search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கல்வித்துறை அதிகாரிகள்"

    • மாணவர்கள் தேர்வு எழுத வராததற்கு என்ன காரணம் என்பதை ஒவ்வொரு மாவட்ட அளவிலும் அதிகாரிகளிடம் கேட்டறிய வேண்டும்.
    • தேர்வு எழுத வராத 50 ஆயிரத்து 674 மாணவர்களின் படிப்பை மீண்டும் தொடர வைக்க என்ன செய்யலாம் என்று கருத்து கேட்டார்.

    சென்னை:

    பிளஸ்-2 பொதுத்தேர்வின்போது முதல் நாள் நடைபெற்ற தமிழ் தேர்வை 50 ஆயிரத்து 674 மாணவர்கள் எழுதாமல் 'ஆப்சென்ட்' ஆனது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இந்த பரபரப்பு அடங்குவதற்குள் அடுத்ததாக நேற்று நடைபெற்ற ஆங்கில தேர்வையும் 50 ஆயிரம் பேர் எழுதவில்லை. இது கல்வியாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    பரீட்சை எழுத வராதவர்களில் 44 ஆயிரம் பேர் இடைநிற்றல் மாணவர்கள் என்பது தற்போது தெரிய வந்துள்ளது. 6 ஆயிரம் பேர் பள்ளிக்கு வந்த மாணவர்கள் மற்றும் தனித் தேர்வர்கள் என தெரிய வந்துள்ளது.

    அதுமட்டுமின்றி பிளஸ்-2 வகுப்பில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் கொரோனா கால கட்டத்தில் 10-ம் வகுப்பில் ஆல் பாஸ் பெற்றவர்கள் இவர்கள் நேரடியாக பிளஸ்-1 வகுப்பில் கடந்த ஆண்டு சேர்ந்து முதன் முதலாக பொதுத்தேர்வை எதிர்கொண்டவர்கள்.

    அவ்வாறு நடைபெற்ற தேர்வில் ஏராளமான மாணவர்கள் தோல்வி அடைந்திருந்தனர். விதிமுறைப்படி பிளஸ்-2 வகுப்பில் சேர அனுமதிக்கப்பட்ட நிலையில் பிளஸ்-1 அரியர் தேர்வையும் பிளஸ்-2 வகுப்பு பொதுத்தேர்வுடன் எழுதி தேர்ச்சி அடைய வேண்டும் என்ற பயம் ஏற்பட்டதால் மாணவர்கள் பலர் தேர்வு எழுத வரவில்லை என்று காரணம் சொல்லப்படுகிறது.

    அது மட்டுமல்ல கொரோனா காலத்திற்கு பிறகு மாணவர்கள் பள்ளிகளுக்கு வராமல் வேலைக்கு சென்றுவிட்டது உள்பட பல்வேறு காரணங்களும் முன் வைக்கப்பட்டுள்ளது.

    கடந்த ஆண்டு 32 ஆயிரத்து 674 மாணவர்கள் பொது தேர்வை எழுத வராத நிலையில் இந்த ஆண்டு 50 ஆயிரத்து 674 மாணவர்கள் தேர்வை எழுதவில்லை என்ற தகவல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்துக்கு அதிகாரிகள் கொண்டு சென்றனர்.

    இதைத் தொடர்ந்து அவர் பள்ளிக் கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷாவிடம் உடனடியாக பேசினார். மாணவர்கள் ஆப்சென்ட் ஆனதின் உண்மை காரணத்தை விசாரிக்குமாறு அறிவுறுத்தினார்.

    மாணவர்கள் தேர்வு எழுத வராததற்கு என்ன காரணம் என்பதை ஒவ்வொரு மாவட்ட அளவிலும் அதிகாரிகளிடம் கேட்டறிய வேண்டும் என்று உத்தரவிட்டார்.

    அதன் அடிப்படையில் சென்னை தலைமை செயலகத்தில் இன்று காலை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கல்வித்துறையின் உயர் அதிகாரிகள் கூட்டத்தை கூட்டினார். இதில் துறையின் செயலாளர் காகர்லா உஷா, கமிஷனர் நந்தகுமார், தொடக்க கல்வி இயக்குனர் அறிவொளி, தேர்வுத் துறை இயக்குனர் நாகராஜ முருகன் ஆகியோர் பங்கேற்றனர்.

    இவர்களுடன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளும் காணொலி வாயிலாக இணைந்திருந்தனர். கூட்டத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தேர்வு எழுத வராத 50 ஆயிரத்து 674 மாணவர்களின் படிப்பை மீண்டும் தொடர வைக்க என்ன செய்யலாம் என்று கருத்து கேட்டார். பரீட்சை எழுத முன்வராத காரணத்தை ஒவ்வொரு மாணவரிடம் கேட்டறிய வேண்டும் என்றும் இதற்காக அவர்கள் படித்த பள்ளியின் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

    சட்டசபை தொடங்க உள்ள நிலையில் இதுபற்றி எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்புவார்கள் என்பதால் விரிவாக விசாரித்து உண்மையான காரணத்தை அறிக்கையாக தயார் செய்திட வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    • தேர்வுகள் முடிவடைந்ததை தொடர்ந்து பள்ளி மாணவ-மாணவிகள் ஒரு வகுப்பறையில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • மாணவர்களுக்கு சற்றும் சளைத்தவர்கள் அல்ல என்பது போல் மாணவிகளும் மேஜை, நாற்காலிகளை சேதப்படுத்தினர்.

    தர்மபுரி:

    தர்மபுரி மாவட்டம் அ.மல்லாபுரத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 700-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். 40 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இந்த பள்ளியில் கடந்த வாரம் அரசு பொதுத்தேர்வு எழுதும் பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு செய்முறை தேர்வு தொடங்கியது.

    இந்த தேர்வுகள் முடிவடைந்ததை தொடர்ந்து பள்ளி மாணவ-மாணவிகள் ஒரு வகுப்பறையில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சில மாணவர்கள் வகுப்பறையில் இருந்த மேஜை, நாற்காலிகளை தூக்கி வீசினர். மேலும் கம்பால் மின்விசிறிகள், சுவிட்ச் போர்டு ஆகியவற்றை அடித்து நொறுக்கினர்.

    மாணவர்களுக்கு சற்றும் சளைத்தவர்கள் அல்ல என்பது போல் மாணவிகளும் மேஜை, நாற்காலிகளை சேதப்படுத்தினர். இதுகுறித்து அறிந்த பள்ளி தலைமை ஆசிரியர், ரகளையில் ஈடுபட்ட மாணவ-மாணவிகளின் பெற்றோரை பள்ளிக்கு வரவழைத்து நடந்த சம்பவங்களை கூறினார். பின்னர் பள்ளியில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடமாட்டோம் என்று மாணவ-மாணவிகளிடம் எழுதி வாங்கப்பட்டது.

    இந்தநிலையில் மாணவ-மாணவிகள் ரகளையில் ஈடுபடும் காட்சிகள் அடங்கிய வீடியோ வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனை அறிந்த கல்வித்துறை அதிகாரிகள் பள்ளியில் விசாரணை நடத்தினர்.

    இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன் கூறியதாவது:-

    அ.மல்லாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் வகுப்பறையில் மேஜை, நாற்காலிகளை மாணவ-மாணவிகள் அடித்து சேதப்படுத்தியது தொடர்பாக அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மாணவ-மாணவிகள் இவ்வாறு நடந்து கொண்டதற்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். விசாரணையில் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் இந்த சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 1 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு 21-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை மாவட்ட அளவில் நடத்தப்படும்.
    • காலாண்டு தேர்வு விடுமுறை மற்றும் ஆயுத பூஜை விடுமுறை அக்டோபர் 1-ந்தேதி முதல் 5-ந்தேதி வரை விடப்பட்டு, பின்னர் அக்டோபர் 6-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும்.

    சென்னை:

    பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட நடப்பு கல்வியாண்டுக்கான பள்ளி வேலைநாட்கள், விடுமுறை அடங்கிய அட்டவணையில், 1 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு 21-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை மாவட்ட அளவில் நடத்தப்படும் என்றும், காலாண்டு தேர்வு விடுமுறை மற்றும் ஆயுத பூஜை விடுமுறை அக்டோபர் (அடுத்த மாதம்) 1-ந்தேதி முதல் 5-ந்தேதி வரை விடப்பட்டு, பின்னர் அக்டோபர் 6-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்தநிலையில் இதில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு இருப்பதாக நேற்று தகவல்கள் வெளியாகின. அதன்படி, தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு 2-ம் பருவத்துக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி அக்டோபர் மாதம் 6-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை தமிழகம் முழுவதும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் அளிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

    இதன் காரணமாக, 1 முதல் 5-ம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு அக்டோபர் 9-ந்தேதி வரை விடுமுறை விடப்பட்டு 10-ந்தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, அட்டவணைப்படி அக்டோபர் 6-ந்தேதியே பள்ளிகள் திறக்கப்பட்டு, வகுப்புகள் நடைபெறும் என்றும் கூறப்பட்டு இருக்கிறது.

    இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, 'தற்போது வரை வாய்வழி அறிவுறுத்தலாகத்தான் இருக்கிறது. அதிகாரபூர்வமாக பள்ளிக்கல்வித்துறை வெளியிடும். அப்படி வெளியிடப்படும்போதுதான் இது உறுதிப்படுத்தப்படும்' என்றனர்.

    ×