புதிய ரேஷன் கடையை எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்

அலங்காநல்லூர் அருகே புதிய ரேஷன் கடையை வெங்கடேசன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார். செயல் அலுவலர் ஜீலான் பானு, துணை சேர்மன் சுவாமிநாதன், நகர் செயலாளர் ரகுபதி மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
புதிய ரேஷன் கடையை எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
Published on

அலங்காநல்லூர்

அலங்காநல்லூர் அருகே உள்ள அ.கோவில்பட்டி ஊராட்சி வைகாசிபட்டி கிராமத்தில் ரூ.5 லட்சம் மதிப்பில் நியாய விலை கடை கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நடந்தது. சோழவந்தான் எம்.எல்.ஏ. வெங்கடேசன் குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார்.

அய்யூர் கூட்டுறவு சங்க தலைவர் அழகர்சாமி தலைமை தாங்கினார். இதில் தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் தன்ராஜ், பரந்தாமன், ஊராட்சி மன்ற தலைவர் நித்யா பழனிநாதன், ஒன்றிய கவுன்சிலர் விமலாதேவி தயாளன், துணைத் தலைவர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டுறவு சங்க செயலாளர் பாஸ்கரன், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் முத்தையன், விவசாய அணி நடராஜன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அலங்காநல்லூர் பேரூராட்சிக்கு புதிதாக வழங்கப்பட்ட 9 பேட்டரி வாகனங்களையும், வெங்கடேசன் எம்.எல்.ஏ. கொடியசைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். பேரூராட்சி சேர்மன் ரேணுகா ஈஸ்வரி கோவிந்தராஜ் தலைமை தாங்கினார்.

செயல் அலுவலர் ஜீலான் பானு, துணை சேர்மன் சுவாமிநாதன், நகர் செயலாளர் ரகுபதி மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். பாலமேடு பேரூராட்சிக்கு உட்பட்ட பெரிய கடை வீதி பகுதியில் சில தினங்களுக்கு முன்பு 5-க்கும் மேற்பட்ட கூரை கடைகள் தீ பற்றி எரிந்தன.

இதனை பார்வையிட்ட வெங்கடேசன் எம்.எல்.ஏ. கடை உரிமையாளர்களுக்கு நிவாரணம் வழங்கி ஆறுதல் கூறினார். இதில் தி.மு.க. அவைத் தலைவர் பாலசுப்பிரமணியன், பேரூராட்சி செயல் அலுவலர் தேவி, பேரூராட்சி சேர்மன் சுமதி பாண்டியராஜன், துணைச் சேர்மன் ராமராஜ், நகர் செயலாளர் மனோகரவேல் பாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com