search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்"

    • விஷம் குடித்த சுடலைமாடன் தூத்துக்குடி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
    • சுடலைமாடனின் சாவுக்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும் என அவரது உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.

    உடன்குடி:

    உடன்குடி பேரூராட்சியில் தூய்மைப் பணியாளராக பணியாற்றிய சுடலை மாடனிடம் அவரது பதவி உயர்வு, சாதி குறித்து பேரூராட்சியின் முன்னாள் தலைவி ஆயிஷா கல்லாசி, பேரூராட்சி செயல் அலுவலர் பாபு ஆகியோர் அவதூறாக பேசினார்கள்.

    இதையடுத்து கடந்த 17-ந்தேதி விஷம் குடித்த சுடலைமாடன் தூத்துக்குடி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 23-ந்தேதி உயிரிழந்தார்.

    சுடலைமாடனின் சாவுக்கு காரணமான வர்களை கைது செய்ய வேண்டும் என இவரது உறவினர்கள், பேரூராட்சி பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வந்தநிலையில் மாவட்ட கலெக்டர் செந்தில் ராஜ் உறுதிமொழியை ஏற்று போராட்டம் கைவிடப் பட்டது.

    சுடலைமாடன் குடும்பத் திற்கு ரூ.12 லட்சம் அரசு உதவி, அவரது மகளுக்கு அரசு வேலை, குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என அரசுத் தரப்பில் தெரி விக்கப்பட்டது. இதனால் சுடலை மாடன் உடலை வாங்கி உறவினர்கள் அடக்கம் செய்தனர்.

    இந்நிலையில் சுடலை மாடன் குடும்பத்தினரை அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன், தமிழக தூய்மை பணியாளர் இணைய துணைத்தலைவர் கோவிந்த ராஜ், மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

    அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன் தனது சொந்த நிதியில் இருந்து ரூ.2 லட்சம் வழங்கினார்.திருச்செந்தூர் ஆர்.டி.ஓ. புகாரி, தாசில்தார் சுவாமி நாதன், முக்காணி கூட்டுறவு சங்க தலைவர் உமரிசங்கர், உடன்குடி ஊராட்சி ஓன்றியக்குழு தலைவர் டி.பி.பாலசிங், கிழக்கு ஓன்றிய தி.மு.க. செயலர் க.இளங்கோ, பேரூராட்சி துணைத் தலைவர் மால்ராஜேஷ், பேரூராட்சி உறுப்பினர்கள் மும்தாஜ் பேகம், அன்புராணி, ஆபித், பிரதீப் கண்ணன், பஷீர், சரஸ்வதி பங்காளன், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் மீராசி ராசூதீன், மகாவிஷ்ணு, ரவிராஜா, முன்னாள் கவுன்சிலர் முகமது சலீம், மாவட்ட பிரதிநிதி ஜெயப்பிரகாஷ், ஓன்றிய செயலர்கள் ரமேஷ், நவீன்குமார், சதீஷ், நகர இளைஞரணி அமைப்பாளர் அஜய், கணேசன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கூடுதல் வகுப்பறை வேண்டி அமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
    • ஓடக்கரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு 2 வகுப்பறைகள் கட்டப்பட்டன.

    ஆறுமுகநேரி:

    காயல்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட அலியார் தெருவில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி உள்ளது. இங்கு கூடுதல் வகுப்பறை வேண்டி அமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனையடுத்து சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.28 லட்சம் மதிப்பீட்டில் கூடுதலாக 2 வகுப்பறைகள் கட்டுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டு கட்டிடங்கள் கட்டப்பட்டன.

    மேலும் காயல்பட்டினம் ஓடக்கரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு ரூ.20.5 லட்சம் மதிப்பீட்டில் 2 வகுப்பறைகள் கட்டப்பட்டன. இவற்றின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இவ்விழாவிற்கு தமிழக மீன்வளத்துறை மற்றும் கால்நடை துறை அமைச்சர் அனிதாராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு புதிய வகுப்பறை கட்டிடங்களை திறந்து வைத்தார்.

    விழாவில் தூத்துக்குடி மாவட்ட கூடுதல் துணை கலெக்டர் தாக்ரே சுபஞான தேவ்ராவ், திருச்செந்தூர் உதவி கலெக்டர் புகாரி, தாசில்தார் சுவாமிநாதன், வட்டார வளர்ச்சி அதிகாரி பொங்கலரசி, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் உதயகுமார், வட்டார கல்வி அலுவலர்கள் பாஸ்கரன், இம்மானுவேல், காயல்பட்டினம் நகராட்சி ஆணையாளர் குமார்சிங், நகராட்சி தலைவர் முத்து முகமது, துணைத் தலைவர் சுல்தான் லெப்பை, முக்காணி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் உமரி சங்கர், மாவட்ட தி.மு.க. இளை ஞரணி அமைப்பாளர் ராமஜெயம், ஆவின் சேர்மன் சுரேஷ், மாவட்ட கவுன்சிலர் செல்வகுமார், வர்த்தக அணி துணை அமைப்பாளர் ஓடைசுகு, திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் செங்குழி ரமேஷ், மாநில பொது குழு உறுப்பினர் சாகுல் ஹமீது, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் மெஜல்லா பீரிஸ், நடுநிலைப்பள்ளி தலைமை யாசிரியர் புனிதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பல்வேறு புதிய திட்டங்கள் பற்றி ஆலோசிப்பதற்கு மாவட்டம் வாரியாக முதல்-அமைச்சர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
    • தூத்துக்குடி மாவட்ட எல்லையான வசவப்பபுரத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க செயலாளரும், அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    முதல்-அமைச்சர்

    தி.மு.க தலைவரும், தமிழ்நாட்டின் முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின், மக்களுக்கு வழங்கியுள்ள வாக்குறுதிகளை ஒவ்வொன்றாய் நிறைவேற்றி பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

    அரசுதிட்டங்களில் செயலாக்கம் குறித்தும், பல்வேறு புதிய திட்டங்கள் பற்றி ஆலோசிப்பதற்கும் மாவட்டம் வாரியாக முதல்-அமைச்சர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

    அதன் ஒரு பகுதியாக நாகர்கோவிலில் நடைபெறும் ஆய்வு மற்றும் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்று விட்டு நாளை (செவ்வாய்க்கிழமை) தூத்துக்குடியில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு புறப்படுகிறார்.

    உற்சாக வரவேற்பு

    இதனால் தூத்துக்குடி மாவட்ட எல்லையான வசவப்ப புரத்தில் நாளை மதியம் 12 மணிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    வரவேற்பு நிகழ்ச்சியில், மாநில, மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் செயலாளர்கள், நிர்வாகிகள், மாவட்ட அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட அனைத்து நிர்வாகிகள், கழக செயல்வீரர்கள் திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தி.மு.க. சார்பில் நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கும் விழா பரமன்குறிச்சியில் நடைபெற்றது.
    • உடன்குடி ஊராட்சி ஓன்றியக்குழு தலைவர் பாலசிங் உள்ளிட்டோர் விழாவில் முன்னிலை வகித்தனர்.

    உடன்குடி:

    அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆலோசனைப்படி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசித்திருவிழாவிற்கு பாதயாத்திரையாக வரும் பக்தர்கள், மற்றும் தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட 5,070 பேருக்கு தி.மு.க. சார்பில் நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கும் விழா பரமன்குறிச்சியில் நடைபெற்றது. நிகழ்ச்சியினை தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. பொருளாளர் வி.பி.ராமநாதன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

    உடன்குடி ஊராட்சி ஓன்றியக்குழு தலைவரும், உடன்குடிமேற்குஓன்றிய செயலாளருமான பாலசிங், உடன்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் இளங்கோ, ஆழ்வார்திருநகரி ஒன்றிய செய லாளர் பார்த்திபன், மாநில பிரசாரக்குழு துணை செயலர் ஜெசிபொன்ராணி, மாவட்ட பிரதிநிதி மதன்ராஜ், உடன்குடி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்க தலைவர்அஸ்ஸாப் ஆ லிபாதுஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் தி.மு.க. மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் செந்தில், மாடசாமி, கோமதிநாயகம், ஓன்றிய இளைஞரணி துணை செயலர் மனோஜ், உடன்குடி ஊராட்சி ஓன்றியக்குழு உறுப்பினர் ராமலட்சுமி, ஓன்றிய துணை செயலர் இந்திரா, மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் தமிழ் அழகன், திருசெந்தூர் ஓன்றிய துணை செயலர் அமிர்தலிங்கம், வீரமணி, கிளை நிர்வாகிகள் கணேசன், பூங்குமார், பொன்விங்கம், அரிச்சந்திரன், ரவி, குமார், மகேஸ்வரி, முத்துக்குமார், மோகன், இசக்கிமுத்து, முத்துக்குட்டி, சுபிதா, தி.மு.க.வினர் பலர் கலந்துகொண்டனர்.

    • தென்திருப்பேரை அருகே உள்ள கடம்பா குளத்தில் இருந்து பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.
    • தூர்வாரும் பணி தொடக்க விழாவிற்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

    தென்திருப்பேரை:

    தூத்துக்குடி மாவட்ட தாமிரபரணி பாசனத்தில் தென்திருப்பேரை அருகே உள்ள கடம்பா குளம் கடலில் பாதி கடம்பா என விவசாயிகள் கூறும் அளவிற்கு பெரிய குளமான கடம்பா குளத்தில் இருந்து பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.

    தூர்வாரும் பணி

    இந்த குளம் பராமரிப்பு இல்லாமல் தூர்ந்து போய் உள்ள நிலையில் கடைமடை பாசன கால்வாய்களை தூர்வார வேண்டும் என கடந்த 20 வருடங்களுக்கு மேலாக விவசாயிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

    மேலும் கடம்பாகுளம் பாசன கால்வாய் தூர்ந்து போய் அதன் முழு கொள்ளளவை எட்ட முடியாமல் சிறு மழைக்கு கூட பொதுமக்களுக்கும் விவசாயிகளுக்கும் வெள்ள அபாயத்தை ஏற்படுத்தியது.

    இதனை அடுத்து பொது மக்களின் கோரிக்கையை ஏற்று கடம்பாகுளம் பாசன விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான உபரிநீர் கால்வாய் தூர் வாரும் பணியின் சீரமைப்பு பணிகள் திட்ட தொடக்க விழா நேற்று கடம்பா குளத்தில் நடைபெற்றது விழாவிற்கு மீன் வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புதுறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். கலெக்டர் செந்தில்ராஜ் முன்னிலை வகித்தார். கனிமொழி எம்.பி. தூர்வாரும் பணிகளை தொடங்கி வைத்து பேசியதாவது:-

    விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையினை ஏற்று கடம்பா குளம் உபரி நீர் கால்வாய் ரூ.34 கோடி மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் கடம்பா குளம், கால்வாய் குளம், தென்கரை குளம், வெள்ளூர் குளங்களின் கரைகளை பலப்படுத்துதல், கால்வாய் முன்புறம் கரை அமைத்தல், நீர் வரத்து கால்வாய் பலப்படுத்துதல், மடைகளை சீரமைத்தல், சிறு பாலங்கள் அமைத்தல் என பல்வேறு பணிகள் நடைபெற உள்ளது.

    இத் திட்டத்தை தந்த தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஸ்டாலினுக்கும், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனுக்கும் நன்றினை தெரிவித்து கொள்கிறோம். அதேபோல் துறையூர் அங்கமங்கலம் சாலையை கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் ரூ.84 லட்சம் மதிப்பில் சீரமைத்து தரப்படும். இப்பணிகளுக்கு மாவட்ட பஞ்சாயத்து நிதியில் இருந்து ரூ.25 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும். கடம்பா குளம் சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதன் மூலம் கடம்பாகுளம் உபரி நீர் வடிகால் ஓடையில் வெள்ளநீர் சீராக செல்லும்.

    இதன் மூலம் விளைநிலங்கள் குடியிருப்பு பகுதிகளில் மழைக்காலங்களில் நீர் உட்புகுவது தடுக்கப்படும். ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் உள்ள ஸ்ரீவைகுண்டம், கால்வாய், வெள்ளூர், ஆதிச்சநல்லூர், புதுக்குடி மற்றும் ஏரல் தாலுகாவில் உள்ள ஆதிநாதபுரம், செம்பூர், வெள்ளமடம், நாசரேத், புரையூர், அங்கமங்கலம், குரும்பூர், குருகாட்டூர், கல்லாம்பாறை, ராஜபதி, தென்திருப்பேரை மற்றும் திருச்செந்தூர் தாலுகாவில் உள்ள சுகந்தலை, மேலாத்தூர், ஆத்தூர் கஸ்பா ஆகிய கிராமங்கள் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறும் என கூறினார்

    மண்சாலை

    மேலும் விவசாயிகள் மணத்தி- ராஜபதி சாலையினை தங்களுடைய நிலத்தின் வழியாக மண் சாலையாக அமைத்துள்ளார்கள். அந்த சாலையினை தார் சாலையாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் நிறைவேற்றப்படும். கடம்பா குளம் உபரி நீர் கால்வாய் தூர்வாரும் பணிகள் செப்டம்பர் மாதத்திற்குள் முடிக்கப்பட்டு மீண்டும் பெருமைமிகு குளமாக மாற்றப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    20ஆண்டு கோரிக்கை

    மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன் கூறியதாவது:-

    விவசாயிகளின் 20 ஆண்டுகால கோரிக்கையான கடம்பா குளம் உபரிநீர் கால்வாய் தூர் வாரும் பணிகள் நேற்று ெதாடங்கி வைக்கப்பட்டுள்ளது. கடம்பாகுளம் தண்ணீர் நிரம்பினால் இப்பகுதி இரு போகம் விளைச்சல் நடைபெறும்.

    மேலும் புறையூர் பாலம் சரி செய்யும் திட்டங்களும் செயல்படுத்தப்படும். தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஸ்டாலின் விவசாயிகள் பயன்பெறும் வகையில் விவசாயத்திற்கு தனியாக பட்ஜெட் அமைத்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இந்த திட்டத்தை நிறைவேற்ற காரணமாக இருந்த தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி அவர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    கலந்து கொண்டவர்கள்

    நிகழ்ச்சியில் சண்முகையா எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சி தலைவர் பிரம்மசக்தி, ஆவின் தலைவர் சுரேஷ் குமார், பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் பத்மா, தாமிரபரணி வடிநில கோட்ட செயற்பொறியாளர் மாரியப்பன், திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் புகாரி, ஏரல் தாசில்தார் கண்ணன், ஆழ்வார் திருநகரி ஊராட்சி ஒன்றிய சேர்மன் ஜனகர்,

    வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவராஜன், பாலசுப்பிரமணியன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ராமஜெயம், கூட்டுறவு வங்கி தலைவர் உமரிசங்கர், ஆழ்வை மத்திய ஒன்றிய செயலாளர் நவீன் குமார், பேரூராட்சி தலைவர் மணிமேகலை ஆனந்த், துணை தலைவர் அமிர்த வள்ளி, பேரூராட்சி உறுப்பினர் ஆனந்த், மற்றும் உறுப்பினர்கள், நகர செயலாளர் முத்து வீர பெருமாள், ஆழ்வை மத்திய ஒன்றிய தி.மு.க. அவை தலைவர் மகரபூசணம், நட்டார், பால்சித்தர், ஆழ்வை ஒன்றிய விவசாய சங்க தலைவர் பூலான், ஆழ்வை நகர தி.மு.க. செயலாளர் கோபிநாத், மாவட்ட பிரதிநிதி பாலசந்திரன், நயினார், மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • வாத்தியார் குடியிருப்பு, முத்துகிருஷ்ணாபுரம் கிராமங்களில் சுமார் 500-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
    • 2 பஸ்களையும் மாற்று பாதையில் இயக்கிட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

    உடன்குடி:

    உடன்குடி அருகே உள்ள செட்டியாபத்து ஊராட்சி தலைவர் பாலமுருகன் தமிழகமீன்வளம், மீனவர்நலம் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    செட்டியாபத்து ஊராட்சிக்குட்பட்ட வாத்தியார் குடியிருப்பு, முத்துகிருஷ்ணாபுரம் ஆகிய 2 கிராமங்கள் உள்ளது. இந்த கிராமங்களில் சுமார் 500-க்கும் மேற்பட்ட மக்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.

    இங்குள்ள மக்கள் பள்ளி, ஆஸ்பத்திரி மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வாங்க வேண்டும் என்றால் 3 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று பஸ்களில் செல்ல வேண்டியதுள்ளது. இதனால் பள்ளி குழந்தைகள், முதியவர்கள்மிகுந்த சிரமப்படு கின்றனர்.

    மேலும் புகழ் பெற்ற கூழையன் குண்டு அல்லிஊத்து கல்லால் அய்யனார் கோவிலுக்கு வெளியூர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள். இந்த பக்தர்கள் பஸ் வசதி இல்லாததால் உடன்குடி பஸ் நிலையத்தில் இருந்து தனியார் வாகனங்களில் அதிக கட்டணம் கொடுத்து கோவிலுக்கு செல்கின்றனர்.

    பொது மக்கள், பக்தர்களின் நலன் கருதி உடன்குடி - பரமன்குறிச்சி மெயின் ரோட்டில் தைக்காவூரில் இருந்து வாத்தியார் குடியிருப்பு, முத்துகிருஷ்ணாபுரம் வழியாக உடன்குடி - செட்டியாபத்து மெயின் ரோட்டுக்கு வந்து உடன்குடி பஸ் நிலையம் செல்லும் வகையில் பஸ்களைஇயக்க வேண்டும்.

    குறிப்பாக உடன்குடியில் இருந்து திருச்செந்தூருக்கு அரசு பஸ் தடம் எண் 61 டி திருச்செந்தூரில் இருந்து காலை 7.30 மணிக்கு புறப்படும், உடன்குடியில் இருந்து காலை 9.30 மணி, மாலை 4.10 மணிக்கும் புறப்படுகிறது. இது போன்று அரசு பஸ் தடம் எண் 62 பி திருச்செந்தூரில் இருந்து மாலை 3.15 மணி, உடன்குடியில் இருந்து மாலை 4.30 மணிக்கும் புறப்படுகிறது.இந்த 2 அரசு பஸ்களை மேற்குறிப்பிட்டுள்ள 2 கிராமங்கள் வழியாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், இப்படி பஸ்களை இயக்குவதால் சுமார் 15 ஆண்டு காலமாக எந்த வித பஸ்வசதியும் இல்லாத இரு கிராமத்திற்கு பஸ் வசதி கிடைக்கும்.

    மனுவை பெற்றுக் கொண்ட அமைச்சர் உடனடியாக 2 பஸ்களையும் மாற்று பாதையில்இயக்கி 15 வருடமாக பஸ் வசதி இல்லாத ஊருக்கு பஸ் வசதி கிடைக்கநடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • தூத்துக்குடி எம்.பி. கனிமொழி பிறந்தநாளையொட்டி 570 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
    • நயினார்பத்து, சுதந்திர நகர், விஜயநாராயணபுரம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 570 நலிந்தோர்களுக்கு சேலை, தையல் எந்திரம், பள்ளிச் சீருடைகளை வழங்கப்பட்டது.

    உடன்குடி:

    அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆலோசனைப்படி, தி.மு.க. மாநில துணைப்பொதுச்செயலாளரும், தூத்துக்குடி எம்.பி.யுமான கனிமொழி பிறந்தநாளையொட்டி உடன்குடி கிழக்கு ஓன்றிய தி.மு.க. சார்பில் 570 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி உடன்குடிகிழக்கு ஓன்றிய தி.மு.க. செயலாளர் இளங்கோ தலைமையில் வெள்ளாளன்விளையில் நடந்தது.

    நயினார்பத்து, சுதந்திர நகர், விஜயநாராயணபுரம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 570 நலிந்தோர்களுக்கு சேலை, தையல் எந்திரம், பள்ளிச் சீருடைகளை வழங்கி, கனிமொழி எம்.பி.யின் சாதனைகள் குறித்து பேசினார்.

    முன்னதாக கிழக்கு ஓன்றிய தி.மு.க. அவைத் தலைவர் ஷேக் முகம்மது வரவேற்றார். வெள்ளாளன்விளை ஊராட்சி மன்றத் தலைவர் ராஜரத்தினம், கிழக்கு ஓன்றிய தி.மு.க. பொருளாளர் கணேசன், நிர்வாகிகள் லியாஸ்கர், அற்புதஆரசி, விஜயா, குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    உடன்குடி மெயின் பஜார் நான்கு சந்திப்பில் தி.மு.க. நகரச் செயலாளரும் உடன்குடிபேரூராட்சி மன்ற துணைத்தலைவரு மான மால்ராஜேஷ் ஏற்பாட்டில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கினர் இந்த நிகழ்ச்சியில் பேருராட்சிமன்ற உறுப்பினர் ஜான்பாஸ்கர், பிரதீப்கண்ணன் மற்றும் முகமது சலீம், முருகேசன், திரவியம், தங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை தி.முக.வினர் பலர் நேரில் சந்தித்து ஒரு கோரிக்கை மனு அளித்தனர்.
    • சிவலூர் பகுதி மக்கள் பல கிலோமீட்டர் தூரம் சென்று ரேஷன் பொருட்கள் வாங்குவதால் மிகவும் சிரமமாக உள்ளது.

    உடன்குடி:

    உடன்குடி அருகே உள்ள தண்டுபத்தில் தங்கி இருந்த தமிழக மீன்வளம் மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை செட்டி யாபத்து ஊராட்சி மன்ற தலைவர் பாலமுருகன், உடன்குடி கூட்டுறவு வங்கி தலைவர் அசாப் அலி பாதுஷா,உடன்குடி கிழக்கு ஒன்றிய தி.முக. செயலாளர் இளங்கோ மற்றும் முத்துராமலிங்கம் உட்பட தி.முக.வினர் பலர் நேரில் சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்து நிறைவேற்றுக்கோரி வற்புறுத்தினர்.

    அந்த மனுவில் கூறியிருந்தாவது:-

    செட்டியாபத்து ஊராட்சிக்கு உட்பட்ட சிவலூரில் புதியதாக ரேஷன்கடை அமைக்க வேண்டும்என்றும், இப்பகுதியில் உள்ள மக்கள் பல கிலோமீட்டர் தூரம்நடந்துசென்று ரேஷன் பொருட்கள் வாங்குவதால் மிகவும் சிரமமாக உள்ளது.

    ரேஷன் பொருள் எப்போது வினியோகம் செய்யப்படுகிறது என்பது தெரியாமல் குழம்பி வருகின்றனர். அதனால் புதிய ரேஷன் கடை அமைக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர்.

    மனுவை பெற்றுக் கொண்ட அமைச்சர் இது சம்பந்தமாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

    • கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சிக்கு கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார்.
    • விழிப்புணர்வு பேரணியை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார்.தமிழக மீன் வளம், மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கி பேசினார்.

    மின்சார சிக்கன வார விழா

    மின்சார சிக்கன வாரவிழாவை முன்னிட்டு திருச்செந்தூர் உப மின் நிலையத்தில் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    திருச்செந்தூரில் புதிதாக கட்டப்பட்ட வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். அதைத் தொடர்ந்து திருச்செந்தூர் தாசில்தார் அலுவலகத்தில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் குத்துவிளக்கு ஏற்றி கல்வெட்டை திறந்து வைத்தார்.

    கலந்து கொண்டவர்கள்

    இதில் எம்.எல்.ஏ.க்கள் சண்முகையா, ஊர்வசி அமிர்தராஜ், மாவட்ட ஊராட்சி தலைவர் பிரம்ம சக்தி, திருச்செந்தூர் நகராட்சி தலைவர் சிவ ஆனந்தி, துணை தலைவர் செங்குழி ரமேஷ், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள கால்நடை ஆராய்ச்சி அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் கால்நடைத்துறை அலுவலர்கள் அதிகாரிகளுடன் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விரிவான ஆலோசனை நடத்துகிறார்.
    • கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளுக்கு ஏற்ப ஜல்லிக்கட்டு போட்டி புதிய விதிமுறைகள் என்னென்ன என்பது தெரியவரும்.

    சென்னை:

    தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை அலங்காநல்லூர், வாடிவாசல், புதுக்கோட்டை, விராலிமலை உள்பட பல ஊர்களில் ஜல்லிக்கட்டு போட்டி பாரம்பரியமாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியை எதிர்த்து பீட்டா உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன. இதன் மீதான தீர்ப்பு விரைவில் வர உள்ளது.

    இந்த நிலையில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழா குழுவினர் மதுரை மாவட்ட கலெக்டரை சந்தித்து ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி கோரி மனு அளித்துள்ளனர்.

    இந்த நிலையில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான ஏற்பாடுகள், நெறிமுறைகள் குறித்து ஆலோசிக்க கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நாளை மறுநாள் (22-ந்தேதி) ஆலோசனை நடத்த உள்ளார்.

    சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள கால்நடை ஆராய்ச்சி அலுவலகத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் கால்நடைத்துறை அலுவலர்கள் அதிகாரிகளுடன் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விரிவான ஆலோசனை நடத்துகிறார்.

    கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளுக்கு ஏற்ப ஜல்லிக்கட்டு போட்டி புதிய விதிமுறைகள் என்னென்ன என்பது தெரியவரும்.

    • தி.மு.க., அறிவித்த பல்வேறு திட்டங்களில் பெரும்பாலானவற்றை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றி உள்ளார்.
    • தினசரி 20 மணி நேரம் மக்களுக்காக உழைப்பவர் முதல்-அமைச்சர் என்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசினார்.

    உடன்குடி:

    தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு பொதுக் கூட்டம் உடன்குடி மெயின்பஜார் அண்ணாதிடலில் நடந்தது. தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சரும், தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலா ளருமான அனிதா ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

    ஓட்டப்பிடாரம் எம்.எல்.ஏ சண்முகையா, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்ம சக்தி, உடன்குடி யூனியன் சேர்மன் பாலசிங், உடன்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் இளங்கோ, உடன்குடி பஞ்சாயத்து யூனியன் துணைச் சேர்மன் மீராசிராஜூதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    உடன்குடி பேரூராட்சி துணைத் தலைவரும், உடன்குடி பேரூர் செயலாள ருமான சந்தையடியூர் மால் ராஜேஷ் வரவேற்று பேசினார். தலைமை கழக பேச்சாளர்கள் கரூர் முரளி, நாகை சாகுல் ஹமீது, முக்காணி கூட்டுறவு சங்க தலைவர் உமரி ஷங்கர், மாவட்ட அவைத் தலைவர் அருணாசலம், துணைச் செயலாளர் ஜெயக்குமார் ரூபன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ராமஜெயம், திருச்செந்தூர் நகர் மன்ற துணைத் தலைவர் ரமேஷ், ஆழ்வை கிழக்கு ஒன்றிய செயலாளர் சதீஷ்குமார், ஆழ்வார் திருநகரியூனியன் சேர்மன் ஜனகர், மாவட்ட பிரதிநிதி சிராஜுதீன், உடன்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் அஸ்ஸாப், மாவட்ட பிரதிந்திமதன்ராஜ், உடன்குடி பேரூராட்சி கவுன்சிலர் மூஸா மும்தாஜ் பேகம் மற்றும் முகம்மது சலீம் இளைஞர் அணி பாய்ஸ். அஜய் உட்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன் பேசியதாவது:-

    நட்புக்கு இலக்கணமாக இருந்தவர்கள் கலைஞரும், பேராசிரியரும். தேர்தல் வாக்குறுதியாக தி.மு.க., அறிவித்த பல்வேறு திட்டங்களில் பெரும்பாலானவற்றை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றி உள்ளார். இதனால் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி தி.மு.க. அரசு சாதனை படைக்கிறது.

    தினசரி 20 மணி நேரம் மக்களுக்காக உழைப்பவர் முதல்-அமைச்சர். தமிழக அரசுஅறிவிக்கின்ற ஒவ்வொரு திட்டங்களும் அனைத்து மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதில் தனிகவனம் செலுத்துகிறார், மக்களைத் தேடி கல்வி, மக்களை தேடி மருத்துவம் இப்படி பல்வேறு திட்டங்களை அறிவித்து சாதனை படைத்து வரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு மக்கள் முழு ஆதரவு தர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    முடிவில் உடன்குடி பேரூராட்சி கவுன்சிலர் ஜான் பாஸ்கர் நன்றி கூறினார்.

    • மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.22.65 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி மன்ற அலுவலக புதிய கட்டிடம் கட்டப்பட்டது.
    • திறப்பு விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் சொர்ணபிரியா தலைமை தாங்கினார்.

    உடன்குடி:

    உடன்குடி யூனியனுக்கு உட்பட்ட குலசேகரன் பட்டினம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.22.65 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி மன்ற அலுவலக புதிய கட்டிடம் கட்டப்பட்டது.

    இதன் திறப்பு விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் சொர்ணபிரியா தலைமை தாங்கினார். தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து சேர்மன் பிரம்ம சக்தி, மாவட்ட கூடுதல் கலெக்டர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ், குலசேகரன்பட்டினம் ஊராட்சி துணைத் தலைவர் கணேசன், உடன்குடி யூனியன் கவுன்சிலர் முருகேஸ்வரி ராஜதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். உடன்குடி யூனியன் ஆணையாளர் ஜான்சிராணி அனைவரையும் வரவேற்றார். கூடுதல் பி.டி.ஒ.பழனிச்சாமி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

    தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் புதிய கட்டிடத்தை திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றினார்.

    இதில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வளர்மதி, மாநில மாணவரணி முன்னாள் துணை அமைப்பாளர் உமரி ஷங்கர், உடன்குடி கிழக்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் இளங்கோ, தெற்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ராமஜெயம், மாவட்ட கவுன்சிலர்கள் ஜெசி பொன்ராணி, செல்வக் குமார், பொதுக்குழு உறுப்பினர் செந்தில், உடன்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் அஸ்ஸாப், ஊராட்சி மன்றவார்டு உறுப்பினர்கள் ராமலிங்கம் என்ற துரை, இசக்கி, முத்துசாமி, மிராஉம்மாள், தனலெட்சுமி, செட்டியாபத்து ஊராட்சி தலைவர் பாலமுருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலர் ரசூல் தின் நன்றி கூறினார்.

    ×