search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதிய ரேஷன் கடை"

    • நத்தம் எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் புதிய ரேசன் கடை திறப்பு விழா நேற்று நடந்தது.
    • கோசுகுறிச்சி, அரவங்குறிச்சி அரசு மேல்நிலை பள்ளிகளில் மாணவ- மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கபட்டது.

    நத்தம்:

    நத்தம் எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் புதிய ரேசன் கடை திறப்பு விழா நேற்று நடந்தது. இதற்கு முன்னாள் எம்.எல்.ஏ ஆண்டிஅம்பலம் தலைமை தாங்கினார். தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் ரத்தினக்குமார், பழனிச்சாமி, நத்தம் பேரூராட்சி தலைவர் சேக்சிக்கந்தர்பாட்சா, நகர செயலாளர் ராஜ்மோகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    வேலுச்சாமி எம்.பி. கலந்து கொண்டு புதிய ரேசன் கடையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். தொடர்ந்து பயனாளிகளுக்கு பொருட்களை வழங்கி பேசினார். இதில் தாசில்தார் ராமையா, யூனியன் ஆணையாளர்கள் சுமதி, பத்மாவதி, மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்துக்குமார்சாமி, மாவட்ட வக்கீல் அணி அமைப்பாளர் சுந்தரமூர்த்தி, மாவட்ட சுற்றுசூழல் அணி தலைவர் ராஜகோபால், கவுன்சிலர்கள் இஸ்மாயில், பாக்கியலட்சுமி சிவஞானம், மாவட்ட பிரதிநிதிகள் குடகிப்பட்டி அழகர்சாமி, சிறுகுடி சேக்சிக்கந்தர், தகவல் தொழில்நுட்ப மாவட்ட அமைப்பாளர் மணி, வடக்கு ஒன்றிய பொருளாளர் கலிபுல்லா, நத்தம் தொகுதி ஒருங்கிணைப்பாளர் அய்யாபட்டி வாசுதேவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    இதைப்போலவே துவராபதி, சிறுகுடி- மஞ்சநாயக்கன்பட்டி, குட்டுப்பட்டி-பெரிய மலையூர், சேத்தூர்-சின்னமுளையூர் பகுதிகளிலும் புதிய ரேசன் கடைகள் திறக்கபட்டது. முன்னதாக கோசுகுறிச்சி, அரவங்குறிச்சி அரசு மேல்நிலை பள்ளிகளில் மாணவ- மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கபட்டது.

    • புதிய பகுதி நேர ரேஷன் கடை கட்டிடம் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது.
    • ஏராளமான தி.மு.க. வினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    காவேரிப்பட்டணம்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே உள்ள குரும்பட்டியில் ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் புதிய பகுதி நேர ரேஷன் கடை கட்டிடம் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் ஒன்றிய குழு துணை தலைவர் சசிகலா தசரா தலைமை வகித்தார். இந்நிகழ்ச்சியில் பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் கலந்து கொண்டு பணியினை தொடங்கி வைத்தார். மாவட்ட அவை தலைவர் நாகராஜ், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மணிமேகலை நாகராஜ், ஒன்றிய செயலாளர்கள் சுப்பிரமணி, மகேந்திரன், ஊராட்சி மன்ற தலைவர் ரோஜா காளியப்பன், மற்றும் ஏராளமான தி.மு.க. வினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். 

    • ரூ.7 லட்சம் மதிப்பில் புதிய ரேஷன் கடை கட்டிடம் கட்டிமுடிக்கப்பட்டது.
    • புதிய கடையை பி.எச்.மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் யூனியன் காவலாகுறிச்சி பஞ்சாயத்து காவலாகுறிச்சியில் பொது மக்களின் கோரிக்கையை ஏற்று சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து ரூ.7 லட்சம் மதிப்பில் புதிய ரேஷன் கடை கட்டிடம் கட்டி அதன் திறப்பு விழா நேற்று மாலை நடைபெற்றது.

    பி.எச்.மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் ஓ.பி.எஸ். அணி மாவட்ட செயலாளர் வி.கே.கணபதி, அமைப்புச் செயலாளர் சௌ.ராதா, மாநில போக்குவரத்து பிரிவு செயலாளர் சேர்மத்துரை, ஒன்றிய செயலாளர் அருண் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நாகப்பட்டினத்தில் நியாய விலைக் கடையை முகம்மது ஷா நவாஸ் எம்.எல்.ஏ திறந்து வைத்தார்.
    • தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழக தலைவர் என்.கெளதமன் முன்னிலை வகித்தார்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் பெருங்க டம்பனூர் ஊராட்சியில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ரூபாய் 16 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட நியாய விலைக் கடை கட்டடத்தை முகம்மது ஷா நவாஸ் எம்.எல்.ஏ திறந்து வைத்தார்.

    இந்நிகழ்வுக்கு, மாவட்ட கலெக்டர்.

    அருண் தம்புராஜ் தலைமை வகித்தார்.

    தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழக தலைவர் என்.கெளதமன் முன்னிலை வகித்தார்.

    இதில், ஒன்றிய குழு தலைவர் அனுசியா, ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    • அலங்காநல்லூர் அருகே புதிய ரேஷன் கடையை வெங்கடேசன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
    • செயல் அலுவலர் ஜீலான் பானு, துணை சேர்மன் சுவாமிநாதன், நகர் செயலாளர் ரகுபதி மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

    அலங்காநல்லூர்

    அலங்காநல்லூர் அருகே உள்ள அ.கோவில்பட்டி ஊராட்சி வைகாசிபட்டி கிராமத்தில் ரூ.5 லட்சம் மதிப்பில் நியாய விலை கடை கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நடந்தது. சோழவந்தான் எம்.எல்.ஏ. வெங்கடேசன் குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார்.

    அய்யூர் கூட்டுறவு சங்க தலைவர் அழகர்சாமி தலைமை தாங்கினார். இதில் தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் தன்ராஜ், பரந்தாமன், ஊராட்சி மன்ற தலைவர் நித்யா பழனிநாதன், ஒன்றிய கவுன்சிலர் விமலாதேவி தயாளன், துணைத் தலைவர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டுறவு சங்க செயலாளர் பாஸ்கரன், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் முத்தையன், விவசாய அணி நடராஜன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    அலங்காநல்லூர் பேரூராட்சிக்கு புதிதாக வழங்கப்பட்ட 9 பேட்டரி வாகனங்களையும், வெங்கடேசன் எம்.எல்.ஏ. கொடியசைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். பேரூராட்சி சேர்மன் ரேணுகா ஈஸ்வரி கோவிந்தராஜ் தலைமை தாங்கினார்.

    செயல் அலுவலர் ஜீலான் பானு, துணை சேர்மன் சுவாமிநாதன், நகர் செயலாளர் ரகுபதி மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். பாலமேடு பேரூராட்சிக்கு உட்பட்ட பெரிய கடை வீதி பகுதியில் சில தினங்களுக்கு முன்பு 5-க்கும் மேற்பட்ட கூரை கடைகள் தீ பற்றி எரிந்தன.

    இதனை பார்வையிட்ட வெங்கடேசன் எம்.எல்.ஏ. கடை உரிமையாளர்களுக்கு நிவாரணம் வழங்கி ஆறுதல் கூறினார். இதில் தி.மு.க. அவைத் தலைவர் பாலசுப்பிரமணியன், பேரூராட்சி செயல் அலுவலர் தேவி, பேரூராட்சி சேர்மன் சுமதி பாண்டியராஜன், துணைச் சேர்மன் ராமராஜ், நகர் செயலாளர் மனோகரவேல் பாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை தி.முக.வினர் பலர் நேரில் சந்தித்து ஒரு கோரிக்கை மனு அளித்தனர்.
    • சிவலூர் பகுதி மக்கள் பல கிலோமீட்டர் தூரம் சென்று ரேஷன் பொருட்கள் வாங்குவதால் மிகவும் சிரமமாக உள்ளது.

    உடன்குடி:

    உடன்குடி அருகே உள்ள தண்டுபத்தில் தங்கி இருந்த தமிழக மீன்வளம் மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை செட்டி யாபத்து ஊராட்சி மன்ற தலைவர் பாலமுருகன், உடன்குடி கூட்டுறவு வங்கி தலைவர் அசாப் அலி பாதுஷா,உடன்குடி கிழக்கு ஒன்றிய தி.முக. செயலாளர் இளங்கோ மற்றும் முத்துராமலிங்கம் உட்பட தி.முக.வினர் பலர் நேரில் சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்து நிறைவேற்றுக்கோரி வற்புறுத்தினர்.

    அந்த மனுவில் கூறியிருந்தாவது:-

    செட்டியாபத்து ஊராட்சிக்கு உட்பட்ட சிவலூரில் புதியதாக ரேஷன்கடை அமைக்க வேண்டும்என்றும், இப்பகுதியில் உள்ள மக்கள் பல கிலோமீட்டர் தூரம்நடந்துசென்று ரேஷன் பொருட்கள் வாங்குவதால் மிகவும் சிரமமாக உள்ளது.

    ரேஷன் பொருள் எப்போது வினியோகம் செய்யப்படுகிறது என்பது தெரியாமல் குழம்பி வருகின்றனர். அதனால் புதிய ரேஷன் கடை அமைக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர்.

    மனுவை பெற்றுக் கொண்ட அமைச்சர் இது சம்பந்தமாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

    • ரேஷன் கடையானது வரும் நவம்பர் 1-ந் தேதி முதல் வேறு இடத்திற்கு மாற்றப்பட உள்ளது.
    • புதிதாக ரேஷன் கடை கட்டி தருமாறு ஊர் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    அன்னூர்,

    கோவை மாவட்டம் அன்னூரை அடுத்த கரியம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட எல்லப்பாளையத்தில் 700-க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    இவர்களுக்கு ரேஷன் கடையானது அங்கன்வாடி மையம் மற்றும் கிராம அலுவலக மையத்திற்கு அருகாமையில் அமைந்துள்ளது.அந்த ரேஷன் கடை அமைந்துள்ள கட்டிடம் மிகவும் பழைமை அடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது.

    இதனால் இந்த ரேஷன் கடையானது வரும் நவம்பர் 1-ந் தேதி முதல் வேறு இடத்திற்கு மாற்றப்பட உள்ளது. கடை மாற்றப்படும் இடமானது ஊர் மக்கள் வசிக்கும் பகுதியில் இருந்து சற்று தொலைவில் உள்ளது.

    இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். இதனை உடனடியாக சரி செய்ய ஊராட்சிக்கு சொந்தமான இடத்தில் புதிதாக ரேஷன் கடை கட்டி தருமாறு ஊர் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    • வடக்குத்து ஊராட்சியில் புதிய ரேஷன் கடை சபா. ராஜேந்திரன் எம்.எல்.ஏ., அவர்களால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
    • ஆய்வுகூட்டத்தில்கலந்து கொள்ள கடலூருக்கு வருகைதந்தார் உணவு துறை அமைச்சர் சக்கரபாணி.

    கடலூர்:

    நெய்வேலி அருகே வடக்குத்து ஊராட்சி என்.ஜெ.வி நகர், மாருதி நகர், சபாபதி நகர், பவுனாம்பாள் நகர், காந்தி நகர் உள்ளிட்ட நகர் பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் ரேஷன் பொருட்களைபெறுவதற்கு அண்ணா கிராமம் ரேஷன் கடைக்கு நீண்ட தூரம் சென்று வந்தனர். இதனால் மேற்கொண்ட நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ.வை சந்தித்து என்.ஜெ.வி நகர் பகுதியில் புதிய ரேஷன் கடை அமைக்க கோரிக்கை வைத்தனர். ஆய்வுகூட்டத்தில்கலந்து கொள்ள கடலூருக்கு வருகைதந்த உணவு துறை அமைச்சர் சக்கரபாணி, சபா.ராஜேந்திரன் எம்.எல்.ஏ.வின் கோரிக்கையை ஏற்று என்.ஜெ.வி நகரில் புதிய ரேஷன் கடை அமைக்க உத்தரவிட்டார்.

    இதனைத் தொடர்ந்து வடக்குத்து ஊராட்சி அண்ணா கிராமம் கடை பிரிக்கப்பட்டு 1050 குடும்ப அட்டை தாரர்ககு புதிய ரேஷன் கடை அமைக்கப்பட்டது. இந்த புதிய ரேஷன் கடை திறப்பு விழா நேற்று நடந்தது. சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு புதிய ரேஷன் கடையை திறந்து வைத்தார் திறந்து வைத்தார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட வழங்கல் அலுவலர் உதயகுமார், குடிமை பொருள் இணை இயக்குநர் ராஜேந்திரன், குறிஞ்சிப்பாடி வட்ட வழங்கல் அலுவலர் ரோகிணி ராஜ், சேராகுப்பம் கூட்டுறவு வங்கி செயலாளர் பொறுப்பு குமுதவல்லி, குறிஞ்சிப்பாடி மேற்கு ஒன்றிய செயலாளர் குணசேகரன், மாவட்ட கவுன்சிலர் மணமகிழ் சுந்தரி கருணாநிதி, வடக்குத்து ஊராட்சி மன்ற தலைவர் அஞ்சலை குப்புசாமி, துணைத்தலைவர் சடையப்பன், குறிஞ்சிப்பாடி மேற்கு ஒன்றிய பொறுப்புக் குழு உறுப்பினர் வெங்கடேசன் ஆனந்த் ஜோதி, ஏழுமலை, முன்னாள் தொமுச தலைவர்கள் சிவந்தான் செட்டி, வீர ராமச்சந்திரன். வடக்குத்து கிளை கழக செயலாளர்கள் மணிகண்டன், ராஜேந்திரன், மணிகண்ட ராஜா ராஜேந்திரன், நடராஜன் பிச்சை, அந்தோணி தாஸ், சங்கர், விஜிஆர், சந்திரசேகர், சுரேஷ், கோவிந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×