.க்கள் செந்தில்குமார், காந்திராஜன், மேயர் இளமதி உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில் நூலக நண்பர்களுக்கு அடையாள அட்டை மற்றும் புத்தகப்பைகளை வழங்கி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது:-

    பிற்போக்கு எண்ணங்கள் கூடாது, அறிவு சார்ந்த சமுதாயம் உருவாக வேண்டும் என்பதற்காக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 'நூலக நண்பர்கள்' திட்டத்தை அறிவித்தார். இந்த திட்டம் தமிழகத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில்தான் முதன்முறையாக தொடங்கப்படுகிறது. முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகள் ஆகியோரின் இல்லங்களை தேடி புத்தகங்களை கொண்டு சென்று அவர்களின் புத்தக வாசிப்பை ஊக்குவிப்பதே இத்திட்டத்தின் நோக்கம்.

    பொது நூலகத்துறை மூலம் செயல்படுத்தப்படும் இத்திட்டம் 'நூலக நண்பர்கள் திட்டம்' என்றழைக்கப்படுகிறது. நூலகத்திற்கு வரமுடியாத மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள், புத்தக ஆர்வலர்கள், குழந்தைகள், மாணவர்கள், குடும்பத் தலைவிகள். மருத்துவமனை உள்நோயாளிகள் ஆகியோரை தேடி, அவர்கள் இருக்குமிடத்திற்கே நூலக நண்பர்கள் மூலம் நூல்களை கொண்டு செல்ல இருக்கிறது. நூலகத்திற்கும் இல்லங்களுக்கும் இடையே நூல்களை கொண்டு செல்லும் சேவை பணியில் தன்னார்வலர்கள் ஈடுபட உள்ளனர். தன்னார்வலர்களே நூலக நண்பர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

    இதில் நூலகத்தில் தொடர்ந்து வாசகர்களாக இருப்பவர்கள், உறுப்பினர்களாக இருப்பவர்கள், நூலக சேவையில் விருப்பம் உள்ளவர்கள் நூலக நண்பர்களாகலாம். ஒரு நூலகத்திற்கு 5 பேர் நூலக நண்பர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நூலகங்களில், நூலகத்திற்குட்பட்ட மக்களுக்கு இல்லம் தேடி சென்று நூல்களை வழங்கி சேவை ஆற்றுவார்கள். நூலக நண்பர்களுக்கு அடையாள அட்டை நூலகரால் வழங்கப்படும். இல்லங்களுக்கு நூல்களை கொண்டு செல்ல பை வழங்கப்படும். 25 நூல்கள் வழங்கப்படும். அந்த நூல்கள் இல்லங்களுக்கு விநியோகிக்கப்படும். மக்கள் அந்த நூல்களை 15 நாள் அவகாசத்தில் படித்துவிட்டு, நூலக நண்பர்களிடம் திரும்ப கொடுத்து, வேறு நூல்களை பெற்றுக் கொள்ளலாம்.

    நூலகத்திற்கு வர முடியாதவர்கள், வாசிக்கும் தேவை உள்ளவர்கள், உங்களை தேடி வரும் நூலக நண்பர்களிடம் நூலகத்தில் உறுப்பினராக பதிவு செய்து, நூலக நண்பர்கள் மூலம் சிறந்த நூல்களை பெற்று பயன் பெறலாம். அனைத்து பிரிவினருக்கும் சிறந்த நூலக சேவை வழங்கும். பொது நூலக துறையின் உயரிய நோக்கத்திற்கு நூலக நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். "நூலக நண்பர்கள் திட்டம்" தமிழகத்தில் முதல் கட்டமாக 31 மாவட்ட மைய நூலகங்கள் 300 முழு நேர கிளை நூலகங்கள். 1,463 கிளை நூலகங்கள், 706 ஊர்ப்புற நூலகங்கள் என மொத்தம் 2,500 நூலகங்களில் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி இத்திட்டம் திண்டுக்கல் மாவட்ட நூலகத்துறை சார்பில் தொடங்கி வைக்கப்படுகிறது.

    நூலகர் தினவிழா, புத்தக தினவிழா, நூலக வார விழா உள்ளிட்ட பல்வேறு நூலக செயல்பாடுகளில் சிறந்து விளங்கும் திண்டுக்கல்லில் இத்திட்டத்தை தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். திண்டுக்கல் மாவட்டத்தில் நூலக நண்பர்களாக சேவையாற்ற 300 பேர் முன்வந்துள்ளனர். புத்தகங்கள் வாசிப்பு என்பது நம் சுய சிந்தனையை வளர்ப்பது மட்டுமின்றி நாட்டின் தலையெழுத்தையும் நிர்ணயிக்கும் சக்தியாகும். எனவே மேலும் பலர் நூலக நண்பர்களாக சேர முன்வர வேண்டும். நூலக நண்பர்களுக்கு அடையாள அட்டையும், புத்தகப் பையும் வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் இனி, இல்லங்களை தேடி வருவார்கள். அவர்கள் மூலம் இல்லங்களில் உள்ளவர்கள் வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்திக் கொள்ளலாம். குறிப்பாக இல்லம் தேடி கல்வி பணியாற்றும் தன்னார்வலர்கள். பள்ளி நூலக சேவையில் ஆர்வமுள்ள மாணவர்கள். ஆசிரியர்கள் நூலக நண்பர்களாக சேர்ந்து நூலக சேவையை அனைவருக்கும் கொண்டு சேர்க்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • வரும் காலங்களில் மாணவர்களுக்கு செயல்படுத்தப்பட்டு வரும் வாசிக்கலாம் வாங்க உள்ளிட்ட திட்டங்கள் மூலம் தமிழ்நாடு அரசு சார்பிலேயே வெளிநாடுகளுக்கு அழைத்து செல்வோம்.
    • புதிய கல்வி கொள்கையை தமிழ்நாடு அரசு பின்பற்றுவதாக அண்ணாமலை மட்டுமல்ல, ஒன்றிய கல்வி அமைச்சரே கூறி வருகிறார்.

    திருச்சி:

    திருச்சி விமான நிலையத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களிடம் கூறியதாவது:-

    மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் நாங்கள் அவர்களை வெளிநாடுகளுக்கு அழைத்து செல்கிறோம். கடந்த டிசம்பர் மாதமே அவர்களை அழைத்து செல்ல வேண்டியது, ஆனால் ஒமைக்ரான் பரவல் காரணமாக அப்போது அவர்களை அழைத்து செல்ல முடியவில்லை. தற்போது அவர்களை அழைத்து செல்கிறோம்.

    சார்ஜாவில் நடைபெறும் சர்வதேச புத்தக கண்காட்சி, துபாய், அபுதாபியில் முக்கிய இடங்களை அவர்களுக்கு சுற்றி காட்ட உள்ளோம். நான்கு நாட்களும் அவர்களுக்கு தாயாகவும், தந்தையாகவும் நான் இருப்பேன்.

    தற்போது மாணவர்களை சி.எஸ்.ஆர். நிதியிலிருந்து அழைத்து செல்கிறோம். வரும் காலங்களில் மாணவர்களுக்கு செயல்படுத்தப்பட்டு வரும் வாசிக்கலாம் வாங்க உள்ளிட்ட திட்டங்கள் மூலம் தமிழ்நாடு அரசு சார்பிலேயே வெளிநாடுகளுக்கு அழைத்து செல்வோம்.

    புதிய கல்வி கொள்கையை தமிழ்நாடு அரசு பின்பற்றுவதாக அண்ணாமலை மட்டுமல்ல, ஒன்றிய கல்வி அமைச்சரே கூறி வருகிறார். ஆனால் புதிய கல்வி கொள்கையை ஆரம்ப நிலையிலிருந்தே முதலமைச்சர் எதிர்த்து வருகிறார். அதற்காக தான் மாநில கல்வி கொள்கை வகுக்க குழு அமைத்துள்ளார்.

    அதை அண்ணாமலை உள்ளிட்டோர் தெரிந்து கொண்டு பேச வேண்டும். மாநில கல்வி கொள்கை தயாரிப்பு குழுவின் வரைவு அறிக்கை டிசம்பர் முதல் வாரத்தில் தாக்கல் செய்த பின்பு நாங்கள் எதை பின்பற்றுகிறோம் என்பது அவர்களுக்கு தெரியும்.

    பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கான இடஒதுக்கீடு காரணமாக பள்ளிக்கல்வித்துறை மட்டுமல்லாது, பல துறையிலும் கடுமையான பாதிப்புகள் ஏற்படும். எனவே இதை தடுப்பதற்காக தமிழக முதல்வர் தனியாக ஒரு குழு அமைத்துள்ளார். இ.வி.எஸ். இட ஒதுக்கீட்டில் இருந்து நம்மை காக்கின்ற முதல்வராக தமிழக முதலமைச்சர் இருப்பார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழ்நாடு முழுவதுமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 67 மாணவர்கள் இன்று திருச்சியிலிருந்து விமானம் மூலம் துபாய் மற்றும் சார்ஜாவிற்கு கல்வி சுற்றுலா புறப்பட்டனர்.
    • சார்ஜாவில் நடைபெறும் சர்வதேச புத்தக கண்காட்சியையும் மாணவர்கள் காண உள்ளனர்.

    திருச்சி:

    கடந்த ஆண்டு அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு வாரந்தோறும் வினாடி- வினா போட்டி நடத்தப்பட்டது. பள்ளி அளவில் வெற்றி பெற்ற மாணவர்கள் மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டிகளில் கலந்து கொண்டனர். அதில் சிறப்பாக பங்காற்றிய மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    அவர்கள் அனைவரையும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் துபாய் அழைத்து செல்ல பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் அப்போது ஒமைக்ரான் வைரஸ் பரவல் காரணமாக அந்த பயணம் ஒத்திவைக்கப்பட்டது.

    இந்நிலையில் அப்போது தேர்தெடுக்கப்பட்ட மாணவர்கள் அனைவரும் 11-ம் வகுப்பு சென்று விட்ட நிலையில் அவர்களை ஊக்குவிக்கும் வகையில் ஒத்திவைக்கப்பட்ட பயணத்தை தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் இன்று மேற்கொண்டனர்.

    தமிழ்நாடு முழுவதுமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 67 மாணவர்கள் இன்று திருச்சியிலிருந்து விமானம் மூலம் துபாய் மற்றும் சார்ஜாவிற்கு கல்வி சுற்றுலா புறப்பட்டனர். சார்ஜாவில் நடைபெறும் சர்வதேச புத்தக கண்காட்சியையும் அவர்கள் காண உள்ளனர். தமிழ்நாடு முழுவதும் வந்த மாணவர்கள் அனைவரும் நேற்று திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்தனர்.

    அவர்களை வரவேற்ற பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாணவர்களுக்கு வாழ்த்து கூறினார். மேலும் கல்வி சுற்றுலா செல்வது குறித்து அனைவரும் கட்டுரை எழுத வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகளையும், தொடர்ந்து மாணவர்களுக்கு புத்தகம் மற்றும் குறிப்பேடுகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    இந்த நிலையில் இன்று காலை அனைத்து மாணவ- மாணவிகளும் 4 நாள் கல்விச்சுற்றுலாவாக துபாய் புறப்பட்டு சென்றனர். அவர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் சென்றுள்ளார்.

    இந்த சுற்றுலா குறித்து மாணவ, மாணவிகள் கூறுகையில், நாங்கள் மிகவும் பின் தங்கிய குடும்பத்தை சேர்ந்தவர்கள். எங்கள் பெற்றோர்கள் கூலி வேலை செய்து தான் எங்களை படிக்க வைக்கிறார்கள். வெளிநாடு செல்வதெல்லாம் எங்களுக்கு கனவு போன்றது. நாங்கள் அதையெல்லாம் நினைத்து கூட பார்த்ததில்லை. தற்போது அது நடக்க போகிறது. இது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. இதனை ஏற்பாடு செய்த தமிழ்நாடு அரசுக்கு நன்றி என்றனர்.

    பள்ளி மாணவ, மாணவிகள் காலை 8 மணி அளவில் துபாய் செல்வதற்காக தங்கள் உடமைகளுடன் திருச்சி விமான நிலையம் வந்தடைந்தனர். அவர்களுடன் ஆசிரியர்களும் வந்திருந்தனர். முதலில் அவர்கள் திருச்சி விமான நிலையம் முனையம் பகுதியில் அமரவைக்கப்பட்டனர்.

    அவர்களின் பாஸ்போர்ட் மற்றும் விசாக்களை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் சோதனை செய்த பின்னர் விமான நிலையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் அவர்களுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி காலை 9 மணி அளவில் விமான நிலையத்திற்கு வந்து பள்ளி மாணவ, மாணவிகளுடன் இணைந்து விமானத்தில் புறப்பட்டார்.

    ×